-
15th November 2015, 08:47 AM
#1521
Senior Member
Diamond Hubber
நன்றி: அன்று கண்ட முகம் வோர்ட் பிரஸ்.காம்.

” இயக்குநர் திலகம் ” கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
நாடகத் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னர் கதை-வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், ஸ்டூடியோ அதிபராகவும் உயர்ந்தார். இவரது திரையுலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர்.
” இயக்குநர் திலகம் ” என்ற பட்டம் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டை ஆகும். தந்தை சீனுவாச நாயுடு. தாயார் விஜயத்தம்மாள். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார்.
அதனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது 10-ஆவது வயதிலேயே நவாப் ராஜமாணிக்கத்தின் ‘மதுரை தேவி பால வினோத சங்கீத சபா’ நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு நடிப்பு, இசை, நடனம், தமிழ், இந்தி மொழிகள் கற்றுத்தேர்ந்தார்.
பின்னர் அந்த நாடகக்குழுவிலிருந்து வெளியேறி தேவி நாடக சபையில் சேர்ந்தார். அங்கு கதை, கவிதை எழுத ஆரம்பித்ததுடன் ‘எழுத்தாளர்’, ‘தம்பி’, ‘தபால்காரன்’ ஆகிய நாடகங்களை எழுதினார். அவை சக்தி நாடக சபா, தேவி நாடக சபாக்களில் அரங்கேறின.
1954-இல் ஸ்ரீதரின் உதவியாளராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சேர்ந்தார். மாதர்குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி போன்ற படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான போது தமிழ்ப் படத்திற்கு வசனங்களைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
இவரைக் கைதூக்கி விட்டவர்களில் முதல் நபர் இயக்குநர் ஸ்ரீதர்.
தொடர்ந்து கவிதையில் நாட்டம் கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘லட்சாதிபதி’, ‘அமரதீபம்’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களுக்கு சில பாடல்களை எழுதினார்.
இந்த நிலையில் நாடக நடிகர் [பின்னர் திரைப்படங்களில் நடித்தவர்] நம்பிராஜன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை சந்தித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி வைத்திருந்த “தெய்வப்பிறவி” கதையைப் படமாக்க திட்டம் உருவாகியிருப்பதாகவும் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
கமால் பிரதர்ஸாரும் ஏவி.எம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டனர். இப்படத்திற்கான வசனத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதினார். 1960-ஆம் ஆண்டு வெளியான “தெய்வப்பிறவி” வெற்றிப்படமாகியது. இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். அவற்றில் மிகப்பெரிய வெற்றிப்படம் “படிக்காத மேதை”. 1960-இல் வெளிவந்தது இப்படம். படத்தின் வெற்றிக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, வசனம் பெரிதும் உதவியாக இருந்தது. தொடர்ந்து ‘கைராசி’, ‘எல்லாம் உனக்காக’, ‘அன்னை’, ‘குமுதம்’, என்று பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி முத்திரை பதித்தார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘சாரதா’ கதை புரட்சிகரமான கதை. அதை நீங்களே இயக்கினால்தான் பிரமாதமான படமாக அமையும் என்று சொன்னார் படத்தயாரிப்பாளர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். ‘சாரதா’ கதை முற்றிலும் மாறுபட்டது. அதற்குமுன் எந்தப் படத்திலும் இடம்பெறாத புரட்சிகரமான கருத்தினைக் கொண்டது. எந்த இயக்குநருக்கும் சவாலாக அமைந்த கதையிது. கதை-வசனத்தை மிகத் திறமையாக அமைத்து, கவனமாக இயக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கத்தி மீது நடப்பது போன்ற முயற்சியில் வெற்றியும் பெற்றார். கதாநாயகனாக சேடப்பட்டி, சூரியநாராயணத்தேவர் ராஜேந்திரனும், அவர் மனைவி சாரதாவாக ஆர்.விஜயகுமாரியும் அருமையாக நடித்திருந்தனர். 1962-ஆம் ஆண்டு வெளியான ‘சாரதா’ வெற்றிப்படமானது. இப்படத்திற்குத் தேசிய விருதுக்கான சான்றிதழும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து “சித்ரா புரொடக்சன்ஸ்” என்ற பெயரில் சொந்தத்தில் பட நிறுவனத்தைத் தொடங்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இதன் சார்பாக ‘தெய்வத்தின் தெய்வம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். இப்படம் சுமாராகத்தான் ஓடியது. அதன்பின் ”கற்பகம்” படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார். இப்படம் மகத்தான வெற்றிப்படமானது. நாடக நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்த ‘தெய்வநாயகி’ என்ற கே.ஆர்.விஜயா ஒரே படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.
இந்தப் படத்தின் லாபத்தைக் கொண்டு “ கற்பகம் ஸ்டூடியோ “ வை உருவாக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இப்படத்தைத் தொடர்ந்து கதை, வசன கர்த்தாகவும் இயக்குநராகவும் கொடிகட்டிப் பறந்தார். பல வெற்றிப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.
1964-இல் ‘கை கொடுத்த தெய்வம்’ ஒரு மகத்தான படமாகும். இப்படத்திற்கு நடுவண் அரசின் பிராந்திய சிறந்த படத்திற்கான வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வித்தியாசமான படங்களை இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஜனரஞ்சகமாக ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டார். அதுதான் “சித்தி”. இப்படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்தார். சித்தி கதாபாத்திரத்தில் பத்மினி நடித்தார். எம்.ஆர்.ராதாவின் மூத்த மகனாக நாகேஷும், மகளாக விஜயநிர்மலாவும் தாயாக எம்.எஸ்.சுந்தரிபாயும் கடைக்குட்டி மகளாக பேபி ராணியும், ஜெமினிகணேசன், குலதெய்வம் ராஜகோபால், ரி.எம்.சாமிக்கண்ணு, முத்துராமனும் மிகப் பிரமாதமாக நடித்திருந்தனர். இப்படம் 1966-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
1967-ஆம் ஆண்டு “கண் கண்ட தெய்வம்” என்ற படத்தை எடுத்தார். எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, பத்மினி, சிவகுமார், நம்பியார், நாகேஷ் போன்ற பலர் நடித்தனர். கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ரி.எம்.எஸ் பாடிய தென்ன மரத்துல குடியிருப்பது சின்ன பாப்பா, சுசீலாவுடன் இணைந்து பாடிய கண்ணுகுட்டி கண்ணுக்குட்டி காளை கண்ணுக்குட்டி போன்ற பாடல்கள் தேனினும் இனியவை. இப்படமும் வெற்றிப்படமானது. இப்படத்தினை ’பாண்டவலு’ என்ற பெயரில் தெலுங்கில் எஸ்.வி.ரங்காராவ் அவரே தயாரித்து இயக்கியிருந்தார். ஆனால் தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய அளவுக்கு ஜனரஞ்சகமாக இயக்க எஸ்.வி.ரங்காராவால் முடியவில்லை என்பதும் உண்மை. எஸ்.பி.கோதண்டபாணியின் இசையில் ( கே.வி.மகாதேவனின் இசையில் உருவான பாடல்களைப் போல் அல்லாமல் ) பாடல்களும் சோபிக்கவில்லை.
1965-ஆம் ஆண்டு வி.கே.ராமசாமியின் வி.கே.ஆர். பிக்சர்ஸுக்காக ‘செல்வம்’ என்ற படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், லட்சுமி பிரபா நடித்திருந்தனர். இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
1968-ஆம் ஆண்டு “ பணமா பாசமா “ என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தார். இதன் கதை-வசனம் இயக்கம் பொறுப்புக்களை அவரே ஏற்றார். இப்படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி, எஸ்.வரலக்ஷ்மி, நாகேஷ், விஜயநிர்மலா, ரி.கே.பகவதி, கே.சாரங்கபாணி, கே.கண்ணன் போன்ற பலர் நடித்திருந்தனர். மருமகனை அடக்கி ஆள நினைக்கும் மாமியார் (எஸ்.வரலக்ஷ்மி) கடைசியில் எலந்த பழம் விற்கும் ஒரு பெண்ணை (விஜயநிர்மலா) பெரிய பணக்காரர் என நினைத்து மருமகளாக்கி மூக்கு உடைபடுவதுதான் கதையின் மையம்.
நடுத்தர குடும்பங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுவைபட சேர்த்து அருமையாக வசனம் எழுதியிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். எஸ்.வரலக்ஷ்மியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
கே.வி.மஹாதேவனின் இசையமைப்பில் ’எலந்த பயம், எலந்த பயம்’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலும், ‘வாழைத்தண்டு போல உடம்பு அலேக்’ என்ற ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் என்பவை ஜனரஞ்சகமாக அமைந்து மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன. இப்படம் ரஷியாவிலும் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமூகப் படங்களையே இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலாக 1971-இல் ‘ஆதிபராசக்தி’ என்ற காலத்தால் அழியாத பக்திப் படத்தை இயக்கினார். இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. அதே போல் 1976-ஆம் ஆண்டு ‘தசாவதாரம்’ என்ற மிகப் பிரமாண்டமான படத்தை இயக்கினார்.
இவரது இயக்கத்தில் உயிரா மானமா, பாலாபிஷேகம், குலவிளக்கு, குலமா குணமா, குறத்தி மகன், வந்தாளே மகராசி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி, அடுக்குமல்லி, நன்றிக்கரங்கள், தேவியின் திருவிளையாடல், நாயக்கரின் மகள், போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.
எதிர்பார்த்து இயக்கிய மாலதி, சுவாதி நட்சத்திரம், பேர் சொல்லும் பிள்ளை, மகரந்தம், தனது மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷை கதாநாயகனாக்கி எடுத்த ‘அத்தைமடி மெத்தையடி’ போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. 1992-க்குப் பின்னர் படங்களை இயக்கவில்லை. சில படங்களின் தொடர் தோல்வியினால் நொடிந்து போன கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆன்மீகத்தில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின் மீண்டும் புது வேகம் பெற்று நட்டங்களிலிருந்து மீண்டு எழும்பினார். காலத்தின் சுழற்சியால் இம்மாபெரும் இயக்குநரின் மவுசு குறைந்தது. அதன்பின் ஸ்டூடியோவையும் இதர நிறுவனங்களையும் கவனிக்கத் தொடங்கினார்,
ஏனைய இயக்குநர்களிலிருந்து இவர் மாறுபட்டவர். எப்போதும் எளிமையையே விரும்புபவர் இவர். படப்பிடிப்புத் தளங்களில் கதர் வேட்டி, முண்டா பனியனுடனேயே காணப்படுவார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மொத்தம் 45 படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 33 படங்கள் இவர் தயாரித்தவை. 8 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
1975-ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும், 1980-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா விருதையும் தமிழக அரசு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கி கௌரவித்தது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு சுலோசனா என்ற மனைவியும் அசோக், ரவி, ராஜ்குமார், சின்னத்துரை ஆகிய நான்குப் புதல்வர்களும் உள்ளனர்.
தினத்தந்தி நாளிதழ்கள் 29.12.2005-30.12.2005 மற்றும் 2.1.2006-லிருந்து எடுக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களின் பட்டியல்:-
சாரதா 1962
தெய்வத்தின் தெய்வம் 1962
கற்பகம் 1963
ஆயிரம் ரூபாய் 1964
கை கொடுத்த தெய்வம் 1964
என்னதான் முடிவு 1965
பேசும் தெய்வம் 1967
கண்கண்ட தெய்வம் 1967
குலமா குணமா 1971
சித்தி 1966
செல்வம் 1966
சின்னஞ்சிறு உலகம் 1966
பணமா பாசமா 1968
உயிரா மானமா 1968
குலவிளக்கு 1969
தபால்காரன் தங்கை 1970
மாலதி 1970
ஆதிபராசக்தி 1971
குறத்தி மகன் 1972
வாழையடி வாழை 1972
நத்தையில் முத்து 1973
வந்தாளே மகராசி 1973
சுவாதி நட்சத்திரம் 1974
உறவுக்குக் கை கொடுப்போம் 1975
வாயில்லா பூச்சி 1976
தசாவதாரம் 1976
பாலாபிஷேகம் 1977
புண்ணியம் செய்தவள் 1977
ரௌடி ராக்கம்மா 1977
உள்ளத்தில் குழந்தையடி 1978
ஸ்ரீ காஞ்சி காமாட்சி 1978
அடுக்குமல்லி 1979
நீர் நிலம் நெருப்பு 1980
நன்றிக்கரங்கள் 1980
மகரந்தம் 1981
நாயக்கரின் மகள் 1982
தேவியின் திருவிளையாடல் 1982
யுகதர்மம் 1983
படிக்காத பண்ணையார் 1985
எரிமலை 1985
மகாசக்தி மாரியம்மன் 1986
பார்த்தால் பசு 1988
அத்தைமடி மெத்தையடி 1989
எனக்கு ஒரு நீதி 1990
காவியத்தலைவன் 1992
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது 86-ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு 14.11.2015 அன்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.
Last edited by vasudevan31355; 15th November 2015 at 08:50 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
15th November 2015 08:47 AM
# ADS
Circuit advertisement
-
15th November 2015, 10:04 AM
#1522
Senior Member
Seasoned Hubber
ஜி
வணக்கம், பரவாயில்லை மழையின் காரணமாக எளிமையான கொண்டாட்டம் தான்
சென்னையில் புயல் ஓய மாட்டேங்குது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th November 2015, 10:08 AM
#1523
Senior Member
Senior Hubber
இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
நாயக்கரின் மகள்- திடுதெப்பென்று வந்த நல்ல படம்..பாடல்கள் நல்ல பாட் இருப்பதாக நினைவில்லை..ஆனால் அந்த கால கட்டத்தில் மதுரை சக்தியில் ரிலீஸ் என நினைவு.. நீள நீள வசனங்கள் இருப்பினும் கொஞ்சம் சுவையாகவே இருந்தது..ஜெ.சித் திற்கு ரொம்ப உணர்ச்சிவசப் படக் கூடிய ரோல் ..சமாளித்திருப்பார்..விஜயகுமார் அழகானவாலிபர்.. மே.சு. மன்னர் என..
ஆதிப்ராசக்தி கே.எஸ்.ஜியா..தசாவதாரமுமா..பாலாபிசேகம் சினிப்ரியாவில் சக்கை போடு போட்டு பார்க்க இயலாமல் சாந்தியில் வந்தபிறகு பார்த்த நினைவு..பாட்டு சுருளி காமெடி ஹிட்..
கை கொடுத்த தெய்வம் பேசும் தெய்வம் குலமா குணமா மறக்க முடியாது.. தபால் காரன் தங்கை, குலவிளக்கு பார்த்ததில்லை.. நத்தையில் முத்து ஸ்ரீதேவியில் ரிலீஸ் என நினைக்கிறேன்..
கற்பகம் ரீ ரன்னில் ஸ்ரீதேவியில் பார்த்த நினைவு..ம்ம் அப்புறம் வருகிறேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th November 2015, 10:58 AM
#1524
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
49
'உத்தரவின்றி உள்ளே வா'
'மாதமோ ஆவணி'



'உத்தரவின்றி உள்ளே வா' ஒரு எனர்ஜி டானிக். பார்க்க ஆரம்பித்தவுடன் உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விடும். ரொம்ப விழுந்து விழுந்து சிரிக்க வைக்காவிட்டாலும் கிச்சு கிச்சுகளுக்கு குறைவில்லை. பாடல் ஆய்விற்கு முன் உங்கள் உத்தரவில்லாமல் அதிலிருந்து சில 'ஜோக்ஸ்'களை கொடுக்கறேன். சிரிப்பதும், சிரிக்காமலிருப்பதும் உங்கள் பாடு.
தன்னை குண்டு என்று கிண்டல் செய்யும் நாகேஷிடம் மாலி கடுப்புடன் சொல்வது.
"பெரிய மன்மதக் குஞ்சு...எடை போட்டா ஒன்னரை கிலோ இருக்க மாட்டான்... இவன் பேசறான்"
ரூப் கார்டென் போய் சாப்பிட ப்ளான் போடும் நண்பர்களிடம் 'உடம்பு சரியில்ல...முதுகுவலி அதனால் வரும்போது 12 இட்லி, 7 தோசை பார்சல் புடிச்சிட்டு வந்திடுங்க' என்று மாலி நழுவ, 'ஏண்டா உடம்பு சரியில்லாத போதே ஒரு டஜன் இட்லியா? என்று மூர்த்தி காய, அதற்கு நாகேஷ் மூர்த்தியிடம் 'அறிவு கெட்டவனே! முதுகுதானே வலிக்குதுன்னான்..வயித்துலையா வலி? புடிச்சுட்டு வரணும்...அது என்ன அல்சேஷனா?
வீரராகவன்: என்னைச் சுத்தி சின்ன வயசுல 7,8 பேர் இருந்துகிட்டே இருப்பாங்க.
நாகேஷ்: அப்பிடி இருந்தும் சொத்து இருக்கு உங்களுக்கு.

'மாந்தோப்பில் நான் இவரை சந்திப்பேன்... மஞ்சள் வெயில் மாலையிலே என் மன்னன் வருவான்' என பூர்வ ஜென்மக் கதையை ரமா நாகேஷை வைத்துக் கொண்டு சொல்ல, எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும் சச்சுவிடம் 'டாக்டர்' தேங்காய் சொல்வது. 'அப்போ அந்தக் காலத்துல வெயில் மஞ்சளா அடிச்சுது...அத நீ நோட் பண்ணிக்கோ'.
ரமாபிரபா நாகேஷை ஆரம்பத்தில் சந்தித்து வீட்டில்,
'நீங்கள் என் நாதன்
நான் உங்கள் நாதி'
ரமா: உங்களுக்கு எப்போதும் தனிமைதானே பிடிக்கும்?
நாகேஷ்: இப்போ பைத்தியமே புடிக்கும் போல இருக்கு
ரமா: சீதைக்கு ராமன் இருக்கும் இடம்தானே அயோத்தி?
நாகேஷ்: அது சீதைக்கு...ஆண்டாளுக்கு ஏன் அயோத்தி? ஸ்ரீவில்லிபுத்தூர் போறது.
ரமா: நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்தித்த காரணத்தால்.....
நாகேஷ்: வயசாயிடுச்சுங்கிறியா?
மாலி: நேத்து ராத்திரி ரவியும், ஜானகியும் இந்துஸ்தானி ராகத்தில ஒரு பர்ஸ்ட் கிளாஸ் பாட்டு பாடிகிட்டு இருந்தாங்களே! நான் பார்த்தேன்.
மூர்த்தி: உன் காலம் வேடிக்கை பார்த்தே முடியப் போகுது.


ஐஸ் புரூட் விற்பவனிடம் சென்று, அங்கு ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அவர் கையில் வைத்து சாப்பிடும் ஐஸ் போலவே தனக்கும் வேண்டும் என்ற அர்த்தத்தில் கைநீட்டி 'அது வேண்டும்' என்று ரமாபிரபா நாகேஷிடம் கேட்க, நாகேஷ் சொல்வது.
'அது வேண்டாம்...எச்சி(ல்)'
'உட்லண்ட்ஸ் டிரைவ் இன்'-ல் சர்வர் 'என்ன வேணும்?' எனக் கேட்க,
ரமா,
'ஒரு தட்டில் நான்கு அதிரசங்கள்...இன்னொரு தட்டில் தேனும் தினை மாவும் கொணர்க'
நாகேஷ் சர்வரிடம் சமாளிப்பு.
'ஒண்ணுமில்ல. அவ வித்வான் கோர்ஸ் படிக்கிறா'.
சச்சு: எங்க டாக்டருக்கு தன் திறமையைவிட ஆண்டவன் மேலதான் நம்பிக்கை ஜாஸ்தி.
தேங்காய்: (சுந்தரிபாயிடம்) இது ரொம்ப பேருக்கு புரிய மாட்டேன்னுதுங்க.
தேங்காய்: மேதையெல்லாம் எப்பவும் கிறுக்கனாத்தான்யா இருப்பாங்க.
நாகேஷ்: அப்ப நான் மேதையா?
தேங்காய்: அவன் பேர் ஹொலண்ட் விஸ்கி. 60 வயசு கெழவன்.
நாகேஷ்: 60 வயசுலதான் கெழவன். இருபது வயசுல வாலிபன்.
தேங்காய் மேலை நாட்டு பூர்வ ஜென்மக் கதை சொல்லும்போது,
'துரத்தி துரத்தி துரத்தி 'அனாஸின்' ஹைரோட்ல அவளைப் புடிச்சான்...
'ஸாரிடான்' காட்டுல இருக்குற பழைய பங்களாவுக்கு கூட்டிட்டு போயி.....

சரி! பாடலுக்கு வந்து விடுவோம். இந்தப் பாடலின் புகழைப் பற்றி பெருமையைப் பற்றி என்ன எழுத!
தமிழ்ப் பாடல்களின் சிறந்த டூயட்களை எடுத்துக் கொண்டால் அதில் முதல் பத்தில் நிச்சயம் இடம் பெறக் கூடிய தகுதியைக் கொண்டது இந்தப் பாடல். சுவையான சுகமான வரிகள் மிக எளிமையுடன். சாதாரண வார்த்தைகளிலேயே காவிய ரசனையை காதல் பாடலில் வடித்துத் தந்திருப்பார் கவிஞர். இது சாதாரண விஷயமல்ல.
தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த நங்கையிடம் காதல் கொண்டு நால்வர் போட்டியில் வெற்றி வாகை சூடும் நாயகன் அவன் 'என்றோ ஒருநாள் எண்ணிய எண்ணம்' இலை விட்டு, கனி விட்டு, இப்போது பிடிபட்டுவிட்டதை சில வேறு அர்த்தங்களில் இருவரின் எண்ணங்களாக கவிஞர் பாங்குடன் பண்பு கெடாமல் வர்ணிக்கும் அழகுதான் என்ன!
ஏக்கத்திலேயே நிறைந்திருந்தவனுக்கு இந்த ஆவணி மாதத்தில் மாங்கனி மங்கையாய் அவன் அருகில் மயக்க, அவனை தன் இடையும், இதழும் தொட வைத்து அவனுடைய ஏக்கத்தைப் போக்கிய காதலியின் கரிசனம்தான் என்ன!
அவளுக்கு வாழ்வுக் கொடை தந்த வள்ளல் சும்மா ஒன்றும் தரவில்லையே! அவளை மெல்லக் குறிவைத்து, அவள் கூடவே வந்து, அவளையே கொடையாக திரும்பப் பெற்றுக் கொண்ட காதலனின் கொடைப் பரிமாற்றம்தான் என்ன!
மஞ்சள் நிறத்திலான மங்கையின் கன்னம் நாணத்தால் வண்ணம் மாறி சிவந்து போனது சிந்திக்க வைக்கிறது.
என்ன அழகான எண்ணங்கள்! எதிர்பார்ப்புகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்ற தர்க்கங்கள் இல்லாத தருணங்கள்.
பாடலை பக்குவமாய் கவிஞர் உருவாக்கித் தந்து விட்டாலும் அதைப் படமாக்கும் முறைதான் கடினமானது. அதை கொஞ்சமும் கெடாமல் நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக இந்தப் பாடல் மடமாக்கப்பட்டது சிறப்பு. அதற்கேற்ற மாதிரி ரவி, காஞ்சனா ஜோடி அமைந்தது இன்னும் சிறப்பு. பாடலை பால்கோவாவாய் இனிக்கச் செய்த 'மெல்லிசை மன்னரி'ன் இசை அதைவிடச் சிறப்பு. இவர்களுக்கு மிக மிக பொருத்தமாக பாலாவும், சுசீலா அம்மாவும் குரல் தந்து எல்லாவற்றையும் விட சிறப்பு.
காதல் பாடல் என்பதால் பகட்டான உடைகள், நகைகள், அளவுக்கதிகமான மேக்-அப் என்பதெல்லாம் இல்லாமல், (இத்தனைக்கும் வண்ணப் படமாக ஜொலித்தும் கூட) ஆடம்பர அமர்க்களங்கள் இல்லாமல் அளவோடு அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.
கழுத்து வரை பட்டன் அணிந்த சிகப்பு செக்டு ஷர்ட் பணக்கார ரவியின் தோரணை, அடைக்கலம் நாடி வந்த காஞ்சனாவின் வெகு சிம்பிளான வெளிர் நீல சேலையுடை, (கழுத்தில் கூட ஏழை அபலை என்பதால் சாதாரண இரண்டு ரூபாய் மணி போட்டிருப்பார். அதே போல சிம்பிளாக மல்லிகைப் பூ)
இரவு நேரம். அவுட்டோர் என்றெல்லாம் வருத்திக் கொள்ளாமல் வீட்டு செட்டின் தோட்டப் பின்னணி என்று எல்லாமே எளிமைதான்.
ஒளிந்திருந்து இவர்களின் காதலைப் பொறாமையுடன் பார்க்கும் மற்ற மூன்று நண்பர்களும் சிரிக்க வைப்பார்கள். ('அடேய்! இந்தக் கண்றாவியெல்லாம் நாம பாக்கணுமா?')
பாலா இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் இன்னும் எட்ட முடியாத உயரத்திற்குப் போய்விட்டார். இளவட்டங்களுக்கு இனி இவர் குரல்தான் என்றானது. சுசீலாவின் இணை வெகு பொருத்தமாய் பாலாவுக்கு அமைந்து அவரது புகழுக்கும் வெற்றிக்கும் மென்மேலும் வழி வகுத்தது. .
'நாளிலே நல்ல நாள்' என்று இழுத்துப் பாடியபடி பாடும் 'நாயகன் பாலா' வென்ற படம். சுசீலா, பாலா முதல் சரணம் முன் கலக்கி எடுக்கும் அந்த,
'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டர டண்ட டாண்டர டண்டடா'....
'டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டட டண்ட டாண்டட டட்டடா'
ஹம்மிங் சுவையின் உச்சம். பெரும்பாலும் வானொலிகளில் ஒலிப்பதில்லை.
அது போலவே பாலா, சுசீலா தனித்தனியே உச்சரிக்கும்,
'தன்னன தன்னன தன்னன தன்னனனா'
கொள்ளையோ கொள்ளை கொள்ளும் நம் மனதை. பாடிப் பார்ப்பதும் சுலபமே. நாயகன் பாலா 'பொன்மணி'. நாயகி சுசீலா 'பைங்கிளி'. என்ன ஒரு பொருத்தம்!
'மெல்லிசை மன்னர்' உச்சி முதல் பாதம் வரை உணர்வுகளை பெருக்கெடுத்து ஓட வைக்கும் இன்ப சங்கதிகளை அள்ளி அள்ளி வழங்கியிருப்பார். 'அருமையாய் இருக்கிறது' என்று ஒரு வார்த்தையில் பொத்தம் பொதுவாக சொல்லிவிட இயலாது. அனுபவித்து ஆழ்ந்து ரசித்தால் சங்கீத சங்கதிகள் சப்த நாடிகளிலும் ஊடுருவி மெய் சிலிர்க்க வைக்கும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. பாடலின் துவக்க இசை. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத இசைப் பிராவகம் அது.
'மாதமோ' என்று முடித்தவுடன் பின்னணியில் ஒலிக்கும் 'டொக் டொக் டொக்' என்று ஒலிக்கும் மிக மிக எளிமையான தாள ஓசை இந்தப் பாடலை எங்கேயோ கொண்டு போய் விடும். (ரவிச்சந்திரன் கையில் பிடித்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை அலட்சியமாக பின்புறம் தூக்கிப் போட்டுவிட்டு ரொம்ப அழகாக காஞ்சனா அருகில் நடந்து வருவார்)
பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குமுன் ஆரம்பிக்கும் இசைக்கு மிக அழகாக ரவியும், காஞ்சனாவும் கால்களால் ஸ்டெப்ஸ் வைத்து எதிர்த் திசையில் அருகருகே அழகாக ஒருவருக்கொருவர் சுழன்று திரும்புவார்கள். ரொம்ப அருமையாக இருக்கும். காஞ்சனாவின் பெண்மைக்கே உரித்தான நாணமும், நடையும், வளைந்து மடியும் இடை வளைவுகளும், ஓடல்களும், ஊடல்களும், கூடல்களும், தேடல்களும், அவர் சினிமா கதாநாயகி என்பதையே மறக்க வைத்து அவர் நம் தெருவில் உலவும் சாதாரணப் பெண்தான் என்ற எண்ணத்தை நமக்கு உருவாக்கி விடுகின்றன. அனைவருக்கும் பிடித்த நளின நாயகியல்லவோ இந்த கடைந்தெடுத்த பொற்சிலை!
எத்தனை காலங்கள் ஆனாலும் அத்தனையையும் வென்று தனித்து நின்று ராஜாங்கம் நடத்தும் ரசனைக்குரிய பாடல்.


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
நாளிலே ஒன்றுதான்
நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டர டண்ட டாண்டர டண்டடா
டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாண்
டாண்டட டண்ட டாண்டட டட்டடா
என்றோ ஒருநாள் எண்ணிய எண்ணம்
இலைவிட்டதென்ன
கனிவிட்டதென்ன
பிடிபட்டதென்ன
தன்னன தன்னன தன்னன தன்னனனா
இதழ் தொட்ட போதும்
இடை தொட்ட போதும்
இதழ் தொட்ட போதும்
இடை தொட்ட போதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன
ஏக்கம் தீர்ந்ததென்ன
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
சிவந்தது என்ன
பிறந்தது என்ன
நடந்தது என்ன
தன்னன தன்னன தன்னன தன்னனனா
கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன கூட வந்ததென்ன
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்
நாளிலே ஒன்றுதான்
நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி
லால்லலா லால்லலா
லால்லலா லால்லலா
பாலாவும், சுசீலாவும் நேரிடையாக களத்தில் இறங்கி இதே பாடலைப் பாடி அசத்துவதையும் பர்ர்த்து மகிழுங்கள். ஆனால் ஒரிஜினல் போல் இராது.
Last edited by vasudevan31355; 17th November 2015 at 11:35 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
15th November 2015, 11:55 AM
#1525
Senior Member
Senior Hubber
என்னவென்று சொல்வது வாஸ்ஸு.. வழக்கம் போல சூப்பர்.. உ.இ உ வா மறுபடி பார்க்க ஆவல் கொள்ள வைத்துவிட்டீர்கள்.. மாதமோ ஆவணி என்னாளும் பிடிக்கும் ஒரு பாடல் ..(மோ.மு படிச்சீரா ஓய்)
அதோட நகைச்சுவையும்.. வெகு ஜோர்..தாங்க்ஸ்..
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோவும்.. காதில் ஒலிக்கிறது.. பின்ன் வாரேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th November 2015, 11:59 AM
#1526
Senior Member
Diamond Hubber
நன்றி சின்னா!
இனிமேல்தான் படிக்கணும். படிச்சுட்டு கண்டிப்பாக சொல்றேன். வெய்ட். என்னுடைய கருத்து ஒன்னு இருக்கு. படத்தப் பத்தி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th November 2015, 02:48 PM
#1527
Junior Member
Veteran Hubber
மழை ஜா(ஜ)லமும் மழலைக் காலமும் ஒரு மீள்பார்வை !
இயற்கையின் அருட்கொடையான மழை வானத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டித்தீர்க்கும் இப்பருவ காலம் சிலபல இடர் பாடுகளையும் அள்ளித் தெறித்தாலும் மழை ஜலத்தில் நனைவது மழலையர்க்கு கொண்டாட்டமே !! காதலர்க்கும் கன்னியர்க்கும்தான்.....
Last edited by sivajisenthil; 15th November 2015 at 02:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th November 2015, 02:54 PM
#1528
Senior Member
Senior Hubber
எனக்கு முதலாய்த்தோன்றியதிது..
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில்வா...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th November 2015, 04:09 PM
#1529
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
நாயக்கரின் மகள்- திடுதெப்பென்று வந்த நல்ல படம்..பாடல்கள் நல்ல பாட் இருப்பதாக நினைவில்லை.
வாணி ஜெயராமின் "கலையாத கனவொன்று கண்டேன்" பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. நல்ல பாட் அல்லது மோசமான பாட் என்பது தெரியாது!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th November 2015, 04:57 PM
#1530
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
ஒன்ஸ் அகெய்ன்... ஐப்பசி மாதத்தில் ஆவணியை அழைத்து வந்து விட்டீர்கள்... அதில் கோடையில் கிடைக்கும் மாங்கனியை வேறு கொண்டு வந்து மழையை மறக்கடித்து விட்டீர்கள்.. உங்கள் எழுத்தைப் படித்த பின் பாட்டைக் கேட்டால் மிமீ மிமீயாக ரசிக்க முடிகிறது. ( பார்த்தாலும்தான் )
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks