-
20th May 2016, 10:12 PM
#251
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016 10:12 PM
# ADS
Circuit advertisement
-
20th May 2016, 10:15 PM
#252
Junior Member
Platinum Hubber
மக்கள் குரல் -20/05/2016
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 10:53 PM
#253
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 10:56 PM
#254
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 10:59 PM
#255
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 11:01 PM
#256
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 11:43 PM
#257
Junior Member
Diamond Hubber
Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th May 2016, 11:58 PM
#258
Junior Member
Diamond Hubber
தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டை இழந்துள்ளனர். கட்சி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த தேர்தல்களில் இப்படி தேமுதிக மொத்தமாக டெபாசிட்டை இழந்ததில்லை. அந்த சாதனையை இந்தத் தேர்தலில் படைத்து விட்டனர். கட்சித் தலைவர் விஜயகாந்த்தே 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சோகமும் தேமுதிகவினரை வருத்தமடைய வைத்துள்ளது. விஜயகாந்த் மட்டுமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக அத்தனை பேரும் மண்ணைக் கவ்வியுள்ளனர்.
கருப்பு எம்.ஜி.ஆர். கருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரே விஜயகாந்த்தை கூப்பிட ஆரம்பித்தனர். ஆனால் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு சுத்தமாக வரவேற்பு இல்லை, எம்.ஜி.ஆர். ஒருவர்தான் என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் புரிய வைத்து விட்டனர்.
கிராம மக்களை ஏமாற்ற முடியாது தொடர்ந்து கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகப் பார்த்துப் பார்த்து போட்டியிட்டார் விஜயகாந்த். இதற்கு அவரும், அவரது மனைவியும் வித்தியாசமான காரணத்தை வேறு கூறினார்கள். ஆனால் உண்மையில், படிக்காதவர்கள், நடிகர் என்ற இமேஜைப் பார்த்து ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று தேமுதிக தரப்பு கருதியது. ஆனால் உளுந்தூர்ப்பேட்டை மக்கள் சுதாரிப்பாக இருந்து விட்டார்கள்.
104 தொகுதிகளிலும் டெபாசிட் காலி இந்த முறை 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அக்கட்சி கேவலமாக தோற்றுள்ளது. 3வது இடம், 4வது இடம், 5வது இடம் என்றுதான் கிடைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் டெபாசிட் போய் விட்டது.
1 வருடங்களில் இல்லாத சரிவு கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது. 2006ல் முதல் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் அசத்தலான வாக்குகளைக் குவித்தது. ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே அது பெற்றிருப்பது அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
தூக்கி வீசிய தமிழகம் எதற்கெடுத்தாலும் கோப்படுவது, தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ என்று திட்டுவது, தூ என்று துப்புவது, சொந்தக் கட்சிக்காரர்களையே மரியாதை இல்லாமல் அடிப்பது, நடத்துவது என்று இருந்து வந்த விஜயகாந்த்தை மக்கள் தற்போது தூக்கி அடித்து விட்டார்கள்
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...ml#slide198792
மறுபடியும் முதல்ல இருந்தா! மொத்தத்தில் முதல் முறையாக தேமுதிக வேட்பாளர்கள் கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்து மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டார்கள்.
COURTESY ONE INDIA
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st May 2016, 12:08 AM
#259
Junior Member
Diamond Hubber
சென்னை: இதுவரை நடந்த தேர்தல்களில் அதிக இடங்களை அதிமுக பெற்றது 1991 தேர்தலில் தான். அதுவும் ஜெயலலிதா தலைமையில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அ.தி.மு.க., துவங்கப்பட்ட பின்னர், 1977 ல் நடந்த சட்டசபை தேர்தல் முதல் தற்போது நடந்து முடிந்த 2016 சட்டசபை தேர்தல் வரையிலான அக்கட்சி பெற்ற இடங்கள்:
கடந்த 1977 ல் எம்.ஜி.ஆர்., தலைமையில் நடந்த தேர்தலில் அக்கட்சி 144 தொகுதிகள் பெற்றது.
1980 ல் நடந்த தேர்தலில் அக்கட்சி 162 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி 195 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
1989ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அந்த அணி 27 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.திமு.க., 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் அக்கட்சி பெற்ற அதிக இடங்கள்.
1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் 196 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., 69 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2016ம் ஆண்டு தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
courtesy dinamalar
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st May 2016, 12:09 AM
#260
Junior Member
Diamond Hubber
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அ.தி.மு.க., இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது.
இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில், அ.தி.மு.க.,வின் செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட, 44 தனி தொகுதிகளும், ஏற்காடு, சேந்தமங்கலம் என, மலைவாழ் பழங்குடியினருக்கான இரு தொகுதிகளும் உள்ளன. தனி தொகுதிகள், 44ல், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்துார், வாசுதேவநல்லுார் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. அதேபோல, அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்த, இந்திய குடியரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், தனி தொகுதிகள், 44ல் 29லும், பழங்குடியினருக்கான ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 46 தொகுதிகளில், 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரசும், 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டும், எதிலும் வெற்றி பெறவில்லை.
அதேபோல, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட, அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவியுள்ளனர். இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மத்தியில், அ.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு தொடர்ந்து நீடிப்பது தெரியவந்துள்ளது.
courtesy dinamalar
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks