-
2nd November 2015, 01:11 PM
#11
Junior Member
Devoted Hubber
தடையை விலக்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் விலக்கி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு (வீர விளையாட்டு) புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அதில் கமல்ஹாசன் பேசியதாவது, ஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழக மக்களின் பாரம்பரிய சின்னமாகவும், அதேசமயம், சுற்றுலா வருமானத்திற்கும் பெரும்பங்கும் வகிக்கிறது. இந்த விளையாட்டின் போது, காளை தழுவுதல் நிகழ்வு நடைபெறுகிறதேயன்றி, காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. தடையை விரைவில் விலக்கி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.
-
2nd November 2015 01:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks