-
2nd July 2016, 08:24 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
இனிய நண்பர் திரு சிவ அவர்களுக்கு
வணக்கங்கள். இந்த பதிவை நான் பதிவு செய்வதற்கு முதற்கண் எனது வருத்தங்கள்.
திரியில் தங்கள் பதிவு செய்யும் நடிகர் திலகம் அவர்களுடைய சரித்திர சஹாப்த அசுர சாதனை பற்றிய ஆவணங்களை நன்றி. ஆனால் அதில் மறைத்திரு எம் ஜி ஆர் அவர்களுடைய பெயர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்து பதிவு செய்ய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
காரணம் மக்கள் திலகம் அவர்களின் ஆராதகர்கள் மனம் வருத்தப்பட எந்த காலத்திலும் நாம் ஆளாக கூடாது. திரு எம் ஜி ஆர் - திரு சிவாஜி அவர்களின் உறவு என்பது மற்ற இதர நடிகர்களின் உறவு போல செயற்கையானது அல்ல. கிட்டத்தட்ட சகோதரத்துவம் வாய்ந்த உறவு அவர்கள் இருவருக்கும் கடைசி வரை இருந்ததை நாம் சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். இருவரின் தாயார் இடமும் இருவரும் அதீத அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் கால் வலி கண்டபோது அந்த தாயாருக்கு தைலம் தடவி விட்டவர் மக்கள் திலகம் அவர்கள். அதுபோல மக்கள் திலகத்திற்கு பசி எடுத்து உணவு கொடுங்கள் என்று அன்னை சத்யவிடம் கேட்டபோது...சற்று பொறு...கணேசன் வரட்டும் இருவரும் உண்ணலாம் என்று கூறியவர் அன்னை சத்திய அவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் திரு உருவ சிலையை திறக்க நடிகர் திலகம் வேறு யாரையும் அழைக்கவில்லை. மக்கள் திலகம் அவர்களைத்தான் அழைத்தார். இது போல மேலும் பல இனிய சம்பவங்கள் நமக்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவால் இந்த நல்ல விஷயங்கள் OVER SHADOW செய்யப்படக்கூடாது.
உத்யோகத்தில் போட்டி இருந்திருக்கலாம். அதுவும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளால் தான் அந்த போட்டி கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியலில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்களுக்காக அவரது கட்சிக்காக பிரச்சாரம் பல முறை மேற்கொண்டவர். அவருடைய துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருக்கு ஒரு சகோதரனாக உற்ற துணையாக மற்ற அனைவரும் மக்கள் திலகம் மறைந்தவுடன் கைவிட்ட நிலையில், அரசியல் களத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் முதலாக கட்சி ஆரம்பித்து அதனை சாதகமாக பயன்படுத்தாமல் (நேற்று கட்சி ஆரம்பித்த பொடியார்கள் கூட முதல் அமைச்சர் கனவுடன் தனித்து போட்டியிடும் நிலையில்), அவருக்காக, அவருடன் இருந்த பாசப்பிணைப்பின் காரணமாக, திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தவர் நடிகர் திலகம் என்றால் இருவரின் பாசத்திற்கும் எந்த பாசாங்கும் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும் ! இதில் இருந்தே அவர்களுக்குள்ள பரஸ்பர அன்பு தங்களுக்கு விளங்கும்.
இப்படி இருக்க நாமாக ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவு செய்து அவர்கள் மனதை கஷ்டப்பட வைக்க கூடாது என்பதை தாழமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களுடைய இது போன்ற நோட்டீஸ் எதையேனும் இருப்பின் அதனை நீக்கிவிட அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
நமது சாதனைகளை அவர்கள் அறிவார்கள் ....அவர்களின் சாதனைகளை நாமும் அறிவோம்....இதில் எதற்கு ஒரு பிரச்னையை கிளப்பும் ஒரு ஒப்பீடுகள் நமது பாகத்தில் இருந்து ? எனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் இங்கு பதிவு செய்கிறேன். தவறு ஏதேனும் இருப்பின் என்னை மணித்துக்கொள்ளுங்கள்.
Am extremely sorry if my open view had hurt you. Let us move cordially at all time unless and until there is invite that invites discrepancy.
Murali Sir...am sorry for expressing my views here.
நன்றி
RKS
Last edited by RavikiranSurya; 2nd July 2016 at 08:40 AM.
-
2nd July 2016 08:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks