-
4th January 2016, 06:40 AM
#1
Junior Member
Seasoned Hubber
Makkal Thilagam MGR Part -19
நூற்றாண்டு விழா நாயகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
சினிமா, அரசியல் என்ற இரண்டு துறைகளிலும் அசைக்க முடியாத சாதனை சக்தியாக இன்றளவும் நிலைத்து நிற்பவர்.
தனிஒருவனாக ... ஆம் தன்னந்தனியனாக இரு துறைகளிலும் போராடியவர்.
ஆம். கலைத்துறையிலே இவர்போல கொள்கைகளை வலியுறுத்தி, எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் வித்திடாத , நல்ல கருத்துகளை நம் மனத்தில் விதைக்கும் விவசாயியாக, அதை செயல்படுத்திக்காட்டும் தலைவனாக, நம்மில் ஒருவனாய் நம்மோடு இருந்து நம்மைக் காக்கும் எங்க வீட்டுப் பிள்ளையாக , தர்மத்தைக் காக்கும் காவல்காரனாக, அன்றும் இன்றும் என்றும் இயல்பான நடிப்பால் அவர் நிலைத்து நிற்கிறார்.
அரசியலிலும் அவர் ஓர் அசைக்க இயலாத சக்தி. இன்றும் அவர் பெயரைச் சொல்லித்தான் அத்தனை கட்சிகளும் அரசியல் நடத்துகின்றன. அவர் காட்டிய வழியை பின்பற்றுவதாகச் சொல்லித்தான் ஓட்டு கேட்க வேண்டியுள்ளது. (அதை பின்பற்றுகிறார்களா என்பது வேறு விஷயம்).ஆனால் இவைகள் மட்டும் தானா அவரது நீடித்த புகழுக்குக் காரணம்.
நல்ல நடிகர்கள் ஆயிரம் தோன்றலாம். நல்ல அரசியல்வாதிகளும் ஆயிரம் தோன்றலாம். ஆனால் ஏழைப்பங்காளனாக, மக்களின் காவலனாக நிஜ வாழ்வில் அவர் திகழ்ந்ததனால் தான் இன்றும் இதய தெய்வமாய் திகழ்கிறார். என்றும் நம் வாழ்வில் ஒளிவிளக்காய் பிரகாசிப்பார். அந்த தெய்வத்தை வணங்கி அவரது ஆசியுடனும் , இந்தத் திரியை வழிநடத்தும் நண்பர்கள் திருவாளர்கள். வினோத், ரவிச்சந்திரன், பேராசிரியர்செல்வகுமார்,கலியபெருமாள்விநாயகம், எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி, ரூப்குமார், யுகேஷ்பாபு, கலைவேந்தன், லோகநாதன், முத்தையன் அம்மு, தெனாலிராஜன், சி.எஸ்.குமார், சத்யா,சுகராம், பிரதீப் பாலு, ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.பாஸ்கரன், சைலேஷ்பாசு, ராஜ்குமார் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பிலும் (பெயர் விடுபட்டவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்) இந்தத் திரியை இந்த நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது தொடங்கி வைக்கும் வாய்ப்பளித்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றிகூறி தொடங்கி வைக்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
4th January 2016 06:40 AM
# ADS
Circuit advertisement
-
4th January 2016, 06:55 AM
#2
Junior Member
Seasoned Hubber
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் நாள் அன்னை சாரதாதேவியாரின் ஜெயந்தி விழா.
அது தொடர்பாக நடைபெற்ற விழாவில் நிகழ்த்தப் பெற்ற ஒரு சொற்பொழிவு. பக்தர்களிடம் அன்னை சாரதா தேவியார் அவர்கள் உரையாடும் போது அடிக்கடி உபயோகப்படுத்தும் வாக்கியத்தை விளக்கினார் சொற்பொழிவாளர். அளவு கடந்த சோதனைகளுக்கு ஆட்படும் போது கலங்காதே. உனக்கொரு தாய் இருக்கின்றாள். என்றும் உன்னைக் காக்கின்றாள் என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்துக் கொள் என்று . அன்னையின் அருள்வாக்கை அப்படியே பயன்படுத்தி உள்ளார் மக்கள் திலகம். இதனைப் பார்க்கும் போது ஆன்மிகத்தில் அவரது நாட்டம் மட்டுமல்ல. எல்லா துறைகளிலும் அவரது அறிவாற்றலையும், அலங்காரத்திற்காக அல்லாமல் பலதரப்பட்ட நூல்களையும் படித்து உணர்ந்த மேதை அவர் என்பதையும் உணர முடிகிறது. அந்த வரிகளை தேர்வு செய்து கொடுத்ததும் மக்கள் திலகமாகத் தான் இருக்க இயலும் என்ற எண்ணம் எழுகின்றது. கீழே உள்ள படத்தை பாருங்கள் அவரது புத்தக அலமாரியில் அதிகஅளவிலான ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் நூல்கள் நிரம்பியிருப்பதை காணலாம்.
அந்தப் பாடல்
Last edited by jaisankar68; 4th January 2016 at 06:58 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
4th January 2016, 07:01 AM
#3
Junior Member
Diamond Hubber
நமது திரியின் 19ம் பாகத்தை துவக்கி வைத்த திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th January 2016, 07:40 AM
#4
Junior Member
Diamond Hubber
திரு பாஸ்கரன் அவர்களுக்கு,
600 பதிவுகளை பதிந்து மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் பங்கு கொள்ளும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
நமது திரியின் 20ம் பாகத்தை துவங்க தாங்கள் தயாராக இருங்கள். நமது நண்பர்களின் அதிவேக பதிவுப்பணி நமக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
4th January 2016, 08:03 AM
#5
Junior Member
Seasoned Hubber
http://i46.tinypic.com/2z8awph.jpg
ஜனவரி 31 சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
4th January 2016, 08:09 AM
#6
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
4th January 2016, 08:10 AM
#7
Junior Member
Diamond Hubber
Congrats Sri. MGRbaskaran for touching the 600th milestone.
-
4th January 2016, 08:14 AM
#8
Junior Member
Diamond Hubber
Best wishes Jaisankar Sir for commencing Part No. 19.
-
4th January 2016, 08:16 AM
#9
Junior Member
Diamond Hubber
-
4th January 2016, 08:17 AM
#10
Junior Member
Diamond Hubber
Bookmarks