-
30th October 2015, 10:51 PM
#11
Junior Member
Veteran Hubber
ஜெமினி என்றாலே குழலூதும் இரட்டையர்களின் உருவகமான ஜெமினி ஸ்டூடியோவையும் தாண்டி ஜெமினிகணேசன் மட்டுமே இன்றும் நமது மனக்கண்ணில்
தோன்றுவது அவரின் தனிப்பட்ட சாதனையே !
அதேபோல அவரை கிண்டலடிப்பதற்க்காக அள்ளிவிட்ட சாம்பார் என்ற பட்டப்பெயரும் தினமும் நமது உணவில் தவிர்க்க முடியாத பண்டமாகி அவரை உடனே நினைவு படுத்துவதும் திரையின் சாதுவான அவரது மென்மையான தோற்றப் பொலிவுக்கும் கண்ணியமான பாத்திரப் படைப்புகளுக்கும் கிடைத்த வெற்றியே !! அதிரடியான ரசிகர் கூட்டம் எதுவுமின்றி திரை மூவேந்தர்களில் ஒருவராக நிரந்தர காதல்மன்னராக தனது முத்திரையை ஓங்கிப் பதித்த நடிப்புச்செம்மலின் பிறந்தநாள் நினைவஞ்சலி தொடரும்!!
அதுவே நடிகர்த்திலகத்தைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அவருடன் இணைந்து சாதனைப் படங்களை நல்கிய second to none திரைச்சாதனையாளருக்கு இந்த நடிகர்திலக புகழார்வலனின் செஞ்சோற்றுக்கடன் என்றென்றும் !!
செந்தில்
Last edited by sivajisenthil; 30th October 2015 at 10:57 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2015 10:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks