-
31st May 2016, 11:55 PM
#11
நண்பர் சிவா அவர்களே,
சென்னை வந்து சென்றதில் உங்களுக்கு நல்ல ஆவண அறுவடை நடந்திருக்கிறது என புரிகிறது. பராசக்தியின் 38 வது வார விளம்பரம் பிரமாதம். அது போலவே இலங்கையில் எந்த படமும் செய்யாத சாதனைகளை செய்த உத்தமன் மற்றும் அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய படங்களின் 100-வது நாள் விளம்பரங்களின் அணிவகுப்பு மிக பிரமாதம்.
ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்வை கொடுத்த புகைப்படம் பட்டிக்காடா பட்டணமாவின் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாட்ட புகைப்படமே. அந்த நாள் ஞாபகம் என்பது நான் விரும்பி எழுதும் தொடர். இளைய சகோதரன் செந்தில், சந்திரசேகர் சார் மற்றும் பலரும் விரும்பி படிக்கும் தொடர் அது.
என்னிடம் பேப்பர் கட்டிங்களோ, டைரி குறிப்புகளோ இல்லை.அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய செய்தித்தாள்களை பார்க்கவும் குறிப்பெடுக்கவும் வசதியும் கிடையாது. என் நினைவிலிருந்து எழுதும் குறிப்புகளே அவை. ஆகவே எந்த தவறும் நேர்ந்துவிடாமல் எழுத வேண்டுமே என்பதனாலேயே நேரம் எடுத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நான் எழுதியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் வண்ணம் விளம்பரங்களோ, புகைப்படங்களோ அல்லது செய்திகளோ இவற்றை யாரேனும் தரவேற்றும்போது எனக்கு ஏற்படும் மகிழ்வு அளவிடமுடியாதது. வசந்த மாளிகை வெளியான அன்று மதுரையில் பெய்த மழை செய்தியாக வந்திருந்ததை சுவாமி பதிவு செய்தார். 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை வசந்த மாளிகையோடு சேர்த்து காண்பித்ததை விளம்பரத்தின் மூலம் செந்தில்வேல் பதிவு செய்தார். இப்போது மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா நிகழ்விற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை பதிவு செய்திருந்தேன். அந்த நிகழ்வு பத்திரிக்கையில் புகைப்படமாக வந்திருந்ததை இங்கே நீங்கள் தரவேற்றியிருக்கிறீர்கள். நாம் எழுதும் சம்பவங்கள் உண்மையின் அடிப்படையில் சொல்லப்படுபவை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை.
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
31st May 2016 11:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks