-
30th October 2015, 08:39 PM
#31
Junior Member
Senior Hubber
பாராட்டிற்கு மிகவும் நன்றி..
ராகவேந்திரா சார்.
எப்போதும் மனதில் வாழும்
நடிகர் திலகத்திற்காக
எட்டாயிரம் பதிவுகள் தந்த
வணங்குதலுக்குரிய தங்களின் பாராட்டுக்குரியவனாய் நான்
இருப்பதில் மிகப் பெருமை
எனக்கு.
தங்களின் "ரோஜாவின் ராஜா"
குறித்த பதிவினைப் படித்தேன்.
மணி-நிமிடம் விநாடியெல்லாம் குறித்து
நீங்கள் இணைத்துள்ள காணொளியைப் பார்க்கவே அவசியமில்லாதபடி காட்சியை ஓட்டிக் காட்டுகிறது, உங்கள் விளக்கம்.
"இப்போது அவருடைய இரு
கைகளும் அந்த இயலாமையை
எப்படி வெளிப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் சகல அவயங்களும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாய் இறைவன் படைத்தது நடிகர் திலகம் என்கிற கலை தெய்வத்தை மட்டும் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது."
-ரசிப்பின் உச்சத்தில், உணர்ச்சி
வசப்பட்டுச் சொன்ன வார்த்தைகளில்லை...
முடிந்த முடிவாய், தீர்வாய்
நீங்கள் உறுதிப்படுத்தியிருக்கிற
வார்த்தைகள் இவை.
இது போன்ற தெளிந்த,முதிர்ந்த
வார்த்தைகளின் வெளிப்பாடே,
தாங்கள் ஒரு மிகச் சிறந்த
சிவாஜி ரசிகர் என்பதற்குச்
சான்றாகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
30th October 2015 08:39 PM
# ADS
Circuit advertisement
-
30th October 2015, 08:41 PM
#32
Junior Member
Devoted Hubber
Congrats Mr. Ragavendra sir for your crossing 8000 milestone.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th October 2015, 08:49 PM
#33
Junior Member
Veteran Hubber
Hearty congrats Raghavendhar sir for your crossing the milestone of 8K NT postings!
senthil
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th October 2015, 10:03 PM
#34
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-31
"பந்தம்."
மகளைக் காதலிக்கும் இளைஞனை வீட்டிற்கே
அழைத்து கண்டிக்கும் காட்சி.
ஆணவம் மிகுந்த செல்வந்தர்
என்று தனக்குத் தரப்பட்டிருக்கிற பாத்திரத்திற்கு
உயிர் கொடுத்து, வெகு நக்கலாக, உடம்பு குலுங்க
அவர் சொல்லும்... " லவ்
பண்றானுங்களாம்..லவ்..
என்னாங்கடா".
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
30th October 2015, 10:07 PM
#35
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-32
"பாசமலர்".
விருப்பமில்லாதவரை நண்பர்
ஜெமினி வற்புறுத்தி தொழிற்சங்கப் போராட்டத்தில்
ஈடுபடுத்த...
ஏனோதானோ என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பவர்,தொழிற்சாலையின் வாயிற்கதவு சார்த்தப்படுவதைப் பார்த்துப்
பதறிச் சொல்லும் "கேட்டை
மூடுறான். கேட்டை மூடுறான்".
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
30th October 2015, 10:12 PM
#36
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-33
"முதல் மரியாதை".
'ஏ..கிளியிருக்கு..பழமிருக்கு'
பாடலில், ஒரு கையில் கூடை
பிடித்து,மறுகையால் விதை
தூவிக் கொண்டு,வரப்பின் மீது
நடந்து வரும் அழகு நடை.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th October 2015, 10:26 PM
#37
Junior Member
Regular Hubber
மையம் திரியில் எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு
இராகவேந்தர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th October 2015, 10:37 PM
#38
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Aathavan Ravi
நினைப்போம்.மகிழ்வோம்-31
"பந்தம்."
மகளைக் காதலிக்கும் இளைஞனை வீட்டிற்கே
அழைத்து கண்டிக்கும் காட்சி.
ஆணவம் மிகுந்த செல்வந்தர்
என்று தனக்குத் தரப்பட்டிருக்கிற பாத்திரத்திற்கு
உயிர் கொடுத்து, வெகு நக்கலாக, உடம்பு குலுங்க
அவர் சொல்லும்... " லவ்
பண்றானுங்களாம்..லவ்..
என்னாங்கடா".
நண்பர்களே,
ரவி அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் காட்சியைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. குறிப்பாகச் சொன்னால் நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்கள் பலவற்றைப் பார்க்காமலேயே கமெண்ட் அடிக்கக் கூடிய பிரகஸ்பதிகளுக்கு இந்தக் காட்சி ஒரு சம்மட்டியடி. என்ன ஒரு கம்பீரம், அந்த பணக்கார திமிர்த்தனத்தை அவ்வளவு அழகாக, சமகால பணக்காரனின் திமிரை வெளிப்படுத்தக் கூடிய அற்புதமான காட்சி.. பார் மகளே பார படத்தில் உள்ளது ஒரு வகை, உயர்ந்த மனிதனில் உள்ளது ஒரு வகை, ஆனால் பந்தம் திரைப்படத்தில் அவர் ஏற்ற பாத்திரம், முழுக்க முழுக்க செல்வந்தரின் செருக்கை அப்படியே சித்தரித்த புதுவிதமான நடிப்பு. இதன் மூலம் நடிகர் திலகம் தன் நடிப்பை காலங்களோ அதனால் ஏற்படக் கூடிய மாற்றங்களோ எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது, தன் நடிப்பு எப்போதுமே புதுமையாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க வாய்ப்பளித்த படம்.
ரவி குறிப்பிட்ட அந்தக் காட்சியை இதுவரை பார்க்காதவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். அவருடைய நடிப்பில் தான் நடிப்பே தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது, அவருடைய நடிப்பில் தான் பாத்திரங்களும் மொழியும் உயிர் பெற்று உலவுகின்றன என்பதற்கெல்லாம் சான்றினைத் தன் கடைசிப் படம் வரை அளித்தவர் நடிகர் திலகம்.
இதோ அந்தக் காட்சி ... 7 நிமிடங்கள் 28 விநாடியில் ரவி சொன்ன அந்த உடல் குலுக்கல்...அதுவும் அந்த பிளாஸ்டிக் என்கிற வார்த்தையை அவர் சொல்லும் விதம், அதை அவர் அவ்வளவு அலட்சியமாகக் கருதுகிறார் என்பதை அப்படியே உணர்த்தி விடும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2015, 10:44 PM
#39
Senior Member
Seasoned Hubber
முத்தையன்
தங்கள் உடல் நலத்தைப் பேணவும். ஒரு கட்டத்திற்குப் பிறகு நம்முடைய எண்ணத்தின் வேகத்திற்கு உடலால் ஈடு கொடுக்க முடியாது. அந்த நேரத்தில் அதைப் புரிந்து கொண்டு உடல் நலத்திற்கு முன்னுரிமை கொடுத்து உடல் நலம் சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் நம் பணிகளைத் தொடர்வதே உத்தமம்.
உடல் நலம் சற்று பாதிக்கும் போது நம்மையும் அறியாமல் நம் மனமும் சற்றே தடுமாறும்.
எனவே நன்கு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
மனம் சஞ்சலப்படும் போது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th October 2015, 11:04 PM
#40
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-34
"நிறைகுடம்."
வாணிஸ்ரீக்கு காதல் கடிதம்
எழுதிய விஷயம் தெரிய வந்து
வாணிஸ்ரீ கேட்பார்...
"என்ன லெட்டர்?"
"அது வந்து..அது..லவ் லெட்டர்"
என்பார்.
"லவ் லெட்டரா.. யாருக்கு" என்று வாணிஸ்ரீ கேட்பார்.
"அதான்... அந்த.. " என்று
எங்கோ ஒரு பக்கம் கையைக்
காட்டி சுற்றி வளைத்து,மீண்டும்
வாணிஸ்ரீயையே சுட்டிக் காட்டி
"உனக்குத்தான்" என்பாரே?
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
Bookmarks