Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Hybrid View

  1. #1
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரித்திர சாதனை!

    இதுவரை, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்திராத அளவிலான விளம்பரங்கள் தி.மு.க.வால் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள் தி.மு.க.வை மாற்றாகக் கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும் ஊடகங்களின் மூலம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரும் கையாண்டதைப் போன்ற கார்ப்பரேட் பாணித் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. ஈடுபட்டது. இருந்தும்கூட, அந்தப் பரப்புரைகள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
    மதுவிலக்கை அமல்படுத்துவது, செல்லிடப்பேசி, விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகள் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும்கூட தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அடிப்படையில் அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க.வைப் போலத் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவிலான மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதுதான்.
    கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், வலுவான கூட்டணி பலமோ, சூழலோ இல்லாமல் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1967-இல் கொள்கையில் ஒன்றோடு ஒன்று முரண்பட்ட எட்டு கட்சிகளின் கூட்டணியும், 1971-இல் இந்திரா ஆதரவு அலையும், 1989-இல் அ.தி.மு.க. ஜெ., ஜா. என்று பிளவுபட்டிருந்ததாலும், 1996-இல் மூப்பனாரால் த.மா.கா. தொடங்கப்பட்டு அதனுடன் தி.மு.க. செய்துகொண்ட கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைத்ததாலும்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இந்தக் காரணிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்தத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
    2006-இல் அப்போது மத்திய ஆட்சியில் இருந்த பலமான காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் என்று பலமான கூட்டணி இருந்துமேகூட, 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்று "மைனாரிட்டி' ஆட்சி அமைக்க முடிந்தது எனும்போது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை முற்றிலும் இழந்துவிட்ட காங்கிரûஸ முக்கியக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட தி.மு.க. வெற்றி பெறாதது வியப்பளிக்கவில்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் ஆதரவு பலமும்தான் இந்த முறை வெற்றியை நிர்ணயித்திருக்கிறது.
    232 தொகுதிகளில் 130 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். அதில் 80 பேர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். 5000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் 28 பேர். 2000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் 20 பேர் மட்டுமே. இதிலிருந்து, மக்கள் தெளிவாகவும், நிர்ணாயகமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
    தி.மு.க. பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களை வென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும், தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியையும் மக்கள் மாற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் வேறு மாற்று இல்லாததால் தி.மு.க.வுக்குக் கிடைத்ததுதான் தி.மு.க. 89 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும் வென்றதற்குக் காரணம். இன்னொரு பலமான மாற்று இருந்திருந்தால் தி.மு.க. அணி இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருப்பது சாத்தியமில்லை.
    ஜெயலலிதா வேண்டாம் என்று கருதும் மாற்றத்தை விரும்புகிறவர்களைப் பொருத்தவரை, கருணாநிதி "வேண்டவே வேண்டாம்' என்கிற மனோநிலையில், ஒருவேளை தி.மு.க. மு.க. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது அந்த இளைஞர்களைத் தி.மு.க.வை ஆதரிக்கத் தூண்டியிருக்கக் கூடும். 93 வயதில் தான்தான் முதல்வர் என்றும், தனக்கு இயற்கையாக பாதிப்பு நிகழ்ந்தால்தான் தனது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்றும் கருணாநிதி கூறியதைக் கேட்டுப் பலரும் முகம் சுளித்தனர்.
    தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து வலம் வந்த அனைவரையும் வாக்காளர்கள் நிராகரித்து விட்டிருப்பது தேர்தல் முடிவுகளின் "ஹைலைட்!' தி.மு.க. மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ம.க.வுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சறுக்கலாகவும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரவர் உயரம் எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், அதற்கு மாற்று சக்தியாக வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
    ஐந்தாண்டுகால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நியாயமாக ஏற்படும் சலிப்பையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பலமான கூட்டணி அமைக்க முற்படுவதுதான் வேறொருவராக இருந்தால் கையாளக்கூடிய தேர்தல் ராஜதந்திரம். ஆனால், துணிந்து தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 134 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது என்பது தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை.
    ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்கும் உரியவராகிறார்.
    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு இன்னொரு சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு. தனது தலைவராகவும், இதய தெய்வமாகவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடக்கும் வேளையில், இந்த வெற்றிக் கனியை அவருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதுதான் அது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம்தான்.
    "மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான முடிவும், அவரது அசாத்திய தன்னம்பிக்கையும் மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழக மக்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' நாளிதழின் சார்பில் வாழ்த்துகள்!



    courtesy dinamani

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •