Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் மீது தீராத பாசம் கொண்ட வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். நமது நடிகர்திலகத்தின் உயிரோட்டமான காவியமான வியட்நாம்வீடு, ஞானப்பறவை ஆகிய படங்களை இயக்கியவர். மேலும் நமது தலைவரின் பல வெற்றிப் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சுந்தரம் என்ற பெயர் வியட்நாம் வீடு வெற்றிக்குப் பிறகு வியட்நாம்வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டது. தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியானாலும் கலையுலகில் தன் வளர்ச்சிக்குக் காரணம் நடிகர்திலகம் அவர்கள் தான் என்பதை நினைவுபடுத்துவார்.
    நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் வியட்நாம் வீடு, ஞான ஒளி, சத்யம், கிரகப்பிரவேசம், ஜஸ்டிஸ் கோபிநாத், அண்ணன் ஒரு கோவில், ஜல்லிக்கட்டு, ராஜமரியாதை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் இளையதிலகம் பிரபு அவர்களின் ஆனந்த் படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.
    வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •