-
8th September 2016, 09:18 PM
#2251
Junior Member
Senior Hubber
K Sankar அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை அவர்களின் முகநூல் பதிவு.

எம்.ஜி.ஆர். M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை.
ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.
1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?
‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
-
8th September 2016 09:18 PM
# ADS
Circuit advertisement
-
8th September 2016, 09:37 PM
#2252
Junior Member
Senior Hubber

நன்றி -சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல் பதிவு.
தமிழீழ மக்கள் மனங்களிலே எம்.ஜி.ஆர்.அவர்கள் நீங்காத இடம் பெற்றிருக்கிறார் என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் நான் காணக்கூடியதாக இருந்தது.பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர்,”இலங்கைத் தீவினிலே தமிழினம் கேட்பார் எவருமின்றி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத் தமிழர்களுக்காகத் ஓங்கி குரல் கொடுத்தவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் .
தமிழக முதல்வராக இருந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் விடுதலையை வென்றெடுக்க வல்ல தலைமையாக எங்கள் தேசியத் தலைவரை இனங்கண்டு ஆதரித்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவது ஒன்றே தமிழீழத் தமிழர்களுக்கு மீட்சி தரும் என்பதை தீர்க்கதரிசனமாக எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு அதற்கென காத்திரமான பங்களிப்பையும் வழங்கினார்.
சிறீலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மக்கள் மீது குண்டு மாறிப் பொழிவதும்,துப்பாக்கியால் சுட்டும்,சிறைப்பிடித்து வதைத்தும் துன்பம் அனுபவிப்பது கண்டு துடித்தார்.ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் கண்டுணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்தார்.
இதன் விளைவாகவே தமிழீழ மக்களுடைய விடுதலையை ஆக்கபூர்வமாக மீட்டெடுக்கக் கூடிய அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களிற்கான தீர்க்கதரிசனம் மற்றும் நுண்மதிமிக்க விலைபோகாத தலைமையுமாக எங்கள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை கண்டுணர்ந்து மனித நேயத்தோடு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்தார். தாம் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வரட்டுமென தமிழீழ விடுதலைக்கான செயற்கரிய பங்களிப்புகளைச் செய்தார். தமிழீழத்திலிருந்து தாய்த் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த தமிழர்களுக்கு பல நல்வாய்ப்புத் திட்டங்களை வகுத்தார்.
தனது அரசு,கட்சி,சொந்த செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழீழ மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாகவும்,நன்றிப் பெருக்கோடும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழத்தின் விடியலுக்காக எதுவித பிரதிபலனும் பாராது பாடுபட்ட அந்த நல்ல உள்ளத்தினை எங்கள் நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறோம்”என்றார். இதுதான் ஒவ்வொரு தமிழீழத் தமிழர்களின் உணர்வுகள்..
(2006 ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து ……)
- ஓவியர் புகழேந்தி
-
8th September 2016, 11:01 PM
#2253
Junior Member
Diamond Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN

பதிவிட்டமைக்கு நன்றி
-
8th September 2016, 11:56 PM
#2254
Junior Member
Diamond Hubber

அன்பு நண்பர் திரு கலியபெருமாள் (புதுச்சேரி) அவர்களின் மகள் திருமணத்தில் மணமக்களை காண்போர் கவரும் வண்ணம் கோல ஓவியத்தில் வரைந்திருந்தார்கள்.
Last edited by ravichandrran; 9th September 2016 at 12:05 AM.
-
9th September 2016, 12:19 AM
#2255
Junior Member
Senior Hubber

குழந்தையும் தெய்வமும்
குழந்தைகளின் சிரிப்பை விட மக்கள் திலகத்தின் சிரிப்புதான் கள்ளமில்லாமல் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. கவர்ச்சியான சிரிப்புடன் பார்கிறவர்களை காந்தமாக இழுக்கும் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பார்க்க பார்க்க உற்சாகம் 100% கேரண்டி.
-
10th September 2016, 09:15 AM
#2256
Junior Member
Senior Hubber

ஹாஸ்டலில் படிக்கும் தன் பிள்ளைகளை தன் தாயுடனும் மனைவியுடனும் காணச் சென்ற மெல்லிசை மன்னர் அங்கு தன் பிள்ளைகளுக்கு சத்தான உணவு இல்லை பள்ளியில் கெடுபிடிகள் அதிகம் என்று தன் தாயின் வருத்தத்துக்கு இணங்கி ஏற்காட்டிலேயே ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி தன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல ஒரு காரையும் வாங்கி கொடுத்து தன் தாயையும் அவர்களை கவனித்துக்கொள்ள செய்தாராம்!
ஊருக்கு திரும்பியவரிடம் தலைவர் ,:விசு நீ செய்தது சரியல்ல கட்டுப்பாடுகளும் படிக்கும் காலத்தில் உணவில் சுவைக்கு அடிமையாகாமல் இருத்தலுமே உன் பிள்ளைகளை சீர்படுத்தும் என்றாராம்!
அந்த சமயத்தில் அதற்கு வருந்திய மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் தன் பிள்லைகளுக்கு சரியாக படிப்பு ஏறாததும் தன் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையானதையும் கண்டு தலைவரின் அறிவுரையை எண்ணி வருந்தினாராம்!!
வெங்கட்ராமன் தியாகு அவர்களின் முகநூல் பதிவு- நன்றி.
-
10th September 2016, 09:17 AM
#2257
Junior Member
Senior Hubber
நன்றி - மயில்ராஜ் அவர்களின் முகநூல் பதிவு
-
10th September 2016, 02:59 PM
#2258
Junior Member
Platinum Hubber
இன்று (10/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் " ஒளிபரப்பாகிறது

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
10th September 2016, 03:01 PM
#2259
Junior Member
Platinum Hubber
நாளை (11/09/2016) காலை 11 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் , புதுமையாக, வலது, இடது கரங்களில் வாள் வீச்சில் அசத்திய
"நீரும் நெருப்பும் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
-
10th September 2016, 03:02 PM
#2260
Junior Member
Platinum Hubber
நாளை (11/09/2016) இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "விவசாயி " ஒளிபரப்பாகிறது .

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
Bookmarks