-
15th July 2016, 10:23 PM
#1241
Junior Member
Diamond Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மறு வெளியீடுகளின் அட்சய பாத்திரம், என்றும் வற்றாத அமுதசுரபி, எப்பொழுதும் வழங்கும் கற்பக விருட்சம் ...என்றும் கலையுலகின் ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் ... அளிக்கும் பிரம்மாண்ட வெற்றி படைப்பு ... டிஜிட்டல் உருவாக்கத்தில் " ரிக்க்ஷாக்காரன் " வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளுக்கு விஜயம் செய்ய வருகிறார் ... பராக் ...பராக் ...அனைவரும் கூடி மகிழ்ச்சியுடன் வரவேற்போம் ...
-
15th July 2016 10:23 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2016, 11:52 PM
#1242
Junior Member
Platinum Hubber
இன்று (15-07-2016) முதல் மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த "நாளை நமதே" தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2016, 12:02 AM
#1243
Junior Member
Platinum Hubber
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 22-07-2016 முதல் மக்கள் திலகம் நடித்த "ஆசை முகம்" தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது.

தகவல் உதவி மதுரை எஸ்.குமார்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2016, 07:26 AM
#1244
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2016, 07:28 AM
#1245
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2016, 07:29 AM
#1246
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2016, 07:30 AM
#1247
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2016, 07:31 AM
#1248
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2016, 09:31 AM
#1249
Junior Member
Platinum Hubber
சமூக பொறுப்பு
திரையுலகத்துக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். முன்பு திரைப்படங்கள், மனித பண்புகளை வளர்ப்பது, தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன என்று கூறுவதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், அண்மை காலங்களில் டி.வி. தொடர்கள், குடும்பபெண்களின் உயர் பண்புகளை அழிக்கும் விதமாக, பெண்களை ‘வில்லியாக’ சித்தரிக்கின்றன. திரைப்படங்களில் எல்லாம் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரம் எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.
இதனால், ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்தார்கள். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது.
ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய நடிப்பு, சமுதாயத்தில், குறிப்பாக தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும். நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்க்கவேண்டும். அதன்மூலம் இந்த கெட்ட பழக்கங்கள், தன்னை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
வருமானம் முக்கியமல்ல
எனவே, திரையுலகத்தினர், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள், தங்களது திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அதிக வருமானத்தை தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது. குறிப்பாக தன்னுடைய திரைப்படம் தவறான தகவல்கள், சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2016, 10:28 AM
#1250
Junior Member
Regular Hubber

Originally Posted by
suharaam63783
சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.
அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.
அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.
நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.
புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுகாராம், நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போனீர்களா? அது என்ன நிகழ்ச்சி? (ஒரு சந்தேகம். அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்ற பாட்டு என்ன படம்? புரட்சித்தலைவர் படமா?)
லதா அவர்கள் புரட்சித்தலைவரின் விசுவாசி என்று எல்லாருக்கும் தெரியும். அ.தி.மு.க.வில் உறுப்பினர் ஆகவும் இருந்திருக்கிறார். கட்சி கூட்டத்திலும் பேசி இருக்கிறார். சமீபத்தில் குமுதம் பத்திரிகையில் வரும் தொடரிலும் புரட்சித்தலைவரை பாராட்டி பேட்டி கொடுத்திருக்கிறார். இது எல்லாம் தெரிஞ்சுதானே எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கிறார்கள்.
லதாவாக எந்த நிகழ்ச்சிக்கும் வலிய வரமாட்டார். அவரைப் பற்றி தெரிந்து கொண்டே நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டுவிட்டு அவர் தன் விருப்பம் போல பேசக்கூடாது என்றால் எப்படி சரி?
புரட்சித்தலைவர் பற்றி இவர்கள் யாரும் பேச வேண்டாம். ஆனால், தாங்களாக வலிய அழைத்துவிட்டு ஒரு விருந்தாளி அதுவும் புரட்சித்தலைவர் விசுவாசியான லதா, அவரைப் பற்றி பேசக்கூடாது என்பது அராஜகம்.
புரட்சித்தலைவர் பற்றி லதா பேசும்போது ஸ்டாப் இட் என்று கத்தியவர்கள் காட்டு மிராண்டிகள். புரட்சித்தலைவர் பேரைக் கேட்டாலே பின்னாலே கரண்ட் வெச்சா மாதிரி துள்ளும் அரைவேக்காடு அறிவுகெட்ட முண்டங்கள் எப்பதான் திருந்துமோ? தெரியலை.
உரிமைக்குரல் கொடுத்த புரட்சித்தலைவரின் விசுவாசி கலை இளவரசி கவர்ச்சி கன்னி அண்ணி லதா வாழ்க!
கண்ணன் என் காதலன் படத்தில் கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாட்டுக்கு புரட்சித்தலைவர் அளவு சூப்பரா ஆடவில்லை என்றாலும் நன்றாக ஆடியிருக்கும் கவர்ச்சி புயல் நன்றி மறக்காத வாணி ஸ்ரீ வாழ்க!
புரட்சித்தலைவர் புகழை எங்கும் ஒலிக்கும் பக்தர்கள் வாழ்க!
Last edited by Shahriyar Akbar; 16th July 2016 at 10:35 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks