-
28th November 2015, 12:02 PM
#11
Junior Member
Veteran Hubber
இனிய நண்பர்களுக்கு
சில தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா இல்லையா என்று நம்மால் இந்த தருணத்தில் கூற முடியாத விஷயம்.
காரணம் அந்த தகவல்கள் ஒரு தகவலாக கூட ஏற்றுகொள்ள முடியாத நிலை காரணம் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இன்று இல்லை.
VKR பதிவு sensitivity அதிகம் உள்ள பதிவு - தவிர்த்திருக்க வேண்டிய பதிவு என்பதே எனது தனிப்பட்ட கருத்து
இது போல பல விஷயங்கள் அவ்வப்போது தலை நீட்டுகின்றன பல திரிகளிலும் குறிப்பாக நடிகர் திலகம் மக்கள் திலகம் திரிகளில்.
நாமும் சரி மற்றும் மக்கள் திலகம் திரி நண்பர்களும் சரி ...வேறு வழியில்லாமல் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க நேர்கிறது. ஒவோருவருடைய temperament தகுந்தாற்போல காட்டம் அதிகமாக, குறைவாக மிதமாக இருக்கிறது பதில்களில். இது கொண்டு சென்று விடுவது தனிமனித துவேஷத்தில் என்பதல்லாமல் விளக்கம் என்ற விதத்தில் அல்ல என்பதை நாம் பார்க்கிறோம் .
திரி நட்புறவிர்க்கும் திரி நண்பர்கள் கூடலுக்கும் வழிவகுக்கும் ! கடை நிலை ரசிகன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நாம் செல்வோமே !
ஆகவே இது போன்ற controversy பதிவுகள் நாம் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்பது எனது எண்ணம். இது இரு திரிகளின் நண்பர்களுக்கும் பொருந்தும்.
இரு திலகங்களும் அவர் அவர் நிலையில் சஹாப்தம்களே !
இந்த அழியா புகழை யாரும் மறுக்கவோ மறைக்கவோ குறைக்கவோ இறைக்கவோ முடியாது !
Last edited by RavikiranSurya; 28th November 2015 at 01:21 PM.
-
28th November 2015 12:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks