-
22nd February 2016, 04:22 PM
#11
Junior Member
Diamond Hubber
கி.பி. 950 கால கட்டம்.
குந்தவை நாச்சியார்:
தம்பி ராஜராஜா,உன் எண்ணப்படிதான் மகாகோவில் வளர்ந்து கொண்டிருக்கிறதே!உன் முகத்தில் சற்று மாற்றம் தெரிகிறதே.என்ன விஷயம்?
ராஜராஜன்:
தமக்கையே!ராஜராஜன் மகா கோயிலை கட்டிக்கொண்டிருக்கின்றான் என்று ஊரே சொன்னாலும் அதைச் செய்தவன் என்னை ஆட்கொண்ட அந்த சிவனல்லவா.உலகையே ஆளும் சக்கரவர்த்தி என்றாலும் வாழ்நாள் சக்திகள் எல்லா மனிதர்களைப் போலத்தானே!
குந்தவை நாச்சியார்:
அப்படியல்ல ராஜராஜனே.செயற்கரிய காரியங்களை எல்லோராலும் செய்துவிடமுடியாது.உன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் திறமையுமே காரணம்.உன் போன்று சரித்திரத்தில் பெயர் சொல்ல ஒருவன் பிறப்பது அரிது.
ராஜராஜன் : !!!
1973 மார்ச் 31
தமிழ் திரையரங்குகளில் ஒலித்த குரல்களும்,அந்த காலகட்டத்தில் வந்த ஏடுகளும்...
தலைவா!உண்மையான ராஜராஜனே உன்னைப்போல இருந்திருக்கமாட்டான்.
ராஜராஜ சோழனை யாரும்பார்த்திருக்க முடியாது.அவன் எப்படி இருந்திருப்பான் என்று கண்முன் நிறுத்தி விட்டாரே நடிகர்திலகம்.
ராஜராஜன் கூட இப்படி கம்பீரமாய் இருந்திருப்பானா?
ஒருவேளை அந்த ராஜராஜன்தான் இப்போது பிறந்து வந்துள்ளானோ?
இப்படி ஒரு தேஜஸ் அந்த மன்னனிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
மாமன்னனுக்கு உயிர் கொடுத்த கலையுலக மன்னவா!இந்த சரித்திரத்தை மாற்ற எவராலும் இயலாது.

கைலாயத்தில் சிவனும் பிரம்ம தேவரும்:
சிவன:பிரம்ம தேவரே சில சமயங்களில் நீர் படைக்கும் படைப்பு நமக்கே அதிசயமாக உள்ளதே.முன்பு ராஜராஜன் என்னும் மன்னன் தன் வீரத்தால் பெரும் ராஜ்ஜியங்களை வென்று எல்லாவற்றுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்தான்.எத்தனையோ வருடங்கள் முயற்சி செய்து
உலகே வியக்கும் ஆலயம் கட்டி முடித்தான்.அவனுடைய சாதனைகள் எல்லாம் போற்றத்தக்கதே.
அதனால் பெரும் சாம்ராஜ்யத்திற்கே அதிபதியாய் இருந்தனால் இந்த செயல்களை செய்ய முடிந்தது என்றும் கொள்ளலாம்.
பிரம்மதேவன்:
ஆம்.அய்யனே.நான் அவனைக்கண்டு பெருமைப்பட்டாலும் அதை விட இந்த கலைமகன் வியக்க வைத்து விட்டானே.30வருட வாழ்க்கைச்சரித்திரத்தை 3மணி நேரத்தில் வாழ்ந்து காட்டி எல்லோரையும் வாய் பிளக்க வைத்து விட்டானே.
சிவன்:
அது சரி பிரம்மதேவா. அவன் நானே அவதாரம் எடுத்தது போல் அரிதாரம் பூசி
என்னையே வியக்க வைத்தவன் ஆயிற்றே.இனி நானே அந்த உருவில் பூலோகம் சென்றால் என் தோற்றத்திற்கு மதிப்பிருக்குமா என்று தெரியவில்லையே!
பிரம்மதேவர்:
ஆனாலும் என் மனதில் ஒரு ஆதங்கம் இல்லாமல் இல்லை. அது என்னவெனில்,அந்த கலைமகனின் திறமையை சில பூலோகவாசிகள் சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் அது.
சிவன்:
மர்மப்புன்னகையுடன் மாயமாகிறார்.
Last edited by Murali Srinivas; 24th February 2016 at 12:08 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
22nd February 2016 04:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks