-
14th January 2016, 07:15 PM
#1851
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th January 2016 07:15 PM
# ADS
Circuit advertisement
-
14th January 2016, 11:05 PM
#1852
Senior Member
Seasoned Hubber

மதுர கான திரி அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
திரியின் நாயகரே... தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
Last edited by RAGHAVENDRA; 15th January 2016 at 12:41 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th January 2016, 10:23 PM
#1853
Senior Member
Seasoned Hubber
நேற்று {15.01.2016} இரவு அன்பு நண்பர் நெய்வேலியாருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்ட நாட்களாகத் திரிக்கு வராத காரணத்தால் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்ததில், அந்த உரையாடல் மிகவும் மகிழ்வூட்டியது. பணிச்சுமை மற்றும் வேலை பளுவாலும் வேறு பல காரணங்களாலும் திரியில் பங்கு கொள்ள இயலவில்லை எனக் கூறியவர், கூடிய விரைவில் இங்கு தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.
அவருக்கு நம் அனைவர் சார்பிலும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th January 2016, 03:17 PM
#1854
Senior Member
Seasoned Hubber
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி என்னுடைய விருப்பப் பாடலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களைப் பொறுத்த மட்டில் இன்றளவும் மக்கள் மனதில் நிற்பதில் பாடல்களுக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களின் பங்களிப்பு, மற்றும் வாலியின் வரிகள். இசையமைப்பாளர்களைப் பொறுத்த மட்டில் யார் இசையமைத்தாலும் வாலியின் வரிகள் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் உயிர் பெற்று விடும்.
மெல்லிசை மன்னர், கே.வி.எம். சங்கர்-கணேஷ், ஜி.ராமநாதன் என பல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தாலும் எஸ்.எம்.எஸ். எனப்படும் சுப்பய்யா நாயுடு அவர்களின் பாணியையே பின்பற்றி வந்துள்ளனர் என்பது புலப்படுகிறது. இதில் மெல்லிசை மன்னர் தன் இசைக்கருவிகளின் பிரயோகம், தன் விசேஷமான மெட்டு இவற்றால் தனித்து யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.
என்றாலும் கூட எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் ஆசை முகம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு இருக்கும் தனித்துவம் மற்ற பாடல்களை விட சற்றே உயர்த்திக் காட்டுகிறது எனலாம். இதற்கு டி.எம்.எஸ். அவர்களை எஸ்.எம்.எஸ். அவர்கள் பயன்படுத்திய வித்தியாசமான பாணியே ஆகும். குறிப்பாக கொள்கைப் பாடல்களுக்கு எஸ்.எம்.சுப்பய்யா அவர்களின் பாணியே இன்றளவும் பயன்பட்டு வருகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களிலேயே என்னை மிகவும் அதிகம் ஈர்த்த பாடல் என்கிற கண்ணோட்டத்தில் நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு பாடல் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று.
குறிப்பாக வாலியின் வரிகள் ஒவ்வொரு மனிதனுக்கம் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரச்சார நெடி அதிகம் இல்லாததும் இந்தப் பாடலின் சிறப்புக்கு ஒரு காரணம்.
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்...
பிறந்தால் யாருக்கு லாபம்..
...இந்த இடத்தில் டி.எம்.எஸ். அவர்களின் குரல் நம்மை அப்படியே கூட அழைத்துக் கொண்டு விடும்.
பகையில் துணையாய்
பசியில் உணவாய்
இருந்தால் ஊருக்கு லாபம்
இருந்தால் ஊருக்கு லாபம்...
கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால்
கோபுரமாவதில்லை...
கோபுரமாவதில்லை..
குருவிகளெல்லாம் உயரப் பறந்தால்
பருந்துகளாவதில்லை...
பருந்துகளாவிதில்லை...
எம்.ஜி.ஆருக்கே உரித்தான பாணியில் அமைந்தாலும் இசையமைப்பிலும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் வளத்தினாலும் இந்தப் பாடல் தனித்து நம்மை ஈர்க்கிறது என்பது உண்மை.

Vaali

T.M.S.
Last edited by RAGHAVENDRA; 17th January 2016 at 03:24 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th January 2016, 01:34 PM
#1855
Junior Member
Seasoned Hubber
Courtesy: Dinamani
டி.ஆர். ராஜகுமாரி: 2. பார்த்து ரொம்ப நாளாச்சு...!
1.கச்ச தேவயானி, 2.மந்திரவாதி, 3.குமார குலோத்துங்கன், 4.சூர்யபுத்திரி, 5.ஆராய்ச்சி மணி, 6, சதி சுகன்யா, 7.மனோன்மணி, 8. சிவகவி, 9. குபேர குசலா...
டி.ஆர். ராஜகுமாரி சினிமாவில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில், ஒன்பது படங்கள் வெளியாகி இருந்தன.
அதுவரை சித்தி தனலட்சுமி வீட்டில் தங்கி நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி.
1943ல், தியாகராயநகரில் ஹபிபுல்லா சாலையில் கன்னியாகுமரி பவனம் என்கிற சொந்த மாளிகையில் குடியேறினார்.
சென்னையில் பிரம்மாண்டமாக சொகுசு பங்களா கட்டி புதுமனை புகுவிழா கண்ட முதல் சூப்பர் ஸ்டார் டி.ஆர். ராஜகுமாரி!
---------------
1944. டி.ஆர். ராஜகுமாரி - டி.ஆர். ராமச்சந்திரன் நடிக்க, டி.ஆர். ரகுநாத் டைரக்ட் செய்ய பிரபாவதி ரிலிஸானது. டைட்டிலை டி.ஆர். பிரபாவதி என்று வைத்திருக்கலாம்.
ஹரிதாஸில் சாருகேசி ராகத்தில் ஒலித்தது மன்மத லீலையை வென்றார் உண்டோ... யவ்வனத்தின் தேசிய கீதம்!
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு... என்று பாடி வருகையில் இடையில் பாகவதர் ரம்பா... என்று குழைய , டி.ஆர். ராஜகுமாரி சற்று நெருங்கி க்ளோஸ் அப்பில் ஸ்வாமி! என்று இன்ப லாகிரியில் அழைக்க, என் மதி மயங்கினேன் என்று பாகவதர் பரவச நிலையில் மன்மத லீலையைத் தொடர திரை அரங்கங்கள் அமர்க்களப்படும்.
ஹரிதாஸில் அந்த ஒரு கணத்தைக் கண்ணாரக் காண, மக்கள் கூட்டம் ஆண்டுக் கணக்கில் அலை மோதியது.
இரண்டாம் உலகப் போரின் கடுமையானத் தாக்குதல். சென்னை ஏறக்குறைய காலி. எங்கும் பசி. பஞ்சம். பட்டினி.
தரித்திரத்தின் தர்பாரிலும் தலைநகரத் தமிழர்களுக்கு டி.ஆர். ராஜகுமாரி மீதான மயக்கம் அதிகரிக்கவே செய்தது.
1944 தீபாவளி ரிலிஸ் ஹரிதாஸ். சென்னை பிராட்வே தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்டு 114 வாரங்கள் தொடர்ந்து ஓடியது
அது மட்டுமல்ல மன்மத லீலை பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும், சாருகேசி ராகத்துக்கும் சபை கூடியது.
ஹரிதாஸ் படத்தில் தாசி ரம்பாவாக கொடூரமான வில்லி நடிப்பில் டி.ஆர். ராஜகுமாரி விஸ்வரூபம் காட்டினார்.
ஹரிதாஸில் டி.ஆர். ராஜகுமாரி அடைந்த உச்சக் கட்டப் புகழை இன்று வரை எவரும் இலேசாகத் தொடக் கூட முடியவில்லை.
யார் திருஷ்டி பட்டதோ டி.ஆர். ராஜகுமாரியின் கண்களுக்கு நிஜமாகவே ஆபத்து வந்தது. சிகிச்சைக்காக சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
ரஞ்சன்- டி.ஆர். ராஜகுமாரி நடித்த சாலிவாஹனன் 1945ல் வெளியானது.
ஹரிதாஸ் வெளியான ஒரு மாதத்துக்கெல்லாம் 1944 டிசம்பரில் பாகவதர் எதிர்பாராத விதமாக சிறைக்குச் சென்றார். அவர் நடித்திருக்க வேண்டிய சினிமா ஜூபிடரின் வால்மீகி.
ஹொன்னப்ப பாகவதருடன் டி.ஆர். ராஜகுமாரி இணைந்து நடித்தார். வழக்கமான அவரது கவர்ச்சியைக் காணாமல் ரசிகர்கள் ஏமாந்தார்கள். 1946ல் வால்மீகி நல்ல டாக்கியாக உருவாகியும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
விகடயோகி டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் சமூகச் சித்திரம்! 1946 அக்டோபரில் வெளியானது.
ஹாலிவுட்டில் அபார வெற்றி பெற்ற ஆங்கில சினிமாவின் தழுவல். ராசியான பி.யூ. சின்னப்பா நாயகனாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரியைப் பிரபலப்படுத்திய டைரக்டர் கே.சுப்ரமணியம் இயக்கினார். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பொய்யாக்கி விகடயோகி சுமாராகவே ஓடியது.
தமிழ்நாடு டாக்கீஸ் புகழ் பெற்றப் பட நிறுவனம். 1947ல் அவர்களது படைப்பு பங்கஜவல்லி. பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.
டி.ஆர்.ராஜகுமாரி ஆண்களை வெறுக்கும் அல்லி ராணியாக மிக வித்தியாசமான பாத்திரம் ஏற்ற படம் பங்கஜவல்லி.
கரஹரப்ரியா ராகத்தில் நீ இல்லாமல் அணுவும் அசையுமோ என்று டி.ஆர். ராஜகுமாரியிடம் பாடி அவரை வீழ்த்துவார் பி.யூ. சின்னப்பா. அப்பாடல் 1947ன் சூப்பர் ஹிட்.
பிரம்மரிஷி விஸ்வாமித்திரா, பங்கஜவல்லி ஆகிய சினிமாக்களில் டி.ஆர். ராஜகுமாரிக்குக் கிடைத்த வேடங்கள் சாதாரணமாக இருந்தன. அதனால் விசிறிகள் தியேட்டர் பக்கம் தலை காட்டவில்லை என்று நேற்றைய திரை இதழ்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
பிரம்மரிஷி விஸ்வமித்திரா கே.ஆர். ராம்சிங் - டி.ஆர். ராஜகுமாரி பங்கேற்றது. கே.ஆர். ராம்சிங் பிரசித்தமில்லாதவர். ஆனாலும் அவருடன் டி.ஆர். ராஜகுமாரி தயக்கமின்றி நடித்தார்.
---------------------
என்ன தயாராகி விட்டதா...? ஜெமினி எஸ். எஸ். வாசன் கேட்டார்.
இன்னும் ஒரு அடி பள்ளம் வெட்ட வேண்டும் சார்.
சூப்பர் ஸ்டார் டி.ஆர். ராஜகுமாரி... இருபது அடி உயரத்தில் ஏறி பார் விளையாடினால், ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க வாசன் போட்ட திட்டம் முடியும் தறுவாயில் இருந்தது.
டி.ஆர். ராஜகுமாரி நூலேணியில் முதலில் ஏறி, மேலே உள்ள ட்ரபீஸ் என்ற கம்பி ஊஞ்சலைக் கைப்பற்றி, அதிலிருந்து மற்றொன்றுக்குப் பாய வேண்டும்.
அதற்காக அவர் ஏற வேண்டிய உயரத்தைக் குறைத்து, காமிராவை தரைக்குக் கீழே கொண்டு சென்றார்கள்.
டி.ஆர்.ராஜகுமாரி மிகத் துணிச்சலாக இரண்டு அடிகள் உயரத்தில் உள்ள, கம்பி மீது காலைத் தூக்கி வைத்து ஏறினார். திரும்பினார். பின்புப் பெரிதாகப் பெருமூச்சு விட்டார்.
காமிரா சுழன்றது. அவர் பாரில் பாய்ந்து ஆடி, திரும்பவும், கம்பி ஊஞ்சலில் வந்து நின்றதாக அர்த்தம்.
ஒத்திகை முடிந்ததும் சர்க்கஸில் ஷூட்டிங்.
ராஜகுமாரி வந்தாச்சா...? வாசன் மீண்டும் களத்தில் குதித்தார்.
டோபா மட்டும் வைக்கணும். இதோ வந்திடுவார்...
நாயகியைப் போலவே அங்கு ஆஜர் ஆனது சர்க்கஸ் பையன். ராஜகுமாரிக்கான விக் கை மாட்டிக்கொண்டு பூவையும் கூந்தல் நிறைய வைத்துக் கொண்டான்.
அவன் தலைக்கு மேலே உள்ள ஒரு மெல்லிய ஊஞ்சலில், கம்பியை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு நாற்காலி மீது ஏறி நின்றார் நிஜ டி.ஆர். ராஜகுமாரி. அதுவும் ஒளிப்பதிவானது.
முழு நீளப் படம் திரையில் ஓடும் போது டி.ஆர். ராஜகுமாரியையும், பையனையும் மாற்றி மாற்றிக் காட்டி,
டி.ஆர். ராஜகுமாரி சர்க்கஸ் அழகியாக அற்புதமாக பார் ஆடுகிறார்... என்ற பிரமையை ஏற்படுத்தினார் வாசன்.
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள்... முப்பது லட்சங்கள் செலவில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகியது சந்திரலேகா.
1948 தைத் திருநாள் வெளியீடு என்று முதல் கட்ட விளம்பரங்கள் பறை சாற்றின.
காந்தி எதிர்பாரமல் துப்பாக்கி குண்டுக்குப் பலியானார். வாசனை பெரும் வட்டிச் சுமை யானையாக அழுத்தியது. தேசிய துக்கம் காரணமாகத் தன் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்.
சந்திரலேகா - அன்றையத் தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த அடையாளம். அதன் வெற்றி தோல்வியைப் பொறுத்தே படத் தொழிலின் ஜீவன் ஓடிக் கொண்டிருந்தது.
1948 ஏப்ரல் 9. சந்திரலேகா ரிலீஸ்.
காக்கி நாடாவிலிருந்து கொழும்பு வரை தென் இந்தியா முழுவதும் 50 தியேட்டர்களில் பிரதி தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர் ஜெமினியின் அற்புத சிருஷ்டி சந்திரலேகாஎன்றெல்லாம் விளம்பரங்களுக்காகவும் லட்சக்கணக்கில் வாரி இறைத்தார் வாசன்.
சென்னையில் வெலிங்டன், ஸ்டார், கிரவுன், பிரபாத் என நான்கு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது.
ஐம்பது அடி உயரத்திலிருந்து அநாயாசமாக பார் விளையாடும் அழகி சந்திரலேகா என சர்க்கஸ் காட்சிகளின் தொடக்கத்தில் எஸ்.எஸ். வாசனின் கம்பீரக் குரல் முழங்கும். அத்தனை ஈடுபாடு அவருக்குத் தன் படைப்பின் மீது!
தென்னகத் திரையில் அரை மணி நேரத்துக்கு சர்க்கஸ் காட்சிகளைக் காட்டிய முதல் படம்.
சினிமாவும் சர்க்கஸூம் வெவ்வேறு பொழுது போக்கு பொம்மலாட்டங்கள். டாக்கிக்குள் சர்க்கஸ் என்பது அந்நாளில் மிகப் புதுமை!
தன் வாழ்க்கையையே பணயம் வைத்து எஸ்.எஸ். வாசன் தயாரித்தது சந்திரலேகா. சுதந்தர பாரதம் முழுமையிலும் வெற்றி முரசு கொட்டிய முதல் இந்திய சினிமா!
1944 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இன்றைக்கும் காணக்கிடைக்கிறது சந்திரலேகாவின் ஆரம்ப விளம்பரம். சர்க்கஸ் அழகி ஒருத்தி குடை பிடித்து ஆடும் போஸ் அதில் உள்ளது.
தொடக்கத்தில் கே.எல். வி. வசந்தா என்கிற வள்ளிக்கண்ணுவை சந்திரலேகாவாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். ஏனோ அவர் சேலத்துக்கு ரயில் ஏறி திருமதி டி.ஆர். சுந்தரம் (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகி விட்டார்.
பிறகு ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி என அழைக்கப்பட்ட நடிகை புஷ்பவல்லி(இந்தி ஸ்டார் ரேகாவின் அம்மா) நடிப்பதாக இருந்தது.
சர்க்கஸ் காட்சிகளில் அணியும் உடைகள் ஆபாசமாக இருப்பதாக அவரது கணவர் அட்வகேட் ரங்காச்சாரி குறை கூற, வேறு ஆடைகளை அணிவிப்பதற்குப் பதிலாக ஆளையே மாற்றினார் வாசன்.
ஜெமினியின் அதிர்ஷ்டம் டி.ஆர். ராஜகுமாரியின் சந்திரலேகா அவதாரம்!
தங்கத்தின் மதிப்பு பத்து ரூபாய் கூட பெறாத காலம். டி.ஆர். ராஜகுமாரியின் மாண்பு அறிந்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வழங்கினார் எஸ்.எஸ்.வாசன்.
க்ளைமாக்ஸில் இடம் பெற்ற ட்ரம் டான்ஸைக் குறிப்பிடாமல் சந்திரலேகா பூரணத்துவம் பெறாது. நீண்ட நெடுங்காலம் பாடுபட்டு நூறு முரசங்களில் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்க, நூறு ஷாட்களில், உருவானது. 40 அடி உயரத்தில் நாயகி டி.ஆர். ராஜகுமாரியையும் பிரம்மாண்டமான முரசு மீது ஏற்றி ஆடச் செய்து பிரமிப்பூட்டினார் வாசன்.
டி.ஆர். ராஜகுமாரி அதிக பட்ச கவர்ச்சி காட்டி நடித்த படம் சந்திரலேகா. பார் விளையாட்டுக் காட்சிகளைக் கண்டு விநியோகஸ்தர்கள் விழி பிதுங்கினார்கள்.
நிஜார் அணிந்த டி.ஆர்.ராஜகுமாரியின் தொடைகள் கருப்பு வெள்ளையில் கூட மின்னலாகத் தாக்கியது. அவற்றை நீக்கினால் மாத்திரமே கேரளத்தில் திரையிடுவேன் என்றார் ஜியோ பிக்சர்ஸ் என். எஸ். ஜார்ஜ்.
எம்டன் வாசன். சந்திரலேகாவுக்காகவே எர்ணாகுளத்தில் ஜெமினியின் புதிய விநியோக நிறுவனத்துக்கு விதையூன்றினார்.
மலையாள மண்ணில் தமிழனின் பெருமை பேசி, வசூலைக் குவித்த முதல் சாதனைச் சித்திரமாகச் சரித்திரம் படைத்தது.
ஆரம்பம் முதலே ஆண் ஆதிக்கம் நிறைந்தது சினிமா சமூகம். அதை உடைத்தெறிந்தார் ஜெமினி எஸ்.எஸ். வாசன்.
சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியின் பெயரை எடுத்த எடுப்பில் டைட்டிலின் முதலில் போட்டார்.
எம்.கே. ராதா -ரஞ்சன் என்று இரு பிரபல ஹீரோக்கள், ஆற்றல் மிக்கக் கதா பாத்திரங்களில் நடித்திருந்தும், டி.ஆர். ராஜகுமாரிக்காகவே தயாரிக்கப்பட்டதோ என்கிற பிரமிப்பைத் தோற்றுவித்தது சந்திரலேகா.
ஜெமினி ஸ்டுடியோவில் ராஜகுமாரிக்கென்று தனியாக ஒரு மேக் அப் அறையை ஒதுக்கி இருந்தார் வாசன். ஏராளமான காஸ்ட்யூம்களில் டி.ஆர். ராஜகுமாரியை வெகு அமர்க்களமாக ரசிகர்களின் பார்வைக்கு இட்டுச் சென்றார்.
டி.ஆர். ராஜகுமாரி மாராப்புத் துணி இல்லாமல், டைட் ஃபிட்டிங் டிரஸ்ஸில் வந்து,மனமோகன தாரனே, மதனாங்க சுந்தர சிங்காரனே! என்று வில்லன் ரஞ்சனை வளைத்துப் போட, உடலை நெளித்து சாகஸத்தை உல்லாசக் கண்களில் தேக்கி ஆடுவார்.
இன்னொரு காட்சியில் ரஞ்சனின் கையில் பிடித்த மீனைப் போல் டி.ஆர். ராஜகுமாரி வழுக்கி வழுக்கி விழ, அவரைக் கட்டி அணைக்க முடியாமல் களைத்துப் போய் பெருமூச்சு விடுவார் ரஞ்சன்!
என்று சந்திரலேகாவில் நிறைந்திருந்த சல்லாப சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பொம்மை சாரதி.
ஸ்வீட் ராஸ்கல் என்பார்கள் கன்னியர். தங்களிடம் புத்திசாலித்தனமாகக் குறும்பு செய்யும் வசீகர வாலிபர்களை. சந்திரலேகாவின் வில்லன் சஸாங்கன் அந்த ரகம்! அவ்வேடத்தில் ரஞ்சன் குமரிகளுக்குக் குதூகலமூட்டி, மனம் கவர்ந்த ஸ்வீட் ராஸ்கலாக வெள்ளைக் குதிரையில் வெற்றி பவனி வந்தார்.
சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியிடம் அவர் பேசும் டயலாக் - பார்த்து ரொம்ப நாளாச்சு...! அந்தரங்க அர்த்தங்களுடன் யுவதிகளை குஷிப்படுத்தியது.
கல்கத்தாவில் சந்திரலேகா ரிலிஸ். டி.ஆர். ராஜகுமாரி ரஸகுல்லாவாகி வங்கத்து இளைஞர்களையும் இனிக்க இனிக்க வதைத்தார்.
ஒவ்வொரு இளைஞனும் டி.ஆர். ராஜகுமாரியின் ஃபோட்டோக்களை ஒளித்து வைத்துக்கொண்டான்.
பாக்கெட்டில் இருந்து அதை வெளியே எடுத்துத் தங்களுக்கும் காட்ட மாட்டானா... என்று பெரிசுகள் ஏங்கியதாம்.
சந்திரலேகா குறித்த டி.ஆர். ராஜகுமாரியின் மலரும் நினைவுகள்-
தமிழ் நட்சத்திரமாக மட்டும் திகழ்ந்த என்னை அகில இந்திய ஸ்டாராக, ஏன்... சர்வதேச நட்சத்திரமாக ஆக்கியவர் எஸ்.எஸ். வாசன்.
சந்திரலேகா சினிமாவையும் அதன் படப்பிடிப்பையும் இப்போது நினைத்துக் கொண்டாலும் பிரமிப்பாகவே இருக்கிறது.
அவ்வளவு பெரிய துணிச்சலான முயற்சியை எவராலும் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. அதன் வெற்றிக்காக வாசன் அவர்கள் எதைச் சொன்னாலும் செய்யக் காத்திருந்தேன்.
சர்க்கஸ்காரியாக மாற வேண்டுமா, தயார்! மலை மேல் ஏற வேண்டுமா, ரெடி என்று எதையும் செய்யச் சித்தமாக இருந்தேன்.
அப்படி உழைத்ததில் ஓர் இன்பம் இருந்தது. அந்த உழைப்பிற்குத் தக்க பலனும் கிடைத்தது.
ஜெமினியில் சந்திரலேகாவை முடித்து விட்டு வெளியே வந்த போது, நிஜத்தில் ஒரு குடும்பத்தைப் பிரிந்து வருகிற நிலையில் இருந்தேன் நான்.
--------------
வெள்ளித் திரையில் டி.ஆர். ராஜகுமாரியின் ராஜாங்கம் பற்றி, குண்டூசி சினிமா இதழின் முதல் ஆண்டு விழா மலரில் ஆசிரியர் கோபால் எழுதியவை---
ஒன்பது வருஷங்களில் இதுவரை பதினாறு சினிமாக்களில் நடித்துள்ளார். நடுத்தர உயரமும், கருப்பு நிறமும், கலகலப்பற்ற சுபாவமும் உடையவர்.
எவரிடமும் அனாவசியமாக பேசித் தன் கவுரவத்தை இழக்க மாட்டார்.
சுமாரான குரல். பாட்டுத் திறமை உடையவர். சம்பாஷணைகளை கனகச்சிதமாக பேசவும், காதல் கட்டங்களில் ரஸமாக நடிக்கவும் கூடியவர்.
கவர்ச்சி மிக்க உடல் அமைப்பையும், எந்தக் கோணத்திலிருந்து எடுத்தாலும் அழகாகத் தெரியும் முகத் தோற்றத்தையும், வசீகரக் கண்களையும் பெற்றிருக்கிறார்.
டி.ஆர். ராஜகுமாரி ஸ்டார் ஆக இருக்க இவையே காரணம்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2016, 01:38 PM
#1856
Junior Member
Seasoned Hubber
Courtesy:Tamil Hindu
காற்றில் கலந்த இசை 38: தேனிசை வெள்ளம்!
இளையராஜாவின் இசைக் குழுவில் கிட்டார் இசைக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்த கங்கை அமரன், பின்னர் இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் வளர்ந்தார். அவர் இயக்கிய முதல் படம் ‘கோழி கூவுது’. கிராமம் அல்லது சிறுநகரங்களுக்குள் நடக்கும் கதைகள், எளிய கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு ரசிக்கத் தக்க படங்களை இயக்கினார் கங்கை அமரன்.
மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் மிக விசேஷமானது. உற்சாகம் கொப்பளிக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்களை அத்தனை இயல்பாகப் பாடக்கூடியவர் அவர். மற்றொரு கோணமும் உண்டு. வெளித் தோற்றத்தில் இறுக்கமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பும் ரசனையும் கசிந்துகொண்டே இருக்கும் மனிதர்களுக்கும் பொருத்தமான குரல் அவருடையது. இப்படத்திலும் முரட்டு இளைஞராக வரும் பிரபுவுக்குப் பாடிய ‘பூவே இளைய பூவே’ பாடலில் இறுக்கத்தை உடைத்துக்கொண்டு இனிமையை ரசிக்கும் மனதை வெளிப்படுத்தியிருப்பார்.
பிரபு ஊரை விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்துவிடுவார். கிராமத்தில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத தனது காதலிக்கு (சில்க்), தனது நம்பிக்கைக்குரிய சுரேஷ் மூலம் கடிதம் எழுதுவார். அக்கடித வரிகளிலிருந்தே பாடல் தொடங்கும். பின்னணியில் கிட்டார் ஒலிக்க, ‘தம்பி ராமகிருஷ்ணா(வ்) கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். அதிகாரமும் அன்பும் மிளிரும் குரல் அது.
வயல்வெளிகள், ஓடைகள், தோப்புகள் என்று இயற்கையின் ஆசீர்வாதங்கள் நிறைந்த கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள் தங்கள் வாழ்வுடன் ஒன்றிய அம்சங்களாவே இருக்கின்றன. இந்தப் பாடலின் நிரவல் இசையின் கற்பனை வளம் மனதுக்குள் உருவாக்கும் காட்சிகள் அத்தனை பசுமையானவை.
மெல்ல அழைப்பது போன்ற குரலில் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன். பெருமிதமும், ஏகாந்தமும் நிறைந்த குரலில் ‘எனக்குத் தானே…’ என்று பல்லவியை அவர் முடித்ததும், ‘லலால’என்று பெண் குரல்களின் கோரஸ் ஒலிக்கும். துள்ளலான தாளக்கட்டு, இயற்கையை விரிக்கும் வயலின் இசைக்கோவை, பறவைகளின் இருப்பை உணர்த்தும் புல்லாங்குழல், நீர்நிலைகளைக் காட்சிப்படுத்தும் ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளாலேயே இயற்கையின் ஓவியத்தை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
இப்படத்தில் வரும் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே’ எனும் குழுப் பாடலை சாமுவேல் கிரப், தீபன் சக்கரவர்த்தி, வித்யாதர் ஆகியோர் பாடியிருப்பார்கள். ஊருக்குள் சுற்றித் திரியும் காதல் ஜோடியைப் பற்றி பிரபுவிடம் அரசல் புரசலாகப் புகார் செய்யும் பாடல் இது.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் கிருஷ்ணசந்திரன், எஸ். ஜானகி பாடிய ‘ஏதோ மோகம், மலையாளத் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் அறிமுகமானவர் கிருஷ்ணசந்திரன். ஒப்புமை இல்லாத தனித்தக் குரல் கொண்டவர். ‘ஆனந்த மாலை’ (தூரத்துப் பச்சை), ‘பூவாடைக் காற்று’ (கோபுரங்கள் சாய்வதில்லை), ‘அள்ளி வச்ச மல்லிகையே’(இனிமை இதோ இதோ), ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ (ஒரு ஓடை நதியாகிறது) போன்ற அற்புதமான பாடல்களைப் பாடியவர். ‘ஏதோ மோகம்’ பாடலின் சிறப்பு, மேற்கத்திய செவ்வியல் இசையின் கூறுகளைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் கிராமியக் காட்சிகளை உருவாக்கும் அதன் தனித்தன்மைதான்.
மெல்ல உருக்கொண்டு திடீரென முகிழ்க்கும் எதிர்பாலின ஈர்ப்பைச் சித்தரிக்கும் பாடல். ஒற்றை வயலின், வயலின் சேர்ந்திசை, புல்லாங்குழல், பேஸ் கிட்டார் என்று இசைக் கருவிகளின் மூலம் ஐந்தரை நிமிடங்கள் கொண்ட ‘மினி’ பொற்காலத்தைப் படைத்திருப்பார் இளையராஜா. தேன் சொட்டும் ரகசியக் குரலில் ‘ஏதோ மோகம்…ஏதோ தாகம்’ என்று பாடலைத் தொடங்குவார் ஜானகி.
கூடவே ஒலிக்கும் ஹம்மிங்கையும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலில் வெவ்வேறு சுருதிகளில் பதிவுசெய்யப்பட்ட ஹம்மிங்குகளை ஒருமித்து ஒலிக்கச் செய்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் நீண்டுகொண்டே செல்லும் ஜலதரங்கத்தினூடே ஒலிக்கும் குழலிசையும், அதைத் தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோவையும் மனதை மிதக்கச் செய்யும். இரண்டாவது நிரவல் இசையில் வெள்ளத்தைத் திரட்டிக்கொண்டே முன்னேறிச் செல்லும் ஆற்று நீரின் ஓட்டத்தைப் போன்ற வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் ராஜா. நெல் வயல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட சிம்பொனி இப்பாடல்!
இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணசந்திரனைக் கேட்டேன். “பிரசாத் ஸ்டூடியோவின் 70 எம்.எம். தியேட்டரில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்தார் ராஜா சார். 24 ட்ராக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளுடன் பாடலை உருவாக்கியிருந்தார். அப்போது இருந்த பிரம்மிப்பு இன்று வரை எனக்கு இருக்கிறது” என்றார் சிலிர்ப்புடன்.
கிருஷ்ணசந்திரனின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் இதுதான் (ஆனால், ‘பூவாடைக் காற்று’ பாடல்தான் முதலில் வெளியானது!). தமிழில் மிகக் குறைவான பாடல்களைப் பாடியிருந்தாலும் இதுபோன்ற அபூர்வப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கிருஷ்ணசந்திரன்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th January 2016, 06:51 AM
#1857
Senior Member
Veteran Hubber
Bhakthi - ethirpaaraadhadhu
From ethirpaaraadhadhu
thiru muruga endru oru dharam sonnaaal...........
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016, 03:46 AM
#1858
Senior Member
Seasoned Hubber
என்னாச்சு ரொம்ப நாளா சத்ததையே காணோம்..
நம்ம குடும்ப தலைவர் வாசு ஜி எங்கே அவர் வரலை உடனே ஒருத்தரும் ஒழுங்க வர்ரதில்லை.
சரி நம்மளாவது நிசப்தத்தை உடைப்போம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th January 2016, 03:47 AM
#1859
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நேற்று {15.01.2016} இரவு அன்பு நண்பர் நெய்வேலியாருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்ட நாட்களாகத் திரிக்கு வராத காரணத்தால் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்ததில், அந்த உரையாடல் மிகவும் மகிழ்வூட்டியது. பணிச்சுமை மற்றும் வேலை பளுவாலும் வேறு பல காரணங்களாலும் திரியில் பங்கு கொள்ள இயலவில்லை எனக் கூறியவர், கூடிய விரைவில் இங்கு தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.
அவருக்கு நம் அனைவர் சார்பிலும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
ஆஹா பிரமாதம் இதுவே எனக்கு போதும் ஆஹாஹ்ஹா ஆஹ்ஹ்ஹா....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2016, 08:39 AM
#1860
Junior Member
Seasoned Hubber
Courtesy: Dinamani
டி.ஆர். ராஜகுமாரி: 3.கூண்டுக்கிளி !
1948--ல் டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு ஜாக்பாட் கிருஷ்ணபக்தி. லேனா செட்டியாரின் ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ உருவாக்கிய உன்னதச் சித்திரம்!
ரஸ்புடினின் பிரெஞ்சு நாவல் ‘தி மான்க்’ அதைத் தமிழுக்கேற்றாற் போல் வெற்றிகரமாகப் படைத்திருந்தார் டைரக்டர் ஆர்.எஸ். மணி.
‘கண்ணகி’ போல் அவரது படைப்புகளில் மறக்க முடியாத ஓர் அற்புத சிருஷ்டி கிருஷ்ணபக்தி.
முதலில் ஸ்திரிலோலன் என்பதை மறைத்து வாழும் கபட சந்நியாசி, பிற்பாதியில் தவறை உணர்ந்து திருந்தும் ஸ்வாமிகள் என்று பி.யூ. சின்னப்பா சிறந்த நடிப்பின் சிகரத்தில் பின்னிப் பிணைந்து நின்றார்.
வழக்கமாகத் திரையில் வசீகரமான தாசியாக வலம் வந்து, தனது கற்கண்டு பேச்சாலும், காண்போர் மயங்கும் கண் கவர் ஆடைகளாலும், கண்களின் வீச்சாலும், குளிர்ச்சி தரும் சந்தனப் புன்னகையாலும், நாயகர்களை மோகவலையில் விழ வைத்து, மோசம் செய்து ஏமாற்றித் துடிதுடிக்கச் செய்வார் டி.ஆர். ராஜகுமாரி.
கிருஷ்ணபக்தியில் அவர் ராஜநர்த்தகி தேவகுமாரி! - டி.ஆர். ராஜகுமாரியின் அபார நடிப்பாற்றலை அரங்கேற்றிய அட்சயப்பாத்திரம்!
மன்னனின் மஞ்சத்தில் விழ வேண்டிய மந்தார மலர் ‘தேவா’ சரஸத்தை ஏற்க மறுத்து, பி.யூ. சின்னப்பாவைச் சரணடைவார் நாயகி.
‘சாரஸம் - வசீகர கண்கள் சீர் தரும் - முகம் சந்திர பிம்பம்’
‘செக்ஸ் சாமியார்’ பி.யூ. சின்னப்பா சொப்பனத்தில் ‘மோகனாங்கி’ டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்துப் பாடிய, கேட்கத் தெவிட்டாத கானம்!
‘தட்டு வாணிக்குத் தாலி பாக்கியம் கிடையாது’ என்று வசனம் பேசி,
தேவதாசிகளின் அவலத்தைக் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறிய டி.ஆர். ராஜகுமாரி ரசிகர்களுக்குப் புதுசு!
தன் ஆசைக்கு இணங்காத ஆடல் அரசியின் கற்பைப் பறிக்க முயல்கிறான் அரசன்.
மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி தன் மான்விழிகளைக் கத்தியால் குத்திக்கொண்டு, குருடாகிறாள் ‘தேவா’.
துறவறமே சிறப்பு என்று வாழும் தேவாவுக்கு ‘பகவான் ஸ்ரீகிருஷ்ணர்’ பிரசன்னமாகி மீண்டும் கண் ஒளி தருகிறார்.
கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டி.ஆர்.ராஜகுமாரி குணச்சித்திர நடிப்பின் உச்சம் தொட்டார்.
இன்றைக்கும் அவ்வப்போது சின்னத் திரைகளில் அதிசயமாகக் காணக் கிடைக்கிறது கிருஷ்ணபக்தி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்த டி.ஆர். ராஜகுமாரியின் மகத்தான வெற்றிச் சித்திரம்!
பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடுவின் மற்றொரு தயாரிப்பிலும் டி.ஆர். ராஜகுமாரிக்கு அழைப்பு வந்தது. சூப்பர் ஸ்டார்களுடன் மாத்திரமே நடிப்பேன் என்று ஒருபோதும் டி.ஆர். ராஜகுமாரி அடம் பிடித்ததில்லை.
டி.ஈ. வரதன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரி நாயகியாக ‘பவளக்கொடி’ சினிமாவில் நடித்தார். 1949 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது.
டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்களில் முதலும் கடைசியுமாகத் தோன்றிய டாக்கி விஜயகுமாரி. ஜூபிடர் தயாரிப்பு. எம்.ஜி.ஆரை ஹீரோவாக்கிய ஏ.எஸ். ஏ. சாமியின் இயக்கத்தில் 1950ல் வெளியானது.
அண்ணாவின் ‘வேலைக்காரி’யை அடுத்து வெளியான ஜூபிடர் படம்.
வேலைக்காரி மாதிரி சமூக விழிப்புணர்வுச் சித்திரமாக அமையவில்லை. மாயாஜாலக் கதையாகப் போனதால் மக்கள் நிராகரித்தனர்.
டி.ஆர். ராஜகுமாரியுடனானத் தனது அனுபவங்களை ஏ.எஸ். ஏ. சாமி எழுதி இருக்கிறார்.-
‘ஒன்பது மணி கால்ஷீட்டுக்கு எட்டு ஐம்பத்தைந்துக்கெல்லாம் முழு மேக் அப்போடு செட்டுக்குள் தயாராக இருப்பார்.
யூனிட்டின் ஃபேனை எதிர்பார்த்துக் காத்திராமல், அவருடைய பிரத்யேக மின்விசிறியைச் சுழல விடுவார்.
ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போகும் வரை டி.ஆர். ராஜகுமாரி நடந்து கொள்ளும் விதமும் அவரது பண்பாடும் இருக்கிறதே ... அப்பப்பா!
சினிமா ஸ்டார்கள் குறிப்பாக நடிகைகள் பலரிடமும் காண முடியாத ஒரு தனித்தன்மையோடு நடந்து கொள்வார்.
இத்தனைக்கும் அம்மையார் புகழின் உச்சத்தில் இருந்த சமயம்!
தனக்கான காட்சிகள் ஓவர் என்று டைரக்டர் கூறுகிற வரையில் சேரை விட்டு எழுந்தது இல்லை. அங்கும் இங்கும் போவது, அரங்குக்கு வெளியே சென்று அரட்டை அடித்துத் திரிவது அறவே கிடையாது.
யாராக இருப்பினும் ஒரு வார்த்தை கூட வீணாகப் பேச மாட்டார்.
படப்பிடிப்பு சமயத்தில் நான் எடுக்க இருக்கும் காட்சியைப் பற்றி, இது எதற்கு அது எதற்கு என்றெல்லாம் குறுக்கு கேள்விகள் இருக்காது.
வீண் விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பு நேரத்தையும், தயாரிப்பாளரின் முதலீட்டையும் விரயம் செய்ய மாட்டார்.
ஷூட்டிங்குக்கு வருவதற்கு முதல் நாளே ஏதாவது சந்தேகங்கள் தோன்றினால், இயக்குநரிடம் முழு விளக்கமும் கேட்டுக் கொள்வார். தன் இஷ்டத்துக்குக் கருத்து சொல்ல மாட்டார். தேவை இருந்தால் மாத்திரமே அபிப்ராயங்களைத் தெரிவிப்பார்.
டைரக்டர் சொல்கிற மாதிரி நடிப்பில் செயல்படுவதைத் தனது தலையாய கடமையாகக் கருதியவர் டி.ஆர். ராஜகுமாரி.
----------------
டி.ஆர். ராஜகுமாரியுடன் மனோன்மணி, பவளக்கொடி ஆகிய டாக்கிகளில் இடம் பெற்றார் டி.ஆர். மகாலிங்கம்.
டி.ஆர்.கள் இருவரும் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் சிட்டாடலின் இதயகீதம்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய ஜோசப் தளியத்தின் படைப்பு. இனிய பாடல்களுடன் கூடிய காதல் சித்திரம். வெற்றிகரமாக ஓடியது.
1951ல் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா நிறைவாக இணைந்து நடித்த வனசுந்தரி, 1952ல் டி.ஆர். ராஜகுமாரி முதலும் கடைசியுமாக பாகவதருடன் ஜோடி சேர்ந்த எம்.கே. டி.யின் தயாரிப்பு அமரகவி இரண்டும் தோல்வி அடைந்தன.
1953ல் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்து, சித்தூர் வி. நாகையா இசை அமைத்து உருவாக்கிய சிறந்த படைப்பு என் வீடு பிரமாதமாக ஓடியது.
அதே ஆண்டில் எம்.ஜி.ஆர்.- டி.ஆர்.ராஜகுமாரி தோன்றிய பணக்காரி’ வசூலில் வறுமையைத் தழுவியது.
1954 ன் மனோகரா. மார்ச் 3ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்தது.
தொடர்ந்து சில தோல்விகளைச் சந்தித்துப் பொருளாதார ரீதியில், மிகவும் நலிவடைந்தது ஜூபிடர். நன்றி மறவாமல் மனோகராவில் பங்கேற்று டி.ஆர். ராஜகுமாரி ஜூபிடரைக் கைத்தூக்கி விட்டார்.
டி.ஆர். ராஜகுமாரி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் அல்ல.
தனது புகழ் பெற்ற சொந்தத் தியேட்டரில் மனோகராவை திரையிட்ட அன்று, ஈவினிங் ஷோவில் இன்டர்வெல் நேரத்தில்,
அவையில் தோன்றி ரசிகர்களுக்கு ‘அதிசயக் காட்சி’யும் அளித்தார் டி.ஆர். ராஜகுமாரி.
‘வசந்தசேனை’ வேடத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்திருக்காவிடின், மனோகராவுக்கு மாபெரும் வெற்றி வாய்த்திருக்காது!
1936ல் தயாரான மனோகரா ஓடவில்லை. மனோகரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியாரே அதில் மனோகரனாக நடித்திருந்தார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவான டி.ஆர். ராஜகுமாரி படம் மனோகரா மாத்திரமே.
நடிகர்திலகமும் ‘வசந்தசேனை’யாக அநேக முறை நாடகங்களில் நடித்திருக்கிறார்.
கணேசனின் கண் எதிரிலேயே ஆளை மயக்கும் காஸ்ட்யூமில், போதை வழியும் விழி அசைவில், புருவங்களை உயர்த்தி, புயலின் சீற்றத்தைச் செந்தமிழ் உதடுகளில் உயர்த்திப் பிடித்து ... டி.ஆர். ராஜகுமாரி புத்தம் புது வசந்தசேனையாக வடிவெடுத்தார்.
கதைப்படி மட்டுமல்லாமல் நடிப்பிலும் வீழ்த்தி விடுவாரோ சிவாஜியை...! என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
அத்தனை எளிதில் மறக்க முடியுமா...! டி.ஆர்.ராஜகுமாரி எழிலாகத் தோன்றி வஞ்சக மொழி பேசி வசீகரிக்கும் முதல் காட்சியை...
‘நான் சிரித்தால் போதும்... சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வையை வீசினால் இந்த மண்டலமே என் காலடியில்..!
நான் நினைத்தால் இப்போதே ராணி. என் மகன் வசந்தன் இளவரசன்’
மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் படம் மனோகரா.
முந்தானை நுனியைக் கைகளில் சுற்றிக் கொண்டு மந்திர ஆலோசனை புரிவது டி.ஆர். ராஜகுமாரி ‘ஸ்டைல்’! மனோகராவிலும் அது மகிழ வைத்தது.
-------------
மனோகராவோடு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் டி.ஆர். ராஜகுமாரி.
ஒவ்வொர் விடியலிலும் சூர்யோதயமாக டி.ஆர். ராஜகுமாரியின் முகம் பார்க்கும் சுற்றம். சம்சாரக் கப்பலை எந்த வித சேதாரமும் இன்றி கரை சேர்த்தாக வேண்டும்.
பல ஆண்டுகள் அரிதாரம் பூசி செயற்கை அனலில் பாடுபட்டு சம்பாதித்த காசு பணம்... தன் தம்பிக்காகத் தைரியமாகப் படத் தொழிலில் முதலீடு செய்தார்.
டி.ஆர். ராஜகுமாரி கனவுக்கன்னியாக மட்டும் வெற்றி பெறவில்லை. தரமான படத் தயாரிப்பாளராகவும் பிரமாதப்படுத்தினார்.
தனது தம்பி டி.ஆர். ராமண்ணாவை பிரபல டைரக்டராக்கி அழகு பார்த்தார். ராமண்ணாவுக்காக அக்கா ஆரம்பித்த நிறுவனம் ஆர்.ஆர். பிக்சர்ஸ்.
நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளர் ராமச்சந்திரன். இளைய சகோதரர்கள் ‘ராமு அண்ணா’ என்று சேர்த்து அழைக்க, ‘ராமண்ணா’வானார்.
‘அக்கா நடிக்கும் காட்சிகள் இன்னமும் தரமானவையாக இருந்திருக்கலாம்... ’ என்று தினந்தோறும் டி.ஆர். ராஜகுமாரியுடன் தர்க்கம் செய்வார் ராமண்ணா.
‘ராமு, டைரக்டர் எப்படி நடிக்கச் சொல்றாரோ... அப்படியே நடிக்கிறேன். என் படத்துக்கு நீயா டைரக்டர்...?
நீ சினிமா டைரக்டர் ஆகும் போது என் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கணும்னு சொல்லு. அப்பப் பார்த்துக்கலாம்.
வெளியார் யாரும் நிச்சயம் உனக்குத் துணிஞ்சு டைரக்டர் சான்ஸ் தர மாட்டாங்க. நாமே சொந்தமாப் படம் தயாரிச்சா நீ சொல்றது நடக்கும்.
உன்னை டைரக்டராக ஆக்குறதுதான் அதுக்கு ஒரே வழி. ’
டி.ஆர். ராஜகுமாரிக்கு மூன்று தம்பிகள். 1.ராமச்சந்திரன் என்கிற ராமண்ணா 2. சக்கரவர்த்தி 3.பார்த்தசாரதி
இரண்டு தங்கைகள் சேதுலட்சுமி மற்றும் ரங்க நாயகி.
எஸ்.பி. எல். தனலட்சுமி கடைசி சித்தி. விகடயோகியில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்த டி.எஸ். தமயந்தி ராஜகுமாரியின் பெரியம்மா பெண். சொந்தங்களில் முதலில் திரையில் முகம் காட்டியவர் அவரே.
டி.எஸ். தமயந்தியின் மகள் குசலகுமாரி. கூண்டுக்கிளியில் சிவாஜியின் காதலியாகவும், கல்கியின் கள்வனின் காதலியில் ‘தங்கை அபிராமியாகவும்’ நடித்திருப்பார். ஜெமினியின் அவ்வையாரில் இளைய அவ்வை.
நேற்றைய தமிழகத்தின் நாட்டிய நடிகை. கொஞ்சும் சலங்கையில் குமாரி கமலாவுடன் அவர் ஆடிய போட்டி நடனம் வெகு பிரபலம்.
கவர்ச்சி சுனாமிகளில் உடன்பிறப்புகளான ஜோதிலட்சுமியும் -ஜெயமாலினியும் டி.ஆர். ராஜகுமாரியின் கலைக் குடும்ப வாரிசுகளே!
அவர்கள் இருவரும் டி.ஆர். ராமண்ணாவால் முறையே பெரிய இடத்துப் பெண், தாலியா சலங்கையா ஆகிய படங்களில் அறிமுகமாயினர். டாக்டர் சிவா ரிலிசில் முந்திக் கொண்டு ஜெயமாலினிக்குப் புகழ் பெற்றுத் தந்தது.
மேற்கூறிய அனைவரும் டி.ஆர். ராஜகுமாரியின் கன்னியாகுமரி பவனத்தில் ஒன்றாக வாழ்ந்தனர்.
டி.ஆர். ராஜகுமாரியின் கடுமையான உழைப்பு அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தந்தது.
குசலகுமாரி முதுமையாலும் வறுமையாலும் அவதியுற்றதை அறிந்ததும், முதல்வர் ஜெயலலிதா கருணையுடன் வீடு ஒன்றை ஒதுக்கித் தந்து அவர் கண்ணீரைத் துடைத்தார் என்பது வரலாறு.
‘சாய்பாபாவை’ கும்பிட்டு விட்டு ஆர்.ஆர். பிக்சர்ஸ் தன் சரித்திரத்தைத் தொடங்கியது. முதலில் ’வாழப்பிறந்தவள்’ படத்துக்கு பூஜை போட்டார்கள்.
‘இதோ பார்... நான் உன் சிஸ்டர், அது இதுன்றதெல்லாம் வீட்டோட. செட்ல நீதான் கமாண்டர். நீ சொல்ற மாதிரிதான் நாங்க நடக்கணும்.
நடிக்கும் போது நான் ஏதாவது தவறா செஞ்சிட்டா அதைத் திருத்தறதுக்கு நீ தயங்கக் கூடாது. ஆர்ட்டிஸ்டை கண்டிக்கப் பின் வாங்கக் கூடாது.
உன் படம் நல்லா இல்லேன்னா... பாதிக்கப்படப் போற முதல் நபர் நீ தான்... அதைப் புரிஞ்சி நடந்துக்க. ’
கட்டளை போல் ஒலித்தது அக்கா டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்.
அடுத்து கூண்டுக்கிளி.
‘தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’
போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.
டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!
‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’
சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!
நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’
‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’
‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’
‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’
நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.
சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.
‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.
கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.
அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.
‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.
என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.
ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks