-
24th November 2015, 08:22 AM
#11
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
அதகளம் பண்ணிட்டீங்க..
மதுரகானம் திரி பழைய படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக மாறி வருகிறது உங்கள் புண்ணியத்தில்.
புலி பெற்ற பிள்ளை என்று ஒரு படம் வந்ததே பலருக்குத் தெரியாத விஷயம். அப்படி இருக்கும் போது அதை அக்கு வேறு ஆணி வேறாக விஷயங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
திவாகரைப் பொறுத்த மட்டில் அதிகம் அறியப்படாத இசையமைப்பாளர். பெரும்பாலும் தேவரின் படங்களுக்கே பணிபுரிந்திருந்தார். இதர ஒரு சில படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். விவரம் ஏதாவது தட்டுப்படுமா எனப் பார்க்கலாம். இணைய தளங்களில் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை.
எம்.ஜி.பாலு, அவர்கள் அந்தக்காலத்திய பிரபல படத்தொகுப்பாளர். பல தேவர் படங்களில் பணி புரிந்தவர். அவரே படங்களைத் தயாரித்துமிருக்கிறார். நேர்வழி படத்தை இயக்கியவரும் எம்.ஜி.பாலு தான். வசனம் வழக்கம் போல அய்யாப்பிள்ளையும் திருமாறனும். நேர்வழி திரைப்படம் 22.06.1968 தணிக்கையாகி 28.06.1968 அன்று வெளியானது. இந்த விவரங்கள் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் புத்தகங்களிலுள்ளது.
இந்தப்படம் சென்னையில் எங்கள் ஏரியாவைப் பொறுத்தமட்டில் மயிலாப்பூர் காமதேனு தியேட்டரில் வெளியானது. படம் ஓடிக்கொண்டிருந்த புதிதில் ரேடியோவில் அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே, வாய்மையே வெல்லுமடா, என்னைத் தெரியுமா போன்ற பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகும். அது நன்கு நினைவிருக்கிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
24th November 2015 08:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks