Page 244 of 401 FirstFirst ... 144194234242243244245246254294344 ... LastLast
Results 2,431 to 2,440 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2431
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  2. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2432
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  5. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  6. #2433
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  8. #2434
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  9. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  10. #2435
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  11. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  12. #2436
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  13. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  14. #2437
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

  15. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, sss, Russellmai, Harrietlgy liked this post
  16. #2438
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Nadigar Thilagam's photo with autograph and calendar for desktop.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post
  18. #2439
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    ஒரு பேனாவின் பயணம் - திரு சுதாங்கன் அவர்களின் முக நூலின் ஒரு பகுதி...நன்றி...




    என் தாயாருக்கு கர்நாடக கச்சேரி, கதாகாலேட்சபங்கள், நாடகம், சினிமா என்று எதையும் விடமாட்டார்!
    படிக்கிற பழக்கம், குறிப்பாக பத்திரிகை படிக்கும் பழக்கம் நிறையவே இருந்தது!
    என்னை வலுக்கட்டாயமாக ஸ்லோக வகுப்புகளுக்கு அனுப்பியது எனக்கு இன்னும் நினைவிலுண்டு!
    அம்மாவின் அந்த கலையார்வ சூழலில்தான் சிவாஜியின் மேடை நாடகம் வியட்நாம் வீடு அரங்கேறிய செய்தி வந்தது!

    அதற்கு முன் சிவாஜி நடித்த நாடகங்கள் `வேங்கையின் மைந்தன்’ `களம் கண்ட கவிஞன்’ `தேன் கூட்’ போன்ற நாடகங்கள் அரங்கேறியிருக்கிறது!
    ஆனால் எனக்கு விவரம் தெரிந்த பிறகு சிவாஜி என்கிற மாபெரும் நடிகர் மீண்டும் மேடை நாடகத்திற்கு வந்து நடிக்கிறார் என்பதே எங்கள் வயதுக்காரர்களுக்கு பெரிய விஷயமாக இருந்தது.
    சிவாஜியின் ` வியட்நாம் வீடு’ நாடகத்தைப் பற்றி அப்போது ஏராளமான செய்திகள் வந்துகொண்டிருந்தது!

    அந்த நாடகம் அரங்கேறிய போது சிவாஜி புகழின் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்!
    சினிமா அரங்கில் அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் சில்லறைகளையும், பூக்களையும் திரையை நோக்கி வீசுவார்கள்.
    அதே நடிகர் திலகம் இப்போது மேடையில் தோன்றப் போகிறார்.
    ரசிகர்கள் அவரை எப்படி வரவேற்பார்கள்.

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 1967ம் வருட சுதந்திர தினத்திற்கு முன்பு `வியட்நாம் வீடு’ நாடகம் அரங்கேற்றமானது!
    ரசிகர்கள் முதல் காட்சியில் சிவாஜி, `சாவித்திரி’ என்று மனைவியை அழைத்தப்படியே மேடையில் பிரஸ்டிஜ் பத்மநாபனாக வருவார்!
    அவ்வளவுதான் முன் வரிசைக்கு ஒடிப்போன் ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களை அள்ளி வீசினார்கள்.
    மேடை முழுக்க பூக்கள்!
    சிவாஜியின் உடலெல்லாம் ரோஜாப் பூக்கள்!
    அவரால் அந்த பூக்கள் மீது நடந்து நடிக்க முடியவில்லை
    உடனே விளக்கை அணைத்துவிட்டு மேடையில் பூக்களை அப்புறப்படுத்திய பிறகே நாடகம் தொடர்ந்ததாம்
    அதைப் பற்றி அந்த நாடகத்தை எழுதிய வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நான் படித்திருக்கிறேன்,

    இந்த பூ பிரச்னைக்கு முடிவு கட்ட சுந்தரம் ஒரு யுத்தியை கையாண்டார்.
    அடுத்த நாள் நாடகத்தில், சிவாஜி முதல் காட்சியில் உள்ளே நுழைவார்!
    ரசிகர்கள் பூக்களை வீசுவார்கள்!
    உடனே மேடையிலிருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்துவிடுவார்கள்.
    சிவாஜி மீது மட்டும் ஒரு ஒற்றை விளக்கு வீசும்!
    `கரெண்ட் போயிடுத்தா!, கரெண்ட் போனாக்கூட எம்.ஈ.எஸ்ஸுக்கு நான் தான் போன் பண்ணனும். இந்தாத்திலே யாருக்கு பொறுப்புக் கிடையாது.’ என்று அந்த நாடகப் பாத்திரம் பேசுவது மாதிரியே சிவாஜி வசனம் பேசுவார்!
    உடனே மேடையிலிருக்கு பூக்களெல்லாம் இருட்டு பகுதியிலிருந்து அகற்றப்படும்!
    இந்த மாதிரி பத்து நாடகங்கள் வரை நடந்ததாக வியட்நாம் வீடு சுந்தரம் ஓரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

    இந்த சூழலில்தான் `வியட்நாம் வீடு’ என். கே. டி கலாமணடபத்திற்கு வந்தது!
    நாடகம் திருவேட்டிஸ்வரர் சபா சார்பில் நடத்தப்பட்டது!
    காலையிலிருந்தே அந்தப் பகுதியில் ஏகக் கூட்டம்!
    காலை 11 மணிக்கே டிக்கெட்டுகள் இல்லை! அரங்கம் நிறைந்துவிட்டது என்று போர்டு வைத்துவிட்டார்கள்!
    அப்போது எனக்கு நவராத்திரி பள்ளி விடுமுறை!
    எப்படியாவது இன்று நாடகத்தை பார்த்துவிடவேண்டும் என்று காலையிலிருந்தே மனசு பரபரத்துக்கொண்டிருந்தது!
    எனக்கு தான் அந்த மண்டபத்திற்குள் போக ஒரு தனி வழி அமைத்துவைத்திருந்தேனே!
    அன்று மதியம் ஒரு 3 மணியிருக்கும்!
    எங்கள் குடித்தன பகுதியில் வெளிவராந்தாவில் யாருமில்லை!
    மெதுவாக அந்த பாத்ரூம் கூரை மீது ஏறினேன் யாரும் பார்க்கவில்லை!
    அப்படியே அந்தப் பக்கமாக குதித்தேன்!
    அந்த அரங்கமே மதிய வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தது!
    அப்படியே முன் பகுதிக்குப் போனேன்!
    மேடையில் திரை விழுந்திருக்கவில்லை!
    ஆனால் மேடையில் ஒருவர் படுத்திருந்தார்!
    அவருக்கு பக்கத்தில் ஒரு பெரிய மின்விசிறி!
    மேடையில் யார் இப்படி வசதியாக படுத்துக்கொண்டிருப்பது என்று பார்க்க அருகில் போனேன்!
    என் உடலுக்குள் ஒரு `பக்தி’ பரவசம்!
    அழுவதா! சிரிப்பதான் என்பது புரியாத ஒர் உணர்ச்சி!
    உடல் மயிர்கூச்செறிந்தது1
    ஏதோ மின்சாரம் பாயந்தது போல் ஒரு உணர்வு!

    அதற்குக் காரணம் அங்கே அந்த மேடையில் படுத்திருந்தது சிவாஜி கணேசன்!

    நாடக நாட்களில் மதியம் சாப்பிட்டுவிட்டு வந்து மேடையிலேயே படுத்துவிடுவாராம்!
    நாடகத்திற்கான முதல் மணி அடித்த பிறகுதான் அவரை எழுப்புவார்களாம்!
    தூங்கி எழந்தவுடம் குரல் இறுக்கமாக இருக்கும்!
    அந்தக் குரல் தான் மேடைக்கு உதவும் என்பதால் சிவாஜி இதை கடைபிடித்தார்!
    அடுத்த சில வினாடிகள் குற்றால குரங்கை போல துள்ளிக் குதிக்க வேண்டும்போலிருந்தது!
    கூடவே ஒரு பயம்!
    என்னிடமோ டிக்கெட் இல்லை! வாங்க காசும் இல்லை! காசு கொடுத்தாலுமே டிக்கெட் கிடைக்காது!
    மெதுவாக அப்படியே மேடையை விட்டு கிழே இறங்கி மேடைக்கு பின்புறம் குப்பை கூளங்களாக இருந்த இடத்தில் போய் மறைவாக நின்று கொண்டேன்.
    அப்போது ஒரு மாட்டுவண்டி உள்ளே வந்தது!
    அதில் முழுவதமாக நாடகப் பொருட்கள்!
    அதை ஒருவரே ஒருவர் ஒட்டி வந்திருந்தார்.
    அவர் வண்டியை நிறுத்திவிட்டு அந்தப் பொருட்களை தனி ஆளாக இறக்க கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்!
    நான் ஒடிப்போய் நானும் தூக்கறேன் என்றேன்!
    அந்த நடுவயதுக்காரர் என்னை ஏறஇறங்கப் பார்த்தார்.
    பொடியனான என்னால் அந்தப் பாரத்தை தூக்க முடியுமா என்பது மாதிரியான பார்வை அது!
    `உங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்’ என்றேன்!
    அவரும் ஒப்புக்கொண்டார்!
    வண்டியிலிருந்த சின்னப் பொருட்களையெல்லாம் எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்!
    அந்த வீட்டு போன், அதை வைக்கும் சின்ன மேஜை இதையெல்லாம் நான் தூக்கிக்கொண்டு போய் மேடையில் வைத்தேன்.
    அவருக்கு என் உற்சாகம் பிடித்திருந்தது!
    அதற்கு ஒரு ஐந்து மணியானது!
    எனக்குள் பதட்டம் அதிகமானது!
    எந்த நேரம் என்னை வெளியே விரட்டி விடுவார்களோ என்கிற பயம்தான்!
    என் முகத்தில் படர்ந்த சோகத்தை அந்த வண்டிக்காரர் புரிந்து கொண்டார்!
    `தம்பி நீ யாரு? உங்கிட்ட டிக்கெட் இருக்கா ?’
    இல்லை என்கிற மாதிரி தலையை ஆட்டினேன்!
    பின்ன எப்படி உள்ளே வந்தே!
    தட்டுத்தடுமாறி அங்கிருக்கும் என் வீட்டையும் அந்த வழியாக குதித்து வந்ததையும் அவரிடம் சொன்னேன்!
    `நாடகம் பாக்கணுமா ?’
    உற்சாகத்தோடு தலையை ஆட்டினேன்!
    `எங்கூடவே இரு’ என்றார்!
    அடுத்த அரை மணி நேரம் அவர் போகிற இடமெல்லாம் போனேன்.
    அந்த நாடக பொருட்களை மேடையில் படுத்துக்கொண்டிருந்த சிவாஜியை சுற்றி சத்தமில்லாமல் வைத்துக்கொண்டிருந்தார்கள்.
    ஒரு 5.30 மணி சுமாருக்கு இசைக்கருவிகளோடு வாத்யக் காரர்கள் வந்தார்கள்.
    எல்லா மேடைகளுக்கு முன்னால் இசையமைப்பாளர்களுக்கென்று ஒரு சின்ன நீள இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
    அந்த இடத்திற்கு பெயர் ம்யூசிக் பிட்’
    ஒரு வாத்யக் காரரை அழைத்தார் அந்த வண்டிக்காரர்!
    `இது நம்ம வூட்டு புள்ளை. உன் பக்கத்திலேயே உட்கார வைத்துக்கோட்’ என்றார்.
    நிலவில் கால் வைத்த மாதிரி ஒரு உற்சாகம்!
    இனி என்னை யாரும் துரத்த மாட்டார்கள்!

    நடிகர் திலகத்தின் நாடகத்தை காசில்லாமல் முதல் வரிசையில், மேடைக்கு மிக அருகில் பார்க்கப் போகிறேன்!
    அந்த அனுபவத்தை அடுத்த வரும் பள்ளி நாளில் எப்படியெல்லாம் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டுமென்று மனதிற்கு ஒத்திகை பார்த்துக்கொண்டேன்!
    அதற்குள் மேடையில் திரை விழந்தது!
    ஆறு மணியிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்தது!
    7 மணிக்கு நாடகம் துவங்கியபோது அரங்கமே நிரம்பி எங்கும் நிறகக் கூட இல்லாமல் இருந்தது!

    அப்போது நாடகம் ஆரம்பித்தது

    திரை விலகியது!
    பளிச்சென்ற ஒரு பிறாமணக் குடும்ப அமைப்பில் மேடையில் ஒரு வீடு!
    அது `செட்’ தான்!
    திரை விலகியதுமே அரங்கத்தில் பலத்த கைதட்டல்!
    முன்னாடி வரிசையில் இருந்த இசைக் கலைஞர்களில் ஒருவர்,பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
    `மாமா! நார்த்தை விட செளத்தில் தலைவருக்கு நல்ல வரவேற்பு’ என்று அவர் சொல்லும்போதே!
    திரையை விலக்கி பிரஸ்டிஜ் பத்மநாபனாக சிவாஜி உள்ளிருந்து திரையை விலக்கி வெளியே வருவார்!
    `சாவித்திரி’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவார்!
    அதுவும் கண்ணாடியை கழட்டி வலது கையில் வைத்திருப்பார்!
    அப்போது தொலைபேசி மணி அடிக்கும்!
    அவரே எடுப்பார்!
    `பிரஸ்டிஜ் பத்மநாபன் ஹீயர்!’ என்பார்!
    மறுமுனையில் ஏதோ பேசுவார்கள்!
    `ஹலோ! ராங் நம்பர்!
    அவர்களை திட்டிவிட்டு போனை வைப்பார்!
    அந்த குரல் ஏற்ற இறக்கங்களை கேட்ட அடுத்த நிமிடம், சிவாஜி ஏதோ ஒரு வசனத்தை கேட்கவே முடியவில்லை!
    அரங்கமே எழுந்து கைதட்டிக் கொண்டிருந்தது!
    திரும்பி பார்த்தேன்!
    ஆண்களும், பெண்களுமாக எழுந்து நின்று கைதட்டிக்கொண்டிருந்தார்கள்!
    மேடையில் இருந்த வெளிச்சம் பாதி அரங்கத்தில் பாய்ந்து கூட்டத்தை காட்டிக்கொண்டிருந்தது!
    வானில் இருந்து நிலா பொழிந்த வெளிச்சம், மீதி இருட்டு பகுதியிலிருந்த மக்களை காட்டிக்கொண்டிருந்தது!

    பின்னால் காலரி மாதிரி இருந்த பகுதியின் மக்களை அங்கே இடது பக்க கேட்டுக்கு எதிரே இருந்த முருகன் கோவில் விளக்கின்வெளிச்சன் காட்டிக்கொண்டிருந்தது!
    அந்த முருகன் கோவில் இருந்த தெருவிற்கு பெயர் `இருசப்ப கிராமணி தெரு’!


    சிவாஜி இங்கே அடுத்த வசனம் பேச ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!
    அடுத்து சிவாஜி , மேடையில் அந்த அந்தணர் வேடத்தில் தன் மனைவியை ` சாவித்திரி’ என்றழைத்ததும்!
    மடிசார் உடையில் வருவார் அவர் மனைவி சாவித்திரி!
    அவர் நான் ஏற்கெனவே `அதே கண்கள்’ படத்தில் பார்த்த ஜி.சகுந்தலா!
    அந்த வயதில் எனக்கு எப்படி எனக்கு அத்தனை நடிகர், நடிகைகளின் பெயரும் தெரியும் என்கிற சந்தேகம் வரலாம்!
    எனக்குத்தான் படிப்பை விட சினிமாவும், சினிமா சார்ந்த பத்திரிகைகளும் மிகவும் மனப்பாடமாச்சே!
    நாடகம் அந்த வயதில் புரிந்தும், புரியாமலும் இருந்தது என்பதுதான் உண்மை!
    ஆனால் சிவாஜி கணேசனை நேரில் முதல் வரிசையில் இருந்து பார்த்த எனக்கு அந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
    கூட்டம் கலைய ஆரம்பித்தது!
    நான் அங்கிருந்து நகரவில்லை!

    அப்படியே அந்த இசைக்கலைஞர்கள் எல்லோரும் மேடைக்குப் போனார்கள்!
    நானும் சிறுவனாக அந்த மேடைக்கு அவர்கள் பின்னால் போனேன்!
    அப்போதுதான் சிவாஜி தன் மேக்கப்பை கலைத்துவிட்டு ஒரு வெள்ளை சட்டை, வேட்டியுடன், அந்த பிரஸ்டிஜ் பத்மநாபன்வேடத்திலிருந்த நெற்றி வீபூதியை கலைத்துவிட்டு, சாதாரணமாக வெளியே வந்தார்!
    அப்போது என் பக்கத்திலிருந்த இசைக் கலைஞரை அழைத்தார்!
    ` என்ன அந்த அம்மா படத்தைப் பார்த்து நான் அழுத இடத்தில் சரியா வாசிக்கலை! உன் ம்யூசிக் வரும்னு காத்திருந்தேன்! நான்ஏதோ கோளாறு பண்ணிட்டேன்னு தெரிஞ்சு நான் சமாளிச்சேன்! நாளைக்கு இந்தத் தப்பு நடக்கக்கூடாது தெரிஞ்சுதா!’ என்றுஅவரை தட்டிக்கொடுத்துவிட்டு, மேடைக்கருகில் வந்து நின்ற அவர் காரில் ஏறிப் போய்விட்டார்!
    நான் இப்போது எல்லோரையும் மறந்து, அதாவது அந்த முதல் வரிசையில் என்னை சேர்த்துக்கொண்டஇசைக்கலைஞர்களையெல்லாம் மறந்து விட்டு அந்த காரின் பின்னால் ஒடினேன்!
    கார் ஒடியே போனது!
    நான் அதே வேகத்தில் கேட்டுக்கு வெளியே வந்து, என் வீட்டிற்கு போவதற்காக, இடது புறம் திரும்பி ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தின் வாசலுக்கு வந்து நின்றேன்!
    அதற்கு அடுத்த வீடு!
    ஒரு முதலியார் வீடு!
    அந்தக் குடும்பமும் எங்கள் பாட்டி, வீட்டுக்குடும்பமும் வெகு நாள் சினேகிதம்!
    அந்த வீட்டில் எல்லோரும் வாசலிலேயே இருந்தார்கள்!
    அந்த வீட்டு அம்மாளின் பெயர் ஜீவா என்று ஞாபகம்!
    அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார்கள் !
    அவர்கள் பெயர் சாந்தி!
    அந்த அக்காவின் அண்ணன் பெயர் குருசாமி!
    அந்த அக்கா சாந்தி! இன்றைக்கு பிரபல இதய நிபுணர் டாக்டர் சிவகடாட்சத்தின் மனைவி!
    அந்த அண்ணம் குரு!
    மறைந்த நடிகர் `தேங்காய்’ சீனுவாசனின் மாப்பிள்ளை!
    நல்ல எழுத்தாளர்!
    என்னைக் கண்டதும், அந்த அம்மா ஜீவாவும், உள்ளே ஒடினார்கள்!
    `சீதா! சீதா! ராஜன் வந்துட்டான்!
    என் அம்மா பெயர் சீதா!
    என்னை வீட்டில் அழைக்கும் பெயர் ராஜன்!
    அப்போதுதான் எனக்குத் தெரிந்தது என் அம்மா நான் வெகுநேரமாக காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துவிட்டு,அதற்குப் பக்கத்து வீட்டில் இருந்தார்கள் என்பது!
    ஆனால் அதற்குள் சாந்தி அக்கா என் கையை பிடித்து அழைத்துக்கொண்டு போய் சாப்பிடு என்று எதையோ கொடுத்தார்கள்!
    ஆனால் அங்கே வந்த என் அம்மா ஒரே கத்தல்!
    `சாந்தி! அவனுக்கு எதுக்கு சோறு போடறே! அவனை கொன்னு போடணும்!
    சாந்தி அக்கா தடுத்துவிட்டு, அது டிபனா, சாப்பாடா என்பது எனக்கு நினைவிலில்லை!
    ஆனால் நான் சாப்பிட்டேன்!
    அதற்குள் என் அம்மா என் கையை பிடித்து இழுத்தாள்!
    ஆனால் சாந்தியின் அம்மா ஜீவா தடுத்துவிட்டார்கள்!
    ` சீதா ! நீ போ! நான் அவனை அனுப்பறேன்! இல்லேன்னா அவன் காலையில் கொண்டு விடறோம்!
    ஆனால் குரு அண்ணா கொஞ்ச நேரம் கழித்து பத்து வீடு தள்ளியிருந்த எங்கள் வீட்டில் கொண்டு போய்விட்டார்!
    அன்று என் அண்ணா, பாட்டி வீட்டில் ஜானி ஜான் கான் தெருவில் இருந்தான்!
    அப்பா வெளியூர் பயணம்!
    உள்ளே நுழைந்த எனக்கு அம்மா ஏதோ தீட்டி படுக்க வைத்ததெல்லாம் நினைவிலில்லை!
    என் கண்களில்! என் மனதில்! காதுகளில்! எல்லாமே சிவாஜி மட்டும்தான் இருந்தார்!
    அடுத்த நாள் காலை அம்மா மெதுவாக எனக்கு காபி கொடுத்துவிட்டு கேட்டாள்!


    ` நேத்து எங்கடா ஒழிஞ்சே!
    அம்மாவின் குரலில் ஒரு குழைவான கொஞ்சல் இருந்தது!
    `வியட்நாம் வீடு’ நாடகம் பார்த்தேன் சீதா!
    அம்மாவை ஏன் பெயர் சொல்லி அழைக்கிறேன் என்று வியப்பாக இருக்கலாம்!
    அம்மாவின் நோய் காரணமாக இருக்கலாம்!’

    நான், என் அண்ணன் இருவருமே தாயின் பால்குடி மறந்தபிறகுதான் எங்கள் தாயை பார்த்தோம்!
    எங்கள் தாயின் முகத்தைப் பார்க்குமுன் பாட்டி ஆழ்வாரை `அம்மா’ என்று அழைத்துப் பழுகிவிட்டது!
    நான் ` வியட்நாம் வீடு’ நாடகம் பார்த்தேன் என்று சொன்னதும் என் தாய் சீதா , தலையில் தட்டினாள்!
    ` எனக்கே டிக்கெட் கிடைக்கலே! நீ எப்படிடா நுழைஞ்சே சனியனே! என்னை கூட்டிண்டு போயிருக்கலாமே’
    அப்போதுதான் சீதாவிடம் நான் என்.கே.டி கலாமண்டபம் நுழைந்த ரகசியத்தை சொன்னேன்!
    வியந்து போனாள்!

    ஆனால் என்ன செய்தாளோ அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு என்னை அழைத்துக்கொண்டு மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்கிளப்பில் நடந்த அதே `வியட்நாம் வீடு’ நாடகத்தை பார்க்க அழைத்துப்போனாள் என்பது வேறு விஷயம்!

  19. Thanks Russellmai thanked for this post
  20. #2440
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    கடவுளராக நம் நடிகர்திலகம்............

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  21. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •