Page 183 of 400 FirstFirst ... 83133173181182183184185193233283 ... LastLast
Results 1,821 to 1,830 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1821
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like



  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1822
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    a very very rare still from Sivakamiyin Selvan shooting spot. Not in the movie.
    Last edited by RAGHAVENDRA; 12th July 2016 at 07:12 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1823
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டில் 100வது நாள் விழா

    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1974 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் சிவகாமியின் செல்வன், தற்போது இத்திரைப்படம் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு, மறுவெளியீட்டில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதையொட்டி, சென்னை, மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கில், 10/07/2016 ஞாயிறு மாலை 100வது நாள் விழா, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்றது,

    நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையில், விழாக்குழுவினர் பி. ஜெயக்குமார், எஸ்,ராமஜெயம், நடராஜ், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள். திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்,
    இத்திரைப்படத்தின் இயக்குனர் சி,வி,ராஜேந்திரன், திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மதுரை சிவா மூவிஸ், திரையரங்க உரிமையாளர் ஆகியோருக்கு, சென்னை மாநகர முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியன் நினைவுப்பரிசுகளை வழங்கினார், திரையரங்க ஊழியர்களுக்கு புத்தாடை, ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,

    இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பேச்சு

    நான் சிறுவயதில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன், இப்படியும் ஒரு நடிகரால் நடிக்கமுடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன், ஆனால், நான் பார்த்து வியந்த நடிகர்திலகத்தை வைத்தே பல வெற்றிப்படங்களை இயக்குவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை,

    சிவாஜி எப்போதுமே தொழில் பக்தி, நேரந்தவறாமை இவற்றை திரையில் நடிக்கும்போது கடைபிடித்தார், அவருடன் பழகியபோதுதான் தெரிந்தது, கடமையையும், கட்டுப்பாட்டையும் தன் வாழ்க்கையிலும் கடைபிடித்தார்,
    ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பமே சிவாஜி ரசிகர்கள்தான். அப்போது. அவருடைய மகன் தான் வேலைக்கு இண்டர்வியூ செல்வதாகவும், யாராவது தெரிந்தவர்களின் பெயரும், ஏதாவது கூடுதல் தகுதியும் கேட்பார்கள் என்ன சொல்வது என்று கேட்டுக்கொண்டிருந்தான். அருகிலிருந்த நான், அந்தப் பையனிடம் இண்டர்வியூவில் கேட்கும்போது நான் சிவாஜி ரசிகன் என்று சொல் என்று சொல்லி அனுப்பினேன், அதன்படியே அவனும் இண்டர்வியூவில் கூற வேலையும் உடனே கிடைத்தது, ஏனெனில், சிவாஜி ரசிகன் என்றால் ஒழுங்காக வேலை பார்ப்பான் என்பது அந்தக் கம்பெனியினருக்கும் தெரிந்திருக்கிறது,

    திரையுலகினருக்கு, சிவாஜி ஒரு பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவர், ஓரிரு தலைமுறைகள் அல்ல இன்னும் தலைமுறைகள் வந்தாலும், தமிழ்த் திரையுலகம், சிவாஜி என்ற கைடு-ஐப் (guide) பின்பற்றிதான் நடக்கவேண்டும்,
    சிவகாமியின் செல்வன் இந்தி ஆராதனாவின் தழுவல் என்றாலும், தமிழில் சிவாஜி தனது திறமையான நடிப்பால் படம் முழுக்க கோலோச்சுவார், 1974ல் திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது, தற்போது 40 வருடங்களுக்குப் பிறகுகூட மீண்டும் வெற்றிபெற்று அதன் 100வது நாள் விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது,

    இவ்வாறு அவர் பேசினார்,

    மா,சுப்பிரமணியன் பேச்சு

    நான் சிறுவயதில் கிராமத்திலிருக்கும்போது திரைப்படம் பார்க்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை, சென்னைக்கு வந்தபின். 40 வருடங்களுக்கு முன்பு இதே சீனிவாசா திரையரங்கில் நான் முதலில் பார்த்த படம் எம்,ஜி,ஆர் நடித்த அன்பே வா. அடுத்த சில வாரங்களிலேயே நடிகர்திலகம் சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் பார்த்தேன். நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் எம்.ஜி.ஆர் படமென்றாலும், இரண்டாவதாகப் பார்த்த சிவாஜிக்குதான் ரசிகனானேன். இன்றுவரை ரசிகனாக இருக்கிறேன்.

    அப்போதெல்லாம் நண்பர்கள் குழுவில் நான் நன்றாகப் பாடுவேன், முதலில் நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பாடுவேன், வேறு பாடல் என்று கேட்டால். போனால் போகட்டும் போடா பாடலைப் பாடுவேன், இந்த இரண்டு பாடலை முழுவதும் கேட்டாலே, சமூக மற்றும் வாழ்க்கைத் தத்துவமும் புரியும்.

    தலைவர் கலைஞர், தனது நண்பராக சிவாஜியைப் பாவித்தார், அவருடைய பெருமையைப் போற்றும் வகையில், சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அவருக்கு சிலை வைத்தார், ஆனால். போக்குவரத்துக்கு இடையூறு என்று பொய்யான காரணத்தைக்கூறி, அதனை அகற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முயற்சி செய்தது, கண்ணகி சிலையை லாரியை வைத்து இடித்து அகற்றினார்கள், அப்போது தி.மு.க போராடி மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை நிறுவினோம். சிவாஜி சிலையை லாரி வைத்து இடிக்காமல், கோர்ட் மூலம் அகற்றப் பார்க்கிறார்கள். சிவாஜி பேரவை அமைப்பு அகற்றக்கூடாது என்று போராடினார்கள். தேர்தல் நேரத்தில் அகற்றினால் மீண்டும் போராடுவார்கள் என்பதால் கால அவகாசம் கோரி அதனைத் தள்ளிவைத்திருக்கிறார்கள்,

    அதுபோல, நடிகர்திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் என்பதும் தமிழக அரசால் அறிவிப்போடு நின்றுபோயுள்ளது. கலையுலகின் பிதாமகனாகத் திகழ்ந்த நடிகர்திலகத்திற்கு கட்சி வேறுபாடின்றி, அரசியல் கடந்து அனைவருமாகச் சேர்ந்து மணிமண்டபம் அமைக்கவேண்டும். இதற்காக நானும். நான் சார்ந்த தி,மு,கவும் என்றும் துணைநிற்கும்.

    தலைமுறை கடந்து சிவாஜியின் திரைப்படங்கள் மக்களின் பேராதரவைப் பெறும் என்பதற்கு ஏற்கனவே கர்ணன் திரைப்படம் வெளிவந்து மறுவெளியீட்டில் மாபெரும் வெற்றியைப் பெற்றது, இப்போது சிவகாமியின் செல்வன் 100வது நாள் விழா காண்கிறது,

    இதேபோல், நடிகர்திலகத்தின் மேலும் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி விழாக்கள் காணவேண்டும் என்பதே எனது விருப்பம்,
    இவ்வாறு அவர் பேசினார்,
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. Likes Harrietlgy, Russellmai liked this post
  8. #1824
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன் 100வது நாள் விழா - சில புகைப்படங்கள்







    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Likes Russellmai liked this post
  10. #1825
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like



    அவசர அவசரமாக இரவோடு இரவாக எந்த பகுதியின் பிலிம் சுருள்கள் கெட்டுப் போனது என்று பார்த்தார் அன்றைய ஜெமினி அதிபர் எஸ். பாலசுப்ரமணியம். அவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஒருவித கூச்சத்தோடும், பயத்தோடும் இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து விஷயத்தைச் சொன்னார். அவரும் கொஞ்சம் கலங்கித்தான் போனார்! பிறகு படத்தை போட்டுப் பார்த்தார்கள்.
    `கவலை வேண்டாம் பாலு! பெரிய சேதம் எதுவுமில்லை’ என்ற பிறகுதான் பாலசுப்ரமணியம் நிம்மதி அடைந்ததாகச் சொல்லுவார்!
    1970கள் கூட சிவாஜி கணேசன் ஆண்டு என்றே சொல்லலாம்! அந்த வருட ஆரம்பத்தில் வந்த படம் ‘எங்க மாமா!’ இந்தியில் வந்த ‘பிரம்மசாரி’ படத்தின் தமிழாக்கம்தான் இந்த படம்! இந்தப் படத்தை ஜேயார் மூவீஸும் ஏவி.எம். நிறுவனமும் இணைந்து எடுத்த படம்தான் இந்தப் படம்.
    இந்தப் படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சிவாஜியும், ஜெயலலிதாவும் ஜோடி!
    இந்த படம் சென்னை வெலிங்டன் திரையரங்கில் வெளியானது! அடுத்து வெளியான படம் ஏப்ரல் மாதத்தில் வெளியானது! அதுதான் சிவாஜி நாடக மன்றத்தினரின் வெற்றிகரமான நாடகமான `வியட்நாம் வீடு.’
    நூறு படங்களில் நடித்து புகழுச்சியில் இருந்த சிவாஜி கணேசன் மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தார். அந்த நாடகம்தான் ‘வியட்நாம் வீடு!’ இதன் கதையை எழுதியவர் அப்போது 24 வயதே ஆன இளைஞர் ஒருவர்! சென்னை டன்லப் டயர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்!
    ஒய்.ஜி. பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ. குழுவில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். அவர் சிவாஜியிடம் சொன்ன கதைதான் ‘வியட்நாம் வீடு!’ ஏன் இந்த படத்திற்கு இந்த தலைப்பு? இன்றைக்கு பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்! அப்போது அமெரிக்கா பல ஆண்டுகளாக வியட்நாமில் போர் நடத்திக் கொண்டிருந்தது! ஜெர்மனியில் ஹிட்லர் பல யூதர்களை கொன்று குவித்ததைப் போல, அமெரிக்கா வியட்நாமில் பல உயிர்களை கொன்று குவித்தது.
    அதாவது ஓயாத சண்டை என்றால் அதற்கு வியட்நாமை உதாரணமாகச் சொன்னார்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஓயாத சண்டை என்கிற அடிப்படையில்தான் இந்த படத்திற்கு இந்த தலைப்பை வைத்தார் அந்த இளைஞர். அவர் பெயர் சுந்தரம்!
    அவர்தான் பின்னாளில் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் என்றே திரையுலகில் அறியப்பட்டார்.
    வழக்கமாக நாடகங்கள் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில்தான் அன்றைய நாட்களில் அரங்கேற்றமாகும்!
    ஆனால், இந்த நாடகத்தை சிவாஜி வடசென்னை பகுதியிலிருந்த ராஜா அண்ணாமலை மன்றத்தில்தான் அரங்கேற்றினார்.
    அந்த அரங்கேற்றத்தில் சிவாஜி எதிர்பாராத விஷயமும் அரங்கேறியது! நூறு படங்கள், அதில் எத்தனையோ வெள்ளி விழா படங்கள், உலகமெங்கும் சிவாஜிக்கு ரசிகர்கள்!
    இத்தனை பெருமைகளோடுதான் அவர் மீண்டும் மேடைக்கு வருகிறார்! திரையில் அவரை முதல் காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் காசுகளை அள்ளி திரை மீது வீசுவார்கள். அந்த சிவாஜி இப்போது மேடைக்கு வருகிறார்! அவரை நேரடியாக ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். பிராமணப் பின்னணியைக் கொண்ட கதை இது! சிவாஜிக்கு இதில் பிரஸ்டீஜ் பத்மநாபன் கதாபாத்திரம்! தன்னம்பிக்கையும், சுயகவுரவமும் கொண்ட ஒரு கதாபாத்திரம்! முதல் காட்சியில் சிவாஜி மேடையில் தோன்றுவார்! அவ்வளவுதான்! அரங்கத்தில் விசில் பறந்ததோடு, ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களை சிவாஜி மீது வீசவும் செய்தார்கள்.
    திக்குமுக்காடிப் போனார் சிவாஜி!
    அவரால் மேடையில் நகரக்கூட முடியாதபடி மேடை முழுவதும் பூக்கள்.
    இதை எதிர்பாராமல் மேடைவிளக்கை அணைத்தார்கள். சிவாஜி திரைக்குப் பின்னால் போனார்! பூக்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள்! அதற்குப் பிறகுதான் நாடகம் தொடர்ந்தது!
    அடுத்த நாள் நாடகம்! இதே போல் நடந்தது! ஆனால் இங்கே ஒரு காரியம் செய்தார்கள் நாடகக் குழுவினர்! பூக்கள் வீசப்பட்டன! மேடையில் இருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்தார்கள்.
    ஒரு விளக்கு மட்டும் எரியும்! அந்த விளக்கொளியில் வந்து நிற்பார் சிவாஜி!
    `கரண்ட கட் ஆயிடுத்து! இந்தாத்திலே கரண்ட் கட் ஆச்சுன்னா கூட இந்த பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் போன் பண்ணனும், யாருக்கும் இந்தாத்திலே பொறுப்பே கிடையாது’ என்று பேசிக்கொண்டே போவார். அதற்குள் இருட்டான பகுதிகளில் இருக்கும் பூக்களை அப்புறப்படுத்திவிடுவார்கள்.
    இந்த நாடகத்தைப் பார்த்த அமரர் எஸ்.எஸ். வாசன் இதை ஆனந்த விகடனில் புகைப்படங்களோடு தொடராக வெளியிட்டார்.
    இதனால் நாடகம் பட்டித்தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது! அதற்குப் பிறகுதான் சிவாஜி பிலிம்ஸே பி. மாதவன் இயக்கத்தில் இதை படமாக்கினார்கள்.
    நாடகத்தில் சிவாஜியின் மனைவி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி. சகுந்தலா! ஆனால், படத்தில் இந்த வேடத்தில் பத்மினி நடித்தார்!
    சிவாஜிக்கு இந்த பிராமண கதாபாத்திரம் அத்தனை இயற்கையாக அமைந்தது! அவரே ஒரு பேட்டியில் சொன்னார்!
    `எனக்கு நிறைய பிராமண நண்பர்கள் உண்டு! மேலும் தொழிலதிபர்கள் டி.எஸ். கிருஷ்ணா, சித்ரா நாராயணசாமி இவர்களின் நடை உடை பாவனைகளைப் பார்த்தேன். அதை அப்படியே கிரகித்துக் கொண்டுதான் இந்த ஜெனரல் மானேஜர் கதாபாத்திரத்தைச் செய்தேன்’ என்றார்.
    மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் ‘வியட்நாம் வீடு!’
    சிவாஜியின் அடுத்த படமும் பி. மாதவன் இயக்கிய படம்தான்!
    இந்த படம் சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனியாக இருந்தது!
    அந்த படம்தான் `ராமன் எத்தனை ராமனடி!’
    இதில் சிவாஜி ஒரு கிராமத்து அப்பாவி இளைஞனாக இருந்து சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகனாக உயரும் கதை! இது ஒரு வகையில் சிவாஜியின் சுயசரிதை மாதிரியே இருந்தது! இந்த படத்தில் சிவாஜியின் கடந்தகால
    படங்களின் காட்சிகளையெல்லாம் காட்டுவார்கள்.
    ரசிகர்களுக்கு ஏதோ மொத்த சிவாஜி படங்களையும் பார்த்த திருப்தி ஏற்பட்டது! இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் `சத்திரபதி சிவாஜி’ யாக நடிப்பார்! திரையில் சுமார் 15 – 20 நிமிடங்கள் இந்த காட்சி வரும்!
    இந்த படத்திற்கு கதை – வசனம் எழுதியவர் பாலமுருகன்! ஆனால் இந்த ‘சத்திரபதி சிவாஜி’ நாடகம் என்பது அப்போது தொலைக்காட்சிக்காக சிவாஜி நடித்துக் கொடுத்த ஒரு நாடகம்!
    இந்த நாடகத்தை தொலைக்காட்சிக்காக எழுதியவர் அன்றைய பிரபல கவிஞரும் எழுத்தாளருமான தஞ்சைவாணன்!
    அவரை திரைக்கும் எழுத அழைத்தார் சிவாஜி! இந்த காட்சி திரையில் வரும் போது கைத்தட்டல் அடங்கவே வெகுநேரமாகும்.

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR liked this post
  12. #1826
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like



    ராமன் எத்தனை ராமனடி’ படம் மாபெரும் வெற்றியடைந்தது! இதில் ஆரம்ப கட்டத்தில் சிவாஜி ஒரு வெகுளியான கிராமத்து இளைஞன்! பின்னாளில் அதே கிராமத்து இளைஞன் சினிமாவில் முன்னணிக் கதாநாயகன்!

    இந்த படத்தின் இன்னொரு சிறப்பே பாடல்கள்தான்! ஒரே பாட்டு இரண்டு முறை வரும். அந்த பாட்டுத்தான் `அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.’ ஆரம்பத்தில் இந்த பாடலை கிராமத்து சிவாஜி பாடும்போது பாடலின் தாளம் கொஞ்சம் வேகமாக இருக்கும்.

    அதே சிவாஜி சினிமாவில் பெரிய கதாநாயகனாகி, அதே கிராமத்துக்கு திரும்பி வரும் போது, எந்த பெண்ணுக்காக தான் உழைப்பால் உயர்ந்து வந்தானோ, அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்கும்.

    அதனால், அதே பாட்டை இப்போது பாடும் போது அது லேசான சோகத்துடன் கூடிய மெல்லிய ராகமாக பவனி வரும்!

    இந்த படம் வெளியான காலத்தில் வானொலியில் இந்த பாட்டுத்தான் அடிக்கடி ஒலிக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே சங்கீதத்தில் மிகுந்த ரசனை உண்டு. தங்கள் படங்களின் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.

    எம்.ஜி.ஆர். பாடல் உருவாவதற்கு முன்பே அந்த டியூனைக் கேட்டு, பிடித்திருந்தால் மட்டுமே பாடலை பதிவு செய்ய சொல்லுவார். சிவாஜி, பாடல் தயாரானவுடன் தன் கருத்தைச் சொல்லுவார்! அப்படி அவர் மாற்றிய பாடல் ஒன்று கூட உண்டு!

    ‘பார் மகளே பார்’ படத்தில் வந்த ‘நீரோடும் வைகையிலே’ பாடல் முதலில் ஆண் குரல் இல்லாமலேயே பதிவானது!

    ஆண் குரலுக்கு பதிலாக விசில் சத்தம்தான் இருக்கும். சிவாஜி இதை ஏற்றுக்கொள்ளவில்லை! இசையமைப்பாளர் விஸ்வநாதனை அழைத்து அந்த விசில் கூடவே ஆண் குரலை சேர்க்கச் சொன்னார்.

    அதனால் படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடும்போது விசிலுடன் தான் ஆண் குரல் பாடல் துவங்கும்! அதே போல் இசையமைப்பாளர்கள் மீதும், கவிஞர்கள் மீதும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு! இவர்களை பற்றி சிவாஜியே பதிவு செய்திருக்கிறார்.

    `ஒரு படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தால் அந்த பெருமை, பாட்டெழுதியவரையும், இசையமைப்பாளரையும், பாடியவரையும் சாரும். சினிமாவுக்கு எத்தனையோ கவிஞர்கள் பாட்டு எழுதியிருக்கிறார்கள். முன்னாளில் பாபநாசம் சிவன் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். பின்னாளில் கவிஞர் கா.மு. ஷெரிப், மருதகாசி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று பலரைச் சொல்லலாம்.

    அந்த காலகட்டத்தில் குறிப்பிடத் தக்கவர் கவிஞர் கண்ணதாசன். நான் நடித்த பல படங்களுக்காக எண்ணற்ற பாடல்களை எழுதிக் கொடுத்தவர், என் அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன்!

    அவரை நான் புகழாத நேரமே இல்லை! அவரைப் பாராட்டும் போது

    ‘கவிஞா! என் கண்ணே! கண்ணதாசா!

    நீ கவிஞன் கம்பனையும் மிஞ்சுகிறாய்!

    காளிதாசனையும் மிஞ்சுகிறாய்!’ என்பேன்.

    பொதுவாகவே எனக்கு சிறு வயது முதலே கவிதை மீது அதிக நாட்டம் உண்டு. அதனால்தான், நான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், முழுக்க முழுக்க கவிதை வடிவிலேயே ‘களம் கண்ட கவிஞன்’ என்ற நாடகத்தை நடத்தினேன்.

    இசையமைப்பாளர்கள் வரிசையை நினைத்துப் பார்த்தால், அந்த காலத்தில் இருந்த ராஜகோபாலய்யர், எஸ்.வி. வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் சங்கீத ஜாம்பவான்கள்!

    அதற்கு பிறகு விஸ்வநாதன்– ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன் ஆகியோர் பல படங்களுக்கு ஜனரஞ்சகமாக பாடல்கள் அமைத்து பல்லாயிரம் பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

    இதே காலத்தில்தான் சங்கர்– கணேஷும் இருந்தார்கள்.

    இவர்கள் வரிசையில் கிராமியப் பாடல்களைப் பெரிதும் பிரபலப்படுத்தி யவர்களில் இளையராஜா முக்கியமானவர்!

    தஞ்சாவூரிலுள்ள சூரக்கோட்டை கிராமத்தில், எனக்கு ஒரு வீடு இருக்கிறது.

    ஒரு முறை அங்கு தங்கியிருந்தபோது, ஒரு நாள் அதிகாலையில் ஏதோ பாட்டுச் சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால், வயலில் ஐம்பது – அறுபது பெண்கள் நடவு நட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள் `போவோமா ஊர்கோலம்’ என்று. மற்ற பெண்கள் அதை வாங்கிப் பாடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு மக்களுடைய மனதை இளையராஜாவின் இசை தொட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

    இசையமைப்பாளர்கள் வரிசையில் சமீப காலத்தில் ஏ. ஆர். ரஹ்மான், தேவா போன்ற புதியவர்கள், மக்களை கவரும் வண்ணம் இசையமைத்து வருகிறார்கள்.

    இசையைப் பற்றிச் சொல்லும்போது பின்னணிப் பாடகர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அந்த காலத்தில் சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி போன்றவர்கள் நிறைய படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த தலைமுறையில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சித்ரா போன்றவர்கள் வந்தார்கள்.

    அவர்கள் எல்லோருமே தங்கள் இனிய குரலால், மக்களின் பாராட்டைப் பெற்றவர்கள். சமீப காலத்தில் நிறைய இசைக்குழுக்களைப் பார்க்கிறோம். புதுப்புது இளம் பாடகர்களையெல்லாம் சில டி.வி. நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். இதெல்லாம் இசைத்துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

    ஆனால், என் தொழிலில் நான் `முதல் மரியாதை’ கொடுப்பது இயக்குநர்களுக்குத்தான்! காரணம், அவர்தான் கேப்டன் ஆப் தி ஷிப். என்னை எப்படி கொண்டு போவதென்று அவர்தான் தீர்மானிக்கிறார்.

    என்னுடைய திறமைகளை எல்லாம் எப்படி வெளியில் கொண்டு வருவது என்றும் அவர்தான் பாடுபடுகிறார். நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்தாலும், அதை சரியாக சொல்லிக் கொடுப்பவர் இயக்குநர்தான்.

    ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால்,`சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்தை இயக்கிய இயக்குநர்தான் சரியில்லை’ என்று சொல்வார்கள்.

    ஒரு படம் நன்றாக ஓடியது என்றால், `சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார்’ என்பார்கள். இதனால் இயக்குநருக்கு பெருமை சேராது! படம் சரியாக போகவில்லையென்றால் பாதிக்கப்படுவது இயக்குநர்தான். அதனால் இயக்குநரிடம்தான் திறமையெல்லாம் இருக்கிறது.

    இயக்குநர்கள் பல பொறுப்புக்களை எடுத்துக்கொண்டு வெற்றி பெறுவதால்தான், அந்த அருமை எனக்குத் தெரியும். அவர்களிடம் நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

    செட்டிற்குள் போனால் நான் வெறும் நடிகன் மட்டும்தான்! அங்கே போனவுடன் இயக்குநரிடம் `அப்பா! நீங்கள்தான் இங்கே தலைவர்! நீங்கள் சொல்ற வேலையைச் செய்யத்தான் நான் இங்கே வந்திருக்கேன். என்னை எப்படி வேணும்னாலும் வேலை வாங்கிக்குங்க’ என்பேன். அடுத்து சிவாஜியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது!

    (தொடரும்)

  13. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR liked this post
  14. #1827
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai, mappi, KCSHEKAR liked this post
  16. #1828
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சுப்ரமணியம் போன்ற அரை வேக்காட்டு ஆட்கள் ,நடிகர்திலகத்தை யானை பார்த்த குருடனை போல உணர்ந்து உளறுவதை நிறுத்த வேண்டும். இரும்புத்திரை, படிக்காத மேதை,தெய்வப்பிறவி இவையெல்லாம் ,Stanislavsky பள்ளியில் வராதா?முட்டாள்கள் விஷயம் தெரியாவிட்டால் ,அவரை பார்த்த அனுபவத்தை மட்டுமே எழுதினால் போதும். சகிக்க முடியாத உளறல்கள் .
    Last edited by Gopal.s; 13th July 2016 at 11:40 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. #1829
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Facebook

  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  19. #1830
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •