-
27th June 2016, 11:04 AM
#1671
Senior Member
Diamond Hubber
இது தோல்விப்படமா?
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
27th June 2016 11:04 AM
# ADS
Circuit advertisement
-
27th June 2016, 11:10 AM
#1672
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
27th June 2016, 11:13 AM
#1673
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
27th June 2016, 11:15 AM
#1674
Senior Member
Diamond Hubber
மீள்பதிவு
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.
தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியே சொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)
தாயிடம் அமைதி...
தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.
இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...
அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .
இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....
முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..
ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....
ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
என்று சொல்லிவிட்டு
"இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!
"உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை சிலுப்பிக் கொள்வது அதியற்புதம்.
இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...
அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.
Last edited by vasudevan31355; 27th June 2016 at 11:18 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
27th June 2016, 02:11 PM
#1675
Junior Member
Regular Hubber
ஆவணச் சான்றுகளுடன் சரியான பதிலடி வாசு சார்.
-
27th June 2016, 02:58 PM
#1676
Junior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
இது தோல்விப்படமா?

Mamy many thanks mr vasudevan for sivanthamann 100days cuttings
sivanthamann 100 days celebrations widely celebrated in NKT auditoriam triplicane in a grand manner for information.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th June 2016, 03:20 PM
#1677
Junior Member
Seasoned Hubber
Mr Sudhangan should have verified facts before expressing his views.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th June 2016, 06:18 PM
#1678
Senior Member
Seasoned Hubber
Well done Vasu Sir.
Immense thanks to Pammalar
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2016, 08:43 PM
#1679
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
27th June 2016, 08:44 PM
#1680
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks