Page 74 of 400 FirstFirst ... 2464727374757684124174 ... LastLast
Results 731 to 740 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #731
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எட்டாவது* வள்ளல் எம்ஜிஆர்
    __________________________

    ராஜீவ் காந்தியை மீறி பிரபாகரனை விடுவிக்க வைத்தவர்..
    ஈழப் போரில் எம்ஜிஆரின் பங்கு பற்றி பல கட்டுரைகள் தகவல்களைப் படித்திருப்பீர்கள். பலருக்கும் தெரியாத விஷயம்… எம்ஜிஆரைத் தாண்டி ஈழ விவகாரத்தை ராஜீவ் காந்தி கையாள விரும்பியது.

    அவரது அந்த முயற்சியின் விளைவுதான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கிட்டத்தட்ட கைது செய்து, டெல்லி நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தது. அந்த சிறையிலிருந்து அவரை விடுதலை செய்தவர் எம்ஜிஆர்!
    “அண்ணா.. ராஜீவ் காந்தி என்னை ரொம்பவே மிரட்டுகிறார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. நான் என்ன செய்யட்டும்?” என்று, தனக்குப் பக்கத்தில் தனக்குப் போன் செய்த எம்ஜிஆரிடம் கேட்கிறார் பிரபாகரன்.

    அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில்: “நீங்கள் எந்த ஒப்பந்ததிலும் கையெழுத்திட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று கூறிவிட்டு, “உடனடியாக பிரபாகரனை ஈழத்துக்கு அனுப்பி வையுங்கள்,” என்று மத்திய அரசிடம் பிடிவாதமாகக் கூறிவிட்டார். அப்போது ராஜீவின் பிரதிநிதியான தீக்ஷித் பிரபாகரன் அருகிலேயே கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறார் அனைத்தையும்.

    இதை பிரபாகரன் தெரிவித்ததும், தீக்ஷித்தை போனிலேயே எச்சரித்த முதல்வர் எம்ஜிஆர், “பிரபாகரனை மரியாதையுடன் நடத்துங்கள்!” என்றும் உத்தரவிடுகிறார்.

    விளைவு, பிரபாகரன் ஈழத்துக்கு திரும்புகிறார். அவர் திரும்பிய பிறகு, கனவிலும் நினைக்க முடியாத ஒரு பெரும் தொகையை ஈழப் போராட்டத்துக்காக கொடுத்தனுப்பிய பெருந்தகைஎம்ஜிஆர்!

    இதை இன்றும் ஒரு சாட்சியாக நின்று கூறிக் கொண்டிருப்பவர் , ஈழத்தின் உற்ற தோழராகத் திகழும் பழ நெடுமாறன்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #732
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    45 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் நடைபெற்ற
    "எக்ஸ்போ 70 "கண்காட்சியில்
    'உலகம் சுற்றும் வாலிபன்
    'படப்பிடிப்புக்கு சென்ற எம்ஜிஆர் . அன்றைக்கு
    இருந்த படப்பிடிப்பு கேமராக்களை
    மட்டும் வைத்துக் கொண்டுமிகச் சிறப்பான முறையில்
    காட்சிகளைப் படம் எடுத்து படத்திற்கு விறு
    விறுப்புக் கூட்டியுள்ளது மட்டுமல்ல , தான் ஒரு
    சகலகலா வல்லவன் மிகச் சிறந்த இயக்குனர்
    என்பதையும் நிரூபித்திருக்கிறார் .

    அன்றைய சூழலில் அங்கு கிரேன் பயன்படுத்த வசதியும்
    இல்லை - வழியும் இல்லை .
    நியூ மிட்ஸல் மற்றும் ஏரிஃபிளக்ஸ் ஆகிய இரண்டு
    கேமராக்களை மட்டும் பயன் படுத்தி
    ஒட்டு மொத்த "எக்ஸ்போ 70 "கண்காட்சியையும்
    ஒரு பாடலுக்குள் கொண்டு வந்து சாதனை
    புரிந்திருக்கிறார் எம்ஜிஆர் .

    அதுவும் நிறைய சீன்கள் கேமராவை கையிலேயே
    தூக்கிக் கொண்டு அசைவில்லாமல் படம் பிடித்து
    சாதனை புரிந்துள்ளார்கள் .

    "உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் .." என்ற
    அந்தப் பாடல் கட்சிகளைக் கவனப்படுத்திப் பார்த்தால்
    எண்ணற்ற விஷயங்களை காண முடியும் .
    வெறும் பாடல் மட்டுமல்ல அந்தக் காட்சி அமைப்பு
    என்பது புரியும் .

    பாடல் தொடங்குவதற்கு முன் ஜப்பானிய பாரம்பரிய
    இசை பின்னணியில் ஒலிக்க காட்சிகள் நகரும் .
    எம்ஜிஆர் , சந்திரகலா ,நாகேஷ் தொடர்பான
    ஒரு கோணம் .

    அண்ணனைக் கண்டு பிடிக்க ,பாடிக்கொண்டும்
    ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் .

    இன்னொரு எம்ஜிஆர் ,மஞ்சுளா, ஒரு கோணம் .
    இவர்களைக் கண்காணிக்கும் விதமாக
    அசோகன் ,லதா , ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர்
    என்று மூன்று தனித் தனி கோணம் .

    இது போக , ஜப்பானுக்கே போகாத ஆர்.எஸ் .மனோகர் ,
    தேங்காய் சீனிவாசன் இவர்களும் , அவர்களை கவனிப்பது
    போல சத்யா ஸ்டுடியோ செட்டில் வைத்து
    எடுத்த காட்சிகளின் இணைப்பு .

    இதுமட்டுமல்ல ,கண்காட்சியில் உள்ள வித விதமான அரங்குகளையெல்லாம் அழகாய் காட்டும் விதமாக ..
    ஒரே ஷாட்டில் கண்காட்சியில் இரவின் அழகையெல்லாம்
    மிகப் பொருத்தமாக ....
    அந்த ஒரு பாடலில் கொண்டு வந்திருப்பார் .
    பாடலின் நீளம் போதாது என்று எம்*எஸ்*வி பின்னணி
    இசையை இன்னும் அதிகமா இணைத்து கோர்வைப்
    படுத்தி சரிசெய்திருப்பார் .

    எங்கு தொடங்குகிறது ..எங்கு முடிகிறது ..என்று
    கண்டு பிடிக்க முடியாத "எக்ஸ்போ 70 " யின் ஒட்டு
    மொத்த அழகையும் ஜும் லென்ஸ் பயன்படுத்தி
    கேமரவுக்குள் கொண்டுவந்திருப்பார் எம்ஜிஆர் .

    ஆகக் சிறந்த எடிட்டிங் பற்றி மட்டுமல்ல ,கேமரா பற்றி
    மற்றும் சினிமா குறித்த எல்லா அறிவுகளும்
    இல்லையென்றால்
    இதுவெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான்
    இந்தப் பாடலின் இந்த படத்தின் மகத்தான
    வெற்றிக்கு காரணம் .

    பல உலக நாடுகளில் எடுக்கப்பட பல படங்கள் -
    பாடல்கள் தமிழில் வந்துள்ளன . ஆனாலும்
    "உலகம் சுற்றும் வாலிபன் "
    படத்திற்கு இணையாக அந்தப் பாடலுக்கு இணையாக
    இன்னும் ஒரு படம் வந்ததில்லை .

    குறிப்பு .
    இந்தப் படத்திற்கு என் தந்தை எங்களை கூட்டிச்
    சென்ற போது (கோவை- ராஜா தியேட்டர் ) அப்படியொரு கூட்டத்தைக் கண்டு சிறு வயதிலேயே அசந்து போனேன் .

    # எம்ஜிஆர் 99 வது பிறந்த தினம் ..நினைவாக .

    நன்றி : நண்பர் பிர்தோஸ் ராஜகுமாரன் நசீர்

  4. Thanks oygateedat thanked for this post
  5. #733
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MGR கார் பின் பக்கமா உள்ள வரட்டும்…

    குமரேசன் – இவர் பாண்ட்ஸ் கம்பெனியில் சென்னையில் வேலை பார்த்தார் பின்னர் திண்டிவனம் மாற்றப்பட்டார். இவரது முக்யமான வேலைகளில் ஒன்று, தினமும் இரவு வேலை முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், மடத்திற்கு வருவார். இரவு சுமார் எட்டு மணி ஒன்பது மணி ஆகும். பெரியவர் தூங்கும் முன் அவர் அறைக்கு செல்வார். அன்று வந்திருக்கும் மாலை பேப்பர்களை பெரியவருக்கு படித்து காட்டுவார்.
    மாலை முரசு , மாலை மலர், மக்கள் குரல், முரசொலி சில நேரங்களில் விடுதலை கூட உண்டு. குமரேசனுடன் பிற்காலத்தில் நானும் ஒன்றாக வேலை செய்தேன் பாண்ட்ஸ்ல் .
    ஒருநாள் இரவு பெரியவர் “குமரேசன் வந்துட்டானா?” என்றார். “வர்ற நேரம் தான் .” என்றார் உதவியாளர்.குமரேசன் வந்ததும் “அப்பா குமரேசா உன்ன பெரியவா தேடிண்டு இருக்க போய் என்னனு பாரு.” அன்று வந்த செய்தி தாள்களை படிக்கும் போதுதான் அந்த கேள்வியை பெரியவர் கேட்டார் .

    “குமரேசா எனக்கு M G R ஐ பாக்கணும் மாதிரி இருக்கு நீ போய் சொல்லிட்டு வர்றயா?”

    MGR உடல் நலம் சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பிய நேரம் அது…

    ( இடையில் ஒரு செய்தி.: பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் , MGR திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வெளியே வர சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதில் செய்தி என்ன வென்றால் அந்த நேரம் பெரியவர் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் அமர்ந்து ஒருமணி ஜபம் செய்து கொண்டிருந்தார்.இது தினமும் நடக்கும் பூஜை என்றாலும், அன்று அது விசேஷமாக பேசப்பட்டது.)

    “இந்த குடுமியோட போனேன்னா அங்க செக்யூரிட்டி கூட என்ன உள்ள விடமாட்டான்.நான் போய் எங்க சொல்லிட்டு வர்றது.” என்றார் குமரேசன்.

    “சரி போ அவரா எப்ப வர்றாரோ அப்ப வரட்டும். ஒரு வேளை வந்தாக்க MGR கார் பின் பக்கமா உள்ள வரட்டும், நான் கிணத்துக்கிட்டக்க உக்காந்துக்கறேன், மத்த ரெண்டு சுவாமிகளையும் அங்கேயே வரசொல்லிடலாம். MGR ஆல ஜாஸ்தி நடக்க முடியாது. நாங்க எல்லாம் ஒரே இடத்துலேயே இருக்கோம்.சரிதான ?”

    “MGR வரும்போது பாத்துக்கலாம் ” என்றார் குமரேசன்.

    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை .காலையில் கூட்டம் அதிகம்.நானும் பெரியவரின் அறை வாசலி நின்று கட்டுபடித்திக்கொண்டு இருந்தேன். அப்போது இதயம் பேசுகிறது மணியனும் , எழுத்தாளர் சுபாஷிணியும் அங்கு வந்தார்கள். அவர்களை கண்ணன் மாமா அழைத்து வந்திருந்தார். பெரியவரிடம் வந்தவர்களை பற்றி கூறினார்.
    “மணியன் பெரியவா கிட்டக்க தனியா பேசணுமாம் ” என்றார் கண்ணன்.

    பெரியவர் சைகை காட்ட ” டேய் அம்பி எல்லாரையும் கொஞ்சம் போக சொல்ல்லுடா அறை மணி கழிச்சி வர சொல்லு ” என்றார் கண்ணன் மாமா என்னிடம். நானும் மற்றவர்களை அனுப்பி விட்டு அங்கே வந்தேன்.
    மணியன் பேச தொடங்கினார்.
    ” பெரியவாள பாக்க MGR ஆசை படறார் . உத்தரவு கொடுத்தா சாயந்திரம் வருவார் ..” என்றார் மணியன் .
    நான் வாய் அடைத்துப்போனேன் .சற்று நேரம் ஒன்றும் புரிய வில்லை . இது எப்படி சாத்தியம் நேற்று இரவுதான் பெரியவர் குமரேசனிடம் தனது ஆசையை கூறினார் இன்று MGR தானே வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறாரே ! இதனை என்ன வென்று சொல்வது.

    சிறுவன் என்பதால் MGR பார்க்கும் ஆசை மேலோங்கியது.கலக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் MGR வருவது சொல்லப்பட்டது. மடத்திலும் ரகசியம் காக்கப்பட்டது. கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் மிக மிக ரகசியமாக வைத்தார்கள்.வெளியில் வெளிநாட்டு அதிபர் வருவதாக கூறி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள். நேரம் செல்ல செல்ல ஊரறிந்த ரகசியமாக ஆனது. மடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

    மதியம் சுமார் இரண்டு மணிக்கு எல்லாம் அங்கே தங்கி இருந்த என்னை போன்றவர்களை எல்லாம் வெளியே போக சொன்னார்கள். நான் ஓடிபோய் பால பெரியவர் இருந்த மாடி அறைக்கு சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டு யாரும் பார்க்க வண்ணம் இருந்தேன்.

    பெரியவர் என்ன ஆசை பட்டரோ அப்படியே மதியம் மூன்று மணிக்கு கார் பின்பக்கமாக வந்தது . அவர் ஆசை பட்டபடியே கிணத்தடியில் கம்பளம் விரித்து அதில் பலகையில் அமர்ந்திருந்தார்.மற்ற இரண்டு சுவாமிகளும் அங்கேயே வந்து அமர்ந்தனர்.

    தங்க நிறமாக MGR , ஜானகி அம்மையாருடன் வந்தார். இருவரும் அமர்ந்தனர் . சுமார் பத்து நிமிடங்கள் ஒரே அமைதி பெரியவரும் தியானத்தில் இருந்தார். MGR கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. ஜானகி அம்மையாரும் கண்களில் கண்ணீர் மல்க பெரியவரின் கால்களில் விழுந்தார். கண்ணன் மாமா அருகில் அமர்ந்திருந்தார். பொதுவாக அவர்தான் VIP க்கள் வரும்போது அருகில் இருப்பார். ஆங்கில மொழிபெயர்ப்பு இத்யாதிகள் செய்வார்.

    பத்து நிமிடங்களுக்கு பிறகு பெரியவர் கண்ணை திறந்து உடல் நலம் எப்படி உள்ளது என்று செய்கையில் கேட்க , MGR ம் தலையை ஆட்டி கைகளால் தனது நலத்தை பற்றி பதில் கூறினார். தட்டுகளில் பழங்கள், பூக்கள் , என்று வரிசையாக பத்து பதினைந்து தட்டுகள் வந்தன . எல்லாம் பெரியவர் முன் வைக்க பட்டன. பெரியவர் அவற்றை ஆசையாக தொட்டு பார்த்தார். கண்ணன் மாமா எல்லா பொட்டலங்களையும் பிரிக்க ஒரு குறிப்பிட்ட தட்டு வந்தபோது பெரியவர் MGR இருவருமே திறக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கையை காட்டினார்.

    ஜானகி அம்மையாரிடம் அறுவை சிகிச்சை பற்றியும் தற்போது வழங்கப்படும் மருந்துகள் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

    “……. டிபார்ட்மென்ட்ல (ஒருவர் பெயரை குறிப்பிட்டு) அவர் இருந்தாரே அவர ஏன் வெளில அனுப்பின ? அவன் நல்லவ நாச்சே ? என்றார் பெரியவர். (அவர் வெளியேற்ற பட்டதற்கான காரணம் பின்னாளில் வேறுவிதமாக கூறப்பட்டது.)

    MGR ம் தனது செயலாளரை பார்க்க அவர் ஒரு காரணத்தை சொன்னார். பெரியவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ள சொன்னார்… MGR தலை ஐ அசைத்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

    ( மறுவாரம் அந்த ……… டிபார்ட்மென்ட மனிதர் தான் மீண்டும் வேலையில் சேர்ந்ததை பற்றி பெரியவரை தரிசிக்க வந்தபோது கூறினார் )

    பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்கள். சுமார் அறை மணிநேரம் நீடித்தது இந்த சந்திப்பு.
    பின்னர் எல்லோரும் புறப்பட்டனர்.MGR ன் கார் உள்ளேயே வந்தது அதில் அவர் ஏறிக்கொள்ள கார் மெல்ல நகர்ந்தது.மடத்தின் வெளியே கட்டுகடங்கா கூட்டம். அதனை கண்ட MGR உடல் நிலையை பொருட்படுத்தாமல் காரின் பேன்ட் மேல் ஏறி கை அசைக்க ஒரே விசில் சப்தம்.

    நான் மற்றும் சிலர் அங்கு வந்த பழங்கள் மற்றும் பொருட்களை மடத்தின் உக்ராண அறைக்கு எடுத்து சென்றோம்.

    மாலை சுமார் ஐந்து மணிக்கு மணியன் மீண்டும் அவசர அவசரமாக வந்தார்.
    ‘இங்க இருந்த தட்டு எல்லாம் எங்க ..?” என்றார் பதட்டத்துடன். பாலு மாமா காதில் ரகசியமாக என்னமோ கூற அவரும் பெரியவரிடம் அதனை கூறினார். பெரியவரும் அமைதியாக “எங்கயும் போகாது உக்ரானதுல தேட சொல்லு ” என்றார் பெரியவர்.

    எல்லோரும் உக்றான அறைக்கு ஓடிபோனோம் . மணியன் காட்டிய தட்டை கண்டு பிடித்தோம் அதனை எடுத்து கொண்டு மீண்டும் பெரியவரிடமே வந்தோம். பெரியவர் அதனை தொட்டு பார்த்தார் சிரித்தார். பின்னர் பாலு மாமாவை விட்டு பிரிக்க சொன்னார். இதனைத்தான் முதலில் இருவரும் பிரிக்க வேண்டாம் என்று கண்ணன் மாமாவிடம் கூறினர்.
    அதில் இருந்தது ஒரு குறிப்பிட்ட தொகை பணம்.

    “இது கானா போயிருந்தா மடதுக்குன்னா கெட்ட பேர் வந்திருக்கும் “என்றார் பாலு மாமா .

    “அது எனக்காக அவன் கொடுத்தது எதுவும் கானா போகாது.மடத்து கணக்குல சேக்க சொல்லு ” என்றார் பெரியவர்.

    *****
    Thanks a ton to Shri ‘Well Bred’ Kannan who had posted this gem in Sage of Kanchi group in Facebook http://www.facebook.com/groups/Periyavaa/. I have read bits and pieces of this but not in such great detail.

  6. Likes oygateedat liked this post
  7. #734
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கொடை வள்ளல் மக்கள் திலகம் எம்ஜியார் பிறந்த தினமின்று. பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்ந்து மறைந்ததும் வெவ்வேறு இடங்கள். சினிமாவின் மூலை முடுக்கெலாம் அறிந்தவர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர். இவர் படங்களில் வேலை செய்வதென்றால் சக நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கெல்லாம் அத்துணை உறசாகம் லைட் பாயிலிருந்து கதாநாயகி வரை அத்தனை பேருக்கும் சரியாகச் சம்பளம் சென்றிருக்கிறதா என்பதை உறுதி செய்தவர். படப்பிடிப்பில் அத்தனை பேருக்கும் உணவு சரியாக வழங்கப் படுகிறதா என்பதையும் கண்காணித்தவர். கவியரசர் கண்ணதாசன் எவ்வளவோ மறுத்தும் தமிழக அரசின் ஆஸ்தான கவி பதவி வழங்கி அழகு பார்த்தவர். மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் அவர்களை தெய்வத்தாய் படம் மூலம் அறிமுகம் செய்தவர் கதை வசனகர்த்தாவாய். பின்னாளில் அவரைக் கடிந்து கொண்டவர் சினிமாவின் ரகசியங்களை அம்பலப் படுத்துகிறாய் என்று. ஆம், சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் அவர்கள் பொம்மைக் குதிரையில் அமர்ந்து பின் திரையில் சாலையில் செல்வது போல் காட்சி சேர்க்கப் படும் பேக் ப்ரொஜக்க்ஷன் எனும் தொழில்நுட்பத்தால். சினிமாவை செட்டிலேயே செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், வெளிப்புறக் காட்சிகள் அபூர்வம் அவரது படங்களில். வீட்டிற்கு வருவோரை முதலில் பசியாற்றிவிட்டுத்தான் பேசுவார் என்பதற்கு ஒரு நிகழ்வைப் பதிவிடுகிறேன் இங்கு. எனது உறவினர் தூத்துக்குடியில் தொழிற்சங்க வாதி ஒரு பிரபல நிறுவனத்தில். அவர் சார்ந்த கட்சியில் உட்பூசலால் மனம் வெதும்பியிருந்தார். அவரை சந்தித்த அப்போதைய அதிமுக பிரமுகர் ஒருவர் " அண்ணே அதிமுகவுக்கு வாங்க, தலவரை சந்தித்து கட்சியில் சேருங்க, இங்கு அண்ணா தொழிற்சங்கத்தை வலுப்படுத்துங்க " என்று சொல்லி சம்மதிக்க வைத்து எம்ஜியாரிடம் கூட்டிச் சென்றிருக்கிறார் அந்தப் பிரமுகர். இருவரையும் வரவேற்ற எம்ஜியாரிடம் இருவரும் பேச முற்படுவதற்குள் முதல்ல சாப்பிடுங்க எனச் சொல்ல,. இட்டிலியும் மீன் குழம்பும் வந்திருக்கிறது. சாப்பிட்ட பின்புதான் பேச்சு நடந்திருக்கிறது. இப்போது அந்த உறவினருமில்லை எம்ஜியாருமில்லை. எம்ஜியார் பேச்சு எப்போது வந்தாலும் இந்தச் சம்பவத்தை சொல்லத் தவறுவதில்லை அவர் இறக்கும் வரை.

  8. #735
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like

  9. #736
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like

  10. #737
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like

  11. #738
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like

  12. #739
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like

  13. #740
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •