Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பளிப்பு.- 1969.

    A Tribute to our dear Director A.C.Thirulokchandar.


    வரும் புத்தாண்டில் 48 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

    முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

    பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

    ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

    நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

    பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

    விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

    படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

    எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

    நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?
    Last edited by Gopal.s; 16th June 2016 at 07:46 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •