-
22nd February 2016, 11:48 AM
#3331
Junior Member
Seasoned Hubber
Joyful and Youthful NT in super song from SS
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
22nd February 2016 11:48 AM
# ADS
Circuit advertisement
-
22nd February 2016, 11:54 AM
#3332
Junior Member
Seasoned Hubber
Smart & Style NT in Iniyavale song from SS
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd February 2016, 03:32 PM
#3333
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd February 2016, 04:22 PM
#3334
Junior Member
Diamond Hubber
கி.பி. 950 கால கட்டம்.
குந்தவை நாச்சியார்:
தம்பி ராஜராஜா,உன் எண்ணப்படிதான் மகாகோவில் வளர்ந்து கொண்டிருக்கிறதே!உன் முகத்தில் சற்று மாற்றம் தெரிகிறதே.என்ன விஷயம்?
ராஜராஜன்:
தமக்கையே!ராஜராஜன் மகா கோயிலை கட்டிக்கொண்டிருக்கின்றான் என்று ஊரே சொன்னாலும் அதைச் செய்தவன் என்னை ஆட்கொண்ட அந்த சிவனல்லவா.உலகையே ஆளும் சக்கரவர்த்தி என்றாலும் வாழ்நாள் சக்திகள் எல்லா மனிதர்களைப் போலத்தானே!
குந்தவை நாச்சியார்:
அப்படியல்ல ராஜராஜனே.செயற்கரிய காரியங்களை எல்லோராலும் செய்துவிடமுடியாது.உன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் திறமையுமே காரணம்.உன் போன்று சரித்திரத்தில் பெயர் சொல்ல ஒருவன் பிறப்பது அரிது.
ராஜராஜன் : !!!
1973 மார்ச் 31
தமிழ் திரையரங்குகளில் ஒலித்த குரல்களும்,அந்த காலகட்டத்தில் வந்த ஏடுகளும்...
தலைவா!உண்மையான ராஜராஜனே உன்னைப்போல இருந்திருக்கமாட்டான்.
ராஜராஜ சோழனை யாரும்பார்த்திருக்க முடியாது.அவன் எப்படி இருந்திருப்பான் என்று கண்முன் நிறுத்தி விட்டாரே நடிகர்திலகம்.
ராஜராஜன் கூட இப்படி கம்பீரமாய் இருந்திருப்பானா?
ஒருவேளை அந்த ராஜராஜன்தான் இப்போது பிறந்து வந்துள்ளானோ?
இப்படி ஒரு தேஜஸ் அந்த மன்னனிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
மாமன்னனுக்கு உயிர் கொடுத்த கலையுலக மன்னவா!இந்த சரித்திரத்தை மாற்ற எவராலும் இயலாது.

கைலாயத்தில் சிவனும் பிரம்ம தேவரும்:
சிவன:பிரம்ம தேவரே சில சமயங்களில் நீர் படைக்கும் படைப்பு நமக்கே அதிசயமாக உள்ளதே.முன்பு ராஜராஜன் என்னும் மன்னன் தன் வீரத்தால் பெரும் ராஜ்ஜியங்களை வென்று எல்லாவற்றுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்தான்.எத்தனையோ வருடங்கள் முயற்சி செய்து
உலகே வியக்கும் ஆலயம் கட்டி முடித்தான்.அவனுடைய சாதனைகள் எல்லாம் போற்றத்தக்கதே.
அதனால் பெரும் சாம்ராஜ்யத்திற்கே அதிபதியாய் இருந்தனால் இந்த செயல்களை செய்ய முடிந்தது என்றும் கொள்ளலாம்.
பிரம்மதேவன்:
ஆம்.அய்யனே.நான் அவனைக்கண்டு பெருமைப்பட்டாலும் அதை விட இந்த கலைமகன் வியக்க வைத்து விட்டானே.30வருட வாழ்க்கைச்சரித்திரத்தை 3மணி நேரத்தில் வாழ்ந்து காட்டி எல்லோரையும் வாய் பிளக்க வைத்து விட்டானே.
சிவன்:
அது சரி பிரம்மதேவா. அவன் நானே அவதாரம் எடுத்தது போல் அரிதாரம் பூசி
என்னையே வியக்க வைத்தவன் ஆயிற்றே.இனி நானே அந்த உருவில் பூலோகம் சென்றால் என் தோற்றத்திற்கு மதிப்பிருக்குமா என்று தெரியவில்லையே!
பிரம்மதேவர்:
ஆனாலும் என் மனதில் ஒரு ஆதங்கம் இல்லாமல் இல்லை. அது என்னவெனில்,அந்த கலைமகனின் திறமையை சில பூலோகவாசிகள் சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் அது.
சிவன்:
மர்மப்புன்னகையுடன் மாயமாகிறார்.
Last edited by Murali Srinivas; 24th February 2016 at 12:08 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
22nd February 2016, 05:44 PM
#3335
Junior Member
Devoted Hubber
From Mr. Sudhangan FB.
ஊட்டிவரை உறவு!
ஒரு சின்ன கரு!
ஆள் மாறாட்ட விவகாரம் தான்!
அதை வைத்து சுவாரஸ்யமாக கொடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம்தான் `ஊட்டி வரை உறவு!
ஆனால் நன்றாக ரசித்துப் பார்த்தால் ஊட்டி வரை உறவின் கதாநாயகன் பாடல்கள் தான்!
அடுத்தது சிவாஜியின் ஸ்டைல்!
இந்த படத்தில் அவருக்கு அமைந்த உடையலங்காரம்!
முழுக்கையை சட்டையை உள்ளே விட்டுக்கொண்டு பேண்டில் பெல்ட் போட்டாலும், எத்தனை முறை பயின்றாலும் இடுப்புப் பக்கம் சுருக்கம் விழும்!
சுருக்கம் விழாமல் உடைகள் கன கச்சிதமாக பொருந்துவது சிவாஜிக்கு மட்டும்தான்!
அதை எந்த படத்திலும் பார்க்கலாம்!
குறிப்பாக ` சிவந்த மண்’ படத்தில் சிவாஜியை கொல்வதற்காக மேலே ஹெலிகாப்டர் சுற்றும்!
அந்த காட்சியில் அவர் ஒடுவார்!
அப்போது கூட சிவாஜிக்கு அந்த இடுப்புப் பகுதியின் சட்டை சுருங்காமலேயே இருக்கும்!
ஊட்டி வரை உறவு படத்தில் முதல் காட்சியிலிருந்தே அவரது உடைகள் அசத்தல்!
அதுவும் கே.ஆர். விஜயா புடவையோடு ` தேடினேன் வந்தது’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்!
அந்தக் காட்சியில் சிவாஜிக்கு வெள்ளைப் பேண்ட் சட்டை!
கழத்தில் ஒரு சிவப்பு ஸ்கார்ஃப்!
புகை பிடித்துக்கொண்டே கே.ஆர். விஜயா ஆடிக்கொண்டே பாடுவதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருப்பார்!
அப்போது அவர் கையில் சிகரெட்!
அந்த உடை, அவர் சிகரெட் பிடிக்கும் பாணி படத்தை முதல் வாரத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும்!
அவருடைய இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவிற்கும் விசில் பறந்து கொண்டிருக்கும்!
இந்தப் படத்தை சாந்தி தியேட்டரில் முதல் வாரத்தில் மட்டும் நான்கு முறை பார்த்தேன்!
சுமைதாங்கியின் தன்னம்பிக்கை, காதல் பாட்டுக்கள் என்றால் ஊட்டி வரை உறவு பாட்டு எல்லாமே காதல் வகையறாக்கள் தான்!
அந்தப் பாடல்களின் கண்ணதாசனின் காதல் உற்சாக வரிகள் கொப்பளிக்கும்!
படத்தின் பாடல்கள் எல்லாமே காதலர்களுக்கான கடித வரிகள்!
பாடலுக்காகவும் சிவாஜியின் ஸ்டைலுக்காகவுமே என் நண்பர் ஒருவர் 40 முறை படத்தை பார்த்தார்!
தேடினேன் வந்தது! சுசீலா சோலோ!
ராஜராஜஸ்ரீ ராணி வந்தாள் ! பி.பி.எஸ்.- எல்.ஆர். ஈஸ்வரி டூயட்!
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்கவந்தாள்’ டி.எம்.எஸ். சோலோ!
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி, பூமாலையில் ஒர் மல்லிகை, அங்கே மாலை மயக்கம் யாருக்காக, இந்த மூன்று பாடல்களுமே டி.எம்.எஸ். சுசீலா டூயட் பாடல்கள்!
அபாரமான கற்பனைகளை கொட்டியிருப்பார் கண்ணதாசன்!
அதில் ஒரு பாடலின் வரிகளை பள்ளியின் எங்கள் சீனியர்கள் தாவணி போட்ட பெண்கள் பள்ளியிலிருந்து வரும் போது கிண்டலாக பாடுவார்கள்!
இந்த பாடல் மூலமாகவே காதலாகி திருமணம் செய்து கொண்டு சென்ற வருடம் அறுபதாம் கல்யாணம் நடத்திக்கொண்ட தம்பதிகளை எனக்குத் தெரியும்!
அந்தப் பெண் பெயர் மணிகர்னிகா!
அப்போது அவள் திருவல்லிக்கேணியில் இருக்கும் லேடி வெலிங்கடன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்!
அவன் பெயர் குமரப்பன் என்கிற குமார்!
இருவருக்கும் ஆறுவருடம் வித்யாசம்!
மாலையில் அவள் பள்ளியிலிருந்து வரும் போது தினமும் ஒரு வாரம் தொடர்ந்து இந்தப் பாட்டை பாடினான்!
அவன் தன் சம்மதத்தை அதே படத்தின் பாடல் மூலமாகவே சொன்னாள்!
என்ன பாடல்கள் அது ?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd February 2016, 06:36 PM
#3336
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd February 2016, 06:57 PM
#3337
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd February 2016, 07:08 PM
#3338
Junior Member
Veteran Hubber
TRICHY EDITION MAALAIMALAR - PAGE 2
Last edited by RavikiranSurya; 22nd February 2016 at 07:38 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd February 2016, 07:18 PM
#3339
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
Super
-
22nd February 2016, 08:33 PM
#3340
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sundarajan
dedicated to
flight lieutenant
flt.lt.k.praveen b.e
indian air force.
By madurai siva movies
sivakamiyin selvan
digital maker and distributor
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
இனிய நண்பர் திரு சுந்தர்ராஜன் மற்றும் திரு vcs அவர்களுக்கு
செய்யாத செயலுக்கு கூட தம்முடைய பெயர்களை அச்சடித்து விளம்பரம் தேடும் இந்த திரை உலகில், ஒரு திரைப்படம் மறுவெளியீடு செய்வதில் தான் எத்தனை புதுமைகளை உண்மையாக செய்துள்ளீர்கள் என்பதை நினைக்கும்போது ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் அபிமானமாகவும் உள்ளதை உங்களை நினைக்கையில்.
இந்திய திரைப்பட digital மறுவெளியீடு முதல் முறையாக ஒரு இந்திய விமானபடை தளபதிக்கு காணிக்கையாக்கி நம்முடைய நடிகர் திலகம் இருவேடங்களில் கலக்கிய சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை மற்றொரு சிகரத்தை தொட வைத்துள்ளீர்கள்.
சொந்த பந்தங்களையே...மறந்துவிடும் இந்த கலிகாலத்தில் மறைந்த திரு பிரவீன் அவர்களுக்கு அஞ்சலி என்ற ஒரு வழக்கமான சொல் கூறாமல் ...திரைப்படத்தையே அவருக்கு காணிக்கையாகும் இந்த பெரும் குணம் நமது நடிகர் திலகம் அவர்களுடைய பக்தர்களுக்கு அல்லாமல் யாருக்கு வரும் ?
திரைப்படம் digital வடிவில் மிகவும் அட்டகாசமாக , இதுவரை வந்த திரைபடங்களிலையே முதன்மையாக தரத்தில் நிறைந்து இருப்பதை பல ஊடக நண்பர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் நான் பேசியபொழுது என்னிடம் கூறினார்கள்.
என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள் !
நீங்கள் ஒரு சராசரி விநியோகச்தரோ அல்லது மாமூலான ஒரு வியாபாரியோ அல்ல ! நடிகர் திலகம் அவர்கள் உள்ளன்புடன் பிள்ளைகளே என்று அழைத்த பிள்ளைகளில் இருவர் நீங்களும் மற்றும் அருமை நண்பர் சுந்தர்ராஜன் அவர்களும்.
ஆகவே தங்களுடைய output எல்லாவற்றையும் விட மிக சிறந்த output ஆக வர மட்டுமே வாய்ப்பு ! காரணம் அவருடைய அருள் நிச்சயம் உங்கள் இருவருக்கும் உண்டு...!
எப்பேர்பட்ட சதிகளை , எதிரிகளின் எதிர்ப்புகளை நீங்கள் மதுரையில் நடிகர் திலகம் திரைப்படங்களை சென்ட்ரல் அரங்கில் திரையிட முயற்சி மேற்கொண்டபோது சந்தித்தீர்கள் என்பவற்றை ஒரு புத்தகமாகவே " "சிவாஜி படம் வெளியிட நாங்கள் வீழ்த்திய எதிரிகளின் சதிகள்" என்ற தலைப்பில் எழுதினால் அதுகூட தகும் !
ஒன்றா ...இரேண்டா...எடுத்துசொல்ல ! உங்களுடைய வெற்றி இறைவன் ஏற்கனவே எழுதிவைத்த ஒன்று ! சம்பவம் மட்டுமே இப்போது நடைபெறுவன !
வாழ்த்துக்கள் சார்....! இன்னும் பல திரைப்படங்கள் உங்கள் மூலமாக உண்மையான தமிழ் சமுதாயத்திற்கு கிடைக்க என்னுடைய prayer நிச்சயம் உண்டு !
வளர்க உங்கள் நற்பணி ...!
வாழ்வாங்கு வாழட்டும் நடிகர் திலகம் புகழ் !
Rks
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks