Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் விருதுகளும் .

    நிறைய பேர் விருதுகளை பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். செய்து இந்த உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

    இந்திய அரசின் விருது.(சிறந்த நடிகர்)

    இந்த விருது ஏற்படுத்த பட்டதே 1967 ஆம் ஆண்டில்தான். நடிகர்திலகம் நடிக்க வந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முடிவுற்ற நிலை. இந்த விருது 1952 முதலே இருந்திருக்குமானால் , அவருக்கு பராசக்தி,அந்த நாள்,உத்தமபுத்திரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன்,நவராத்திரி, என்ற 1967 க்கு முற்பட்ட படங்களிலும் ,தில்லானா மோகனாம்பாள்,தெய்வ மகன்,வியட்னாம் வீடு,ஞான ஒளி ,கெளரவம்,தங்க பதக்கம், முதல் மரியாதை போன்ற 1967 க்கு பிற்பட்ட படங்களுக்கும் சாத்தியம்.

    மொழி மாற்ற படங்கள் இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,பாபு போன்ற படங்களுக்கு சாத்தியம் இல்லை.இது தேர்வு குழு தகுதி அடிப்படை. மொழி மாற்ற படங்கள்,இரவல் குரல் இவை தேர்வுக்கு பங்கு பெற முடியாது. 1971 இல் சவுந்தரா கைலாசம் சிவாஜிக்குத்தான் என்று சொல்லி, அங்கு சென்று வேறோர் பெயரை .சொல்லி ,தேர்வு பிரச்சினைக்கு உள்ளானதுடன் ,அகில இந்தியாவும் கை கொட்டி நகைத்தது. 1972 சட்ட சபையில் நெடுஞ்செழியன் உண்மையை போட்டு உடைக்க, சம்பந்த பட்ட நபர் நாணி ,அதனை திருப்பி விட்டார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனை பற்றி முழு விவரம் வேண்டுவோர் 1972 துக்ளக் இதழ்களை துழாவினால் உண்மைகள் வெளிச்சமாகும்.

    1985 இல் முதல் மரியாதைக்குத்தான் என்று முடிவான நிலையில் ,ஜெயா (இத்தனைக்கும் இவர் சிவாஜி ரசிகர்) எம் .பீ பிரச்சினையை மனதில் வைத்து கடைசி நிமிடத்தில் கழுத்தறுத்ததை ,சக தேர்வு குழு உறுப்பினர் கோமல் ,சுபமங்களா இதழில் விரிவாக எழுதியுள்ளார்.

    அதனால் இந்த விருது ,நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பு பொற்காலத்தில் (1952 to 1966) ஆரம்பிக்க படவே இல்லை.பிறகு தி.மு.க ,அமிதாப் போன்ற காரணிகள் குறுக்கே வந்தன.

    Film fare விருது (தமிழ் மொழி சிறந்த நடிகர்)

    இந்த விருது தமிழுக்கு ஏற்படுத்த பட்டதே 1972 ல்தான் . இதுவும் பிராந்திய அளவு தேர்ந்தெடுப்பதே. ஆனாலும் ஓரளவு புகழ்பெற்ற விருது.கமல் கூட குழந்தை தனமாக உண்மை தெரியாமல் (அல்லது சாமர்த்தியமாக மறைத்து) இதை பற்றி அரைகுறையாய் கூறியுள்ளார். இது ஏற்படுத்த பட்ட முதலிரண்டு வருடங்கள் சிவாஜிக்கே சென்றது. (ஞான ஒளி ,கெளரவம்).1974 இல் நான் அவனில்லை,தங்க பதக்கம் போட்டியில் நான் அவனில்லை ஜெமினிக்கு சென்றது. (நிஜமாகவே நல்ல தேர்வு).பிறகு சிவாஜி ஸ்டார் மட்டுமே ஆகிவிட்ட 1975 முதல் 1984 வரை குறிப்பிடத்தக்க படங்களே இல்லை. 1985 இல் முதல் மரியாதைக்கு மரியாதை வழங்க பட்டது.

    அவர் உன்னதம் தொட்ட காலங்களில் Film Fare விருதே கிடையாது.(தமிழுக்கு)

    தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது.


    இந்த விருது ஆரம்பிக்க பட்டதே 1967 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு. இதன் லட்சணம் உங்களுக்கே தெரியும். அதிலும் ஏதோ காரணங்களுக்கு 1971 முதல் 1976 வரையும், 1983 முதல் 1987 வரை இந்த விருது வழங்க படாமல் நிறுத்து வைக்க பட்டுள்ளது. அதையும் மீறி தமிழக அரசு மனமேயில்லாமல் தெய்வ மகனுக்கு வழங்கியாக வேண்டிய கட்டாயம்.

    இப்போது புரிந்திருக்குமே ,இந்த விருதுகள் அவர் உன்னதம் தொட்ட முதல் 15 வருடங்கள் ஏற்படுத்த படவே இல்லை.பிறகு மிக மோசமான அரசியல் மூன்று முறை விளையாடி உள்ளது.

    இனியாவது நம் ரசிகர்கள் உண்மை புரிந்து புலம்புவதை நிறுத்தி கொள்ளவும். இந்த உண்மைகள் நிறைய திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கே தெரியாது.

    அது சரி, அவர் கலைமாமணி பெற்றது 1962 இல். இது கூட விக்கி யில் தவறாக குறிக்க பட்டுள்ளது. ஆதாரத்துடன் திருத்தவும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks sivaa, Harrietlgy thanked for this post
    Likes sivaa, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •