Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசந்த மாளிகை-1972(Completing 44 years )

    எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

    மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
    அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

    ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
    ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

    கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
    விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

    தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
    விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

    குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
    முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

    தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
    பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

    வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
    கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

    மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
    அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

    மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
    இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

    திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
    விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

    அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

    மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
    வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

    வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
    எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

    கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
    எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

    கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
    விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

    கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
    இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

    ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
    பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

    வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
    கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

    அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
    தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

    வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
    கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

    வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
    ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

    இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
    வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

    உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
    கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

    குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
    கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

    உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
    கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

    வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
    இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

    காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
    சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

    பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
    திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

    ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
    பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

    பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
    நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

    இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
    வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

    குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
    மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

    கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
    எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

    பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
    பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

    யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
    பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

    முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
    அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

    கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
    வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks sivaa, venkkiram thanked for this post
    Likes sivaa, Harrietlgy, venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •