-
5th June 2016, 02:29 PM
#581
Junior Member
Diamond Hubber
-
5th June 2016 02:29 PM
# ADS
Circuit advertisement
-
5th June 2016, 02:30 PM
#582
Junior Member
Diamond Hubber
courtesy net
-
5th June 2016, 02:33 PM
#583
Junior Member
Diamond Hubber
courtesy net
-
5th June 2016, 02:35 PM
#584
Junior Member
Diamond Hubber
courtesy net
-
5th June 2016, 02:54 PM
#585
Junior Member
Diamond Hubber
-
5th June 2016, 02:58 PM
#586
Junior Member
Diamond Hubber
-
5th June 2016, 03:48 PM
#587
Junior Member
Diamond Hubber
1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டிருக்க, அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாலும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. "என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வந்திருந்தார் அலி. விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்) செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் ( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன் இருப்பவர்) செய்திருந்தார்.
காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம். முதல், 'ஷோ- பைட்' டில் வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது அலியுடன் மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான், எட்டாவது வகுப்பு கூட படித்து முடிக்காத என்னை தென்னக ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.
ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்' என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். முகமது அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை மக்களிடமும், மக்கள் திலகத்திடமும் இருந்து பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார்.
முகமது அலி மீது அதீத பிரியம் கொண்டிருந்த, எம்.ஜி.ஆருக்கும், முகமது அலிக்கும் ஒரு ஒற்றுமை, இருவருமே ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தவர்கள்
- Vikatan EMagazine
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th June 2016, 03:55 PM
#588
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆரின் செல்லப் பெயர் !
நமது தலைவரின் முழுப்பெயர் அனைவரும் அறிந்ததே! ஆனாலும் அவரது ரசிகர்கள் பொது வாழ்க்கையில் அன்புடன் அழைக்கப்பட்டது மூன்றெழுத்து மந்திரம் தான் m.g.r. அவரது அபிமானிகள் தலைவரை பல பட்டங்களில் அழைத்து வந்தனர் . அதே நேரத்தில் நம் தலைவருக்கு அவரது இல்லத்தில் ஒரு செல்லப் பெயர் இருந்தது. 1988 ம் ஆண்டு மதுரை மாநகருக்கு வந்த திருமதி ஜானகி அம்மையார் கொடைரோடு ஸ்டேஷனில் சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டச் சொன்ன போது, அவர் சூட்டிய பெயர்களில் " ராமு" என்றே 2 குழந்தைகளுக்கு பெயர் வைத்தார். ராமு என்ற பெயரில் அவருக்கு என்ன ஈர்ப்பு என்றால் நமது பொன் மனச் செம்மலை புரட்சித்தலைவரை, தங்கமேனியானை. அவரது தாயார் சத்யபாமா அவர்கள்
" ராமு " என்றே தான் அழைப்பாராம். இந்தப் பெயரைத் தான் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜாதேவியிடம் வந்து நாணி, கோணி . வெட்கி அவர் இந்த ராமுன்னு வாய் திறந்து சொல்லும் அழகை பார்க்க முகம் முழுவதும் கண்ணாக இருக்க கூடாதா என ஏங்கிப் போவேன்.
என்ன குரு சார், உசேன் சார். பூமி சார் என்ன இனிமேல் நம்ம குடும்பங்களில் ஆண் குழந்தை பிறந்தா அது ராமு தான் பெண் குழந்தையா இருந்தா சந்திரா, சரோஜா. ஜெயா. ஓ.கே வா . சபீதா ஜோசப் அவர்களின் m.g.r. 100 என்ற புத்தகத்திலிருந்து
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th June 2016, 04:02 PM
#589
Junior Member
Diamond Hubber
உயில் உயிரை வாழ வைக்க முடியுமா? பாருங்கள் நமது மனித தெய்வத்தின் மகத்தான செய்கையை இதோ பாருங்கள் தனது தொண்டர் கணபதி என்பவரின் மகள் திருமணத்தை 1988 ஜனவரி 18 ம் தேதி முடிவு செய்து தேதி கொடுத்து உறுதியாக தான் வந்து நடத்திக் கொடுக்கிறேன் என்று கூறி திருமண மண்டபத்திற்க்கும் போன் செய்து விட்டார் தலைவர் அந்தக் குடும்பத்துக்கோ ஏகப்பட்ட குஷி கேட்க வேண்டுமா ? ஆனால் காலன் செய்த சதியால் அவருடைய புனித உயிர் 1987 டிசம்பர் 24ம் தேதி பிரிந்து விடுகிறது. தலைவர் இறந்த செய்தியை கேட்டு பேரிடி விழுந்தாற் போல் மனமுடைந்து விரக்தியாகி கல்யாணத்தையே நிறுத்தி விடுகிறார். ஆனால் மறு வாரமே முதல்வர் பொறுப்பிலிருந்த ஜானகி அம்மா வந்து அதே தேதியிலேயே திருமணம் கண்டிப்பாக நடைபெற்றால் தான் அவரது ஆசை நிறைவேறும் என்றும் அவருடைய " புரொகிராம் டைரியில்" புடவையிலிருந்து நகை பணம் வரை செய்ய வேண்டியதை அவரது கைப்பட எழுதி வைத்ததை காண்பிக்கிறார் பின் அதேமாதிரி சீர் வரிசையோடு ஜானகி அம்மாள் தலைமையில் அரை மனதோடும் ஆனந்தக் கண்ணீரோடும் நடைபெறுகிறது.
தான் மறைந்த பின்னும் விளக்கு ஏற்றி வைத்த அந்த ஒளியில் அக் குடும்பத்தின் கவலை இருட்டு விலகியது. இவரை தெய்வத்துக்கே தெய்வம் என்று தான் அழைக்க வேண்டும்.
குறிப்பு: இந்தப் பாராவை என்னால் தொடர்ச்சியாக இன்று வரை படிக்க முயன்று தோற்றுத் தான் போயிருக்கிறேன். மனதும் இதயமும் விம்மி வெடித்தே விடும். இவரல்லவோ அவதார புருஷன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th June 2016, 04:07 PM
#590
Junior Member
Diamond Hubber
தலைவர் : என்ன அம்மு என்னப் போலவே ஜெயிச்சிட்ட போல நம் மக்கள் எப்போதுமே நம்ம பக்கம் அது தான் நீருபணமாயிருக்கு இந்த தேர்தல் ல அப்படித்தானே!
தலைவி : ஆமாம் வாத்தியாரே இந்த தேர்தலில் நான் என் மக்கள் முன்னால் வச்ச கோரிக்கையே "மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பது தான்"
தலைவர் : நீ ஓண்ணும் கவலைப் படாதே 98 M.L.A. இருக்காங்க என்று வாழ்க்கையில் ஜெயிக்க நண்பர்கள் தேவை தான் ஆனால் வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தான் தேவை. ஓ.கே
தலைவி: "எல்லாம் எம்.ஜி.ஆர் மயம்" னு நான் வாழ்ந்திட்டுருக்கேன் . எனக்கு பயமா ? இரட்டை இலை இருக்கு நீங்க இருக்கீங்க அப்புறமென்ன!
இருவருமே சிரிக்கிறார்கள் காட்சி முடிகிறது.
** சுபம் **
courtesy whats up
Bookmarks