Page 308 of 337 FirstFirst ... 208258298306307308309310318 ... LastLast
Results 3,071 to 3,080 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3071
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    All are welcome to GG's Treasure Island to enjoy all water sports adventures.....this one is the last...exclusive!

    Part 6 : Underwater gimmicks by GG vs JB!

    நீருக்குள்ளேயே சர்வசாதாரணமாக நடந்து சென்று நாகலோகத்தைக் கொலம்பஸ் போல கண்டறிந்து மகுடி வாசிக்காமலேயே நாகராணியையே ஆடவைத்து போதையேற்றியவர் காதல் மன்னர்! ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரிகூட நீருக்கடியில் ஜீவித்திருக்க முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் வாயில் ரெஸ்பிரேட்டர் சகிதம்தான் தண்டர்பாலில் கடலுக்குள் நீரடி சாகஸம் செய்ய முடிந்தது!

    நீரடி நாகலோகத்தில் காதல்மன்னரின் அதிரடி காதல் சாகசம்!!

    ........ஸ்ஸ்ஸ்ஸா(ஆ)பத்தில் முடிந்தாலும்.....!!



    பாவம் .... ஏதோ ஜேம்ஸ்பாண்டால் முடிந்தது......!!



    The End of GG's Water World!
    Last edited by sivajisenthil; 24th June 2016 at 08:03 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3072
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Come Back Vasu Sir!

  4. #3073
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //Farming. season starts//

    Which place?

    It should have started in Kaveri delta? . Depends on water level in Mettur dam and water level in Kaveri !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. #3074
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Tit-Bits! தத்து பித்து தாறுமாறு தக்காளி சோறு !!

    From GG's Tresure Island with Love!

    அப்பாவி கோலிவுட் அடப்பாவி ஹாலிவுட் / பாலிவுட்


    Part 2

    ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) திரைப்படத்தில் ஜெமினி சாவித்திரி பைக் பாடல் ஷோலேயிலும் (1975)இண்டியானா ஜோன்ஸிலும் (1989) காப்பியடிக்கப்பட்டதாமே !

    GG-Savithri combo in atandem bike ride!



    Dharmendhar-Amitabh tandem bike ride!!



    Sean Connery - Harrison Ford bike ride!!!


  6. Likes Russellmai liked this post
  7. #3075
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இரு மேதைகளின் பிறந்த நாளின்று..

    தமிழ்த்திரையிசையுலகை வாழ வைக்கும் தெய்வங்கள்...

    சாகாவரம் பெற்ற பாடல்களை அளித்த இவர்களின் நினைவைப் போற்றுவோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #3076
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மெல்லிசை மன்னரைப் பற்றிய கவிஞரின் பேச்சு
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #3077
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கவியரசரின் வரிகளால் மெல்லிசை மன்னரின் இசையமைப்பு சிறந்து விளங்கியதா இல்லை மெல்லிசை மன்னரின் இசையால் கவியரசரின் வரிகள் சிறந்ததா..

    விடை சொல்ல முடியாத கேள்வி... இதோ இது போல..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #3078
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே எழுதியவற்றின் மறு பதிப்பு.நான் கேட்டது,உணர்ந்தது,படித்தது ,அனைத்தின் தொகுப்பு. ஆனால் அவர் பாதிப்பில் என் பார்வையின் பதிப்பே. ( தொடர்வேன்)



    எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.

    இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.

    நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.

    நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.

    இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.

    எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.

    பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?

    இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?

    மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.

    எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.

    இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

    இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.

    அடானா ராகத்தை பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S ) அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம், படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.

    ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.

    தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???


    ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.

    எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
    புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )

    எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு 4 உதாரணங்கள் .

    1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?

    2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.

    3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.

    4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)

    எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.

    இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.


    ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.

    ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)

    எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.

    இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.

    chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.

    கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.

    இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.

    அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.

    மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.

    சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?


    இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.

    நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.

    அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.

    அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.

    இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.

    "நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.

    கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.

    "தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.

    ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.

    "தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.

    பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes Russellmai liked this post
  15. #3079
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
    நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.

    கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.

    அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.

    1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.

    2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)

    3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)

    4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.

    5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )

    கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Likes Russellmai liked this post
  17. #3080
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு தமிழ் படங்களின் காதல் காட்சிகளில் முதலிடத்தில் வருவது வசந்த மாளிகை பிளம் காட்சி . அடுத்து சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு,அடுத்து மடி மீது தலை வைத்து அன்னை இல்லம்,அடுத்து வைஜயந்தி-சிவாஜி இரும்புத்திரை,அடுத்து பத்மினி-சிவாஜி தில்லானா மோகனாம்பாள்,தெய்வப்பிறவி,புதையல்,அடுத்து நாலு பக்கம் அண்ணன் ஒரு கோயில்.

    ஜீப்பில் அண்ணனும் அண்ணியும் ஏறி செல்லும் போதே அண்ணனின் விஷம பார்வை வார்த்தைகள்.ஆரம்பமாகி விடும்.(பறக்கறதை தடுக்க கூடாது ) அண்ணி ,அனாயசமாக ,ஓடற ஜீப்பிலே நெருப்பு பத்த வைப்பாங்க. அண்ணியை பாத்தாலே பத்திக்குமே, அந்த பச்சை வண்ண புடவையில் .(அதனாலேயே அண்ணனோட வார்த்தை ,செயல்கள் கொஞ்சம் பச்சையாகவே இருக்கும்) ஜெர்க்கின்னில் அண்ணன் அழகுன்னா அழகு .ஜோடி பார்த்தாலே ராசா- ராணிக்கு ஆதிவாசிகளை போல் நாமும் திருஷ்டி கழிப்போம்.

    பிறகு ஆதிவாசிகளின் மோதிர சடங்கு. நடனம். அண்ணன் ,ஆரம்பத்தில் மிதமான பிகு பண்ணி ஆரம்பிப்பார்.அதகளம். சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, பாங்கு ,தாள இசைவு அனைத்தும் கொண்ட முழுமை. ஒரு இடத்தில் அண்ணியுடன் ஆடிக்கொண்டே கண்ணை சுழற்றுவார் பாருங்கள் ,அண்ணனால் மட்டுமே முடியும். ஆதிவாசிகள் வரிசையில் குதித்து மித ஓட்டத்துடன் கைகளை புறத்தே வீசி ஒரு ஸ்டெப் பண்ணுவார் பாருங்கள் ,அடடா??? மாமாவின் பின்னணி காட்சியை எங்கோ கொண்டு வைக்கும் (அடியம்மா ராசாத்தி இந்த காட்சிக்கா?)

    மழை வந்த பிறகு மனசு நனைய ஆரம்பிக்கும். ஆனால் உடனே அதை தணலாக்கும் அண்ணன். புதிய பறவையிலும் இப்படி ஒரு காட்சியில் கண்ணியமான சிட்டு குருவியாவார் அண்ணன். இந்த படத்தில் முழுசாக கெட்டு திருந்திய கேஸாச்சே?காதலுடன் காமமும் தகிக்க வேண்டாமா தனிமையில்?

    ஆடும் கதவை மூடும் அண்ணன் ,பார்வையில் படும் படியா அண்ணி முந்தானையை பிழிவது? அண்ணனின் பார்வையில் அப்படியே காமம் தகிக்கும்.passion கலந்த ஒரு erotic பார்வை.இப்படி ஒரு காந்த பார்வை உலகத்தில் எவனுக்கய்யா வாய்க்கும்?(குடிமகனே பாடலின் இரண்டாவது சரணம் interlude வரும் போது அந்த ஒரு வினாடி பார்வை ஈர்ப்பு, கலைமகள் பாடலில் ஒரு விகசிப்புடன் கூறிய குழப்ப பார்வை, போங்கப்பா) பிறகு நின்று கொண்டு பசி தீர்க்கும் பிளம் கடிப்பார் பாருங்கள், கடிக்க ,சுவைக்க நினைத்ததை அவர் செய்திருந்தால் கூட நமக்கு அப்படி ஒரு கிக் ஏறுமா என்று தெரியாது. அப்படி.... அப்படி ....

    பிறகுதான் அண்ணன் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை செய்வார். கொள்ளிக்கட்டை எடுத்து சிகரெட் பற்ற வைப்பது.பிறகு ஒதுங்கி போகும் அண்ணியை ஸ்ஸ் ...ஸ்ஸ்ஸ் என்று அழைக்கும் கிக்கான அழைப்பு. இங்கே வா என்ற பார்வை அழைப்பு. தூது விட்டு தன் மனதை அவிழ்ப்பது. (பாலமுருகன் வசனம் அருமை)அண்ணிக்கு இது புரிந்ததால் சங்கடம்,நாணம்,விழைவு, மெல்லிய காதல் உணர்வு, குழப்பம்,சம்மதம்(மயக்கமும்,மௌனமும்) என்று கலப்புணர்வுகளை அண்ணி ,அண்ணனின் காம காதலுக்கு தோதாக அனுசரித்து வெளியிடுவார் பாருங்கள்,ஜோடின்னா இதுதான்யா ஜோடி என கூவ தோன்றும்.

    இதற்கு பின்னணி இசையில் மாமா செய்யும் ஜாலம் ,காட்சியை எங்கோ தூக்கி நிறுத்தும்.

    இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.
    Last edited by Gopal.s; 24th June 2016 at 10:33 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •