Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விகடன் பண்ணும் விபரீத விளையாட்டு



    மீண்டும் மீண்டும் தவறு. விகடன் (THURSDAY, JUNE 16, 2016) திருலோகசந்தர் நினைவலைகளுக்காக வெளியிட்டுள்ள கட்டுரையில் சிறுபிள்ளைத்தனமாக உளறிக் கொட்டி இருக்கிறது. இங்கே நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆதாரங்களுடன் நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்க, ஒரு powerful மீடியாவான விகடன் இம்மாலயத் தவறை செய்கிறது.

    'சிவாஜி பத்மினி நடித்து வெளியான 'இருமலர்கள்' பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார்.'

    இதுதான் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிற விஷயம்.



    'ஆனந்தவிகட' அறிவுஜீவிக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று 'இருமலர்க'ளின் பகிரங்கமான வெற்றிச் செய்தியை இப்படி வெற்றிபெறவில்லை என்று எழுதுவானேன்? இருமலர்களும், ஊட்டிவரை உறவும் ஒரே தீபாவளி நாளில் (01-11-1967) வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி இமாலய வெற்றி பெற்றன என்பது இத்தனை காலம் பத்திரிகை நடத்திவரும் விகடனுக்குத் தெரியாதா? அல்லது வேண்டுமென்றே மற்றவர்களைப் போல நடிகர் திலகத்தின் புகழை விகடனும் மறைக்கத் துடிக்கிறதா?

    மற்றவர்களைப் போல விகடனும் தன் நிலையைத் தானே தரம் தாழ்த்திக் கொள்ளத் தலைப்பட்டு விட்டதா?

    நடிகர் திலகம் என்ன இவர்கள் வீட்டுச் சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டாரா?

    பிரம்மாண்டமாக எடுத்து சுமாரான வெற்றியைப் பெற்ற வண்ணப் படங்களை விகடன் உச்சியில் வைத்து எழுதும் போது கருப்பு வெள்ளையில் வெளிவந்து அதுவும் ஒரே தின தீபாவளியில் ஒன்று வண்ணமும், ஒன்று கருப்பு வெள்ளையுமாய் நம் எண்ணத்தில் இன்றுவரை கலந்து வெற்றிக்கனியை இலகுவாகப் பறித்து, இன்றளவும் முறியடிக்கமுடியாத சாதனையாய் நம்மையெல்லாம் பெருமைப்பட வைக்கிறதே! இந்த வெற்றியை இல்லை என்று சொன்னால், அந்த வெற்றியை சந்தேகித்தால் இவர்கள் எல்லாம் நல்ல கதிக்குப் போவார்களா?

    இரண்டாவது அந்தக் கட்டுரைக்காகப் பதிப்பித்திருக்கும் புகைப்படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் ஒன்று கூட இல்லை. வீரத்திருமகனும், அதே கண்களும், அன்பேவாவும் படங்களாகக் காட்சி தருகையில் திருலோக்சந்தரை ஹாலிவுட் வரை கொண்டு சென்ற நம் 'தெய்வ மக'னின் புகைப்படம் ஒன்று கூடவா விகடனுக்குக் கிடைக்கவில்லை?

    இதிலிருந்தே நடிகர் திலகத்தின் புகழை இன்றளவும் மறைக்க விகடனும் கங்கணம் கட்டி இறங்கிக் கொண்டு வேலை செய்வது தெரியவில்லையா? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விகடன் சர்குலேஷனை விட குங்குமம் பத்திரிக்கையின் சர்குலேஷன் அதிகம் என்று சொன்னால் விகடன் ஒத்துக் கொள்ளுமா?

    இன்னும் எழுதுங்களேன்...'தெய்வ மகன் என்று சிவாஜி நடித்து ஒரு படம் வந்தது...வந்ததும் தெரியாது...போனதும் தெரியாது...மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது' என்று.

    நிஜ சாதனைகள் செய்த ஒரு நிஜத் தமிழனுக்கு தமிழ்நாட்டிலே இந்த நிலைமை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. சிவாஜி என்ற இமயமலையை சோற்றில் மறைக்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டே இருக்கும் சோற்றுப் பிண்டங்களே! நீங்கள் திருந்தாவிட்டால் என்ன? அந்த மாபெரும் சாதனையாளர் செய்த சாதனையை நாடறியும்...நாங்கள் அறிவோம்..மக்கள் அறிவார்கள். நீங்கள் என்ன?

    இதோ அந்த கட்டுரைக்கான லிங்க்.

    http://www.vikatan.com/cinema/tamil-..._campaign=3604

    இரு மலர்கள் - சிறப்புச் செய்திகள் (நன்றி ராகவேந்திரன் சார்)

    1. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.
    Last edited by vasudevan31355; 17th June 2016 at 09:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •