-
30th July 2016, 04:42 PM
#1411
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ரிக்ஷாக்காரன் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட தரைப்படமாக 1971 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த வகையில், இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் பாரத் பட்டத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில், ரிக்ஷாக்காரன் திரைப்படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ரிக்ஷாக்காரன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை குவாலிட்டி சினிமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் பிலிம் விஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் வெளியிடுகின்றனர்
ரிக்ஷாக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவாக்கப்பட்ட நிலையில், எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடவுள்ள நிலையில், அந்த விழாவின் முதற்கட்டமாக ரிக்ஷாக்காரன் படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ரிக்ஷாக்காரன் திரைப்படம், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th July 2016 04:42 PM
# ADS
Circuit advertisement
-
30th July 2016, 04:47 PM
#1412
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th July 2016, 07:21 PM
#1413
Junior Member
Diamond Hubber
When this "mayyam" website net work problem solve... Otherwise thanks to Administrator Mr Nov sir...
-
30th July 2016, 07:26 PM
#1414
Junior Member
Diamond Hubber
"Rickshawkaaran" Makkalthilagam's Grand Mega Hit Digital Version contents--- informations Super Sir...
-
31st July 2016, 05:55 AM
#1415
Junior Member
Platinum Hubber
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
கூண்டுக்கிளி -1954
புதுமைபித்தன் -1957
நாடோடி மன்னன் -1958
நல்லவன் வாழ்வான் -1961
குடும்ப தலைவன் -1962
பாசம் - 1962
நீதிக்கு பின் பாசம் -1963
கலங்கரை விளக்கம் -1965
தாலி பாக்கியம் -1966
கணவன் -1968
தேடிவந்த மாப்பிள்ளை -1970
பட்டிக்காட்டு பொன்னையா -1973
இதயக்கனி -1975
மீனவ நண்பன் -1977.
உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .
கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .
''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .
''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''
என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
31st July 2016, 06:08 AM
#1416
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2016, 06:49 AM
#1417
Junior Member
Platinum Hubber
சினிமாவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.
நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது என்றால் அதற்கு எம்ஜிஆர் இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை.
அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார்.
நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.
அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.
அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.
அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். . தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல்.
COURTESY -RV- NET
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
31st July 2016, 06:33 PM
#1418
Junior Member
Platinum Hubber
முரசு தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் திலகத்தின் ''நல்லநேரம்'' ஒளி பரப்பாக உள்ளது .
கடந்த வாரம் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ''ஆசை முகம் '' 7 நாட்களில் 95,000 வசூலாகியதாக தகவல் .
இந்த வாரம் கோவை - ராயல் அரங்கில் மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க '' நடை பெறுகிறது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st July 2016, 06:37 PM
#1419
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st August 2016, 07:07 AM
#1420
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் சங்கமம் .
சென்னையில் நேற்று அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கத்தின் சார்பாக மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்
திரைப்படம் திரையிடப்பட்டது .அரங்கம் நிரம்பியது , ஏராளமான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் வெளியூர்களில் இருந்து வந்தார்கள் .இதர செய்திகள் விரைவில் .......
Bookmarks