-
14th April 2016, 04:51 PM
#3511
Junior Member
Platinum Hubber
14. 4..2016
THE HINDU TAMIL.
MGR -100
எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்க்ஷாக்களை பெருமளவில் இன்றும் காணலாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது ரிக்க்ஷாகாரர்கள் அன்பைக் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் நலனில் எம்.ஜி.ஆர். அக்கறை காட்டியதுதான்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையையும் ஊரே வெள்ளக்காடானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கே கடும் மழை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலில் நீண்ட கரங்கள் எம்.ஜி.ஆருடையவை. சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறிவிடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களிலும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.
ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்
கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. ரிக்க்ஷாக்காரர் ஒருவர் மழையில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.
தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக்க்ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். பாவம்தான். ஆனால், அதற்காக ரிக்க்ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக்க்ஷாவை ஓட்டுவார்கள்? என்று கேட்டார்.
மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ஏன் கூடாது? என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக்க்ஷாகாரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதயமானது. உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். சென்னையில் எவ்வளவு ரிக்க்ஷாக்காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின்கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள் என்று கூறினார்.
தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுக்கள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000க்கும் மேற்பட்ட ரிக்க்ஷாக்காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. ரிக்க்ஷா ஓட்டுநர்கள் அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை நன்றியுடன் வணங்கினர். நன்றியை செயலிலும் காட்டினர். தங்கள் ரிக்க்ஷாக்களில் எம்.ஜி.ஆரின் படங்களை ஒட்டினர்.
1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்துக்கு அடுத்தபடியாக பெரிய வெற்றி பெற்ற படம் நம்நாடு. படத்தில் தனது அண்ணன் டி.கே.பகவதியின் முதலாளியாக வரும் எஸ்.வி.ரங்காராவின் தவறுகளை எம்.ஜி.ஆர். கண்டிப்பார். இதனால், கோபமடைந்து எம்.ஜி.ஆரை வீட்டை விட்டு வெளியேறுமாறு டி.கே.பகவதி கூறுவார். எம்.ஜி.ஆரும் வீட்டில் இருந்து வெளியேறி சேரிப் பகுதியில் தங்கியிருப்பார்.
நடிகை குட்டி பத்மினியும் ஸ்ரீதேவியும் டி.கே.பகவதியின் குழந்தைகளாக நடித்திருப்பார்கள். சித்தப்பாவான எம்.ஜி.ஆரைத் தேடி அவர் இருக்கும் வீட்டுக்கு இரு குழந்தைகளும் வந்துவிடும். அவர்களிடம், எப்படி இங்கே வந்தீர்கள்? என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.
ரிக்க்ஷாக்காரரிடம் உங்கள் பெயரை சொன்னோம். அவர் இங்கே கொண்டு வந்து விட்டார் என்று குட்டி பத்மினி சொல்வார். எம்.ஜி.ஆர். பெயரை சொன்னாலே ரிக்க்ஷாக்காரர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதைப் போல இந்த வசனம் அமைந்திருக்கும்.
இதைவிட முக்கியமாக, எம்.ஜி.ஆர். மீது ரிக்க்ஷாக்காரர்களுக்கு இருக்கும் அளவற்ற அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவது போல, குழந்தையாக நடிக்கும் ஸ்ரீதேவி, எம்.ஜி.ஆரிடம் சொல்வார்....
காசு கூட வாங்கலே சித்தப்பா
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி தூர்வார ஏற்பாடுகள் செய்தார். வெள்ளத்தின்போது முழங்கால் அளவு தண்ணீரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016 04:51 PM
# ADS
Circuit advertisement
-
14th April 2016, 04:59 PM
#3512
Junior Member
Platinum Hubber
THANKS NAGARAJAN SIR
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 05:33 PM
#3513
Junior Member
Platinum Hubber
MAKKAL THILAGAM MGR'S SUPER ACTING SCENE. NADODI - 1966
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016, 05:36 PM
#3514
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016, 05:39 PM
#3515
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016, 07:09 PM
#3516
Junior Member
Regular Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி :
விரைவில், "பொன் மனம்" என்ற பெயரில், பண்பலை வரிசை ஒன்று செயல்படவுள்ளது. இந்த அலைவரிசையில், மக்கள் திலகத்தின் காவியங்களிலிருந்து பாடல்களும், அவரது திரையுலக சாதனைகளும் ஒலி பரப்பாக உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக அதனை முடிக்கும் தருவாயில் கொணர்ந்த அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ் புத்தாண்டு தினத்தில்,. இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவத்தலைவர் சகோதரர் திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !
நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!! நன்றி!!!!!
இதிலயும் முதல்வர் நம் தெய்வம்.
பொன்மனம் கொண்ட தலைவன் வாழ்க.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 07:15 PM
#3517
Junior Member
Regular Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
பொன்மன செமமல் புகழ் என்றும் வாழ்க
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016, 07:21 PM
#3518
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
THANKS NAGARAJAN SIR

மீண்டும் வரப்போகிற நம் ஆட்சியில் தெய்வத்தின் படம் வரப்போகிறது சந்தோசமாக உள்ளது.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கில் எப்படை வெல்லும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th April 2016, 07:29 PM
#3519
Junior Member
Regular Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் மகத்தான வெள்ளி விழாக்காவியம் "மதுரை வீரன்" - மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் 21-04-2016 முதல் திரையிடப்படுகிறது என்பதை பெரும் மக்ஜிச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த காவியம், 13-04-1956 அன்று, தமிழகத்தில் முதன் முதலாக திரையிடப்பட்ட பொழுது, அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் கடந்து, திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த சாதனையை, இது வரை எந்த கருப்பு - வெள்ளை படமும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : மதுரை எம். ஜி. ஆர். குமார்
இந்த வாரம் கோவையை அடுத்தது 21-ம் தேதியில் மதுரையில் இணைந்த 2வது வரம்
மக்கள் தலைவர் வெற்றி திருமகன் எட்டாவது வள்ளல் வாழ்க
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016, 07:36 PM
#3520
Junior Member
Regular Hubber

லோகநாதன் 11000
யுகேஸ் பாபு 5000
தெய்வத்தின் பக்தர்களுக்கு வாழ்துகள்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks