Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வித்தியாசமான மனிதர்!

    ஒவ்வொரு கட்டுரை படிக்கும் போதும் நெஞ்சம் நிறைகிறது. ஒவ்வொரு கட்டுரையும் கண்ணீர் வர வழைக்கிறது. MGR - MGR தான் அவருக்கு நிகர் வேறெவருமில்லை. கடவளுக்கு நன்றி- இப்படி ஒரு நல்ல மனிதரை கொடுத்ததற்காக.


    இந்த மாமனிதருக்கு அழிவில்லை ….


    நான் இந்த தொடரை தினமும் படிகின்ரன் மக்கள் திலகம் என் உயர் உள்ளவரை மறக்கமாட்டேன் கடவுள் கூட தாமதமாக தன உதவுவார் அனால் தலைவர் உடனடியாக உதவி செய்வார்

    மக்களின் மனதில் என்றும் மக்கள் திலகம்

    புரட்சி தலைவர் வள்ளல் எம்ஜியார் அவருக்கு அண்ணா வழிகாட்டியாக இருந்தார் அதனால் தான் நம் மனதில் நிற்கிறார் இவர்போல யாரும் இன்று அரசியலில் இல்லை

    A v மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார் , s s வாசன், மற்றும் MGR , விருந்து புகைப்படம் மிகவும் அரிதான புகைப்படம்.


    இப்போது உள்ள பொறுப்பில்லாத நடிகர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சமூக பிரஞ்ஞை உள்ள மாபெரும் மனிதர் . சமூகத்திற்கான பல நல்ல கருத்துக்களை திரைப்படங்களில் கொடுத்தவர். அல்லாத கருத்துக்களை வழங்க அவர் எப்போதும் சம்மதிக்கவில்லை. உலகம் உள்ளவரை அவர்புகழ் நிலைக்கும்.

    ஒவ்வொரு பாகமும் சுவையாக இருக்கிறது. நிறைய தகவல்கள் தெரிகிறது. எம்.ஜி.ஆர். மனிதநேயம் கொண்ட ஒரு மாமனிதர்தான் சந்தேகமே இல்லை. தயவு செய்து புத்தகமாக போடுங்கள். நன்றி.

    ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

    அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

    என் விழி கண்ணீரால் நிரம்பிவிட்டன !


    ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். செய்தி,.

    மாற்றி எழுதிருக்க வேண்டும். "மன்னா..." என்று அழைத்த காலம் பொய் "அண்ணா...." என்று அழைக்கும் காலம் வரும்.


    ஜனநாயகத்தில் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!" என்பது அண்ணாவின் வாக்கு! அதனால்தான் "அண்ணா" வை, "மன்னா" என்றழைக்கும் காலம் வருமென்று "வசனம்" எழுதப்பட்டது! தவறேதும் இல்லை படத்தில்!

    திரைப்பட புகைப்படங்களை விட எம்.ஜி.ஆர் பொது நிகழ்ச்சி புகைப்படங்களை அதிகமாக வெளியிடலாம்.

    உண்மை ! என் விழி மலர்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன ! அவரை நம்பியவர்களை எப்போதும் அவர் கைவிட்டதே இல்லை . நீங்கள் குறிப்பிட்ட அரசகட்டளை படப்பாடல் கவிஞர் வாலியின் நன்றியை தலைவருக்கு தெரிவிக்கும் முகமாய் எழுதப்பட்டது . இதை வாலியே சொல்லி இருக்கிறார் ! வாலியின் என் பொழுது புலர பூபாளம் பாடியவர்கள் என்ற கட்டுரையில் சொல்லுவார் " மனிதர்களில் ஆயிரம் நடிகர்களை பார்த்திருக்கிறேன் , ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் M G R " இன்றும் என்றும் இது மட்டுமே உண்மை !

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •