Page 342 of 401 FirstFirst ... 242292332340341342343344352392 ... LastLast
Results 3,411 to 3,420 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3411
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    ONE DAY TO GO FOR THE TRAILOR FUNCTION OF NT's SS.


    WE WILL ROCK AT MADURAI.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3412
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சாரதா ஸ்பெஷல்

    நாளை மறுநாள் மதுரையில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க இயக்குனர் சிவிஆர் அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தோம். மிகுந்த மகிழ்வோடு எங்களை வரவேற்ற அவர் பல விஷயங்களைப் பற்றி சுவையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

    கலாட்டா கல்யாணம் முதல் வாழ்க்கை வரை நடிகர் திலகத்துடனான பயணத்தை அந்த குறுகிய நேர சந்திப்பிலும் அவர் பகிர்ந்துக் கொண்டதை சொல்ல வேண்டும்.

    ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக இருந்தது பிறகு தனியாக வந்து அனுபவம் புதுமை செய்தது [அதில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பை மிகவும் சிலாகித்தார்] கலாட்டா கல்யாணம் படத்திற்கு தன்னை இயக்குனராக போட்டது இவை அனைத்தும் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயங்கள் என்றாலும் அவர் வாயாலே கேட்டது ஒரு தனி சுவை

    ராகவேந்தர் சார் உடனே அவரது பேவரிட் படத்திற்கு தாவ அடுத்த சில பல நிமிடங்களுக்கு மதுவும் சுந்தரியும் பற்றிதான் பேச்சு. பெரும்பாலானோர் அந்த இடத்தில இருந்திருந்தால் கட்டம் போட்ட சட்டை பாடலை பற்றி பேசியிருப்பார்கள். நாம்தான் வித்தியாசமாயிற்றே! ஒயிட் அண்ட் ஒயிட் பாடல் பற்றி பேசினோம். பௌலிங் ஆக்க்ஷன், ஜெஜெ பக்கவாட்டில் நடனமாடி போக நேர்கோட்டில் நடிகர் திலகம் நடந்து வரும் ஷாட் பற்றியெல்லாம் பேசினோம். கலாட்டா கல்யாணம் படத்திற்கு போடப்பட்ட பாடலா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் வந்தது. வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்றும் அதை இந்த படத்திற்காக டெவலப் செய்தோம் என்றார். பிறகு நமது அடுத்த பேவரிட் பாடலான இசையரசியின் பாடலுக்கு டிஸ்கஷன் போனது. நான் எப்போதும் குறிப்பிடும் தேயிலை தோட்டத்தின் மேலிருந்து காமிரா கீழே வெகு தூரத்தில் இருக்கும் ஹேர் பின் வளைவில் பஸ் திரும்புவதை துல்லியமாக படம் பிடித்திருக்கும் தம்புவின் தொழில் நேர்த்தியை பற்றி பேசினோம்.

    அடுத்து கோபாலின் பேவரிட் படமான பொன்னுஞ்சல். கதையின் அடிப்படை கான்செப்ட் பற்றி தனக்கு இருந்த தயக்கத்தையும் அதை நடிகர் திலகத்திடம் எடுத்துக் கூறியதையும் சொன்னார் சிவிஆர். ஆனால் தங்களது கிராமங்களில் இது போன்ற நடைமுறைகள் [யார் தாலிக்கு சொந்தகாரனோ அவனே அந்த தாலியை முடிந்துக் கொள்ளும் பெண்ணிற்கு கணவன்] இருந்ததை நடிகர் திலகம் சொன்னதையும் அதுவும் தவிர கதையாசிரியர் சக்தி கிருஷ்ணஸ்வாமி மேல் நடிகர் திலகத்திற்கு இருந்த பிரியமும்தான் அந்த கதையை எடுக்க காரணம் என்பதையும் குறிப்பிட்டார் சிவிஆர். ஆகாயப் பந்தலிலே பாடலின் இமாலய பாப்புலாரிட்டி பற்றி பேச்சு வந்தது அந்தளவிற்கு பாடல் பிரபலமாகி விட்ட பிறகு அந்த பாடலை எப்படி படமாக்கினால் மக்களுக்கு பிடிக்கும் என்பது எப்படி மலைப்பாக இருந்தது என்பதையும் சொன்னார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும், முத்து சரம் சூடி வரும் மற்றும் வருவான் மோகன ரூபன் பற்றியும் சிலாகித்து சொன்னவர் தன்னுடைய படங்களுக்கு எம்எஸ்வி கொடுத்த பாடல்கள் அனைத்தும் பிரமாதம் என்றார்.

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பற்றி பேச்சு வந்தது. கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி சொன்னார். இடையில் நில் கவனி காதலி பற்றி பேச்சு வந்தது. Under water படமாக்கம் பற்றி சொன்னார். கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு டப்பில் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் அவர்களை காமிராவோடு உட்கார வைத்து படமாக்க முற்பட்டதையும் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கண்ணாடி விரிசல் விட்டு உடைந்து பிஎன் சுந்தரம் காலில் வெட்டியதையும் பற்றி சொன்னார். பிறகு பிளாஸ்டிக்கில் அதே போல் டப் [மிதவை] செய்து அதை படமாக்கியதையும் சுவையாக வெளிப்படுத்தினார்.

    அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல். செட்டில் படமாக்காமல் முதன் முறையாக சென்னை மாநகரில் ஒரு வீட்டின் டெரசில் [terrace] அவர் படமாக்கியதை நான் புகழ்ந்து சொல்ல அவருக்கு சந்தோசம். இதையெல்லாம் இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

    அவரை சந்திப்பதற்கு முதல் நாள்தான் திருச்சியில் ராஜாவின் வெற்றி செய்தி வந்திருந்தது. அதை அவரிடம் சொல்ல மிகவும் சந்தோஷப்பட்டார். நான் அப்போது டிசம்பர் மாதம் மதுரையில் சென்ட்ரலில் ராஜா தூள் கிளப்பியதை அவரிடம் சொன்னேன். ராஜா முதல் ரிலீசில் வெளியான அதே சென்ட்ரல் தியேட்டர் என்று சொன்னவுடன் சிவந்த மண் வெளியாயிற்றே அந்த அரங்கம்தானே என்று கேட்டார். 1969 சிவந்த மண் ஓபனிங் ஷோ மதுரை சென்ட்ரலில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். \

    இறுதியாக சிவகாமியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. ஆராதனா ரீமேக் சாயலையும் மீறி படமாக்க வேண்டியிருந்ததைப் பற்றி சொன்ன அவர் அந்த விஷயத்தில் மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்களைப் பற்றியும் சொன்னார். படம் ஓடியதைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் அதே தவறான எண்ணம் அவருக்கும் இருக்கிறது என்பது தெரிய வந்தது. நான் படம் பல ஊர்களில் எப்படி ஓடியது என்பது பற்றி எடுத்து சொன்னேன். மதுரையில் தொடர்ந்து 104 காட்சிகள் அரங்கம் நிறைந்ததையும் 10 வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ருபாய் வசூல் வந்ததையும் விநியோகஸ்தர் பங்கு மதுரை நகரில் மட்டும் முக்கால லட்சம் வந்ததையும் சொல்லும்போது அவருக்கு ஒரே ஆச்சரியம். அப்படியா என்று கேட்டவரிடம் சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 11 வாரங்கள் ஓடியது பற்றி சொல்லி விட்டு அந்த படம் எடுக்கப்பட்டதற்கு நீங்கள்தான் சார் வில்லன் என்றவுடன் என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். ஆமாம் சார். உங்கள் இயக்கத்தில் இதே சிவாஜி வாணிஸ்ரீ இணையாக நடித்த வாணி ராணி 1974 ஏப்ரல் 12-ந் தேதி அதே தேவி பாரடைஸ் அரங்கில் வெளியானது. அதனால்தான் இந்த படத்தின் 100- நாள் ஓட்டம் தடைப்பட்டது என்று விளக்கியவுடன் அப்படியா அப்படியா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

    மதுரைக்கு விழாவில் கலந்து கொள்ள ஆசைதான். ஆனால் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை என்றார். படம் வெளியாகும்போது அவசியம் வருகிறேன் என்றார். மதுரையில் எந்த திரையரங்கில் விழா என்று கேட்டவரிடம் சினிப்ரியா வளாகம் என்று சொல்லிவிட்டு சார் அங்கேதான் சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடியது அந்த 175-வது நாள் விழா அந்த அரங்கில் நடந்ததே அதற்கு கூட நீங்கள் வந்திருந்தீர்கள் என்று நினைவுபடுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மக்களை காக்கும் பணியில் தன்னுயிர் நீத்த IAF Pilot பிரவீன் அவர்களுக்கு இந்த படம் dedicate செய்யபடுகிறது என்றவுடன் அவர் சற்று நேரம் உணர்ச்சிவசப்பட்டார். விழாவிற்கு வாழ்த்துக்களை சொன்ன அவரிடம் விடை பெற்று கிளம்பினோம்.

    வாசலில் அவரிடம் சொன்னேன் எங்கள் விவாத மன்றத்தில் ஒரு நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நீங்கள்தான் டார்லிங் என்று சொன்னவுடன் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

    எனவேதான் இந்த பதிவு சாரதா ஸ்பெஷல்

    அன்புடன்
    அருமையான நிகழ்வுரை முரளி சார். இதில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.

    இதில் ஒரே ஒரு சார்பதிவு. ஒரு தரம் ஒரே தரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது. ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாடலின் மெட்டு வீட்டுக்கு வீடு படத்திற்காக போட்டுக் காட்டப்பட்டு பயன்படுத்த முடியாமல் போனது. பின் அந்த மெட்டை சி.வி.ஆர். சார் நினைவுறுத்தி மெல்லிசை மன்னர் பொன்னூஞ்சல் படத்தில் அமைத்துக் கொடுத்தார். கவியரசரின் பாடல் வரிகளில் பாடல் மிகப் பிரமாதமாக அமைந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதை மெல்லிசை மன்னர் அவர்கள் எம்எஸ்விடைம்ஸ் சார்பாக இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் கேட்டபோது சொன்னது. காரணம் ஊஞ்சலைப் பற்றிய பாடல் என்பதால் அந்தப் பாடலில் அதற்கான இசை வடிவம் இல்லையே எனக் கேட்டபோது இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் சிவிஆர் அதனை மிகச் சிறப்பாக அந்த மெட்டைப் பயன்படுத்தி, அந்த ஊஞ்சலாட்டத்தை அந்த மெட்டிலேயே வருமாறு ஒளிப்பதிவு செய்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  5. #3413
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Dinamani.

    பராசக்தி வெளிவர ஆறு மாதங்களுக்கு முன்னரே ஏப்ரல் 1952 பேசும் படம் இதழில்

    'சிவாஜி யார்...? ’ என்றே திரை ரசிகர்களுக்குத் தெரியாத நிலையில், 'பூங்கோதை’ சினிமா விளம்பரத்தில்

    அஞ்சலி, ஏ. நாகேஸ்வரராவ், எஸ். வி. ரங்காராவ் பெயர்களுக்கு அடுத்து நாலாவதாக,

    'வி.சி. கணேசன்’ என்று நடிகர் திலகத்தின் பெயரையும் சேர்த்துப் பெருந்தன்மையுடன் வெளியிட்டது அஞ்சலி பிக்சர்ஸ்.

    ஒரு பட விளம்பரத்தில் சிவாஜி கணேசன் பெயர் இடம் பெற்றது அதுவே முதல் முறை என்று உறுதியாகச் சொல்லலாம்.

    சிவாஜி - அஞ்சலி லவ் டூயட் பாடி நடித்த ஒரே படம் 1959ல் வெளியான நான் சொல்லும் ரகசியம்.

    கணேசனுக்கு அதில் சித்தார்த்தன் மாதிரியான மாறுபட்ட வேடம். பணக்கார இளைஞனாக வாழப்பிடிக்காமல் ரிக்ஷா ஓட்டுவார். அஞ்சலி கணேசனின் அத்தை மகள். நிஜமாகவே ஏழை. இருவருக்கும் இடையே வித்தியாசமாக சைக்கிள் ரிக்ஷா பேக் ரவுண்டில் ட்ரீம் சாங் இடம் பெறும்.

    பி.பி. ஸ்ரீநிவாஸ்- பி. சுசிலா இரு குரல் இசையில் ஒலித்தது சூப்பர் ஹிட் பாடலான

    'கண்டேனே உன்னைக் கண்ணாலே காதல் ஜோதியே! ’

    பி.பி. ஸ்ரீநிவாஸ் சிவாஜிக்காகப் பாடிய ஒரே சிரஞ்சீவி கீதம்!

    ஏறத்தாழ ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு 1971ல் முக்தா பிலிம்ஸ் 'அருணோதயம்’ படத்தில் சிவாஜியும் அஞ்சலியும் தாயும்- மகனுமாக நடித்தார்கள்.

    சிவாஜிக்கு ஜோடியாகவும், அன்னையாகவும் உரு மாறிய நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர்.

    நன்றி மறவாதவர் நடிகர் திலகம். அஞ்சலி மீது அபாரமான மதிப்பும் மரியாதையும் நிரம்பியவர். அவரைத் தன் வாழ் நாள் முழுவதும் 'முதலாளியம்மா’ என்கிற அர்த்தத்தில் 'பாஸ்’ என்றே அழைத்தார்.

    பட்டிக்காடா பட்டணமா, வசந்தமாளிகை என்று 1972ல் இரு வெள்ளிவிழாப் படங்களை ஒரே ஆண்டில் தந்து சிவாஜி புதிய சாதனை படைத்திருந்த நேரம்.

    சித்ராலயா ஸ்ரீதரின் ' ஹீரோ 72 ’படத்துக்கு கால்ஷீட் தர முடியாத நெருக்கடி. ஏராளமாகப் புது ஒப்பந்தங்கள் அணி வகுத்து நின்றன.

    அத்தகைய கெடுபிடியான காலக் கட்டத்தில் அஞ்சலி தனது பக்த துகாராம் வண்ணத் தயாரிப்பில்,

    நடிகர் திலகம், 'சத்ரபதி சிவாஜியாக’ சிறப்புத் தோற்றத்தில் நடித்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    'சிவாஜியும் நானும் அதிகப் படங்களில் இணைந்து நடிக்கவில்லை. உண்மையில் இருவரும் நிற்க நேரமில்லாமல் ஏராளமாக நடித்து முடிக்க வேண்டி இருந்தது.

    ஆனாலும் பாருங்கள்... சிவாஜிக்கு எங்க கம்பெனின்னா ஒரு தனி மரியாதை.

    'என் பாஸ் பண்ற படமாச்சே... அதில் நடிக்காமல் இருப்பேனா...! ’ என்று உற்சாகமாக ஒப்புக் கொண்டு, ஐதராபாத் வந்து அங்கேயே தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். ’ அஞ்சலிதேவி.

    மிகக் குறுகிய காலத்தில் தயாராகி, 1973 ஜூலை 5 ல் பக்த துகாராம் தமிழிலும் வெளியானது.

    ஏ.நாகேஸ்வர ராவ் பக்த துகாராம். அவரது மனைவியாக அஞ்சலி நடித்திருந்தார்கள்.

    பக்த துகாராமைத் தண்டிக்க வேண்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக ஏறக்குறைய படத்தின் அரை மணி நேர க்ளைமாக்ஸ் முழுவதும் சிவாஜி கணேசனின் சிம்மக் குரல் ஒலித்தது.

    தனது முதலாளியம்மாவுக்காக கணேசனே டப்பிங் பேசியிருந்தார்.

    மனப்பூர்வமான ஒத்துழைப்போடும் அருமையான ஆளுமை மிக்க நடிப்போடும் கணேசன் படத்தின் வெற்றிக்கும் மகத்தான வசூலுக்கும் அஸ்திவாரமாக நின்றார்.

    சத்ரபதி சிவாஜியாக கணேசனை முழு நீள சினிமாவில் காண முடியாமல் போனது நமது துரதிர்ஷ்டம். அஞ்சலி மூலம் ரசிகர்களின் ஆசை பத்து விழுக்காடு நிறைவேறி இருக்கும்.

    இதுவரையில் திரையில் சத்ரபதி சிவாஜியை கவனியாதவர்கள், அடிக்கடி சன் லைஃப் சேனலில் ஒளிபரப்பாகும் பக்த துகாராம் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

    நடிகர்திலகத்தைக் கை தூக்கி விட்டவர்கள் எவரையும் மறக்காமல்,2002 முதல் ஆண்டு தோறும் கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் முதல் தேதி அன்று- 'சிவாஜி - பிரபு அறக்கட்டளை’ பாராட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பரிசளித்து நன்றி கூறுகிறது.

    அந்த வரிசையில் 2003 அக்டோபர் 1ல் அஞ்சலிதேவிக்குச் சிறப்புச் செய்தார்கள் சிவாஜி குடும்பத்தினர். ஏ.நாகேஸ்வரராவ் - கமல்ஹாசன் இருவரும் விசேஷ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

  6. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR liked this post
  7. #3414
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி அண்ணா,

    நமது மனம் கவர்ந்த இளமை இயக்குனர் சி.வி.ஆர். அவர்களுடனான சந்திப்பு பற்றிய கட்டுரை மிகவும் அருமை. அதற்கு 'சாரதா ஸ்பெஷல்' என்று தலைப்பிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    'டார்லிங்' இயக்குனருடனான சந்திப்பில் நான் இல்லையே என்ற ஏக்கம் இருந்தபோதும், நான் பேச நினைத்ததெல்லாம் நீங்கள் பேசியிருப்பது மனதுக்கு இதமளிக்கிறது. குறிப்பாக சுமதி என் சுந்தரியில் இடம் பெற்ற "ஒருதரம் ஒரே தரம்" பாடல் பற்றிய தங்கள் நினைவூட்டல். அது வீட்டுக்கு வீடு படத்திற்காக போடப்பட்ட ட்யூன் என்பது புதிய தகவல்.

    சிவகாமியின் செல்வன் படத்தின் முதல் ஓட்டம் பற்றிய அவரது தவறான எண்ணத்தை கலைத்ததற்கும் நன்றி.

    ஆகாய பந்தலிலே பாடல் படப்பிடிப்பு பற்றி சி.வி.ஆர். 'திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருந்தார். வெளிப்புற படப்பிட்டிப்புக்கு சென்ற பின்னரும் பாடலை எப்படி படமாக்குவது என்று சி.வி.ஆர். குழம்பி நின்றாராம். நடிகர்திலகம் உட்பட அனைவரும் ஷூட்டிங்குக்கு தயாராக இருக்க, பாடலை படமாக்குவது பற்றி திட்டமிட இரண்டுமணி நேரமாவது வேண்டுமே என்று சி.வி.ஆர். திகைத்து நிற்க, நிலைமையை சூசகமாக புரிந்துகொண்ட நடிகர்திலகம் இயக்குனரை அழைத்து, "ராஜேந்திரா, இன்னைக்கு ஷுட்டிங்கை பேக்-அப் பண்ணிட்டு வீட்டுக்குப் போய் நல்லா பிளான் பண்ணிக்கிட்டு நாளைக்கு வந்து ஷூட் பண்ணு" அன்று அனுப்பி வைத்தாராம். அந்த ஒருநாள் இடைவெளி பாடலை சிறப்பாக படமாக்க சி.வி.ஆருக்கு ரொம்ப உதவியாக இருந்ததாம்.

    சி.வி.ஆருடனான உங்கள் சந்திப்பின் இறுதியில் நம் டார்லிங் இயக்குனரிடம் என்னைப்பற்றியும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  8. Likes Harrietlgy, KCSHEKAR, Russellmai liked this post
  9. #3415
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கதையோடு இணைந்த, ஹாஸ்யத்தை மையப்படுத்திய தாலாட்டுப்பாடல் என்று தமிழ்சினிமாவில் தேடினால்அப்படிப்பட்ட
    பாடல்களை தேடுவது சற்று சிரமமாகத்தானிருக்கிறது.
    பெரும்பாலும் மகிழ்ச்சியாகவோ சோகத்தை கலந்தோதான் தாலாட்டுப்பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
    ஹாஸ்யம் கலந்த தாலாட்டுப்பாடல் என்றதும் இந்த பாடலை தவிர வேறேதுவும் நினைவுக்கு வருவதில்லை.

    இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.யில் பார்த்த பாதிப்பால் இந்தப்பாடலை ஆய்வு செய்து எழுதலாம் என்றும் முடிவு செய்து மேற்கண்ட பாராவை எழுதி முடித்தபின் பாடல்வரிகளுக்காக, நெட்டில் தேடியபோது...

    ஏற்கெனவே ஏராளமான பேர் இதை அனுபவித்து எழுதியதைப் பார்த்தபின் மேற்கண்ட பாராவோடு நிறுத்திவிட்டேன்.நமது வாசு சார்,சின்னக்கண்ணன்,கார்த்திக்அவர்களும் எழுதியுள்ளதைப் படித்து ரசித்தேன்.மீள்பதிவுகளாக இருந்தாலும் மறுபடியும் ரசிக்க...



    வாசு சாரின் பார்வையில்:
    கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
    அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'

    முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.

    அது என்ன ஒயிலா
    அது என்ன அழகா
    அது என்ன அற்புதமா
    அது என்ன நளினமா
    அது என்ன வெறுப்பா
    அது என்ன துன்பமா
    அது என்ன ஸ்டைலா
    அது என்ன நடையா

    முடிந்தால் சொல்லுங்கள்.

    சின்னக்கண்ணன் அவர்களின் எழுத்துகளில்:
    கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,


    கார்த்திக் சாரின் பாணியில்:
    பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.

    பாடகர் திலகத்தின் குரலில்...

    லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
    அப்பப்பா நான் அப்பனல்லடா
    தப்பப்பா நான் தாயுமல்லடா
    எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
    இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
    ஆரிராரோ ஆரி ராரி ராரோ

    கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
    கைமீது பிள்ளை தீராத தொல்லை
    தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
    பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்

    அப்பப்பா நான் அப்பனல்லடா
    தப்பப்பா நான் தாயுமல்லடா
    எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
    இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
    ஆரிராரோ ஆரி ராரி ராரோ

    கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
    உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
    கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
    அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்

    அப்பப்பா நான் அப்பனல்லடா
    தப்பப்பா நான் தாயுமல்லடா
    எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
    இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
    ஆரிராரோ ஆரி ராரி ராரோ

    திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.

    ***************************************
    அவஸ்தையை காட்டும் முகபாவங்கள்,
    முழங்கால்களை விரித்து இணைத்து என்றாடும் ஆட்டம்,
    புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடும் போது போடும் ஸ்டெப்ஸ்,
    நாகேஷை உதைத்துக்கொண்டே ஆடுவதும் அதே சமயம் முகபாவனைகளில் படும் அவஸ்தையை இயல்பாக வெளிப்படுத்துவது,
    நாகேஷ் தூங்குவதைப் பார்த்து காட்டும் ரியாக்சன்,
    என்று எல்லாமே
    எல்லோருக்குமே பிடிக்குமே.

    நன்றி
    திரு.வாசு
    திரு. கார்த்திக்
    திரு. சின்னக்கண்ணன்

  10. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  11. #3416
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG Island with Love!

    On His Majesty NT's Sacred Service...thanks giving nostalgia on GG's everlasted friendship with NT!

    I feel overwhelmed and elated whenever I use to rewind this song....though they are in their middle ages!!


    Amazing Horse-ride by GG and NT! It is very difficult to have lip synchronization with lyrics when the horse goes uncontrolled!! They don't use body doubles since both are well trained original horse-riders!



    But in the original Becket starring Richard Burton in the coveted role of Becket played by GG in Tamil and Peter O' Tool in place of NT...only horse ride...no song pals!!


  12. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  13. #3417
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Aathavan Ravi View Post


    ALL THE BEST AND GOODLUCK TO MADURAI SIVA MOVIES FOR THE TRAILOR RELEASE OF NT 'S SIVAKAMIYINSELVAN. Hope it wiil create a flutter everywhere.
    RAMAJAYAM LOSANGELES

  14. #3418
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Varamalar,


    சிவாஜியை வைத்து தேவர் எப்போது படம் எடுப்பார் என்ற கேள்வி வரும்போதெல்லாம், 'முதலில், எம்.ஜி.ஆரை வைத்து, 25 படங்களை எடுப்போம்; பின், கணேசனிடம் செல்வோம்...' என்று தன் கதை ஆசிரியர்களிடம் கூறுவார், தேவர்.
    அந்த ஆண்டு, மீண்டும் தேவரின் இல்லத்துக்கு வந்தார் சிவாஜி கணேசன். இப்போது வந்ததும், சுபகாரியமாகவே! தேவருக்கு, 60 வயது பூர்த்தியாகி இருந்தது. அதனால், அவருக்கு விழா எடுக்க விரும்பினர்; ஆனால், அவரோ மறுத்து விட்டார். அவரது குல அன்பர்கள், கணேசனை தூது அனுப்பினர்.
    'தேவரே... நம்ம ஆளுகள்ள, உங்கள தவிர, வேறே யாருக்கு இந்த மாதிரி விழா நடத்த முடியும்... ஜூன், 29ம் தேதி குடும்பத்தோடு வந்து கலந்துக்குறீங்க...' என்றார் சிவாஜி.
    எதிர்பாராமல் கணேசன் வந்ததும், 60வது வயது நிறைவை, தானே முன் நின்று நடத்துவதாக கூறியதும், அதிசயமாகவே இருந்தது தேவருக்கு!
    'பசும்பொன் பைன் ஆர்ட்ஸ்' சார்பில் ஜூன், 29, 1975ல் தேவரின் மணி விழா கோலாகலமாக நடைபெற்றது.
    மாலையில், சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு, மதுரை சோமசுந்தரம் கச்சேரி, வாரியார் சொற்பொழிவு மற்றும் குன்னக்குடி வயலின் இசையும், காலையில், யோகி சுத்தானந்த பாரதியார் தலைமையில், கவியரங்கமும் நடந்தது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டுவன் மற்றும் முத்துலிங்கம் போன்றோர் தேவருக்கு மரியாதை செய்தனர். ஏவி.எம்., ஏ.எல்.சீனிவாசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன் மற்றும் அசோகன் ஆகியோர் தேவரை வாழ்த்தி பேசினர்.
    தேவர் பிலிம்சில், 'சிவாஜி நடிப்பது எப்போது?' என்கிற கேள்வியை, தன் வாழ்நாள் முழுவதும் காதில் வாங்கினார் தேவர். அவரது கடைசி நேர்காணலிலும், இதே கேள்வியைக் கேட்ட போது, 'சிவாஜி கணேசனை வைத்து, படமெடுக்க மாட்டேன் என்று ஒரு போதும் நான் கூறியதில்லை; அதே மாதிரி அவரும், என் படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்ததில்லை. அவர், பெரிய நடிகர்; பல ஆண்டுகளுக்கு பின், அவர் என்னுடைய படத்தில் நடித்தால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுவது இயற்கை. அவருக்கேற்ற, 'சப்ஜெக்டை' தேர்ந்தெடுத்தவுடன், சிவாஜி கணேசனை நடிக்க வைத்து, ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, படத்தை நிச்சயம் தயாரிப்பேன்...' என்றார்.
    சின்ன அண்ணாமலை தயாரித்த, தர்மராஜா படத்தை இயக்கியவர், தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். அப்படத்தில், கணேசனுக்கு, காரத்தே வீரர் வேடம். அவர் இயக்கிய, ஒரே சிவாஜி சினிமாவாக, அது இருந்தது. அதிசய பிறவிகள் மற்றும் தேவர் பிலிம்சின் கடைசி தயாரிப்பான, தர்மத்தின் தலைவன் போன்ற இரு படங்களில் நடித்தார் பிரபு.
    தேவருக்கும், கணேசனுக்கும் கிடைக்காத வாய்ப்பு, அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்தது.

  15. Likes KCSHEKAR, Russellmai liked this post
  16. #3419
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR, Russellmai liked this post
  18. #3420
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    இனிமையான காலை பொழுது. சிங்க மறவனின் சிங்க கூட்டம் சினிப்ரியா திரைஅரங்கை நோக்கி அலை கடலென வந்து சேர்ந்தது. சரியாக 9.30க்கு விழா ஆரம்பிக்கப்பட்டு திரை அரங்கே கொள்ளாமல் கூட்டம் அலை மோதியது என்றால் அது நம் நடிகர் திலகத்திற்கான தனி சிறப்பு. ஒரு நடிகன் இறந்து 15 வருடங்கள் ஆகியும் அவன் புகழ் படுகிறதென்றால் உலகத்திலேய அந்த ஒரே நடிகன் நம் நடிகர் திலகம் மட்டும் தான்.

    மொத்தத்தில் மதுரையை கலக்கிய மகத்தான விழா.

    மற்ற விஷயத்தை நமது வல்லுனர்கள் எழுதுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.

  19. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •