-
30th October 2015, 12:45 PM
#1181
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
47
'அன்பு வந்தது என்னை ஆள வந்தது' (சோகம்)
'சுடரும் சூறாவளியும்'
இதே 'அன்பு வந்தது' பாடல் மறுபடி இரண்டாம் முறை வருகையிலும் பாலா ஜெமினிக்கு சோகமாக 4 வரிகள் பாடி, பின் பாடல் எல்.ஆர்.அஞ்சலி குரலிலும், (சிறுவயது முத்துராமனுக்கு) அதன் பிறகு டி.எம்.எஸ், ஜானகி குரலிலும் தொடரும். ஜெமினி அறையில் தனித்து இருந்து மது அருந்தியபடி குழந்தைகளை நினைத்து வருந்திப் பாடுவார். அதனால் இந்தப் பாடலிலும் பாலா உண்டு. மது அருந்திய தடுமாற்றக் குரலில் பாலா மனம் வெதும்பிப் பாடுவார்.
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
30th October 2015 12:45 PM
# ADS
Circuit advertisement
-
30th October 2015, 12:54 PM
#1182
Junior Member
Regular Hubber
super sir marubadi padam partha feel koduthirukeenga
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th October 2015, 01:10 PM
#1183
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 28: நெஞ்சில் உள்ளாடும் கீதம்!
தெய்வ சங்கல்பம் அல்லது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு இதுதான் ‘கவிக்குயில்’(1977) படத்தின் கதைக் களன். கடவுள் கண்ணன் மீது மிகுந்த பக்தி கொண்ட கோபால் (சிவகுமார்), பிருந்தாவனத்தின் கண்ணன் போலவே புல்லாங்குழல் மீது காதல் கொண்டவன். வசதியான குடும்பத்தில் பிறந்து, கண்ணன் பக்தியால் புல்லாங்குழல் சகிதம் வெவ்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிபவன். கனவில் கண்ணனால் அடையாளம் காட்டப்படும் ராதா (ஸ்ரீதேவி) மீது காதல் கொள்வான். அந்த ஏழைப் பெண்ணின் மனதில் வார்த்தைகளற்ற கீதம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அவள் மனதுக்கு மட்டும் தெரிந்த அந்த மெட்டை கோபால் வாசித்துக்காட்ட இருவருக்கும் இடையில் காதல் ஜனிக்கும். தேவராஜ்-மோகன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, செந்தாமரை ஆகியோரும் நடித்திருப்பார்கள். இந்த தெய்வீகக் காதல் கதைக்குத் தனது உயிர்ப்பான இசையை வழங்கியிருப்பார் இளையராஜா.
ராதா மனதிலிருந்து கோபாலின் குழலுக்குக் குடிபெயரும் அந்த கீதம்தான் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’. கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய இப்பாடல் இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. காற்றில் கலந்து வரும் அந்த ரகசிய மெட்டின் குழலோசை தரும் பரவசம் ஸ்ரீதேவியை மட்டுமல்ல; நம்மையும் தொற்றிக்கொள்ளும். காந்தர்வ குழலோசையின் திசை நோக்கி ஸ்ரீதேவி ஓடிச் செல்லும்போது தடதடக்கும் ஜலதரங்கமும், பரிதவிப்பை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும் பரவசத்தின் சதவீதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பக்தி, காதல், பெருமிதம் என்று உணர்வுகளின் அலையில் மிதக்கும் குரலில் மெய்சிலிர்க்க வைப்பார் பாலமுரளி கிருஷ்ணா. மலைகளுக்கு நடுவே பரந்து கிடக்கும் சமவெளி முழுவதும் எதிரொலிக்கும் புல்லாங்குழலிசையைப் பாடல் முழுவதும் பரவவிட்டிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் மனதின் ஏக்கத்தின் எதிரொலிபோல், காதல் கொண்ட குயிலின் பிரிவுத் துயரின் வெளிப்பாட்டைப் போல் ஒலிக்கும் புல்லாங்குழல், காலத்தையே உறையவைத்துவிடும். ‘உன் புன்னகை சொல்லாத அதிசயமா’ எனும் வரி பஞ்சு அருணாசலத்தின் மிக அழகான கற்பனை.
இப்பாடலின் இன்னொரு வடிவத்தை ஜானகி பாடியிருப்பார். காதலனால் ஏமாற்றப்பட்டதாகக் கருதி, தனது முடிவைத் தேடி மலை மீது ஏறிக்கொண்டே நாயகி பாடும் பாடல் இது. கொந்தளிக்கும் மனநிலையும் சுயஇரக்கமும் கலந்த உணர்வை நிரவல் இசையில் உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாடலில் ஏமாற்றத்தையும் திகைப்பையும் பிரதிபலிக்கும் வயலின் இசைக்கோவை ஒன்று கடந்துசெல்லும். கதையின் மொத்த சாரத்தையும் அந்த இசை உணர்த்திவிடும்.
ஏமாற்ற உணர்வை வெளிப் படுத்தும் இன்னொரு பாடல் ஜானகி பாடிய ‘உதயம் வருகின்றதே…’. சாரங்கி, வயலின் சகிதம் மனதை நெகிழவைக்கும் பாடல் இது. இப்பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ‘மானத்திலே மீனிருக்க மருதையில நானிருக்க’ எனும் தொகையறாவைப் பாடியவர் இளையராஜாவின் ஆசான்களில் ஒருவரும், புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஜி.கே. வெங்கடேஷ்.
ரஜினி படாபட் ஜெயலட்சுமி ஜோடிக்கும் பாடல் உண்டு. ரஜினியை நினைத்து படாபட் பாடும் காட்சியில் இடம்பெறும் ‘மானோடும் பாதையிலே’ பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். சுஜாதா முதன்முதலில் பாடிய ‘காதல் ஓவியம் கண்டேன்’ பாடலும் இப்படத்தில் இடம்பெற்றதுதான். புதிதாக மலரும் பூவின் சுகந்தத்துடன் ஒலிக்கும் இப்பாடலின் முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் மெல்லிய கோரஸ், மேலும் சுகம் சேர்க்கும். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு. ‘ஆயிரம் கோடி காலங்களாக’ என்று தொடங்கும் அப்பாடல், கிருஷ்ணனைப் போற்றும் அசல் பக்திப் பாடல்!
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் ஜானகி பாடிய ‘குயிலே கவிக்குயிலே’. குருவிகளின் சிணுங்கலுடன் தொடங்கும் இப்பாடலில் முகப்பு இசை, மாயாஜாலங்களை நிகழ்த்தக் கூடியது. வயலின் கோவை அடுக்கின் மேலே ஷெனாய் ஒலி பரவும்போது காலத்தின் பின்னோக்கிய பயணம் நம்மை எங்கோ இழுத்துச்சென்றுவிடும். மனிதர்களின் குறுக்கீடற்ற இயற்கைப் பிரதேசத்தைப் போர்த்தியிருக்கும் பிரம்மாண்ட நிழல், கொஞ்சம் கொஞ்சமாக விலக, இயற்கையின் பேரழகு நம் கண் முன்னே விரிவது போன்ற உணர்வை, பாடலின் முகப்பு இசை தரும். இளமையின் பூரிப்பில் திளைக்கும் பெண், தனது விருப்பத்துக்குரிய ஆணுக்கான எதிர்பார்ப்பு பற்றி இயற்கையிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சியமைப்பு அது. தென்றலின் தீண்டல் தரும் சுதந்திர உணர்வுடன் தனது காதல் ஆசையை வெளிப்படுத்தும் பெண்ணின் அந்தரங்க உணர்வு. மிக மெல்லிய அந்த உணர்வைத் தனது இசையில் நுட்பமாக வெளிக்கொணர்ந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசை நம்மை உரசியபடி கடந்துசெல்லும் தென்றல், ஆளரவமற்ற அந்தப் பிரதேசத்தின் தாவரங்களை அசையச் செய்வது போன்ற உணர்வைத் தரும். கிட்டார், வயலின், ஷெனாய் இசைக் கலவையை அதில் ஒலிக்க விடுவார் இளையராஜா. மூன்று சரணங்களைக் கொண்ட இப்பாடலில், இந்த இசையைத் தொடர்ந்துவரும் இரண்டாவது சரணத்தை வித்தியாசமான மெட்டில் அமைத்திருப்பார்.
கேட்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் பாடல்களைக் கொண்ட இப்படத்துக்கு ‘கவிக்குயில்’ என்ற பெயர்தான் எத்தனை பொருத்தமானது!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th October 2015, 01:12 PM
#1184
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சினிமா ரசனை 22: திகில் கதைகளின் தந்தை!
உலகெங்கும் பிரபலமானவை ‘ஹாரர்’ வகையைச் சேர்ந்த திகில் திரைப்படங்கள். இந்த வகையில் நாவல்களை எழுதும் எழுத்தாளர்களும் ஏராளம். அவர்களில் எட்கர் ஆலன் போ(Edgar Allan Poe) ஹாரர் கதைகளின் தந்தையாக உலகெங்கும் வழிபடப்படுபவர். உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதியவர். இவரது துப்பறியும் கதாபாத்திரமான அகஸ்டி டுபின் (Auguste Dupin), பல படங்களில் இடம்பெற்றுள்ளது. நாவல்களில் இடம்பெற்ற உலகின் முதல் துப்பறிவாளர் கதாபாத்திரமும் இதுவே. இவர் எழுதிய பல கதைகள் திரை வடிவம் பெற்றுள்ளன. அவ்வகையிலும் உலகம் முழுக்கப் புகழ்பெற்றவர் அவரே.
ஆனால், நாற்பதே வருடங்கள் உயிர்வாழ்ந்த ஆலன் போவின் வாழ்க்கையில் துயரமே அதிகமும் நிறைந்திருந்தது. 1809-ல் பிறந்து, 1849-ல் மறைந்த போ, ஒரு சிறுகதை எழுத்தாளர். கவிஞர். வறுமையில் வாடியவர்.
துரத்தப்பட்ட எட்கர்
எட்கரின் தாய் எலைஸா, ஒரு சிறந்த நாடக நடிகை. எட்கருக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது அவரது தந்தை, குடும்பத்தையே விட்டுவிட்டு ஓடிவிட்டவர். ‘போ’வின் மூன்றாவது வயதில், அவரது தாயாரைக் கடுமையான காசநோய் தாக்கியது. தனது இருபத்துநான்காவது வயதில் இறந்தார் எலைஸா. இரண்டரை வயதுக் குழந்தை எட்கரின் மனதைத் தாக்கிய கடுந்துயரம் இது. ஒரு பெண்ணிடமிருந்து மரணத்தால் பிரியும் அனுபவம், வாழ்வில் முதன்முறையாக அவருக்கு நேர்ந்தது.
இதன்பின் எட்கரை வளர்த்த தாயான ஃப்ரான்ஸெஸ் ஆலனும் காசநோயால் பாதிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில், எல்மைரா ராய்ஸ்டர் (Elmira Royster) என்ற பெண்ணின் மேல் காதல்வயப்பட்ட எட்கருக்கு, அப்பெண்ணுடன் நிச்சயமும் ஆகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த எட்கர், விர்ஜீனியா பல்கலைக் கழகத்துக்குச் செல்கிறார். அங்கு பயில்கையில், படிப்புக்கும் வாழ்க்கைக்குமான பணத் தேவை அவரது கழுத்தை நெரித்தது. தனது வளர்ப்புத் தந்தையான ஆலனைத் தொடர்புகொண்டார். பெண் பித்தரான ஆலனோ, எட்கரைத் துரத்தியடித்தார். மகனுக்குப் பணம் எதையும் அனுப்ப மறுத்தார்.
பத்திரிகை ஆசிரியர்
தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தனது கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் இரண்டாயிரம் டாலர்கள் கடனில் மூழ்கிய ஆலன் குடிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் படிப்பைத் தொடர முடியாமல் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி பாஸ்டனுக்குச் சென்றார். அங்கே பிழைப்புக்கு வேறு வழியில்லை என்பதறிந்து தனது பத்தொன்பதாவது வயதில், ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்கள் ராணுவச் சேவைக்குப் பின் தனது அத்தையான மரியா க்ளெம்மின் வீட்டில் தங்கி வாழத் தொடங்கினார். அவரது பன்னிரெண்டு வயது மகள் விர்ஜீனியாவின் மேல் காதல் வயப்பட்டார். ராணுவத்தில் இருந்த இரண்டு வருடங்களில், இரண்டு கவிதைத் தொகுப்புகளை (Tamerlane and Other Poems, Al Aaraaf) வெளியிட்டிருந்தார் எட்கர். பிறகு ‘Southern Literary Messenger’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் எட்கர். இந்தப் பத்திரிகையில் இவர் எழுதிய புத்தக விமர்சனங்கள், பெரும் புயலைக் கிளப்பின. சராசரி எழுத்தாளர்கள் ஒருவரையும் அவர் மன்னிக்கவில்லை. விளாசித் தள்ளினார்.
துயரிலிருந்து பிறந்த எழுத்து
இதே சமயத்தில், விர்ஜீனியாவுடன் எட்கரின் திருமணம் நடக்கிறது. எட்கருக்கு 26 வயது. விர்ஜீனியாவுக்கோ 13 வயது. சட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்க, விர்ஜீனியாவுக்கு 21 வயது என்று சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு இத்திருமணம் நடக்கிறது. ஆண்டு 1842. தனது பத்தொன்பதாம் வயதில், இருமும்போது விர்ஜீனியாவின் வாயிலிருந்து ஒருதுளி ரத்தம் வெளிவருகிறது. உடனடியாகவே அது காசநோய் என்று கண்டுகொள்கிறார் எட்கர். மரணம் விர்ஜீனியாவைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்து, மறுபடியும் பெருங்குடியில் மூழ்கினார்.
விர்ஜீனியாவுடன் வாழ்ந்த காலங்களில்தான் எட்கரின் புகழ்பெற்ற படைப்புகள் ஒவ்வொன்றாக வெளியாயின. வாழ்க்கையின் இருண்ட தருணங்களில் அவர் எப்போதும் மூழ்கியிருந்ததால், தனது மனதின் அடியாழத்தில் ஒளிந்திருந்த வாழ்க்கையைக் குறித்த பயத்தை, தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கினார் எட்கர். மரணங்களைப் பற்றியும், மரண பயத்தைப் பற்றியும் அவரது படைப்புகள் பேசத் தொடங்கின. ‘Murders in the Rue Morgue’ வெளிவருகிறது. இக்கதையே ஆர்தர் கானன் டாயலுக்கு, ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்க உந்துதலாக அமைந்தது. அவ்வகையில், உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதுகிறார் எட்கர்.
அவர் எழுதிய ஒரு படைப்பு, புகழின் உச்சத்திற்கு அவரைக் கொண்டுசென்றது. அதுதான் The Raven என்ற கவிதை. எழுதிய ஆண்டு ஜனவரி 1845. இன்றளவும் உலகம் முழுதும் கொண்டாடப்படும் கவிதை இது. இதன் முழு வடிவத்தை இன்றும் இணையமெங்கும் விவரமாகவே படிக்கலாம்.
வறுமையின் கைப்பாவையாக
எட்கரின் வாழ்வின் இருண்மையை முழுதாக வெளிக்கொணர்ந்த அந்தக் கவிதையை, பல இடங்களில் படிக்கச்சொல்லி அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. எட்கரிடம் இருந்தது ஒரே கோட்டு. கூடவே, கிழிந்த சட்டை ஒன்று. ஆகவே, சட்டை அணியாமல், கோட்டை கழுத்து வரை இறுக்கமாகப் போட்டுக்கொண்டே இக்கவிதையைப் பல மேடைகளில் படித்திருக்கிறார் எட்கர். ஆனால் அங்கீகாரம் கிடைத்ததே தவிர பணம் கிடைக்கவில்லை. தனது வாழ்வையே கவிதையாக உருமாற்றிய அந்தக் கவிஞனின் மனம், படாதபாடு பட்டது. குளிர்காலத்தில், தனது ஒரே கோட்டையும் மனைவி விர்ஜீனியாவுக்கு அணிவித்துவந்தார் எட்கர். பணம் சம்பாதிப்பது மட்டும் அவரால் முடியவில்லை. எழுத்தால் மட்டுமே பணம் என்றே வாழ்ந்ததால், சமுதாயம் அந்த இலக்கியவாதியைப் புறக்கணித்தது. அவனது படைப்புகளை மட்டும் படித்து, அவனது வாழ்வை வாழ அவனுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் அளிக்க மறுத்தது.
ஆண்டு 1847. விர்ஜீனியா இறந்தார். மனைவியை இழந்ததால் கடுமையான மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார். 1849. திடீரென ஒரு நாள் காணாமல் போனார் எட்கர். என்ன நடந்தது என்றே இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு தெருவில், அளவில் பொருந்தாத உடைகள் அணிந்து, மயக்கமுற்றுக் கிடந்த எட்கரை, மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். அக்டோபர் 7 1849. அதிகாலையில் திடீரென விழிப்பு அடைகிறார் எட்கர். ‘கடவுளே.. எனது பரிதாபத்துக்குரிய ஆன்மாவைக் காப்பாயாக’ என்ற வார்த்தைகளை மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்.
மரணமடைகிறார் எட்கர் ஆலன் போ. அது அவரது நாற்பதாவது வயது. மிகப் பெரிய ஆளுமையாக வாழ்ந்திருக்க வேண்டிய எட்கர், இப்படியாக அகால மரணம் அடைந்தார்.
உலகெங்கும் இன்றும் பல திரைப்படங்கள் எட்கர் ஆலன் போவின் கதைகளையும் கவிதைகளையும் மையமாக வைத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவரது படைப்புகளைப் பற்றிப் பல ஆய்வுகள் நடக்கின்றன. திரைப்படங்களில் ‘ஹாரர்’ என்ற வகையில் படம் எடுக்க விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் எட்கர் ஆலன் போவைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அப்படங்களில் பல்வேறு அடுக்குகளில் பல ஆழமான விஷயங்களைப் பற்றிப் பேச முடியும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2015, 03:07 PM
#1185
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
30th October 2015, 03:22 PM
#1186
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2015, 03:59 PM
#1187
Senior Member
Senior Hubber
இப்போதெல்லாம் மணி, நிமிடம் நொடி என நேரத்தைக் கணக்கிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். சுலபமாய் செல் ஃபோனிலேயே டைம் பார்த்து விடுகிறோம்..வாட்ச் எல்லாம் கண்டு பிடிக்காத அந்தக் கால ராஜாக்கள் காலத்தில் என்ன நடந்தது..
நாழிகை ஜாமம் என்று தான் கணக்கிட்டார்கள்
காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு வரை - பகல் ஜாமங்கள் நான்கு - அதாவது ஜாமம் என்றால் மூன்று மணி நேரம்..
மாலை ஆறு முதல் காலை ஆறுவரை - இரவு ஜாமங்கள் நான்கு - காலை ஆறுவரை..
நாழிகை எனப்பார்த்தால் 24 நிமிடங்கள் ஒரு நாழிகை
இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம்
ஏழரை நாழிகை 3 மணி நேரம் - ஒரு ஜாமம்..
இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கியிருந்த வேளையில் அந்த யெளவன வாலிபன் கையிலிருந்த நூலேணியைக் கோட்டையின்
மேற்புறத்தில் மிகச் சிரமப்பட்டுப் பொருத்தி ஏறி பின் இறங்கி அங்கே அடர்ந்த தோப்புக்கிடையில் ஒளிந்திருந்த மாளிகையின்
திட்டிவாசலை நோக்கிப் பையப் பைய நடந்தால் அது படக்கென த் திறக்க அங்கு எதிர்ப்பட்ட ஒரு பேரெழில் மங்கை,”என்னாச்சு மாமா
பன்னிரண்டு மணியாச்சே.. சாப்பிட வேணாமா” என்றாள்..
அஃதாவது .. இரவின் மூன்றாம் ஜாமம் ஆரம்பம் என்றால் பன்னிரண்டு மணி நள்ளிரவு என அர்த்தம்..
அப்புறம் மூகூர்த்தம் என்பது என்னனாக்க..(யாருப்பா அங்க கொட்டாவி விடறது )
மூன்றேமுக்கால் நாழிகை முகூர்த்தம் என்பார்கள் ஒன்றரை மணி நேரம்..அதுவும் திருமணம் போன்றவற்றிற்கு நல்லமுகூர்த்த நாளாய் பெண் பையன் ஜாதகத்தைப் பார்த்து நாள் குறிப்பார்கள்..
இன்று ராகவேந்திராசார் 8000 பதிவுகள் ஆன நாளும் நமக்கு முகூர்த்த நாளே..
*
வின்ஸ்டன் என்ற ப்ராண்ட் சிகரெட் உண்டு.. நான் குடித்ததில்லை..ஆனால் சின்ன வயதில் அண்ணன் குவைத்திலிருந்து திரும்பிய நாளில்
அப்பாக்கு எதிரேயே சூட்கேஸ் திறந்து எடுத்து என்னிடம் கொடுக்க நான் முழி முழி என முழிக்க, அப்பாவும் ஒரு புதிர்ப்பார்வை பார்க்க
கடகடவெனசிரித்து.. இது சிகரெட் மாதிரியான ரேடியோப்பா..பேட்டரி போட்டுக் கேக்கலாம்..எனச் சொன்னார் அண்ணா..
ஸோ அந்த ரேடியோவில் குட்டி பேட்டரி போட்டாலும் கணீர் என சீர்காழி போலெல்லாம் பாடாது..கொஞ்சம் மெலிதாய்த்தான் ஒலிக்கும்..ஆனால் அதுவே எனக்குப்பெரிய பொக்கிஷம்.. எனில் ஸ்கூல் விடுமுறையில் ரேழியில் மதியத்தில் தூங்குவதற்கு முன் ஒரு மூலையில் வைத்துக் கேட்டுக் கொண்டிருப்பேன்.. கனகாரியமாக மூன்று டு நான்கு தூங்கி நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் இசைக்களஞ்சியம் தென் ஆறுமணி உள்ள ப்ரோக்ராமகளைக் கேட்டிருக்கிறேன்..
அப்படிக்கேட்டபாடல்களில் ஒரு பாட்டை இன்று தான் பார்த்தேன்..
யெஸ் முகூர்த்த நாள்..
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்
காணிக்கையாய்க் கொண்ட சோம சுந்தரர் கண்களுக்கும் முகூர்த்த நாள் முகூர்த்த நாள்..
ஆனிப் பொன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டாடிட ஆனியிலே முகூர்த்த நாள்
ஆவணி வீதியில் மாப்பிள்ளை பெண்ணுடன் ஊர்வலம் போகும் முகூர்த்த நாள்.
நாணத்தில் மேனி நடுங்கிடும் வண்ணம் நலங்கு வைக்கும் முகூர்த்த நாள்
தான் தின்னும் கனியில் பாதியைக் கொடுத்து சாப்பிடச் சொல்லும் முகூர்த்த நாள்..
தோழியர் கூடி சீர்முறை பாடி தூங்க வைக்கும் முகூர்த்த நாள்..
தூங்கிடும் போதே கிழவியை அனுப்பி தூதுவிடும் முகூர்த்த நாள் (டபக்குன்னு கையால வெட்கப்பட்டு முகம் மூடிக்கறாங்க..ஓ)
(கூட இருக்கறவர் ஏன் கெமிஸ்ட்ரி லாப் ல புகுந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட் மாதிரி மெஞ்ஞெ மெஞ்ஞேன்னு பார்க்கறார்னு புரியலை!)
பாட்டு முடிஞ்சுடுத்தேன்னு பார்த்தா பாடிய ஹீரோயின் பொசுக்குன்னு அருவில விழுந்து படுத்துண்டே குளிக்க ஆரம்பிச்சுடுது..ஹூம்..பாக்ஸ் ஆஃபீஸ்க்காக......
ஹீரோயின் விஜய நிர்மலாமாதிரியிருக்கார்..ஆனா அவரில்லை ஹீரோ தெரிந்தாற்போல இருக்கிறது..ஆனால் அழகிய பாடல்..
இந்த முகூர்த்த நாள் பாடலை ராகவேந்திரருக்கு டெடிகேட் பண்றேன் சுசீலாம்மா வாய்ஸ் வெகுஅழகு..
இந்தப் படத்துல இன்னொரு பாட்டும் இருக்கு.. அது அடுத்த போஸ்ட்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
30th October 2015, 04:07 PM
#1188
Senior Member
Senior Hubber
இந்தப் பாட்டுக் கேட்ட பிறகு தான் ஹீரோயின் போன பாட்டில் கேட்ட பார்த்த பொண்ணில்லை எனத் தெரிகிறது..
அந்தப்பொண்ணும் செத்துப்போச்சு போல (பேரு உமாவாம்) ஆனா திடீர்னு கே.ஆர்.விஜயா வந்து பாடவும் அவர் தான் ஆவின்னு தப்பா நினைச்சுக்கிட்டேன்.. ஜெய் நன்னா முழிக்கிறார்..பின்னால முகூர்த்த நாள் பொண்ணும் வந்து பாடுது..
அதாவது படப்படி அந்தப் பொண் ஜெய்யோட தங்கச்சி போல.. ஆமாம் முகூர்த்த நாள் என்ன கதை..
நடந்தது, நேற்று முடிந்தது
இன்று நடப்பதே வாழ்வில் புதியது
என்று நினைப்பது தான் வாழ்வென்பது…உண்மை தானே..
சுசீலாம்மா எல்.ஆர்.ஈஸ்வரி..
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
30th October 2015, 06:22 PM
#1189
Senior Member
Diamond Hubber
சிக்கா...
சூரியன் போயி சந்திரன் வந்தாச்சு... நீங்க முகூர்த்த நாளிலேயே இருக்கீங்களே....
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு... ண்டு.. டு..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2015, 06:24 PM
#1190
Senior Member
Diamond Hubber
வாசுஜி...
பாலு வரிசையில் இதெல்லாம் எப்போ வருமோ தெரியாது... ஆனா.. சுருளி குரலில் பாலு பாடிய பாடல்கள் எத்தனை ?
எனக்குத் தெரிஞ்சு ...
கொஞ்சம் ஒதுங்கு - வசந்த காலம்
கண்ணே கண்ணான கண்ணா - பெண்ணுக்கு யார் காவல்
சின்ன நாக்கு சிமிழி மூக்கு - ஓடி விளையாடு தாத்தா
கொக்கரக்கோ கொக்கரக்கோ - ஒரு மரத்துப் பறவைகள்
( இதெல்லாமே பாலுதானே ? )
வேறு ஏதாவது இருக்கா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks