நீங்காத நினைவலைகளில் இருந்து
திரு k பாலாஜி அவர்கள்
எனக்கு மறக்க முடியாத நாள் என்றால்...
ஒரு நாள் சேலத்தில் இருந்து காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தோம் என்னுடைய உதவியாளர்களுடன் கார் திடீரென நின்று விட்டது நல்ல மாலை நேரம் சுமார் 6 மணி இருக்கும் தண்ணீர் இல்லாமல் ரேடியட்டர் சூடாகி நின்று போனது நடு ரோட்டில் நிக்கிறோம் அருகில் வீடுகள் இல்லை
கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை தென்பட்டது அங்கு சென்று தண்ணீர் கேப்போம் என்று போனேன் அங்கு 70 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி மட்டும் இருந்தார் அவரிடம் தண்ணீர் கேட்டவுடன் டம்ளரில் கொடுத்தார் இல்லை காருக்கு என்று சொல்லி ஒரு குடம் தண்ணீர் வாங்கி ஊத்தி விட்டு குடம் திருப்பி கொடுக்கும் போது 50 ரூபாய் கொடுத்தேன் மூதாட்டீ மறுத்தார் வம்பாக கொடுத்தேன்
அப்போ நீங்கள் யார் என்று வினாவினார் நான் பாலாஜி என்றேன் பாட்டிக்கு கண்ணும் சரியாக தெரியவில்லை மீண்டும் புரியாதது போல் விழித்தார் உடனே நான் சினிமாவில் நடிக்கும் நடிகன் என்றேன்
உடனே அந்த. பாட்டி நீதான் எம்ஜிஆராப்பா என்று எழுந்து என் கைகளை பற்றிக் கொண்டு ஒன்ன பெத்தவ நல்ல புண்ணியவதிப்பா நீ நல்லா இருக்கனும் என்று வாழ்த்தினார்
எனக்கு வாயே வராமல் கண்களில் நீர் மல்க விடை பெற்றேன்
இதை அண்ணனிடம் சந்திக்கும் போது எடுத்து சொன்னேன் உடனே அந்த 50 ரூபாயை எடுத்து கொடுத்து விட்டார் மறுத்தேன் விட வில்லை நீ பாட்டிக்கு கொடுத்தது என் பணம் தான் என்று கூறி வம்பாக கொடுத்தார்.
அவர்தான் தர்மத்தின் தலைவன் எம்ஜிஆர்