கேட்க கூடாததை, பேச கூடாததை, பாட கூடாததை நேரம் கிட்ட நேரத்தில் செய்வது முதிர்ச்சியின்மை மற்றும் அறியாமையின் வெளிபாடு. தரத்திலும், தகுதியிலும், வயதிலும் உயர்ந்த பெரியவர்களை அலட்சியம் செய்யும் செயலை தான் அந்த நிருபர் வயதொத்தவர்கள் எல்லோரும் செய்கிறார்கள். பெரியவர்களோ இல்லையோ, அடுத்தவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிற பண்பாடு குறைந்து விட்டது.

தனக்கு பிடிக்காதது எதுவானாலும் இந்த மனிதர் நெற்றி கண்ணை திறக்காமல் இருப்பது இல்லை. அப்படி செய்வது குற்றமா இல்லையா என்பது வேறு விவாதம். நமக்கு சுவாத்தியமில்லாத விஷயத்தை யார் பேசினாலும் கோபம் வரும். ராஜா சார் என்று இல்லை, அந்த நிருபர் மீது யார் கோபபட்டிருந்தாலும் அது சரியே.

ஊரே மூழ்கி, மக்கள் உண்ண, உறங்க இடமின்றி தவிக்க, ஆட்சி செய்வோரையும், அதிகாரிகளையும் சொடக்கு போட்டு கேள்வி கேட்டு, மக்கள் நலனுக்காக அந்த நிருபர் துணை நின்றிருந்தால் பாராட்டலாம். அதை விட்டு, ஒரு உயர்ந்த உள்ளத்தை சங்கட படுத்தியவரை கண்டிக்காமல் ஊடக தர்மம் என்கிற பெயரில் ராஜா சாருக்கெதிராக கொடி பிடிப்போர், மைக் இருந்தும் மரியாதை கெட்டவர்களே!