14.8.1977
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' - இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் .மீனவ நண்பன் சிறப்பு தகவல்கள் .
மக்கள் திலகம் நடித்த கடைசி சமூக படம் .
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த முதல் படம் .
இயக்குனர் ஸ்ரீதரின் இரண்டாவது மக்கள் திலகம் படம் .
மக்கள் திலகம் அதிக சம்பளம் வாங்கிய படம் [22லட்சம் ]
14.8.1977 அன்று வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படம் .
கடற்கரை மணலில் மக்கள் திலகம் - நம்பியார் மோதும் கத்தி சண்டை அருமை .
மக்கள் திலகத்துடன் நம்பியார் - வீரப்பா -வி.கே . ராமசாமி - வெண்ணிற ஆடை நிர்மலா - தேங்காய் ஸ்ரீனிவாசன் - நாகேஷ் - சச்சு ஆகியோர் நடித்த படம் .
நேருக்கு நேராய் வரட்டும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .
பட்டத்து ராஜாவும் -- பட்டாள சிப்பாயும் .. பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் வெகு சிறப்பாக இருந்தது ,
பொங்கும் கடலோசை பாடலில் வாணிஜெயராமின் குரல் தேனமுது .
கண்ணழகு சிங்காரிக்கு - காதல் பாடலில் மக்கள் திலகம் - லதா ஜோடி சூப்பர் .
தங்கத்தில் முகமெடுத்து ... சந்தனத்தில் .. கனவு பாடல் விழிகளுக்கு விருந்து .
நேரம் பௌர்ணமி ..நேரம் - மனதை கொள்ளை அடித்த பாடல் .
மெல்லிசை மன்னரின் இசை - மிகவும் அருமை .
ஒரு நல்ல பொழுது போக்கு படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து .
இன்று படம் பார்த்தாலும் புத்தும் புது படம் போல் மனதிற்கு நிறைவு தரும் படம் - மீனவ நண்பன் .
மக்கள் திலகம் தன்னுடைய 60 வயதில் இளமை சுறுசுறுப்புடன் , எழிலான தோற்றத்தில் படம் முழுவதும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த படம் .
நல்ல கருத்துக்களுடன் - வசனத்துடன் - இயக்குனர் ஸ்ரீதரின் கை வண்ணத்தில் வந்த வெற்றி காவியம் '' மீனவ நண்பன் '' - மக்கள் திலகத்தின் வைர கிரீடம் . ரசிகர்களுக்கு அமுத சுரபி .
1974 அலையோசை பத்திரிகை வேலையை விட்டு விலகியிருந்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு எதிராக செய்திகளை வெளியிட ஆரம்பித்திருந்ததால் அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் முத்துலிங்கம். ஒரு நாள் தற்செயலாக புரட்சித்தலைவரை பார்க்க தி.நகர் ஆற்காட் ரோட்டிற்கு வந்திருக்கிறார். (இப்போது அது எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகியிருக்கிறது) அன்று வீட்டிலிருந்த குஞ்சப்பன் என்பவர் முத்துலிங்கம் வந்திருக்கும் தகவலை இண்டர்காம் மூலம் மாடியிலிருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கிறார். உடனே போனில் முத்துலிங்கத்திடம், அலையோசையிலிருந்து விலகியது பற்றி விஷயத்தை கேள்விபட்டேன் முத்துலிங்கம் குஞ்சப்பணிடம் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ என்று சொல்ல, இல்லைங்க தலைவரே எனக்கு பணம் வேண்டாம் வேலை கொடுங்க. (பாடல் எழுதும் பணி) என்று கவிஞர் சொல்கிறார். வேலை குடுக்கும்போது குடுக்குறேன் இப்ப பணத்தை வாங்கிக்க. இது தலைவர். இல்லங்க தலைவரே வேலை தான் வேணும் பணம் வேண்டாம். நான் புறப்படுறேன். என்று சொல்லி விட்டு கிளம்புகிறார் முத்துலிங்கம். அவர் காலத்தில் புரட்சித்தலைவரிடம் உதவி பெறாத கட்சிக்காரர்களே இல்லை எனலாம். ஆனால் எம்.ஜி.ஆரிடமே வாங்க மறுத்த மாண்பு கவிஞருக்கு மட்டுமே உண்டு. இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதல்மைச்சராக வந்த பிறகு அந்த ஆண்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருதை முத்துலிங்கத்திற்கு வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய எம்.ஜி.ஆர். தி.நகர் சம்பவத்தை குறிப்பிட்டு, உழைக்காமல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாதுனு சுயமரியாதையோடு இருக்கும் முத்துலிங்கத்திற்கு பாரதிதாசன் விருதை கொடுப்பதுதான் பொருத்தமானது.
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. மீனவ நண்பன் படத்தில் இடம் பெற்ற தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
எந்தன் மனக்கோவிலில் தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே வரும்
வரம் கேட்கிறேன்
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார் கவிஞர். இவரின் இன்னொரு சிறப்பு, வாலி ஒரு கவிதையையோ, கட்டுரையையோ எழுதி முடித்தவுடனேயே அதை படித்து காண்பிப்பது முத்துலிங்கத்திடம் தான். அத்தனை இலக்கியச் செழுமையுள்ளவர்.
மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் முன்னோட்ட வெளியீடு 21.8.2016
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு 14.8.2016
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 - டிஜிட்டல் வெளியீடு - 19.8.2016
ரிக் ஷாக்காரன் - திரைப்படம் வெளியீடு - செப்டம்பர் 2016
உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிட்டல் வெளியீடு - தீபாவளி - 2016
மக்கள் திலகத்தின் பொன்விழா நிறைவு படங்கள்
தாலிபாக்கியம் - ஆகஸ்ட் 2016
தனிப்பிறவி - செப்டம்பர் -2016
பறக்கும் பாவை - 2016
பெற்றால்தான் பிள்ளையா - டிசம்பர் -2016
http://tamil.webdunia.com/article/re...0900014_1.html
எம்.ஜி.ஆர்.-க்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (10:15 IST)
தமிழக சட்டசபையில் நேற்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு திமுக கொள்கைகளை பரப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக மீன் மற்றும் பால்வளத்துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி மற்றும் ஒளிவிளக்கு படங்களில் இருந்து பாடல் பாடினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ ரத்தினசபாபதிக்கு ஆதரவு அளிக்க, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு திரைப்படங்களில் நடிகர்கள் உதட்டை மட்டுமே அசைக்கின்றனர். அந்த பாடலை ஒருவர் எழுதுகிறார். ஒருவர் இசையமைக்கிறார். ஒருவர் பாடுகிறார் என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த போது இந்த பாடல்களை பாடியுள்ளார் என பேசினார். பின்னர் திமுக உறுப்பினர்கள் சுறுசுறுப்புடன் காணப்பட்டனர்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். திமுக பொருளாளராக இருந்தவர், அவரது படங்களை பார்க்க மகாலட்சுமி தியேட்டருக்கு பலமுறை சைக்கிளில் சென்றிருக்கிறேன் என கூறினார். மேலும் திமுக கொள்கைகளை மக்களிடையே பிரபலப்படுத்தியதற்காக எம்.ஜி.ஆர்.-க்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
from dinamani
http://www.dinamani.com/tamilnadu/20...cle3569997.ece
எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் செல்வேன்
எம்ஜிஆரின் "ஒளிவிளக்கு' திரைப்படத்தை 3 முறை சைக்கிளில் சென்று பார்த்ததாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியது:
45 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு காத்திருப்போம். ஒளிவிளக்கு படத்தில் இருவரும், "படி அரிசி கிடைக்கும் காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே' என்றெல்லாம் பாடியிருப்பர். இப்போது விலையில்லா அரிசி அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.
அதன் பிறகு, "ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அதை ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம்' என்ற வரியையும் ரத்தின சபாபதி குறிப்பிட்டார்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு:
யாரையும் உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்: யாரோ எழுதிய பாடலுக்கு அவர் வாய் அசைத்து இருக்கிறார். அவ்வளவுதான்.
செல்லூர் ராஜூ: எம்ஜிஆர் சொல்லித்தான் இதுபோன்ற தத்துவப் பாடல்கள் எழுதப்பட்டன.
மு.க.ஸ்டாலின்: இதுபோன்ற பாடல்களைப் பாடி எத்தனையோ கலைஞர்கள் நடித்துள்ளனர். பல படங்களில் இதுபோன்ற பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விவாதிக்கத் தயாராக உள்ளோம். நீங்கள் தயாரா?
அமைச்சர் ஜெயக்குமார்:
சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா! போன்ற தத்துவப் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் படத்தில்தான் வந்தன.
மு.க.ஸ்டாலின்: எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக இருந்தபோது வந்த திரைப்படம் ஒளிவிளக்கு. அந்தப் படத்தில் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் எம்ஜிஆர் நடித்தார். நானே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று அந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன் என்றார்.
Last edited by SUNDARA PANDIYAN; 14th August 2016 at 01:53 AM.
தினத்தந்தி -13/08/2016
![]()
Last edited by sivaa; 14th August 2016 at 12:51 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
மன்னிக்கவும் சார். எனக்கு தவறான நோக்கம் இல்லை. உங்களுக்கு வருத்தம் போல் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வரியை நீக்கிவிட்டேன்.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் இல்லை. நிறைய தத்துவப் பாடல்கள் இதுபோல இருக்கிறது. பொன்னூஞ்சல் படத்தில் வரும் முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு பாட்டில்,
பால் சுரக்கும் நெல்மணிக்கு மங்கைப் பருவம்
என் கண்மணிக்கும் தேன்சுரக்கும் கன்னிப் பருவம்
மன்மதனும் தொட்டுவெச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கு உச்சம் இருக்கு...
இதுபோல நிறைய பாடல்கள் உண்டு. ரசனையான பாட்டுதான். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன். பால் சுரக்கும் நெல்மணிக்கு .... அர்த்தம் புரியவில்லை. நெல்மணிக்கா, இல்லை வேற எதாவது வார்த்தையா? இல்லை எனக்குத்தான் சரியா காதில் விழவில்லையா?
டிஜிட்டலில் வெளியாகிறது எம்ஜிஆரின் ‛ரகசிய போலீஸ் 115'
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாத காவியங்கள். மக்களை மகிழ்ச்சிபடுத்திய அற்புதமான படங்கள். அவற்றில் அப்போது சூப்பர்ஹிட்டான பல படங்கள் தற்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. விரைவில் ரிக்ஷாக்காரன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து வருகிறது ரகசிய போலீஸ் 115.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெற்ற காலத்தில் அதே பாணியில் மக்கள் திலகம் நடித்த படம் இது. 1968ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை அன்றைய பிரமாண்ட இயக்குனர் பி.ஆர்.பந்துலு இயக்கி, தயாரித்திருந்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், அசோகன் வில்லன்கள். நாகேஷ் காமெடியன், கே.டி.சந்தானம், திருச்சி சவுந்தர்ராஜன், என்னத்த கண்ணையா, ஜஸ்டின், வெண்ணிற ஆடை நிர்மலா, பத்மினி, புஷ்பலதா, எஸ்.என்.ஜானகி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம். எம்.எஸ்.விசுவநாதன் தேனினும் இனிய பாடல்களை பொழிந்திருப்பார்.
இந்தப் படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. பாடல்களும், பின்னணி இசையும் நவீன டால்பி இசை வடிவில் கொண்டு வரப்படுகிறது. அகன்ற திரையிலும் திரையிடப்பட இருக்கிறது. சண்முகம் பிலிம்ஸ் சார்பில் பி.சண்முகம் வெளியிடுகிறார்.
Bookmarks