Take Diversion 5

Between the Deep Sea and the Devil! இருதலைக் கொள்ளி எறும்பாக.....

குடும்ப உறவுகளின் உரசல்களே தமிழ் சினிமாவின் சென்டிமென்டுகளின் மொத்த அடையாளம் !
கதாநாயகனோ கதாநாயகியோ....பாத்திரத்தின் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருக்கு என்று நினைக்கும்போதே வில்லங்கங்கள் குடும்ப
உறவுகளிடமிருந்தே வில்லம்புகளாகக் கிளம்பிவரும் இருதலைக்கொள்ளி சிச்வேஷன்கள் ....மசாஜ் பார்லரில் முழு உடம்பையும் எண்ணையில் முக்கிநீவி விடுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்து பொங்கிப்பொங்கி கண்ணீரில் கன்னங்களில் கோலமிட்டு வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தில் யாரையும் நம்பவிடாமல் குழப்பத்தை உண்டு பண்ணுவதில் தமிழ் படங்களே என்றும் டாப் !!
பாசமலரின் இந்த முக்கியமான குடும்பவில்லியின் குழப்படியால் மன்னரும் திலகங்களும் கொதிக்கும் சாம்பாரில் கரைந்த புளியாய் கொப்பளித்துக் குமுறுவதை பார்த்து விட்டு வந்ததும் எங்க அப்பாவைப் பெத்த பாட்டியிடம் அம்மாவும் எங்க அம்மாவைப் பெத்த பாட்டியிடம் அப்பாவும்முன்னைபோலப்பேசிக்கொள்ளாமலிருந்ததைக் கண்ணாரக் கண்டு வளரும்போதுதான் திரை சென்டிமென்டுகளின் தாக்கம் மனதில் சுரீரென்று உரைக்கத்தொடங்கியது!
ரியல் லைஃப் வேறு ரீல் லைஃப் வேறு என்பதை புரிந்து கொள்ளவே நிறைய ஆண்டுகளாயிற்று!! எங்கே நாமும் கைவீசம்மா கைவீசு ரேஞ்சுக்குப் போய்விடுவோமோ என்று தங்கையை பார்க்கும்போது லேசாகப் பயந்ததுமுண்டு !!
இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெமினிக்கும் சிவாஜிக்கும் இடையே சாவித்திரி படும்பாடு இப்போது பார்த்தாலும் ஏற்படுத்தும் தாக்கம் மாறவில்லை !!