WhatsApp மூலம் அறிமுகமாகிய நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, நடிகர்திலகம் சிவாஜி நண்பர்கள் குழு சந்திப்பு, அக்டோபர் 2 ஆம் நாள், சனிக்கிழமை, காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, சென்னை, பல்லாவரம், ஹோட்டல் பல்லவ்-இல் நடைபெற்றது.
சுமார் 100 ரசிக நண்பர்கள் கலந்துகொண்டு, நடிகர்திலகம் பற்றிய தங்கள் கருத்துக்களை, உணர்வுகளை பரிமாறிக்கொண்டார்கள். மதிய உணவுடன் சந்திப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
Bookmarks