Page 262 of 400 FirstFirst ... 162212252260261262263264272312362 ... LastLast
Results 2,611 to 2,620 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2611
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    கோவையில் சென்ற வருடம் மக்கள் திலகத்தின் 30 படங்கள் 40 முறை திரையிடப்பட்டுள்ளன. (சில படங்கள் 2 முறை). சென்ற வருடத்தின் 365 நாட்களில் 244 நாட்கள் மக்கள் திலகத்தின் படங்கள் கோவையில் திரையிடப்பட்டு உள்ளன. இது ஒரு வரலாற்று சாதனை. ஒரு நடிகரின் படங்கள் அவர் மறைநத பின்னும் ஒரு ஊரில் வருடத்தில் 244 நாட்கள் திரையிடப்பட்டு மக்கள் ஆதரவுடன் ஓடுவது கின்னஸ் சாதனை.

    மக்கள் திலகம் புகழ் வாழ்க.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2612
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2613
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2614
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று முதல் கோவை
    டிலைட் திரையரங்கில் விவசாயி.

  6. #2615
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சுந்திர பாண்டியன் அவர்களுக்கு,

    நமது திரியில் ஜனவரி மாதம்

    கோவையில் சென்ற ஆண்டு மக்கள் திலகத்தின் சாதனைகளை

    மிக விரிவாக பதிவு செய்திருந்தேன்.

    அதைப் பார்க்கவும்.

  7. #2616
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Cinema Expressல் வெளிவந்து கொண்டிருக்கும்
    அபூர்வத் தகவல்கள்:
    01 - எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் பாடல்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள்: எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ். ஜெயராமன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோர். ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆருக்காக "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் "அமுதத் தமிழில் எழுதும்" என்ற ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார். ("நீதிக்கு தலைவணங்கு" படத்தில் எம்.ஜி.ஆர். இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது, "எத்தனை மனிதர்கள் உலகத்திலே" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் பின்னணியில் ஒலிக்குமே தவிர, எம்.ஜி.ஆருக்காகப் பின்னணி கொடுக்கப்பட்ட பாடலல்ல அது).

    கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இரு பாடல்களை எம்.ஜி.ஆருக்காகப் பாடியுள்ளார். ஒரு பாடல் இராக ஆலாபனை பாடல். மற்றது நரிக்குறவர் பாடும் டப்பாங்குத்துப் பாடல். பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்துப் பாடலும் இதுதான். "நவரத்தினம்" என்ற படத்தில் வாணி ஜெயராமுடன் பாலமுரளி இணைந்து பாடும் அப்பாடல் "குருவிக்கார மச்சானே" என்ற பாடலாகும்.
    சர்வாதிகாரி படத்தில் எம்.ஜி.ஆருக்காக இசையமைப்பாளர் எஸ்.தக்ஷிணாமூர்த்தியும், அஞ்சலிதேவிக்காக பி.லீலாவும் குரல் கொடுத்துப் பாடிய பாடல் "ஆணழகா எனது கைகள்" என்ற பாடலாகும். எஸ்.தக்ஷிணாமூர்த்தி பாடிய ஒரே படம் இது தான். இதே படத்தில் எம்.ஜி.ஆரும், எம்.சரோஜாவும் பாடுவதாக உள்ள "என் அத்தர் கடைச் சரக்கும்" என்ற பாடலிலும் எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்தது எஸ்.தக்ஷிணாமூர்த்திதான்.

    எம்.ஜி.ஆருக்காகக் பல (ஆண்) பாடகர்கள் குரல் கொடுத்துள்ளது ஒரு வியப்பான செய்தியல்ல. எம்.ஜி.ஆருக்கான ஒரு பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தி. "காதல் வாகனம்" படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வேடமிட்ட எம்.ஜி.ஆர்., வில்லன் அசோகனை மயக்கும் காட்சியில் "இன்னாமேன் பொண்ணு நான்" என்ற பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆருக்காக எல்.ஆர்.ஈஸ்வரியே பாடியிருக்கிறார்.

    பின்னணிப் பாடகர் கோவை செüந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காக ஒரு முழுப் பாடலைப் பாடவில்லை என்றாலும், "உரிமைக்குரல்" படத்தில் வரும் "மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை" என்ற பாடலின் கடைசி இருவரிகளைப் பாடியிருப்பார். பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் லதாவுக்காகப் பாடியுள்ளனர்.
    *
    ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போது நடனப் பயிற்சியாளருக்குத்தான் வேலையிருக்கும். நடனப் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சியாளருக்கும் வேலை கொடுத்த முதல் பாடல் காட்சி "அரச கட்டளை" படத்தில் "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்" என்ற பாடல் காட்சிதான்.
    *
    எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் மட்டுமின்றி, தமிழ்த் திரையிலேயே ரோஷனாரா பேகம் என்ற பெண் கவிஞர் எழுதிய ஒரே பாடல் "குடியிருந்த கோயில்" படத்தில் இடம் பெற்ற "குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாடலாகும்.
    *
    ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா". ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படமும் இதுவே.
    *
    பி.மாதவன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "தெய்வத்தாய்". கே.பாலசந்தர் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதிய ஒரே படமும் இதுதான். இயக்குநர் கே. பாலசந்தர் திரையுலகுக்கு அறிமுகமான திரைப்படமும் இதுதான்.
    *
    மக்கள் திலகம், நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".
    *
    எம்.ஜி.ஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் "முகராசி" மட்டுமே.
    *
    எம்.ஜி.ஆருடன் "எங்கள் தங்கம்", "நவரத்தினம்" ஆகிய இரு படங்களில் ஏ.வி.எம்.இராஜன் இணைந்து நடித்துள்ளார்.
    *
    எம்.ஜி.ஆரும் - தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான கே.பாலாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் "என் கடமை".
    *
    எம்.ஜி.ஆரின் புகழ் பாடும், "கண்டு கொண்டேன்", "கண்ணும் இல்லே" என்ற இரு பாடல்கள் "தர்மதேவன்" என்ற படத்தில் இடம் பெற்றன.
    *
    எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத படங்கள், "சாயா", "சிலம்புக் குகை", "இன்பக் கனவு", "அன்று சிந்திய இரத்தம்", "ஊமையன் கோட்டை", "மாடி வீட்டு ஏழை", "ஏசுநாதர்", "ரிக்ஷா ரங்கன்", "இதுதான் என் பதில்", "நல்லதை நாடு கேட்கும்","லலிதாங்கி" மற்றும் செந்தூர் பிலிம்ஸின் பெயரிடப்படாத படம் ஆகியனவாகும்.
    *
    எம்.ஜி.ஆர். தாம் நடிக்கும் படங்களில் தமக்குரிய ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்காரம் முதலியவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா" படம் முழுவதும் ஒரு மலிவான பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து, கிணற்றில் தூர் எடுக்கும் தொழிலாளியாக எளிமையாக நடித்திருப்பார். மேலும், தமக்குரிய ஒரு சிறப்புக் கதையமைப்பு என்ற கோட்டைத் தாண்டி வந்து அவர் விரும்பி நடித்த படமிது.
    *
    நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று பல வழிகளிலும் திரையுலகில் தம் திறமையை நிலைநாட்டிய எம்.ஜி.ஆர், கதை எழுதிய ஒரே படம் "கணவன்" படமாகும்.
    *
    எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். பக்கம் நீதி இருப்பதாகவும் மற்றவர்கள் அவருக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும். ஆனால் "நீதிக்குத் தலை வணங்கு" படத்தில் மட்டுமே, மற்றவர் பக்கம் நீதி இருப்பதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும்.
    *
    எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்த படங்கள்: நாடோடி மன்னன், இராஜா தேசிங்கு, எங்க வீட்டுப் பிள்ளை, ஆசை முகம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டுப் பொன்னையா,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே,ஊருக்கு உழைப்பவன், எங்கள் தங்கம், தேர்த் திருவிழா, கலையரசி ஆகிய 18 படங்கள்.
    *
    எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்பவியல் முடிவாகவே இருக்கும். இருப்பினும் அவர் நடித்த பாத்திரங்கள், இறப்பதாக 11 படங்கள் அமைந்திருக்கும். என் தங்கை, நாம், மதுரை வீரன், இராஜா தேசிங்கு, இராணி சம்யுக்தா, பாசம், பணக்காரி, அடிமைப் பெண், நீரும் நெருப்பும், கலையரசி, நேற்று இன்று நாளை ஆகியன அப்படங்கள்.
    *
    எம்.ஜி.ஆர் நடித்த 11 படங்களுக்கு மு.கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார். நாம், இராஜகுமாரி, மந்திரிகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம் ஆகியன அந்த 11 படங்கள்.
    *
    எம்.ஜி.ஆர். படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் 11 பேர் கதை-வசனம் எழுதியுள்ளனர். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம்,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் ஆகியோர்.
    *
    எம்.ஜி.ஆருடன் மிக அதிகமான திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை, கன்னித்தாய், முகராசி, அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், காவல்காரன், கணவன், புதிய பூமி, தேர்த் திருவிழா, சந்திரோதயம், காதல் வாகனம், கண்ணன் என் காதலன், எங்கள் தங்கம், தாய்க்குத் தலைமகன், ஒருதாய் மக்கள், இரகசிய போலீஸ் 115, அரசகட்டளை, தேடி வந்த மாப்பிள்ளை, நம்நாடு, இராமன் தேடிய சீதை, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில், என் அண்ணன், நீரும் நெருப்பும், குமரிக்கோட்டம், பட்டிக்காட்டுப் பொன்னையா என்று 27 படங்களில் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். ஜோடி இணைந்து நடித்தனர்.
    *
    எம்.ஜி.ஆருடன் மட்டுமே தமிழில் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர் இராதா சலூஜா. நடித்த திரைப்படங்கள் - இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க.

    Hope my generation members enjoyed.
    Dr K B Elango Salem.

  8. #2617
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    திரு சுந்திர பாண்டியன் அவர்களுக்கு,

    நமது திரியில் ஜனவரி மாதம்

    கோவையில் சென்ற ஆண்டு மக்கள் திலகத்தின் சாதனைகளை

    மிக விரிவாக பதிவு செய்திருந்தேன்.

    அதைப் பார்க்கவும்.
    திரு. ரவிசந்த்திரன் அவர்களுக்கு,

    ஜனவரி மாதம் நான் திரிக்கு வரவில்லை. அதனால் கவனிக்கவிலலை. உங்கள் பதிவை நிச்சியம் தேடிப் பார்த்து படிக்கிறேன். தகவலுக்கு நன்றி சார்.

  9. #2618
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    நன்றி - கனகராஜா ஆண்டியா பிள்ளை முகநூல்

  10. #2619
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் தீபாவளி திருநாள் முதல் மக்களை சந்திக்க கோடீஸ்வர ஜே.பி. வருகிறார்....

    பராக்... பராக்... பராக்...

  11. #2620
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post


    என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் தீபாவளி திருநாள் முதல் மக்களை சந்திக்க கோடீஸ்வர ஜே.பி. வருகிறார்....

    பராக்... பராக்... பராக்...
    தகவலுக்கு நன்றி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •