எம்,ஜி.ஆர் நடித்த 'ரிஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் 'ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் 'ரிக்ஷாக்காரன்' தான். டைரக்டர் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.


கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி' ரிக்ஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.