-
28th November 2015, 09:19 AM
#1131
Junior Member
Seasoned Hubber
Tomorrow at 7.30 watch Murasu TV the Evergreen classic of NT's ANDHA NAAL.
-
28th November 2015 09:19 AM
# ADS
Circuit advertisement
-
28th November 2015, 10:21 AM
#1132
Junior Member
Veteran Hubber
THIS IS ONLY A RESPONSE TO THE REPLY POST OF Resp.Prof.Selvakumar in Makkal Thilagam Thread for the ABSURD REMARKS on NADIGAR THILAGAM for the INFORMATION PUBLISHED BY VKR IN HIS BOOK !
for the Attention of Moderator !

Originally Posted by
RavikiranSurya
நடிகர் சங்க கட்டிட நிதிக்கு சிவாஜி கணேசன் தலைமையில் 4 நகரங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி வசூல் செய்த ரூ 1 கோடி 80 லட்சம் பணமும்...அதனை முதலமைச்சர் நிவராண நிதியாக வாங்கி வைத்து கொண்ட எம் ஜி ஆர் அரசும் !
இப்படி ...இதை விட ஒரு சிட்டிகை காரமாக தலைப்பு எவராலும் எழுதமுடியும் திரு செல்வகுமார் அவர்களே !
நட்சத்திர கலை விழா நடத்துங்கள் என்று அரசு சார்பில் ஒரு முதலமைச்சார் முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் கூறும்போது ...இல்லை இல்லை..நாங்கள் தனியாக நடத்திகொள்கிறோம் என்று யாராவது கூறுவார்களா...அல்லது அப்படி கூறி அதை நடத்தும் பட்சத்தில் அந்த நட்சத்திர இரவை நடத்ததான் அரசு சார்பில் விடுவார்களா ?
அரசுடன் சேர்ந்து நடத்தி 1 கோடி 80 லட்சம் வசூல் ஆயிற்று என்று கூறியிருக்கிறார் ...செலவு நிச்சயம் 1 கோடி 75 லட்சம் என்ன ஆனாலும் ஆகியிருக்காது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.. மேலும் அரசு இதில் தலையிட்டுள்ளதால் வசூல் பணம் மொத்தம் செலவு போக அரசிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Vkr அவர்கள் செலவு கணக்கு சொல்வது தானே எனும்போது ....இவ்வளவு வசூல் ஆனது ...செலவு 1 கோடி 75 லட்சம் ஆகி உள்ள கணக்கு நீங்கள் அரசிடம் கொடுத்துள்ளீர்கள் ...உங்களிடம் உள்ள மீதி 5 லட்சம் அரசுக்கு இன்னும் வரவில்லை என்றோ...அல்லது அரசு சார்பில் 5 லட்சம் தான் தரமுடியும்...ஒரு வரைமுறை இருக்கிறது என்றோ....ஏன் திரு எம் ஜி ஆர் அவர்கள் கூட கூறியிருக்கலாமே ?
அல்லது அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை விட்டுரிக்கலாமே ? அதுகூட செய்யவில்லையே..
.காரணம் செய்வது ஞாயமில்லை என்பது நன்றாக தெரியும் ! ....சங்க நலத்தை விட முக்கியம் சிவாஜி தூற்றப்படவேண்டும் என்ற கொள்கை !
நடிகர்கள் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி வசூலித்த ருபாய் 1 கோடி 80 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் வாங்கி வைத்துகொள்ள மட்டும் தான் அரசால் முடியுமா ? ஒரு தார்மீக பொறுப்பு இல்லை ? மனசாட்சி இல்லை ?
ஞாயமாக நடப்பது என்றால் அதில் கடனுக்கான தொகையை வசூல் பணத்தில் இருந்து வங்கிக்கு கொடுத்து போக மீதத்தை நிவாரண நிதியில் சேர்த்திருக்கவேண்டும்.....ஒரு ஞாயமாக இயங்கும் அரசு !
அப்படியா செய்தது அரசு ? இல்லையே...மொத்தமும் கபளீகரம் அதுதானே நடந்தேரியிருப்பதாக கூறப்பட்டுள்ளது !
முதல் அமைச்சர் நிவாரனநிதியில் முதலில் அதை மொத்தத்தையும் வாங்கி வைத்துகொண்டதே மிக பெரிய தவறு....!
நடிகர் சங்கத்திற்காக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சி முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துகொண்டது ஞ்யாயம் என்பதுபோல வாதிப்பது அபத்தத்திலும் அபத்தம் !
மேலும் இதில் வியர்வை சிந்தி பாடுபட்டு உழைத்த அனைவர் மனமும் புண்படும்படியாக ஏகத்தாளமாக தேர்தல் வரட்டும் புதிய குழு அதை பார்த்துக்கொள்ளட்டும் உங்களுக்கு என்ன கவலை என்று கூறுவது ( அதாவது அப்படி ஒரு முன்னாள் நடிகராக இருந்து முதல்வரான ஒருவர் ) மிக மிக சரி என்று நீங்கள் சப்பை கட்டு கட்டி.....பல வருடங்களாக, (நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக வருவது வரை) பல ஆயிரம் நடிகர்கள் உறுப்பினர்களாக கொண்ட ஒரு சங்கத்திற்கு ஒரு minimum கட்டிடம் கூட கட்டாமல் இவ்வளவு ஏன் ... ஒரு செங்கல் கூட நகர்த்தாதவர்கள் .....நடிகர் திலகம் அவர்கள் முயற்ச்சியில் சங்கத்திற்காக ....அதன் ஆயிரம் ஆயிரம் உறுப்பினர்களுக்காக கட்டிடம் கட்ட முனைந்து...அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது ...உங்களுக்கு அகலக்காலா திரு செல்வகுமார் அவர்களே ?
யார் தானம் கொடுத்தது ....யார் பல்லை பிடித்து பார்த்தது....?
இங்கு ஊர் ஊராக சென்று வசூல் செய்து ருபாய் 1 கோடி 80 லட்சம் அப்போதைய அரசிற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் கடலில் கரைத்த பெருங்காயமானது நடிகர் நடிகைகள் பணம் ! மக்கள் கொடுத்த பணம் ...நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த பணம்....இது தானம் !
அதை மொத்தத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதி என்ற பெருங்கடலில் பெருங்காயம் வாங்கி போட்டதுபோல வாங்கி சேர்த்துக்கொண்டு அதில் கடன் அடைக்க விழா நடத்துங்கள் வசூல் தொகையில் கொடுத்து அடைத்துவிடலாம் என்று கூறி ....எல்லாம் முடிந்தபின் ....கோவிந்தா.....கோவிந்தா...கோவிந்தா என்று பட்டை நாமத்தை நாசூக்காக போட்டதன் பெயர் தானமும் அல்ல....யாரும் பல்லையும் பிடித்து பார்க்கவில்லை !
மேலும் ...நடிகர் சங்க கட்டிடம் பத்து மாடிகளை கொண்ட ஒரு COMPLEX ஆக கட்டவில்லை "அகலக்கால்" என்று நீங்கள் அளப்பதை போல
தேவையான அளவு கொண்ட கட்டிடம் ...அதில் நிரந்தர வருமானத்திற்கு சுவாமி சங்கரதாஸ் பெயரில் ஒரு கலை அரங்கம்
இப்படி ஒரு தொலை நோக்கு பார்வையுடன் நடிகர் திலகம், திரு மேஜர் , திரு VKR ஆகியோரின் நிரந்தர மேற்பார்வையில் கட்டப்பட்ட கட்டிடம் தான் நடிகர் சங்கம் !
அப்படி நடிகர் திலகம் தலைவராக கொண்ட குழு கஷ்டப்பட்டு கட்டிய சங்க கட்டிடத்தை சுய லாபத்திற்காக சமீபத்தில் அரசியவாதி நடிகர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் அரசுடன் கூட்டணி கொண்டுள்ள சரத்குமார் குழு தனியாருக்கு தாரைவார்த்து அது வெட்ட வெளிச்சம் ஆகி தேர்தல் நடந்து தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட செய்தி உலகம் அறிந்தது...!
நமக்குன்னு ஒரு கட்டிடம்....குடும்பத்துடன் அனைவரும் இருக்க ஞாயிறு விடுமுறை இப்படி பல நல்ல விஷயங்களை கொண்டுவந்ததால் தான் நடிகர் திலகம் அவர்கள் தலைவராக செயல்பட்ட அந்த காலத்தை மட்டும் தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொற்காலம் என்று இப்போதைய முதல்வரும் முன்னாள் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இன்றும் இப்போதைய சங்க நிர்வாகிகளிடம் நினைவு கூர்ந்தது, பெருமைப்பட பேசியது உலகம் அறிந்த விஷயம் !
என்னமோ ...அகலக்கால் வைத்தார் என்று நீங்களும் உங்களை போன்ற சிலர் வேண்டுமானால் இப்படி பொருத்தம் இல்லாத பத்திகளை பதிவு செய்யலாம் ...நடுநிலையாளர் யாரும் இதனை சரி என்று உரைக்கமாட்டார்கள் ! இன்று ஒரு ஐந்து பேர்களை கொண்ட ஒரு ஏதாவது சங்கம் ஆரம்பித்தால் கூட அதற்கென்று ஒரு ஆபீஸ் உண்டு....அப்படி இருக்கும் பட்சத்தில் பல ஆயிரகணக்கான உறுப்பினர் கொண்ட தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் பணிந்தால் அது அகலக்கால் வைத்தார் என்று கூறுவது எந்தளவுக்கு ஒரு ABSURD STATEMENT என்பது நீங்களே யோசியுங்கள் சார் !
வரவேண்டிய துட்டு வரவில்லை என்று கேட்கப்போனால்....கெளம்பு தம்பி காத்து வரட்டும் என்பதுபோல இதில் பதில் வேறு...! சக நடிகர் நடிகைகளுக்காக வியர்வை சிந்தி உண்மையாக உழைத்த எவருக்குமே நடந்த அநியாயம் பற்றி வயிறு எரிய தான் செய்யும் !
யாரும் தானமும் கொடுக்கவில்லை ! கொடுக்கப்படாத தானத்தை யாரும் பல்லை பிடித்து பார்க்கவும் இல்லை !
கோபத்தில் எழுதுகிறீர்கள் ....ஆகவே ...எழுதுங்கள்...சற்று நிதானித்து ...ஞாயத்தை எழுதுங்கள் ...ஆரோக்யமாக இருக்கட்டும் !
Rks
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
28th November 2015, 12:01 PM
#1133
Junior Member
Seasoned Hubber
Their only motive is to degrade NT in all aspects. This they are doing right from 1952 and if anyone brings out the
facts they could not tolerate. Ultimately truth will triumph we are seeing one by one coming out of the bag.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th November 2015, 12:02 PM
#1134
Junior Member
Veteran Hubber
இனிய நண்பர்களுக்கு
சில தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா இல்லையா என்று நம்மால் இந்த தருணத்தில் கூற முடியாத விஷயம்.
காரணம் அந்த தகவல்கள் ஒரு தகவலாக கூட ஏற்றுகொள்ள முடியாத நிலை காரணம் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இன்று இல்லை.
VKR பதிவு sensitivity அதிகம் உள்ள பதிவு - தவிர்த்திருக்க வேண்டிய பதிவு என்பதே எனது தனிப்பட்ட கருத்து
இது போல பல விஷயங்கள் அவ்வப்போது தலை நீட்டுகின்றன பல திரிகளிலும் குறிப்பாக நடிகர் திலகம் மக்கள் திலகம் திரிகளில்.
நாமும் சரி மற்றும் மக்கள் திலகம் திரி நண்பர்களும் சரி ...வேறு வழியில்லாமல் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க நேர்கிறது. ஒவோருவருடைய temperament தகுந்தாற்போல காட்டம் அதிகமாக, குறைவாக மிதமாக இருக்கிறது பதில்களில். இது கொண்டு சென்று விடுவது தனிமனித துவேஷத்தில் என்பதல்லாமல் விளக்கம் என்ற விதத்தில் அல்ல என்பதை நாம் பார்க்கிறோம் .
திரி நட்புறவிர்க்கும் திரி நண்பர்கள் கூடலுக்கும் வழிவகுக்கும் ! கடை நிலை ரசிகன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நாம் செல்வோமே !
ஆகவே இது போன்ற controversy பதிவுகள் நாம் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்பது எனது எண்ணம். இது இரு திரிகளின் நண்பர்களுக்கும் பொருந்தும்.
இரு திலகங்களும் அவர் அவர் நிலையில் சஹாப்தம்களே !
இந்த அழியா புகழை யாரும் மறுக்கவோ மறைக்கவோ குறைக்கவோ இறைக்கவோ முடியாது !
Last edited by RavikiranSurya; 28th November 2015 at 01:21 PM.
-
28th November 2015, 01:43 PM
#1135
Junior Member
Veteran Hubber
திரி நடுநிலையாளர் அவர்களுக்கு
ஒரு விண்ணப்பம் !
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரியில் உறுப்பினராக உள்ளேன் என்பது தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தெரியும்.
நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் இரண்டு திரிகளிலும் தொடர்ந்து பதிவுகளும் மற்ற உறுப்பினர் கருத்துக்களுக்கு எனது பதிலும் மிக ஆர்வத்துடன் பதிந்து வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
இரு திரிகளிலும் நண்பர்களாக கிடைக்கப்பெற்றேன் இதன் வாயிலாக...குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் திரு எஸ்வி, தாங்கள், திரு கோபால், திரு ராகவேந்தர் சார், திரு செல்வகுமார் அவர்கள், வாசுதேவன் சார் அவர்கள், திரு யுகேஷ், திரு சைலேஷ் , பெங்களுரு குமார், திரு செந்தில்வேல், ஞான ஒளி வாசுதேவன் சார் , திரு சௌதரி மற்றும் சிலர்.
அவ்வப்போது வரும் சில தாக்குதல்பதிவுகளுக்கு இரு தரப்பினரின் ஆராதகர்களும் பதில் புனையும்போது, நானும் பல முறை பதில்பதிவு பதிந்துள்ளேன்..உணர்ச்சி மிகுதியால் !
நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து எழுதிய தருனத்தால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கைகளின் நரம்பியல் சில சிறு கோளாறுகள் வந்தடைந்தது மிச்சம் . தொடர்ந்து மாத்திரைகள் உண்ணும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதை திரு எஸ்வி அவர்களிடம் ஒரு முறை தனி மடல் மூலம் மையத்தில் தெரிவித்தும் இருந்தேன் எதேச்சையாக .
மையம் கொள்ளும் பழக்கம் ஒரு பழக்கம், வழக்கம் ஆகிவிட்டது ஒரு காரணம் மேலும் விறுவிறுப்பான சம்பவங்கள் பதிவிடும்போதும் படிக்கும்போதும் ஒரு ஈர்ப்பால் நாமும் நிறைய நேரம் செலவிடும் வண்ணம் உந்தபடுகிறோம்.
Control இருப்பவர்கள் ஒரு அரை மணி நேரம் மேல் இதில் செலவிடமாட்டார்கள். என்னை போல இதிலேயே மூழ்கி விடுபவர்கள் பல மணி நேரம் செலவிடுகிறோம். எங்கள் தவறுதான்...கட்டுப்பாடுடன் இருக்க முயற்சி எடுத்தும் முடியவில்லை.
ஆகவே எனக்கு ஒரு உதவி நீங்கள் செய்யவேண்டும்...என்னுடைய id இதில் இருந்து backend database இல் இருந்து நீக்கிவிடவேண்டும். காரணம், பதிவை படிக்கும்போது மிகவும் tempt ஆகிவிடுகிறது ...பதில் பதிவு போட்டுவிட்டு தான் மறுவேலை என்று குளிக்க கூட செய்யாமல் எழுத மனம் உந்தபடுகிறது !
என்னால் என்னை கட்டுபடுத்திகொள்ள பூரணமாக முடியவில்லை என்ற காரணத்தால் தங்களிடம் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன் !
Please help !
Rks
-
28th November 2015, 02:31 PM
#1136
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர்களுக்கு
சில தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா இல்லையா என்று நம்மால் இந்த தருணத்தில் கூற முடியாத விஷயம்.
காரணம் அந்த தகவல்கள் ஒரு தகவலாக கூட ஏற்றுகொள்ள முடியாத நிலை காரணம் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இன்று இல்லை.
VKR பதிவு sensitivity அதிகம் உள்ள பதிவு - தவிர்த்திருக்க வேண்டிய பதிவு என்பதே எனது தனிப்பட்ட கருத்து
இது போல பல விஷயங்கள் அவ்வப்போது தலை நீட்டுகின்றன பல திரிகளிலும் குறிப்பாக நடிகர் திலகம் மக்கள் திலகம் திரிகளில்.
நாமும் சரி மற்றும் மக்கள் திலகம் திரி நண்பர்களும் சரி ...வேறு வழியில்லாமல் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க நேர்கிறது. ஒவோருவருடைய temperament தகுந்தாற்போல காட்டம் அதிகமாக, குறைவாக மிதமாக இருக்கிறது பதில்களில். இது கொண்டு சென்று விடுவது தனிமனித துவேஷத்தில் என்பதல்லாமல் விளக்கம் என்ற விதத்தில் அல்ல என்பதை நாம் பார்க்கிறோம் .
திரி நட்புறவிர்க்கும் திரி நண்பர்கள் கூடலுக்கும் வழிவகுக்கும் ! கடை நிலை ரசிகன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நாம் செல்வோமே !
ஆகவே இது போன்ற controversy பதிவுகள் நாம் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்பது எனது எண்ணம். இது இரு திரிகளின் நண்பர்களுக்கும் பொருந்தும்.
இரு திலகங்களும் அவர் அவர் நிலையில் சஹாப்தம்களே !
இந்த அழியா புகழை யாரும் மறுக்கவோ மறைக்கவோ குறைக்கவோ இறைக்கவோ முடியாது !
ஆர்கேஎஸ்
தாங்கள் கூறுவதை நானும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன். பலமுறை வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தமட்டில் என்னுடைய பதிவுகளில் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவது மட்டுமே நிறைந்திருக்கும். நெகடிவ் விமர்சனங்களை என்றுமே நான் ஆதரிப்பவனில்லை.
திரு வி.கே.ஆர். அவர்களின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியாக நடிகர் சங்கத்தைப் பற்றி வந்ததாக மேற்கோள் காட்டி வைக்கப்பட்ட பதிவிற்கு என்னுடைய பதில் பதிவில் கூட நடிகர் திலகத்தின் சிறப்பினை மட்டுமே நான் கூறியிருக்கிறேன். தனிப்ப்ட்ட முறையில் பார்த்தால் என் பதிவில் எங்குமே எதிர்மறையான விமர்சனங்களோ கருத்துக்களோ இடம் பெற்றதாக நான் கருதவில்லை.
நடிகர் சங்கத்தைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்ற பகுதி பொதுவான விஷயமாகும். இதற்கு தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தைப் பற்றித் தாக்கி எழுத வேண்டிய அவசியம் வந்திருக்க வேண்டியதில்லை. தயவு செய்து என்னதான் உணர்ச்சிவயப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டியவையாகும் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் மேற்கண்ட விகேஆர் பற்றிய பதிவிற்கு வந்த ஒரேயொரு பதில் பதிவு என்னுடையது மட்டுமே. இதில் யாருடைய மனமும் புண்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும், திரியின் திசை மாறிவிட வேண்டாமே என்கிற எண்ணத்தில் என் பதிவினை நான் நீக்கிவிடுகிறேன்.
மிகவும் அருமையாக ஆதவன் ரவி, செந்தில்வேல் போன்றவர்கள் திரியை நடத்திச் செல்கிறார்கள். இதற்கு நடுவே இது போன்ற திசை திரும்பும் விவாதங்களால் அவர்களுடைய பதிவுகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதும் என் எண்ணம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
28th November 2015, 02:56 PM
#1137
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th November 2015, 05:23 PM
#1138
Junior Member
Diamond Hubber
சமீபத்தில் ஒரு புதிய திரைப்படம் பார்க்க நேரிட்டது.படம் சூப்பர்,அட்டகாசம் என்று பரவலான செய்திகள் வேறு.இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.ஒரே கீச்சு கீச்சான சத்தங்களில் வசனங்கள்,கிரிக்கெட் பந்து போல் பவுன்ஸ் ஆகும் துணை நடிகர்கள்(சண்டை காட்சிகளில் தான்)
அர்த்தமற்ற ரசிக்கவும் வைக்காத காமெடிகள்,போன்ற பலவும் நோக வைத்தன.தலைவலியுடன் வீட்டிற்கு வந்து.,சற்று நேரம் கழித்து யூடீப்பில் நடிகர்திலகத்தின் சிறிய பட க்ளிப்பிங் ஒன்று பார்த்தேன்.அது இரண்டு நிமிடங்கள் மட்டுமே தரவேற்றப்பட்ட வீடியோ.இரண்டரை மணி நேரம் தராத ஒரு சந்தோசம் அந்த இரண்டு நிமிடங்களில் கிடைத்தது.
அந்த இரண்டு நிமிடங்களில் தான் எத்தனை எத்தனை விதமான நடிப்புகள்.,பாவனைகள்.
அந்தப்படம்,..
ராமன் எத்தனை ராமனடி.
காட்சி:சினிமா நடிக்க சான்ஸ் தேடி ஸ்டுடியோவிற்கு வந்து அங்கே காத்தாடி ராமமூர்த்தியிடம் நடித்துக்காட்டும் காட்சிதான் அது.
இப்போது அந்த காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
காட்சிப்படி,
அஸிஸ்டென்ட்டைரக்டரான காத்தாடி ராமமூர்த்தி சிறு வசனம் பேச துணை நடிகர்கள் சிலரை அழைக்க ,அதைப்பார்க்கும் நடிகர்திலகம் தான் அதை பேசுகிறேன் என்று ஓடி வருவதில் இருந்து இந்தக் காட்சியைப் பார்க்கலாம்.
சிவாஜி:நான் பேசுறேன் சார்
நான் பேசுறேன் சார்.
காத்தாடி: யாருப்பா இது?
சிறுவன்: புதுமுகம் சார்.
காத்தாடி:ஏம்ப்பா உன்னைப்பார்த்தா வசனம் பேசுற முகம்மாதிரி தெரியலையே?
(யாரைப் பார்த்து என்ன வார்த்தை).
காரணமில்லாமல் இந்த வசனத்தை எழுதியிருப்பாரா வசனகர்த்தா.பராசக்தி பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது பின்னாளைய இயக்குனர் ஒருவர் அன்றைய சிவாஜி கணேசனை எள்ளி நகையாடியது மறக்க முடியுமா?
சிவாஜி:பேசுவேன் சார்
காத்தாடி: அப்ப இதச் சொல்லு
இந்த நாட்டுல ஏழைகள் வாழவே வழி இல்லையா?
சிவாஜி: இந்த நாட்டுல ஏழைகளுக்கு வாழை இலையே இல்லையா?
என்ன சிலேடையான காமெடி.
அவர் பேசிக்காட்டும் தொனியே
அருமையாக இருக்கும்.
காத்தாடி:வாழைஇலையாவது,
வெத்தலையாவது.உனக்கெல்லாம் டயலாக் வராது.,போப்பா
சிவாஜி:சார்,சார் எங்க ஊர்ல கட்டபொம்மன் நாடகமெல்லாம் பார்த்திருக்கேன் சார்,அப்படியே பாடுவேன் சார்
இப்போது பாடிக் காண்பிக்கிறார்.பாட்டோ சோகப்பாடல்.படத்தில் அவர் ஏற்றிருக்கும் வேடமோ,வயதுக்கு ஏற்ற பக்குவம் அடையாத கேரக்டர்.
வெகுளி.பொதுவாக இந்த மாதிரி கேரக்டர்கள் ஒரு விஷயத்தை அதன் உண்மை வடிவத்தை முழுவதும் காட்டாது.அதன் உடன் பிறந்த குணத்தில் தான் வெளிப்படுத்தும்.இதை நடிப்பாக காட்டுவது மிகவும் சிரமமான ஒன்று.சற்று பிகினாலும் ரசிக்க வைக்காது. வெகுளித்தனமான அந்தக் கேரக்டரின் தன்மையையும் ,சோகப்பாடலின் ராகத்தையும் கலந்துஅவர் பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அவர் பாடுவதை கேட்கும் போது ,அவரின் சொந்தக்குரலில் பல பாடல்கள் பாடியிருக்கலாமே என்ற ஏக்கமே வருகிறது."நானும் கண்டேனய்யா "என்ற வார்த்தைகள் அவரின் குரல் இழுப்பில்பெரும் கவர்ச்சியையே ஏற்படுத்துகிறது.
இதில் பெண் போன்று ஆடிப் பாடும்
பாவனைகள் வேறு. நடன தாரகைககள்தள்ளி நிற்க வேண்டும்.

போகாதே போகாதே என்
கணவா என்கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேனய்யா
அய்யா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேனயயய்யா
அய்யா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேனய்யா
மேற்கண்ட வரிகள் இடம் பெறும் காலம்10விநாடிகள்தான்.
அடுத்து வாள்வீசி காட்டும் சைகை.
மூன்று விநாடிகள் மட்டுமே.
கை அசைவுகளில் அங்கேயும்
அட்டகாசம்.

சார் சார் நான் மோர்ஷிங் எல்லாம் வாசிப்பேன் சார்.
இரண்டு விநாடிகள்.மோர்ஷிங் வாசிக்கும் கலைஞர்களே பிரமிக்கும்போது நமக்கெல்லாம் அது?

சார் நான் புல்லாங்குழல் எல்லாம் வாசிப்பேன்.
(வாசிப்பார்)
இந்த இடத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடுவார் பாருங்கள்.அதில் தெறிக்கும் அவர் நடிப்பின் வெறி.எட்டு விநாடிகளில் ஆடத் தோணாதோரையும் ஆடத் தோண வைக்கும் காட்சி.
சர்வ சாதாரணமாக மாறி மாறி அவதாரம் எடுப்பார்.

அடுத்து,
"சார் சார் சினிமாவில் வில்லாதி வில்லன் வீரப்பா வருவார் பாருங்க அதே மாதிரி நடிப்பேன் சார் பாருங்க "
என்று காத்தாடி ராமமூர்த்தியிடம் சொல்லிவிட்டு,
அந்த நடிப்பை செய்து காட்டுவார்.உறுமலான குரலில் எகத்தாளமான சிரிப்பே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி
"மடையா"என்று உச்சரிப்பது எவ்வளவு பிரமாதமான மாடுலேஷன்.
அவரின் சிம்மக்குரல் கர்ஜனை காத்தாடியை பயந்து தள்ளி நிற்க வைக்கும்.
அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹீரோஒருவர்திரையில் செய்த மிமிக்ரி இதுவாகத்தான் இருக்கும்.

கடைசியாக அழுது காண்பிக்கும் நடிப்பு.
நான்கே விநாடிகள்.சிலிர்க்க வைத்துவிடும்.
ஆகா.ஓஹோ.பேஷ்பேஷ்.
அட்டகாசம்.பிரமாதம்.அருமை.தூள்..கலக்கல்..அழகு.
அழுவது அழாகாகுமா?இவர் ஒருவரைப் பொறுத்தவரை அழுகை அழகே.

சாந்தமாக பாடுவதில் தொடங்கும் பாவனைகள் அடுத்த விநாடியே வீரத்தின் வடிவாய் உருவெடுப்பதும்
பின் தென்றல் போன்று இசைப்பதும் அது மாறி அசரடிக்கும் ஆடலும் இசையுமாயும் ,அடுத்த நொடியே கர்ஜனை புரிந்து மிரட்சி ஏற்படுத்துவதுமாயும் தடாலென்று
அடுத்த கணமே அழுகைக்கு மாறி அதிலும் பலவகைகளை காட்டி மிரள வைப்பதும் சாதாரணமானதா?
யாருக்கு இந்தக் கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும்?
அந்தப்பட பாடலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
அந்த சீனை டைரக்டர் எப்படி வச்சிருக்கார் பாருங்க ?அவர் அழுது கொண்டிருப்பது டைரக்டரை இழுக்கும்.மெல்ல டைரக்டர்(நாகையா) திரும்பிப் பார்ப்பார்.அந்த திரும்பலுக்கு ஒரு இசை பிறக்கும்.அந்த இசைதான் டைரக்டரை அந்த நடிப்பு ஈர்த்துவிட்டது என்பதற்கான அடையாளம்.
நாகையா அழைத்து உனக்கு வேறு என்ன தெரியும் எனக்கேட்க,
'பத்து பேர் சாப்பிடும்சாப்பாட்டை நான் ஒருவனே சாப்பிடுவேன் '
என்று வெகுளியாய் கூறுவது நல்ல காமெடி.
'தம்பி! உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு'
என்று நாகையா சொல்ல,
கை கூப்பும் நடிகர்திலகத்தை போகஸ் செய்யும் காமிரா மெல்ல உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் போகஸ் லைட்டின் அதிக பிரகாசத்தைகாட்டுவது "டச்".
Last edited by senthilvel; 28th November 2015 at 10:19 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
28th November 2015, 07:25 PM
#1139
Junior Member
Senior Hubber

இதென்ன விந்தை?
இந்த முகமென்கிற
வானத்தில்
இரவும்,பகலும்
ஒரே நேரத்தில்..?
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
28th November 2015, 10:56 PM
#1140
Junior Member
Senior Hubber
PADUKAPPU analysis very goodabd remember very much having seen first day night show at krishnaveni with lot of allaparai some how the movie not clicked to the expected levels,
my belated greetings raghavender for wonderful imaginry story of fixing NT AND DEVIKA in the place of ssr and vijayakumari of kakum karangal song sequences
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks