- 
	
			
				
					25th October 2015, 09:05 AM
				
			
			
				
					#1051
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  RAGHAVENDRA  
 வணக்கம் ராஜேஷ்
 இசையரசியின் உறவினர் தீபங்கள் ஏற்றும் பாடலைப் பாடிய சந்தியாவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அழகன் பாடலைப்பாடிய சந்தியாவும் ஒன்றா.
 ஏனென்றால் தேவதை படத்தில் தான் சந்தியா பாடகியாக அறிமுகமானார் என பத்திரிகைகள் அப்போது குறிப்பிட்டன. தேவதை 1997ம் ஆண்டு, அழகன் 1991ம் ஆண்டு என நினைக்கிறேன்.
 
 
 
 azhagan padal padiyadhu Sadhana endra padagi sir.  Sandhya devathai/iruvar thaan arimugam
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							25th October 2015 09:05 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					25th October 2015, 09:08 AM
				
			
			
				
					#1052
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
			
			
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					25th October 2015, 10:23 AM
				
			
			
				
					#1053
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Courtesy:Tamil Hindu
 
 
 நினைவுகளின் சிறகுகள் : குமாரி கமலா - வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
 
 
 இந்திய விடுதலைத் திருநாள், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, பாரதி விழா நேரங்களில் தமிழர்களின் மனங்களில் நினைவுப் பதியம் போட்டு மிக நெருக்கமாகிவிடுவார் குமாரி கமலா. 1934 ஜூன் 16-ல் மயிலாடுதுறையில் பிறந்தவர்.
 
 ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, வெற்றி எட்டுத் திக்கு என்று கொட்டு முரசே!, ஆஹா காந்தி மகான்! போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கும். அவ்வேளையில் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவாக கமலாவின் நடனம் புதுப் பொலிவுடன் பொதிகையை ஆக்கிரமிக்கும்.
 
 நிச்சயமாக அது ஒரு பாக்கியம் கமலாவுக்கு.
 
 தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பொம்மலாட்டங்களில் கமலாவின் நாட்டியம் டூரிங் டாக்கீசுகளில் கல்லா கட்ட உதவியது.
 
 இரு கரு நாகங்களைத் தன் தோள்களில் போட்டுக் கொண்ட மாதிரி 13 வயது கமலாவின் இரட்டை ஜடையும், பாவாடை சட்டையும் அண்ணா... அண்ணா என்கிற பாசமிகு குரலும் நாம் இருவர் படத்துக்கு மெருகூட்டியது.
 
 தொடக்கத்தில் மும்பைவாசி கமலா. ஐந்து வயதுக்கெல்லாம் கதக், அப்புறம் பரதம் என அவரது முழங்கால்கள் நர்த்தனமாடியே முழு வளர்ச்சி அடைந்தன. சந்துல்ஷா தயாரித்த யூத் லீக் இந்திப் படம் கமலாவுக்கு ஆடுவதற்கு முதலில் சந்தர்ப்பம் அளித்தது. (தமிழில் வாலிபர் சங்கம்) யதாஷ் சர்மாவின் இயக்கத்தில் பார்வை இழந்த பாலகியாக நடனமாடிய அனுபவம் கமலாவுக்கு உண்டு.
 
 இரண்டாம் உலகப் போருக்குப் பயந்து தமிழகம் திரும்பியது கமலாவின் குடும்பம். மயிலாப்பூர் அப்பு முதலித் தெருவில் வாசம். வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதப் பயிற்சி தொடர்ந்தது. கமலா முதலில் ஆடிய நேரடித் தமிழ்ப் படம் பி.யூ. சின்னப்பா நடித்த ஜகதலப்பிரதாபன். பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு கமலாவின் நடனம் ஒன்றைப் பார்த்துவிட்டு வழங்கிய வாய்ப்பு.
 
 கமலாவின் பாதங்களை சினிமா காமிரா வெகுவாகப் படம் பிடித்தது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் தயாரிப்புகள் கமலாவின் நடனங்கள் இல்லாமல் வெளிவராது என்கிற நிலைமை உண்டானது. குறிப்பாக நாம் இருவர் முரசு நடனம். மெய்யப்பச் செட்டியார் அதை கமலாதான் ஆட வேண்டும் என்று கண்டித்துச் சொல்லிவிட்டார். திரையின் இரு புறமும் வெவ்வேறு கமலாக்கள் ஆடிக் காண்போரைக் கவர்ந்தனர். இந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், சிங்களம் என்று எல்லை கடந்தும், கமலாவின் கால்கள் பேசின.
 
 பராசக்தி சினிமாவில் ஓ! ரசிக்கும் சீமானே! பாட்டுக்கான ஆட்டம், கமலாவை இளைஞர்களிடத்தில் நிரந்தரமாகக் கொண்டுசேர்த்தது. 1958-ல் சிவாஜி- சாவித்ரி இணைந்து நடித்த காத்தவராயனில் கோபிகிருஷ்ணா - கமலா சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். அவர்களது சிவன்-பார்வதி நடனம் படத்துக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுத்தது.
 
 அகிலனின் பாவை விளக்கு 1960 தீபாவளிக்கு டாக்கியாக வெளியானது. அதில் நடிகர் திலகத்துடன் காதலி செங்கமலமாகநடிக்கும் அதிர்ஷ்டம் கமலாவுக்குக் கிடைத்தது. பாவை விளக்கு படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே, வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி, நான் உன்னை நினைக்காத, சிதறிய சலங்கைகள் போல உள்ளிட்டப் பாடல் காட்சிகள் காலத்தால் கமலாவை மறக்கச் செய்யாது.
 
 கவிஞர் கண்ணதாசனின் எழுச்சிப் படைப்பு சிவகங்கைச் சீமை. அதில் கதாநாயகி கமலா. படத்தின் க்ளைமாக்ஸில் மழையில் கமலா ஆடிடும் பரதம் மெய்சிலிர்க்க வைக்கும். கனவு கண்டேன் நான், கன்னங்கருத்த கிளி ஆகிய பாடல்கள் கமலாவுக்குத் தனிப் புகழைத் தேடித் தந்தன. கல்கியின் பார்த்திபன் கனவு படமானது. சிவகாமியாக மாமல்லர் எஸ்.வி. ரெங்காராவுடன் நடித்தவர் கமலா.
 
 கொஞ்சும் சலங்கை படத்தின் வெற்றியிலும் கமலாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. பிரம்மன் தாளம் போட என்று தொடங்கும் பாடலில் கமலா-குசலகுமாரி ஆடிய சிம்ம நந்தனம் ஆடிடும் முன்னே மயூர பந்தனம் செய்யட்டுமா... போட்டி நடனம் விறுவிறுப்பூட்டியது. ஏறக்குறைய நாலு நறுக்கான இந்தப் படங்களோடு, நடிப்பில் கமலாவின் பங்களிப்பு நிறைவு பெற்றது.
 
 இந்தி தெரிந்திருந்தும் வைஜெயந்திமாலா, பத்மினி போல் அகில இந்தியாவிலும் வெற்றிகரமான கதாநாயகியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. அது ஏன்? என்கிற கேள்விக்கு மிக நேர்மையாகப் பதில் அளித்துள்ளார் கமலா.
 
 உண்மையைச் சொல்லப்போனால் நடனம் வந்த அளவுக்கு எனக்கு நடிப்பு வரவில்லை. அதோடு நீள நீள டயலாக் வேறு.ஒரு தடவை பேசும்போது கொஞ்சம் தடுமாறிவிட்டாலும் போதும்; மறுபடியும் முதலில் இருந்து பேச வேண்டும். இப்போது மாதிரி டப்பிங் வசதியெல்லாம் கிடையாது. நமக்காக இன்னொருவர் குரல் கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்கள். திரையில் நடிக்கிறவரே முழு வசனமும் பேசியாக வேண்டும். நீண்ட நெடிய உரையாடலில் வார்த்தைகளோ முகபாவங்களோ விடுபட்டுப் போனால் மறுபடியும் பேசச் சொல்வார்கள். அய்யோ கடவுளே! என்று மனசு அலறும். இப்படியொரு டென்ஷன் தேவையா என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. நமக்கு நன்கு தெரிந்த நடனத்தை மட்டும் தொடரலாம் என்று முடிவு செய்தேன்.
 
 1971-ல் செண்டா என்கிற மலையாளப் படத்தில் கமலாவின் நாட்டியம் கடைசியாக இடம்பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் ஆர். கே. லட்சுமணனுடன் ஏற்பட்ட திருமண பந்தம் 1960-ல் முடிவுக்கு வர, 1964-ல் மேஜர் லட்சுமி நாராயணனின் திருமதி ஆனார் கமலா. ஒரே ஒரு ஆண் வாரிசு. பயாஸ்கோப்பிலிருந்து விடுபட்ட பின்னர் முழு மூச்சுடன் தன்னை நாட்டியக் கலைக்காக கமலா அர்ப்பணித்துக்கொண்டார். இங்கிலாந்து அரசி எலிசெபத்தின் அவையில், லண்டனிலும் பின்னர் சென்னையிலுமாக இரு முறை கமலாவின் நாட்டியம் நடைபெற்றது.
 
 சென்னை ராஜ்பவனில் ராணிக்கு முன்னால் நான் ஆடிய பாம்பு நடனம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஒண்டர்ஃபுல் என்று நீண்ட நேரம் என்னைப் பாராட்டியபடியே இருந்தார்.- குமாரி கமலா.
 
 1970-ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது கமலாவின் ஆடற்கலைக்கு மகுடம் சூட்டியது. இரண்டு கணேசன்கள், எஸ்.எஸ். ஆர். படங்களில் பங்கேற்ற கமலா, எம்.ஜி.ஆருடன் நடித்தது கிடையாது. நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர். ஆட அழைத்தும், கமலா அதில் இடம்பெறவில்லை. காரணம் அதிக வேலைப் பளு.
 
 1981-ல் நியூயார்க்கில் குடியேறினார் கமலா. அங்கு ஸ்ரீ பரத கலாலயா என்கிற நாட்டியப் பாடசாலை ஒன்றையும் அமைத்தார். அதற்குப் பிறகு சுற்றமும் நட்பும் அழைத்தால் தாயகம் வந்து போவது நிகழ்ந்தது.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					25th October 2015, 11:26 AM
				
			
			
				
					#1054
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					25th October 2015, 11:29 AM
				
			
			
				
					#1055
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
 
 (நெடுந்தொடர்)
 
 45
 
 'மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று'
 
  
 
 'வைராக்கியம்'
 
 அரியவைகளை அற்புதமாய் ரசிக்கும் மதுண்ணா, ராகவேந்திரன் சார்  மற்றும் ஆதிராம் சாருக்கு இப்பாடலை மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கிறேன். (சின்னா! கோபம் வேண்டாம். உங்களுக்கு வேறு பாடல் நிச்சயம் உண்டு)  
 
 இன்றைய பாலாவின் தொடரில் மிக மிக அபூர்வமான ஒரு பாடல். இப்படி ஒரு பாடலை பாலு பாடியிருக்கிறாரா என்பது எண்பது சதவீதம் பேருக்குத் தெரியாது. மிக ஆச்சர்யம். பெரும்பாலானோர் கேட்காத பாடலும் கூட. அதனால் என்ன?  பாலாவின் அனைத்துப் பழைய பாடல்களையும் எப்படியாவது ஒன்று விடாமல் தந்து அவரையும், உங்களையும் மகிழ்விக்கத்தானே இந்தத் தொடர்?
 
 'வைராக்கியம்' 1970-ல் வெளிவந்த படம். இயக்கம் ஏ.காசிலிங்கம். 'அன்னை பிலிம்ஸ்' கே.ஆர் பாலன் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு. கதை, வசனம் மதுரை திருமாறன். பாடல்கள் 'ஜி'யின் பிரியப்பட்ட வாலி. ('ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்ற அற்புதமான வரிகள்) ஒளிப்பதிவு விஜயன்.
 
 எஸ்.எஸ்.ஆர், ஜெமினி, நிர்மலா, ஜோதிலட்சுமி, நாகேஷ், ஓ.ஏ.கே தேவர், சந்திரகாந்தா, தேங்காய் என்று ஏக நட்சத்திரக் கூட்டம்தான். ஒரு அபூர்வமான படம். இந்தப் படம் எப்போது திரும்ப வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இப்போதுதான் கனிந்தது.
 
 என் நினைவு சரியாக இருக்குமானால் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிப்படங்களான, அதுவும் ஒரே தேதியில் (29.10.1970) வெளியாகி 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்த 'எங்கிருந்தோ வந்தாள்', 'சொர்க்கம்' படங்களின் தீபாவளி வெளியீட்டோடு வந்த படங்களில் 'வைராக்கிய'மும் ஒன்று என்று நினைக்கிறேன்.
 
 கடலூர் நியூசினிமாவில் ராமாபுரத்து ரசிகர்களுடன் தீபாவளி அன்று காலைக் காட்சி 'எங்கிருந்தோ வந்தாள்' முடித்துவிட்டு, மதியம் மேட்னி பாடலியில் 'சொர்க்கம்' முடித்துவிட்டு, அப்படியே ஈவ்னிங் ஷோ முத்தையாவில் 'வைராக்கியம்' படம் பார்த்தது நினைவில் இருக்கிறது. படங்களையெல்லாம் பார்த்து முடித்து விட்டு முந்திரிக் காடுகளின் வழியே, பார்த்த படங்களைப் பற்றிப் பேசியபடியே இரவு 12 மணிக்கு பொடி நடையாக ராமாபுரம் போய் சேர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு வயது பத்து.
 
 ம்..அந்த பொற்காலமெல்லாம் இனி ஏது?
 
 கழைக்கூத்தாடி எஸ்.எஸ்.ஆர். அவர் தங்கை நிர்மலா, தாய் காந்திமதி. சிறு வயதாய் இருக்கும் போது தந்தையைக் கொன்ற ஓ.ஏ.கே தேவரை பழி தீர்க்க எஸ்.எஸ்.ஆர் இறுதி வரை வைராக்கியமாய் இருந்து அப்பாவி போல நடித்து போலீஸை ஏமாற்றி இறுதியில் தேவரை கொலை செய்வதுதான் கதை. இடைச்  செருகலாக நிர்மலாவைக் காதலிக்கும் வில்லனின் மகன் பணக்கார ஜெமினி, அப்புறம் வாசு, தேவர் கைங்கரியத்தில் ராஜவைரம் திருட்டுப் போனதால் பைத்தியமாக ஆகிவிடும் ஜோதிலட்சுமியின் தந்தை, ஜோதிலட்சுமிக்கு வைரத் திருட்டு பற்றி தெரிந்து கொள்ள உதவும் அவர் தோழி சந்திரகாந்தா, (இறுதியில் 'புதிய பறவை' சரோஜாதேவி ரேஞ்சிற்கு துப்பறியும் பெண் போலீஸ் அதிகாரி), வில்லனின் தம்பி இன்னொரு வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு, அவரின் நல்ல மகன் நாகேஷ், வைரம் பற்றிக் கண்டுபிடிக்க கழைக் கூத்தாடி வேடம் போடும் ஜோதி, (அப்படியே எஸ்.எஸ்.ஆர் மீதும் காதல்) தேவரைக் கொன்ற எஸ்.எஸ்.ஆரின் கொலைப் பழி ஜெமினி மீது விழ அவர் தலை மறைவு, பின் எதிரி வீட்டிலேயே காந்திமதியிடம் அடைக்கலம், தந்தையைக் கொன்றவனின் குடும்பத்தில் தங்கை நிர்மலாவை வாழ வைக்கப் பிடிக்காத எஸ்.எஸ்.ஆர்,  ஆத்திரத்தால் ஜெமினியைக் கொல்ல முயன்று தவறி தாயின் உயிரைக் கத்தியால் பறிக்கும் எஸ்.எஸ்.ஆரின் கண் மூடித்தனமான ஆத்திரம், இறுதியில் செய்த பாவங்களுக்கு  காந்தி, இயேசு, அண்ணா இவர்கள் புத்திமதிக் குரலில் மனம் திருந்தி தங்கையை ஜெமினிக்கு மணம் முடித்து சிறை செல்லும் இலட்சிய நடிகர், எல்லாப் படங்களிலும் வரும் 'உங்களுக்காகவே காத்திருப்பேன்' என்று டயலாக் அடித்து அழும் ஜோதி, இன்னொரு வில்லன் கைது என்று கதை செம ஜோராகவே விறுவிறுப்பாகவே செல்லும். இன்னொரு வில்லன் கைது என்று கதை செம ஜோராகவே விறுவிறுப்பாகவே செல்லும்.
 
 'இலட்சிய நடிக'ரின் வைராக்கிய நடிப்பு சில இடங்களில் டாப். சில இடங்களில் வேஸ்ட். சொதப்பல். ஜெமினி வழக்கம் போல. ஆனால் இளமை, அழகு கூடுதல். நிர்மலாவுடன் நளின டூயட். நிர்மலா கழைக்கூத்தாடிப் பெண் வேடத்திலும் அழகு. ஜோதிக்கு அமர்க்களமான கிளப் டான்ஸ். ஜொலிக்கும்  அழகு. 'அக்கா'....  சண்முக சுந்தரத்தின் குண்டுத் தங்கை சி.ஐ.டி சந்திரகாந்தா நடிப்பில் ஊதி விடுகிறார். நாகேஷ், தேங்காய் எல்லாம் இருந்தும் சிரிப்புக்கு பஞ்சம். ஓ .ஏ.கே தேவர், எம்.ஆர்.ஆர்.வாசு பார்த்து புளித்துப் போன வில்ல(ங்க ) குண்டுத் தங்கை சி.ஐ.டி சந்திரகாந்தா நடிப்பில் ஊதி விடுகிறார். நாகேஷ், தேங்காய் எல்லாம் இருந்தும் சிரிப்புக்கு பஞ்சம். ஓ .ஏ.கே தேவர், எம்.ஆர்.ஆர்.வாசு பார்த்து புளித்துப் போன வில்ல(ங்க ) நடிப்பு. நடிப்பு.
 
 பாடல்கள் அருமை. ஆனால் எஸ்.எம்.எஸ்ஸின் ஒரே ஸ்டீரியோ பாணி. ஈஸ்வரிதான் பாடல்களின் ராணி.
 
 இப்பத்தான் இந்தப் படத்தின் மற்ற பாடல்களை திரியில் பார்த்தோம். அதனால தொடர் பாடலைத் தவிர மற்ற பாடல்களை விட்டு விடுகிறேன். நீங்களும் பாவம்.  
 
 சரி! தொடரின் பாடலுக்கு வருவோம்.
 
 கழைக் கூத்தாடி நிர்மலாவை விரும்பும் தன் மகன் ஜெமினியின் காதலை முறியடிக்க தந்தை ஓ.ஏ.கே தேவர் ஒரு சதித் திட்டம் தட்டுகிறார். நிர்மலாவையும், அவர் அண்ணன் எஸ்.எஸ்.ஆரையும், அவர் தோழன் வி.கோபாலகிருஷ்ணன் மூவரையும் இரவோடு இரவாக குடிசையோடு வைத்துக் கொளுத்த முடிவு செய்கிறார்.
 
 ஆனால் இதை அறியாத ஜெமினி யதேச்சையாக எஸ்.எஸ்.ஆரை அவர் குடிசையில் சந்தித்து, நிர்மலாவைக் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதை சொல்லி, அவர் தாயை அழைத்து வரச் சொல்லி கிராமத்துக்குக் காரில் அனுப்பி விடுகிறார். இப்போது குடிசையில் ஜெமினியும், நிர்மலாவும் மட்டுமே. எஸ்.எஸ்.ஆரின் கழைக்கூத்தாடி தோழன் வி.கோபாலகிருஷ்ணனை நாகேஷ் அகஸ்மாத்தாக ஒரு நாடகத்திற்கு நடிக்க அழைத்துச் சென்றுவிடுகிறார். தன் மகனே குடிசையில் நிர்மலாவுடன் இருப்பதை அறியாத ஓ.ஏ.கே தேவர் தன் திட்டப்படி குடிசையைக் கொளுத்திவிட்டு எஸ்.எஸ்.ஆர், நிர்மலா, கோபாலகிருஷ்ணன் எரிந்து போனதாக நினைத்து மகிழ்கிறார். பின் தம்பி வாசுவுடன் நாகேஷ் நடத்தும் நாடகத்திற்கு செல்கிறார்.
 
  
 
 இப்போது நாடகக் காட்சிதான் பாடல் காட்சி. 'நவீன பட்டினத்தார்' என்ற நாடகம்.
 
 காமுக மன்னனாக வி.கோபாலகிருஷ்ணன் ராஜ உடை தரித்து, மது, மங்கை என்று காமக் களியாட்டங்களில் மூழ்கிக் கிடக்க, அங்கு வரும் நாகேஷ் சாமியார் அவருக்கு 'அதெல்லாம் வேண்டாம்' என்று  புத்தி சொல்ல, கோபம் கொண்ட கோபாலகிருஷ்ணன் சாமியாரைப் பழி வாங்க அவரிடம் நைஸாகப் பேசி விஷம் கலந்த அப்பத்தைத் தர, அதில் விஷம் இருப்பதை தெரிந்து கொண்ட நாகேஷ் சாமி கோபம் கொண்டு அந்த அப்பத்தை அங்கே இருக்கும் வீட்டின் மேல் எறிய சாமியாரின் கோபத்தாலும், சாபத்தாலும் அந்த வீடு பற்றி எரிய, படத்தின் கதைக்குத் தோதாக நாடகக் காட்சி. ஓ.ஏ.கே தேவர் நாடகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கொல்ல நினைத்த கோபாலகிருஷ்ணன் நாடகத்தில் நடிப்பதைப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சி அவருக்கு.
 
 இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.
 
 பாலாவின் பங்கு வி.கோபாலகிருஷ்ணனுக்கு. ஆரம்ப கால பாலாவின் பாடல். நாகேஷ் சாமியாருக்கு அமர்க்களமாக டி.எம்.எஸ்.குரல்.
 
 இதில் இன்னொரு விசேஷம். கோபாலகிருஷ்ணனை மயக்கும் ராஜநர்த்தகி நடன நடிகைக்கு கௌசல்யா என்பவர் அருமையாக குரல் தந்திருப்பார். கிட்டத்தட்ட சுசீலா அம்மாவின் குரல் போலவே இருக்கும். கண்டு பிடிப்பது கஷ்டமே.
 
 'இருப்பதை ரசிக்கட்டும் இளமை
 அந்த இளமைக்கு நான்தான் தலைமை
 ஆஹா ஆ..ஹா ஆஹாஹா
 இருப்பதை ரசிக்கட்டும் இளமை'
 
 ஆஹா! கௌசல்யா வாய்ஸ் அருமை. வளமை. இனிமை.
 
  
 
 கோபாலகிருஷ்ணனுக்கு பாடல் காட்சி அதுவும் ஆரம்ப பாலாவின் குரலில் என்பது அதிசயம்தானே. அதனாலேயே இப்பாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
 
 வி. கோபாலகிருஷ்ணன் என்றாலே நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும்' பாடலும், மற்றும் 'துளசி மாடம்' படத்தில் 'ஆடும் மயிலே ஆட்டம் எங்கே' பாடலும் மட்டுமே ஞாபகத்திற்கு வரும். அப்புறம் 'திக்குத் தெரியாத காட்டில்' படத்தில் சச்சு கோஷ்டியுடன் வுடன் பாடும் 'குளிரடிக்குதே கிட்ட வா' மற்றும் 'பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்' பாடல்களும் வி. கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. (பழைய படங்கள் சிலவற்றிலும் பாடல் காட்சிகளில் இவர் நடித்துள்ளார். நானே ராஜா, பாசவலை) (இன்னும் இருந்தால் ஆதிராம் சார் அழகாகச் சொல்வார்).
 
 இப்போது 'வைராக்கியம்' படத்தில் இவருக்குப் பாடல் காட்சி. மது அருந்தும் மன்னனாக நன்றாகவே தள்ளாடி நடித்திருப்பார். பாலாவின் குரலும் குடித்தவன் குரலாக கோ.கிருஷ்ணனுக்கு நன்றாகப் பொருந்துகிறது.
 
 நாகேஷுக்குப் பாடும் 'பாடகர் திலக'த்தின் திறமை 'நஞ்சைக் கலந்தனையா?' என்ற அதிர்ச்சி வரியிலேயே புலப்பட்டுவிடும். அவ்வளவு ஜோராக பாவங்கள் வெளிப்படும் அவரிடமிருந்து. பாராட்ட வாரத்தை ஏது?  நாகேஷ் சாமியார் ஆட்டமும், பாட்டமும் அமர்க்களமப்பா!
 
 பாலா அற்புதம். அப்போதே. எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். இந்தப் பாடலில் ஆரம்ப கால பாலாவின் குரல் போல் இல்லாமல் பின்னால் வந்த பாலாவின் குரல் போல் பாலா அவ்வளவு குரலை மாற்றிப் பாடி இருப்பார். மது அருந்திவிட்டு மயக்கத்தில் பாடுவது போல வேறு பாட்டின் பின்னணி இருப்பதால் வாய் குழறி வார்த்தைகள் தடுமாற்றத்தோடு பாலா கலக்கியிருப்பார் அவருக்கு கொஞ்ச பாகமே என்றாலும்.
 
 அதுவும் 'தகுமோடா...சொல்லத் தகுமோடா' ரொம்ப சூப்பர்.
 
 குடிபோதையில் உளறும்,
 
 'உள்ளே எவண்டா பயலே?
 கொண்டு வாடா சோடா!
 
 பாலாவின் குரல் குடி வெறி உளரலாக ஓஹோ! ஓஹோ!
 
 'சாமி யாரப்பா? இந்த சாமி யாரப்பா?
 ஒழுங்கா சொன்னா கேக்காதப்ப்பா'
 ஒருமுறை சொன்னா உரைக்காதப்பா
 விருந்தையும் மருந்தையும் கொண்டு வாடாப்பா
 
 வரிகளில் விறுவிறு கிண்டல்.
 
 'வைராக்கியம்' பட டைட்டில் காட்சியில் பின்னணி என்று போடும்போது,
 
 வெறுமனே 'பாலசுப்ரமணியம்' என்று போடுவார்கள். எஸ்.பி.இனிஷியல் இருக்காது.
 
  
 
 பாடல் ஒன்றும் அப்படி இனிமையெல்லாம் கிடையாது. நாடகப் பாடல் என்பதால் வசனநடை அதிகம் உள்ள பாடல். அதனால் எடுபடாமல் போயிற்று. இதனால் பாலாவும் இந்தப் பாடலில் வெளியே தெரியாமல் போய் விட்டார். ஆனால் நல்ல கருத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் நல்ல பாடலே.
 
 பாலாவின் இந்த அரிய பாடலை தர முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. இந்தப் பாடலை நமது திரிக்காக 'யூ டியூபி'ல் இன்று அப்லோட் செய்தேன்.
 
  
 
 பாலா
 
 மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று
 அந்த மயக்கத்திலே வரும் பாட்டு
 மலர் இதழைத் திறந்து கொஞ்சம் காட்டு
 அந்த இனிய சிரிப்பில் சுவை கூட்டு
 
 மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று
 
 கௌசல்யா
 
 இருப்பதை ரசிக்கட்டும் இளமை
 அந்த இளமைக்கு நான்தான் தலைமை
 ஆஹா ஆ..ஹா ஆஹாஹா
 இருப்பதை ரசிக்கட்டும் இளமை
 
 பாலா
 
 ஓஹோ
 
 கௌசல்யா
 
 அந்த இளமைக்கு நான்தான் தலைமை
 
 பாலா
 
 ஆஹா
 
 கௌசல்யா
 
 உச்சி முதல் பாதம் வரை
 தொட்டவுடன் மெய் சிலிர்க்கும்
 பச்சைக்கிளி கொச்சை மொழி
 பேசி வந்து கை அணைக்கும்
 
 பாலா
 
 மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று
 
 டி.எம்.எஸ்.
 
 கட்டப்பா! என்னைக் கட்டப்பா
 எப்பனே! கட்டப்பா என்னைக் கட்டப்பா
 பக்தன் என்றால் என்னைக் கட்டப்பா
 நீ பாவி என்றால் பெண்ணைக் கட்டப்பா
 
 எட்டப்பா!
 
 அப்பா! எப்பா! எப்பா!
 
 பாலா
 
 யாய்!
 
 தகுமோடா!  சொல்லத் தகுமோடா!
 நீ புத்தி சொல்லத்  தகுமோடா!
 வருமோடா! இளமை வருமோடா!
 வருமோடா! இளமை வருமோடா!
 விட்டுப் போனால் இளமை வருமோடா!
 ஏடா! மூடா! இங்கிருந்து போடா!
 
 உள்ளே எவண்டா பயலே!
 கொண்டு வாடா சோடா!
 
 டி.எம்.எஸ்
 
 கள்ளை உண்டு காதல் பெண்டு
 ஆஹா கள்ளை உண்டு காதல் பெண்டு
 உறவைத் தேடும் உலகப்பா
 நீ மாயையை விட்டு விலகப்பா
 
 ஆஹா! ஆஹா! ஆஹா! எப்பா!
 
 மையல் கொண்ட கைகளினாலே
 மையல் கொண்ட கைகளினாலே
 மங்கையைக் கட்டும் உலகப்பா
 உன் மனத்தைக் கட்டிப் போடப்பா
 
 பாலா
 
 சாமி யாரப்பா? இந்த சாமி யாரப்பா?
 ஒழுங்கா சொன்னா கேக்காதப்ப்பா!
 ஒருமுறை சொன்னா உரைக்காதப்பா!
 விருந்தையும் மருந்தையும் கொண்டு வாடாப்பா!
 
 டி.எம்.எஸ்
 
 புத்திக்கு வேணும் மருந்து
 புத்திக்கு வேணும் மருந்து
 நான் சொன்னதைக் கேட்டு திருந்து
 நான் சொன்னதைக் கேட்டு திருந்து
 ஞானப் பாலைக் குடிச்சேன்
 எனக்கு ஏண்டா மருந்து
 
 பாலா
 
 ஹாஹாங்க்!
 
 அப்படி சொன்னா எப்படி?
 நான் இனிமே உங்க சொற்படி
 
 இந்தாங்க சாமி! அடியேன் விருந்து
 நெய்யிலே செய்த அப்பம்
 இது நெய்யிலே செய்த அப்பம்
 நீங்க உண்ண வேணும் என் விண்ணப்பம்
 
 டி.எம்.எஸ்
 
 ஆஹா!
 நஞ்சைக் கலந்தனையா?
 என்னைக் கொல்ல நினைத்னையா?
 நஞ்சைக் கலந்தனையா?
 என்னைக் கொல்ல நினைத்னையா?
 அட பஞ்சப் பயலே! பாவிப் பயலே
 என்ன நடக்குது பார்! டபார்!
 
 பாலா
 
 சாமி!
 
 டி.எம்.எஸ்
 
 ஏன்?
 
 பாலா
 
 சாமி!
 
 டி.எம்.எஸ்
 
 என்ன?
 
 பாலா
 
 எரியுதே!
 
 டி.எம்.எஸ்
 
 எரியட்டும்
 
 பாலா
 
 எரியுதே!
 
 டி.எம்.எஸ்
 
 எரியட்டும்
 
 பாலா
 
 எரியுதே!
 
 டி.எம்.எஸ்
 
 எரியட்டும்
 
 நல்லா எரியட்டும்!
 
 முன்னை இட்ட தீ முப்புறத்திலே
 பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
 அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
 இந்த அப்பன் இட்ட தீ உந்தன் வீட்டிலே
 அப்பனே!
 
 ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
 தன்வினை தன்னைச் சுடும்
 ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
 தன்வினை தன்னைச் சுடும்
 ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
 தன்வினை தன்னைச் சுடும்
 ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
 தன்வினை தன்னைச் சுடும்
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 25th October 2015 at 12:05 PM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
				
			 madhu madhu thanked for this post
			
		 
 
 
- 
	
			
				
					25th October 2015, 10:08 PM
				
			
			
				
					#1056
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							//கடலூர் நியூசினிமாவில் ராமாபுரத்து ரசிகர்களுடன் தீபாவளி அன்று காலைக் காட்சி 'எங்கிருந்தோ வந்தாள்' முடித்துவிட்டு, மதியம் மேட்னி பாடலியில் 'சொர்க்கம்' முடித்துவிட்டு, அப்படியே ஈவ்னிங் ஷோ முத்தையாவில் 'வைராக்கியம்' படம் பார்த்தது நினைவில் இருக்கிறது. படங்களையெல்லாம் பார்த்து முடித்து விட்டு முந்திரிக் காடுகளின் வழியே, பார்த்த படங்களைப் பற்றிப் பேசியபடியே இரவு 12 மணிக்கு பொடி நடையாக ராமாபுரம் போய் சேர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. //
 
 மூன்றுபடமா..ஒரே நாளிலா.. யோசித்தால் நான் மூன்று படங்கள் பார்த்ததே இல்லை.. இரண்டு  நினைவு இருக்கிறது.. இரண்டு தடவை.. ப்ளஸ்டூ முடித்த சமயம் மதுரை மினிப்ரியாவில் நூல்வேலி (தீபாவளி அன்று ) மதியக்காட்சி பின் தங்கத்தில் மஹாலட்சுமி எனஒரு சொதப்பல் படம். ஈவ்னிங்க் ஷோ என நினைவு.. இரண்டாவது தடவை சில ஆண்டுகள் சென்று அய்யம்பேட்டையில் சகோதரி வீட்டில் தங்கி படித்த சமயம்..தஞ்சாவூரில் தான் புதுப்படம் ரிலீஸ் என்பதால் காலையில் பஸ் பிடித்து மார்னிங்க் ஷோ மரகத வீணை என ஒரு படம் அண்ட் நூன்ஷோ உயிரே உனக்காக..பின் ஈவ்னிங்க் பஸ் ஏறி அ.பே சென்ற நினைவு..
 
 இப்போது  நிலமையே வேறு டிவியில் வரும் படங்களையும்பார்க்க ப்பிடிப்பதில்லை.. தியேட்டரில்  நல்லது என்று பார்க்கலாம் என இருந்தது சற்றே சமீபத்தில் மாறியிருக்கிறது.. நண்பர் ஒருவரால்.. டிவிடி பார்க்கவேண்டுமென்று வாங்கி ப் பார்க்காத படங்களே ஏராளம்..!
 
 
 
 பாட் கேக்கலாம்னா சுத் சுத் துனு சுத்துது..யூட்யூப்லும் அவ்வண்ணமே.. நீங்களே சுமார் என எழுதியிருப்பதால்.. பிறிதொரு சமயம் பார்க்கிறேன்..பட் கதைல்லாம் படிச்சாலே தல சுத்துது சாமியோவ்..பார்த்து எழுதறதுக்கு எவ்ளோ பொறுமை வேணும்.. தாங்க்ஸூ.. அண்ட் நடத்துங்க..
 
 
 
 
				
				
				
					
						Last edited by chinnakkannan; 25th October 2015 at 10:23 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					25th October 2015, 10:37 PM
				
			
			
				
					#1057
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு சார்
 எல்லோரும் டூ-இன்-ஒன், த்ரீ-இன்-ஒன் என்று வெளுத்துக்கட்டுவார்கள். தாங்களோ மல்டி-இன்-ஒன் ஆக விளங்குகிறீர்கள்.
 வைராக்கியம் படப்பாடலைப் பற்றிய தங்கள் பதிவைச் சொல்ல வேண்டுமென்றால் இப்படித்சான் சொல்ல வேண்டும்.
 
 படத்தில் நடித்துள்ளவர்களைப்பற்றி,
 பாடலைப்பாடியவர்களைப்பற்றி,
 இசையமைத்த எஸ்எம்எஸ் பற்றி,
 படம் வெளியான சூழலைப்பற்றி
 
 எனப் பல்வேறு விதமான கோணங்களில் இப்படத்தைப்பற்றியும் இப்பாடலைப்பற்றியும் தாங்கள் எழுதியுள்ளது, தங்களுடைய அசாத்தியமான திறமையைக்காட்டுகிறது.
 
 வைராக்கியம் 1970ல் வெளிவந்த படமே. ஆனால் தீபாவளிக்கு வந்ததாக நினைவில்லை. ஏனென்றால் தீபாவளிக்கு சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், காவியத்தலைவி, மாலதி நான்கு படங்கள் மட்டுமே வந்த ஞாபகம்.
 
 இவ்வளவு அபூர்வமான பாலா பாடலை அவரே நினைவில் வைத்திருப்பாரா தெரியவில்லை.
 
 பாராட்டுக்கள்.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					26th October 2015, 06:15 AM
				
			
			
				
					#1058
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு ஜி,
 பாலா தொடர் அருமையாக தொடர்கிறது. வாழ்த்துக்கள்
 சமீபத்தில் தான் வைராக்கியம் பார்த்தேன்.. பாடல் நன்று காட்சியும் நன்று
 படம் கொஞ்சம் சலிப்பு இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
- 
	
			
				
					26th October 2015, 07:56 AM
				
			
			
				
					#1059
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வணக்கம்ஜி!
 
 நலமா! பாலாதொடர் பாராட்டிற்கு நன்றிஜி! தங்கள் அனைவரது ஆதரவினாலும், ஒத்துழைப்பினாலும் பாலா தொடரை சந்தோஷத்துடன் செய்ய முடிகிறது. மது அண்ணா காணோமே!
 
 லீவ் எல்லாம் முடிந்ததா? ஜாலியாக என்ஜாய் செய்தீர்களா? என்னென்ன மூவி பார்த்தீர்கள்? நானும் ரௌடிதான்'  நல்லா இருக்காமே! சின்னா சொன்னார். நான் நேத்து குருவி அப்படின்னு ஒரு மொக்கை படத்தைப் பார்த்து மட்டையாயிட்டேன். விதி...யாரை விட்டது? நீங்கள் தாய்நாடு வரும் நாளை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					26th October 2015, 08:02 AM
				
			
			
				
					#1060
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							சின்னா!
 
 பாலா தொடர் பாராட்டிற்கு தேங்க்ஸ்.
 
 //மூன்றுபடமா..ஒரே நாளிலா//
 
 நீங்க வேற!
 
 காலை காட்சி ஜல்லிக்கட்டு, மதியம் கிருஷ்ணன் வந்தான், ஈவ்னிங் மற்றும் நைட் ஷோ தெய்வ மகன் என்று 4 ஷோக்களும் நாள் முச்சூட பார்த்த காலமெல்லாம் உண்டு. மறுபடி அடுத்த நாள் தெய்வ மகன். மறுபடி அடுத்த நாள் தெய்வ மகன்.
 
 
 
 
 
 
 
Bookmarks