Page 173 of 337 FirstFirst ... 73123163171172173174175183223273 ... LastLast
Results 1,721 to 1,730 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1721
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    புரியலை
    "அந்த மேவும் அரவிந்த மாமலையில் வந்த வேதவல்லியாம்" - இது தான் ஞாபகத்திற்கு வருகிறது....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes vasudevan31355, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1722
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    அம்மன் அருள் படத்தை முழுதும் பார்த்த பொறுமைசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் படத்தைப் பார்க்க வைத்த அந்த "ஒன்றே ஒன்று" - அதைப் பற்றித் தாங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதி விட்டீர்கள். அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ... அதுவும் கொஞ்சம் தன் பங்கிற்கு படத்திற்கு சிறப்பு செய்தது.

    மற்றபடி ஏதோ ஓவர் ஆக்டிங்... என்கிறார்களே... அதற்கு முழுத் தகுதியும் படைத்த ஏவிஎம் ராஜனின் நடிப்பைப் பற்றிப் பாராட்டி எழுதாத தங்களுக்கு ஈரேழு உலக ஏவிஎம்ராஜன் ரசிகர் மன்றங்களில் தலைமை ஒருங்கிணைப்பு ஒன்றிய அமைப்பு சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #1723
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்
    அம்மன் அருள் படத்தை முழுதும் பார்த்த பொறுமைசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் படத்தைப் பார்க்க வைத்த அந்த "ஒன்றே ஒன்று" - அதைப் பற்றித் தாங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதி விட்டீர்கள். அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ... அதுவும் கொஞ்சம் தன் பங்கிற்கு படத்திற்கு சிறப்பு செய்தது.

    மற்றபடி ஏதோ ஓவர் ஆக்டிங்... என்கிறார்களே... அதற்கு முழுத் தகுதியும் படைத்த ஏவிஎம் ராஜனின் நடிப்பைப் பற்றிப் பாராட்டி எழுதாத தங்களுக்கு ஈரேழு உலக ஏவிஎம்ராஜன் ரசிகர் மன்றங்களில் தலைமை ஒருங்கிணைப்பு ஒன்றிய அமைப்பு சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
    Raghav ji, edhu eppadiyo AVMrajanukku credit kodukkanum. he did accept to play Manjula's Dad ... yedho konjam nandraga seithiruppar

  7. Likes RAGHAVENDRA liked this post
  8. #1724
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    Raghav ji, edhu eppadiyo AVMrajanukku credit kodukkanum. he did accept to play Manjula's Dad ... yedho konjam nandraga seithiruppar
    ஜி

    ஒங்க நல்ல மனசுக்கொரு கொறையுமில்லே தானேதந்தனானா
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes chinnakkannan, RAGHAVENDRA liked this post
  10. #1725
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்

    இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
    அய்யயோ! தப்பு பண்ணிட்டேன் ராகவேந்திரன் சார் தப்பு பண்ணீட்டேன். மன்னிச்சிடுங்கோ! மன்னிச்சிடுங்கோ! இவ்ளோவ் பெரிய தண்டனையை ஓடமும், மனசும் தாங்காது. ம க மா யி..............
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1726
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    பி.எஸ்.திவாகர் இசையமைத்த படங்களைப் பட்டியலிடலாமே என்ற எண்ணத்தில் 1951 முதல் 1980 வரையில் வெளிவந்த தமிழ்ப்படங்களில், திவாகர் இசையமைத்த படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆதாரம்... பிலிம் நியூஸ் அனந்தன் வெளியிட்ட திரைப்படப்பட்டியல் புத்தகம்.

    1952 - பசியின் கொடுமை
    1952 - புயல் - எஸ்.ஜி.கே. பிள்ளை என்பவருடன் இணைந்து
    1953 - தந்தை
    1964 - தெய்வத்திருமகள்
    1965 - காட்டு ராணி
    1965 - தாயும் மகளும்
    1967 - தெய்வச் செயல்
    1968 - நேர்வழி

    1980க்குப் பிறகு இன்னும் பட்டியலெடுக்கவில்லை.
    Last edited by RAGHAVENDRA; 25th November 2015 at 09:30 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #1727
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Vanakkam ji

  14. Thanks vasudevan31355 thanked for this post
  15. #1728
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் “இறைவன் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்” பாடலை மிகவும் விரும்புவார் போல
    தான் இயக்கிய காவியத்தலைவனில் (விஜயகாந்த் பானுப்பிரியா நடித்தது)
    தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்த அர்விந்த் சித்தார்த்தா (ஆபாவாணனின் துணையுடன்) இசையமைத்தார்

    இறைவன் ஒரு நாள் போலவே ஒரு பாடல்
    யேசுதாஸுடன் ஸ்வர்ணலதா

    சந்தன மலர்களை பார்த்து வந்தது தென்றல் காற்று

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  17. #1729
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உத்தரவின்றி உள்ளே வா' போனஸ் சிறப்புப் பதிவு.

    மதுண்ணா!

    'உத்தரவின்றி உள்ளே வா' படத்தின் கிளைமாக்ஸ் பாடல் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இன்றுதான் அப்லோட் செய்ய அதற்கு நேரம் கிடைத்தது. இறுதியில் ரவி, காஞ்சனா அலங்கரிக்கப்பட்ட பொண்ணு மாப்பிள்ளை காரிலும், அவர்களுக்கு முன்னால் ஆளுக்கொரு பக்கமாக மூர்த்தி, சச்சு ஜோடி ஸ்கூட்டரிலும், நாகேஷ், ரமாபிரபா ஜோடி இன்னொரு ஸ்கூட்டரிலும் சென்னை சாலைகளில் அம்சமாக நிஜமாகவே வர, ரோட்டின் இருமருங்கிலும் ஷூட்டிங் பார்க்க ஜனங்கள் திரண்டிருப்பதும், காரின் பின்னாலேயே சிலர் ஆர்வத்துடன் ஓடிவருவதும் ரசிக்க வைக்கிறது. நாகேஷ் சீரியஸாக ஸ்கூட்டர் ஓடி வருவார். அப்புறம் வலுக்கட்டாயமாக சிரிப்பார். முகம் காட்டிக் கொடுக்கும். மூர்த்தி சமாளித்து விடுவார். ரவி, காஞ்சனா காரின் பின்னால் அவர்களின் பாதுகாப்பிற்காக ஐந்தாறு கார்கள் தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். மாலிக்கு ஜோடி இல்லாததால் பூ தூவும் வேலை. இப்போதும் பாவ'மாலி'

    வழக்கமான 'கள்ளம் இல்லாத' வரிகள் ரவிக்கு பாலா குரலில்.

    'மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ'

    என்று ரமாபிரபாவுக்கும்,

    'வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ'

    என்று சச்சுவுக்கும் புதிதாக ஆளுக்கொரு வரி பாட இப்பாடலில் அடித்தது சான்ஸ்.

    பாடலின் இடையிசையில் ஒரிஜினல் பாடலுடன் வேறுபடுத்திக் காட்ட இப்பாடலில் மாற்றம் தந்திருப்பார் எம்.எஸ்.வி. இடையிசை கேட்டீர்களானால் ஒரு இடத்தில் அதாவது மாலி பூ தூவும் போது 'வரவு எட்டணா....செலவு பத்தணா' 'பாமா விஜயம்' படப் பாடலின் இடையிசையை அப்படியே ஞாபகப்படுத்தும். ('அடங்கா மனைவி அடிமைப் புருஷன் குடும்பத்துக்ககாது' என்று டி.எம்.எஸ் பாடும் முன்பு வரும் இடையிசை யில் நான் சொன்ன மியூசிக் பிட் 4 தரம் ஒலிக்கும். அதே போல இப்பாடலிலும் கொஞ்சம் வலுவாக அதே 4 தரம் ஒலிக்கும். டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்)

    பாடல் முடியும்போது இருவர் காரின் முன்னே ஓடி வந்து காஞ்சனா, ரவியை கழுத்தில் மாட்டியிருக்கும் கேமெரா மூலம் ஸ்டில் எடுப்பார்கள். அதில் பேன்ட் போட்டு படம் பிடிப்பவர் 'ஸ்டில்' சாரதி போலத் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும் இதை உறுதி செய்தார். (சாரதிதான் இந்தப் படத்திற்கு ஸ்டில் உதவி. லாங் ஷாட்டில் பார்த்தால் ஸ்ரீதர் போலவும் தெரியும்).

    'உத்தரவின்றி உள்ளே.... வா' என்ற அனைவரின் உற்சாகக் கூக்குரல்களுடன் பாடல் முடியும்.

    பட யூனிட்டே காமெடி படம் என்பதற்காக ஜாலியாக இப்பாடலை பொதுமக்கள் முன்னிலையில் ஜோவியலாக படமாக்கிருப்பார்கள். அதனால் இந்தப் பாடல் காட்சியும் ஒரு நிமிடங்கள் சில வினாடிகளே ஆனாலும் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டது. சரியான எண்ட்.

    இன்னொன்று. இந்தக் காட்சியில் பாடல் ஆரம்பிக்கும்போது இரு பெண்குரல்கள் 'உத்தரவின்றி உள்ளே.... வா' என்று சேர்ந்து ஒலிக்கும். ஏற்கனவே இந்தப் பாடலை ஈஸ்வரி பாடியிருப்பதால் ஒரு குரல் அவருடையது. இன்னொரு பெண் குரல் சுசீலா அம்மாவா அல்லது டிராக் பாடும் வேறு பாடகியா என்பது தெரியவில்லை. சச்சுவும், ரமாபிரபாவும் பாடும்போது ஈஸ்வரியின் குரலிலேயே பாடுவார்கள். இரு பெண்குரல்கள் சேர்ந்து ஆரம்பத்தில் ஒலிக்கும்போதுதான் இன்னொருவர் யார் என்பதில் குழப்பம்.

    இந்தப் பாடலை பாலா தொடரில் நான் சேர்க்கவில்லை. அதனால் இது நம் நண்பர்களுக்கு ஸ்பெஷல் போனஸ். குறிப்பாக மதுண்ணாவிற்கு. ஓ.கே.வா?

    Last edited by vasudevan31355; 25th November 2015 at 10:34 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks madhu thanked for this post
  19. #1730
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அய்யயோ! தப்பு பண்ணிட்டேன் ராகவேந்திரன் சார் தப்பு பண்ணீட்டேன். மன்னிச்சிடுங்கோ! மன்னிச்சிடுங்கோ! இவ்ளோவ் பெரிய தண்டனையை ஓடமும், மனசும் தாங்காது. ம க மா யி..............
    அவர் ஒண்ணும் பெரிய தண்டனை தரலையே.. துணைவனைப் பார்க்கச் சொல்லியிருந்தா நீங்க சொல்றது கரீட்டு

    *

    இந்த கண்ணிரண்டும் மின்னமின்ன காலிரண்டும் பின்னப் பின்ன - இந்தப் பாட்டை ந.திக்குக் கொடுத்திருக்கலாமோ..ஜஸ்ட் இமாஜின்..ந.தி அண்ட் தேவிகா இன் திஸ் ஸாங்க்..

  20. Likes Russellmai, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •