-
6th November 2016, 10:00 PM
#2471
Junior Member
Senior Hubber
நினைப்போம். மகிழ்வோம் -131
"கௌரவம்."
தகுதியுள்ள தனக்கு நீதிபதி பதவி கிடைக்காத
கோபத்தில் மோகன்தாஸ் எனும் கொலைக் குற்றவாளிக்கு விடுதலை வாங்கித் தரப் போவதாக தலைவர் சூளுரைப்பார்.
சின்னத் தலைவர் வியப்புடன் கேட்பார்.. "அது யாரால முடியும் பெரியப்பா?"
"என்னால முடியும்டா!" என்பார் தலைவர்.
தனது தொழில் திறமையின் மீது கர்வம் மிகுந்த
அபார நம்பிக்கை கொண்ட பாரிஸ்டர் ரஜினிகாந்த்
என்கிற கதாபாத்திரத்தை ஒரு சின்னஞ்சிறு வார்த்தைக்குள் புகுத்திக் காட்டுகிற மகா வித்தை
அது.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2016 10:00 PM
# ADS
Circuit advertisement
-
6th November 2016, 11:57 PM
#2472
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 150 – சுதாங்கன்.

ஒப்பனை செய்த பிறகுதான் சிவாஜி அந்த குறிப்பிட்ட வேடத்துக்கான உடைகளை அணிந்து கொள்வார்.
மாலையோ, இரவோ படப்பிடிப்பு முடிந்ததும் ஒப்பனை அறைக்குள் வந்து, உடைகளை கழற்றிவிட்டு,முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி, பவுடரை நன்றாக துடைத்துவிட்டு அதன் பின்னர் காலையில் வீட்டிலிருந்து அணிந்து வந்த வேட்டி – சட்டையைப் போட்டுக்கொள்வார். அவருடைய உடைகள் ஒரு நாளாவது கசங்கியோ, கலைந்தோ இருந்ததை யாருமே கண்டதில்லை.
அழுக்கு என்பது சிவாஜி அறியாத ஒன்று. கண்ட இடத்தில் நினைத்த நேரத்தில் காறி எச்சில் உமிழ்வது, சாப்பிட்டு முடிந்ததும் வாஷ்பேசினில் கை கழுவும்போது வாய் கொப்பளித்து இஷ்டத்துக்கு துப்புவது, சாப்பாட்டு மேஜையில் மற்றவர்கள் எதிரில் நீண்ட ஏப்பம் விடுவது, இருமுவது, தும்முவது முதல் போன்ற அநாகரீக பழக்க வழக்கங்களை அவரும் செய்ய மாட்டார். மற்றவர்கள் என்ன வீட்டில் உள்ள குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை யாரும் செய்ய அனுமதிக்கவும் மாட்டார். தன்னை அறியாமல் யாராவது அப்படிச் செய்துவிட்டால் அவர்களை ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வையிலேயே அவர்களின் உயிர் போய்விடும்.
`அன்றாட வாழ்க்கையில் சுத்தமாக வாழ்வது எப்படி?’ என்பதை சிவாஜியிடம் கற்றுக்கொள்ளவேண்டுமென்பார் கதாசிரியர் ஆரூர்தாஸ்.
ஆங்கிலக் கல்வியறிவு பெறக்கூடிய வாய்ப்பு வாழ்க்கையில் தனக்குக் கிடைக்காமல் போனாலும் கூட, ஆண்டவன் சிவாஜிக்கென்று அளித்த அரிய வரப்பிரசாதமான நினைவாற்றல், கேள்வி ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒரு பட்டப்படிப்பு படித்தவருக்கான அறிவையும் நாகரீகத்தையும் தனக்குத்தானே வளர்த்துப் பெருக்கிக் கொண்டவர்.
சரளமாக ஆங்கில மொழி பேசும் பயிற்சியை பெறாவிட்டாலும் கூட பிறர் பேசுவதை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றல் பெற்றவர் சிவாஜி. ஆங்கில கலாசாரத்தை அதிகம் விரும்பக்கூடியவர்.
தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பிறமொழிகளை ஓரளவுக்குப் பேசவும், மற்றவர்கள் பேசும்போது அவற்றை நன்கு புரிந்து கொண்டு தானும் அவர்களுடன் கலந்து கொஞ்சம் கொஞ்சம் பேசி சமாளித்து விடுவார். இளமையில் இல்லாமையும் கல்லாமையும் சேர்ந்து இருந்தும் கூட இயற்கை அறிவு பெற்றிருந்த காரணத்தால், அதை ஒன்றுக்குப் பத்தாக்கி பெருக்கிக் கொண்டு வாழ்க்கையில் உயர்ந்து காட்டியவர்.
அவர் வாழ்ந்த `அன்னை இல்லம்’ வீடு 1959 வருடவாக்கில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கி புதுப்பித்தும் தனது தாயார் ராஜாமணி அம்மாளின் நினைவாக `அன்னை இல்லம்’ என்று பெயரிட்டார் சிவாஜி. அந்த நாட்களில் இரண்டு லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. மேற்கு திசை பார்த்த அந்த இல்லத்தின் மொட்டை மாடி முகப்பில் ஒரு சிறுவன் கையில் புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருக்கும் பொம்மை உண்டு. அதைப் பற்றி சிவாஜி சொல்லும்போது, `அந்த பொம்மையை ஏன் அங்கே வெச்சிருக்கேன் தெரியுமா? அதை அண்ணாந்து நான் பார்க்கும்போதெல்லாம் நான் படிக்காதவன் என்பதை ஞாபகப்படுத்துவதற்காக.’
வாழ்க்கையில் தேைவக்கு அதிகமாக வசதிகள் வந்து வாய்த்த போது, அதற்கு ஏற்றவாறு போதிய கல்வி அறிவு பெறாமல் போய்விட்டோம் என்ற ஏக்கம் சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவருக்குமே உள்ளுக்குள் இருந்ததை பலரும் பக்கத்தில் இருந்து உணர்ந்திருக்கிறார்கள். அதை நண்பர்களுடன் வெளிப் படுத்தியும் இருந்திருக்கிறார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவருடைய கலை உலக வளர்ச்சிக்கு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் `கல்வி இன்மை’ என்பது ஒரு தடையாக இருந்ததேயில்லை. சிவாஜி `நடை’ ஆயிற்று. இப்போது `பாவ’ த்தை பார்ப்போம்.
ஒருவருடைய உள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சி அவரது முகத்தில் பிரதிபலிப்பதை `முகபாவம்,’ `முகபாவனை’ என்கிறோம்.
இதை வைத்துத்தான் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள்.
நவரசங்கள் எனப்படும் ஒன்பது வகை பாவங்களையும் கதை வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் `நவராத்திரி’ படத்தில் சிவாஜி ஒருவரே, அந்த ஒன்பது விதமான வேடங்களையும் ஏற்று நடித்தார். அதற்கு முன்பு இந்தியாவில் எவருமே புரிந்து காட்டாத ஒரு சாதனை அது.
`தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் அதன் கதாநாயகன் அசல் சண்முகசுந்தரமாகவே மாறி, நாகஸ்வரத்தின் `சீவாளி’யை ஒழுங்காக உதடுகளில் பொருத்தி அதை அளவோடு அசைத்துக் கன்னங்கள் புடைக்க காற்றை உள்ளே செலுத்தி ஊதி, எடுத்த எடுப்பிலேயே `நகுமோ’என்னும் தெலுங்கு கீர்த்தனையின் ராகத்தை வெளிக்கொணர்ந்த அந்த நேர்த்தி.. அந்த இயற்கை பாவனை.. உண்மையில் நாகஸ்வரத்தை வாசித்தது சிவாஜி கணேசன்தான் என்ற பிரமையை மக்கள் மனதில் உருவாக்கி அவர்களை மயக்கி கிறுகிறுக்கச் செய்ய அவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நிலைநாட்டினார்.
அதே போல ` மிருதங்க சக்ரவர்த்தி’ மிருதங்க வித்வான் வேடத்தில் தோன்றி, சைடு பாக்கெட்டுடன் கூடிய கை வைத்த அந்தக்கால `வி’ கழுத்துப் பனியனை போட்டுக்கொண்டு, மிருதங்கத்தை இலக்கணப் பிரகாரம் சரியாக கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு வாசித்த அழகு!
ஏற்கனவே, பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் வாசித்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த `ஒரிஜினல்’வாசிப்புக்குத் தகுந்தவாறு ஒரு நூல் இழை கூட பிசகாமல், விரல்களால் மிருதங்கத்தை தட்டி, அதன் வித்வான்களுக்கே உரித்தான தாளபாவத்தையும், உதடுகளில் கோணல்களையும், நெளிவுகளையும் காட்டி, ‘‘உண்மையில் சிவாஜிதான் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டு வாசித்துக் காட்டுகிறார். இல்லாவிட்டால் அவ்வளவு சுத்தமாக வாசிக்க முடியாது’’ என்று சில வித்வான்களையே சொல்ல வைத்தார்.
இந்த தத்ரூபத்தையும் `தாளகதி’ தவறாமையையும் சரியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமனை வரவழைத்து, வாசிக்கச் சொல்லி, அவர் எதிரில் அமர்ந்து உன்னிப்பாக
கவனித்து தன் உள்ளத்தில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டு அதை அப்படியே படத்தில் பிரதிபலித்துக் காட்டினார். சிலர் சிவாஜி நடிப்பை ‘ஓவர் ஆக்டிங்’ என்று கூட சொல்லுவார்கள்.
`நடிப்பு’ என்பதே மிகைதானே? தான் செய்யமுடியாத ஒன்றை மற்றவர்கள் செய்வதை பார்த்து செய்து காட்டுவதுதானே நடிப்பு?
கிராமப்புறங்களில் பார்த்தால் மரணம் நிகழ்ந்த வீட்டில் பெண்கள் `ஒப்பாரி’ வைத்து அழுது புலம்புவார்கள். அது துக்கத்தின் தாள முடியாத வெளிப்பாடு. சிலருக்கு அழுகையே வராது. அழவும் தெரியாது. முகத்தைக் கைகளால் மூடிக்கொள்வார்கள், அல்லது சம்பந்தப்பட்டவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டு தங்களுடைய நடிப்பு இயலாமை தெரியாமல் இருப்பதற்காக முகத்தை அவர்களுடைய மார்பில் புதைத்து கொண்டுவிடுவார்கள்.
ஒரு சிறு கலைஞன் ஒரு பெருங்கலைஞனைப் பற்றி குறை கூறுகிறான் என்றால், அவன் போல தன்னால் செய்ய முடியவில்லையே, புகழ்பெற முடியவில்லையே என சிறு கலைஞன் பொறாமைப்படுகிறான் என்றுதான் பொருள்.
(தொடரும்)
-
7th November 2016, 01:17 AM
#2473
Junior Member
Senior Hubber
ஆழ்ந்த படிப்பறிவில் விளைந்த
ஆற்றல் மிக்க எழுத்துகள்..
அவற்றில் மின்னும் நிஜங்கள்..
நெஞ்சமெல்லாம் நிறைந்த
நாயகனுக்காக
நிதமும் வளர்க்கும்
ஆய்வு யாகங்கள்..
அத்தனையும்
நாங்கள் பெற்ற யோகங்கள் !
கோபால் சார்...
தங்களின் பிறந்த நாளில்
நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்..
வந்தனங்களும்.
Sent from my P01Y using Tapatalk
-
7th November 2016, 11:12 PM
#2474
Senior Member
Seasoned Hubber
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th November 2016, 11:03 AM
#2475
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Aathavan Ravi
நினைப்போம். மகிழ்வோம் -131
"கௌரவம்."
ஆதவன் சார்,
ஒவ்வொரு தலைப்பாக தாங்கள் கவிதைகளை வார்த்து எங்களுக்கு அளிப்பதை, படிக்கிறோம், மகிழ்கிறோம். நன்றி
-
8th November 2016, 11:06 AM
#2476
Senior Member
Seasoned Hubber
செந்தில்வேல் சார்,
தங்களின் 4000 பதிவுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகள், ஆவணங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. தங்களின் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள்.
Last edited by KCSHEKAR; 8th November 2016 at 11:08 AM.
-
8th November 2016, 11:08 AM
#2477
Senior Member
Seasoned Hubber
திரு.கோபால் சார்,
தங்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட நாள் வாழ்ந்து, நம் கலைவேந்தனைப் போற்றிடும் பணியினைத் தொடர மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்.
-
8th November 2016, 09:41 PM
#2478
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2016, 09:51 PM
#2479
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan - Definition of Style 33
சிவந்த மண் - சுற்றுலா காட்சி
நடிகர் திலகத்தின் நடிப்பின் இலக்கணத்தைப் பற்றிய இத்தொடரில் பல்வேறு பாத்திரங்களில் எப்படி கையாண்டு நடித்திருக்கிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த 33வது தொடரில், அவர் நடிப்பிற்கு தன்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்கிறார், அவருடைய நடிப்பிற்கு உத்வேகம் - ஆங்கிலத்தில் Inspiration -எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் டி.வி.எஸ். அதிபரும், கௌரவம் பாரிஸ்டர் பாத்திரத்திற்கு அந்நாளைய பிரபல வழக்கறிஞர் கோவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களும், திருவருட்செல்வர் அப்பர் பாத்திரத்திற்கு காஞ்சி மகா பெரியவரும் உருவகமளித்ததாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால் யாரும் அதிகம் அறிந்திராத மக்களும் நடிகர் திலகத்திற்கு உத்வேகமளித்துள்ளனர் என்பதும் அதிகம் மக்கள் அறிந்திராத செய்தி.
தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு, அதே போல் ஸ்பெயினில் காலம்காலமாக BULL FIGHT என்ற பெயரில் அந்நாட்டு சுற்றுலாவின் முக்கிய அம்சமாக பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. சற்றே கொடூரமான விளையாட்டாக இருக்கும் இதில் பங்கேற்கும் காளைகளை அடக்க வீர்ர்கள் கூர்மையான கத்தியைப் போன்ற ஆயுத்த்தினால் குத்தி அதை அடக்குவார்கள்.
சிவந்த மண் படத்தில் நாயகி தான் நாயகனோடு பல நாடுகளுக்கு சுற்றுலா போவதாக கனவு காணுகிறாள். இந்த கனவுக் காட்சியின் மூலம் வெவ்வேறு நாடுகள் படத்தில் இடம் பெறுகின்றன. நாயகனும் நாயகியும் ரோம், மாட்ரிட், பாரீஸ் என ஐரோப்பிய முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா போகிறார்கள். ஸ்பெயினில் இந்த காளை அடக்கும் விளையாட்டையும் பார்க்கிறார்கள். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் போகிறார்கள் என்பதாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சிவந்த மண் ஒரே சமயத்தில் தர்த்தி என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டதால், அதில் நடித்த ராஜேந்திர குமார் மற்றும் வகீதா ரஹ்மான் இருவரும் தமிழில் நடிகர் திலகம், காஞ்சனா இருவரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடுத்தடுத்து இரு மொழிக் காட்சிகளும் எடுக்கப்பட்டன. அதில் மேற்கூறிய கனவுக் காட்சியும் ஒன்று.
அந்த கனவுக் காட்சியில் மேற்கூறிய ஸ்பெயின் காளை அடக்கும் காட்சியும் இதே போல் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டும் படமாக்கப்பட்டது.
இந்தக் காட்சியில் பார்வையாளர் காலரியில் நடிகர் திலகம் காஞ்சனா இருவரும் அமர்ந்திருப்பதை காமிரா அடிக்கடி காண்பிக்கும். அவர்களுக்க்குக் கீழேயே ராஜேந்திர குமார் மற்றும் வஹீதா ரஹ்மான் இருவரும் அமர்ந்திருப்பார்கள்.

இந்தக் காட்சியில் காளையை அடக்கும் வீர்ர்கள் - Matadors என அழைக்கப்படுபவர்கள் - அந்தக் கூர்மையான கொம்பினால் குத்தும் போது அவர்களின் உடல் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அந்தக் காளையை அடக்கி முடித்தவுடன் அவர்கள் தரும் போஸ் கம்பீரமாக இருக்கும் உடலை சற்றே வளைத்து தலையை நிமிர்த்தி அவர்கள் பார்க்கும் பார்வையில் வெற்றிக் களிப்புத் தென்படும்.
பொதுவாக இது போன்ற காட்சியில் மற்ற நடிகர்கள் சாதாரணமாக பார்வையாளனாக நடித்து விட்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்புப் பசியில் இந்த போஸ் மிகப் பெரிய தீனியாய் அமைந்து விட்டது.
அந்த போர்வீரனின் வெற்றித் தோற்றம் அவரை வெகுவாக்க் கவர்ந்திருந்தது.

அது மட்டுமின்றி இந்தக் காட்சியில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மிகச் சிறப்பாய் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய சாகசங்கள் நடைபெறும் போது அந்நாட்டு இசை கூடவே எப்படி வாசிக்கப்படும் என்பதை கவனித்திருப்பவரைப் போல இங்கிருந்தே அவ்வளவு அருமையான இசையை பின்னணியில் அமைத்திருப்பார். தனக்கே உரிய தனித்தன்மையில் சற்றும் ஒற்றுமை தென்படாத வகையில் தன் கற்பனையால் அபாரமான இசைக்கோர்வையை அமைத்து அதற்குத் தேவையான ஐரோப்பிய இசைக்கருவிகளின் ஒலியைக் கொண்டு வந்திருப்பார். இந்தக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையை நடிகர் திலகமும் கூட இருந்து கேட்டிருப்பார் போலத் தெரிகிறது.
இந்தப் பின்னணி இசையில் ட்ராம்போன் ட்ரம்பெட் இசைக்கருவிகள் மிகச்சிறப்பா இசைக்கப்பட்டிருக்கும். அந்த மெட்டை மிகவும் நடிகர் திலகம் ரசித்திருக்கிறாரோ என்னவோ, அதை அப்படியே சொர்க்கம் படத்தில் பொன்மகள் வந்தாள் பாட்டில் சரணத்தில் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பார். வெல்வெட்டின் சிரிப்பை ரசிப்பேன் என்ற பல்லவியின் மெட்டு அப்படியே சிவந்த மண் காளை மாட்டை அடக்கும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும்.
விளையாட்டின் போது மற்றவர் பார்வை விளையாட்டில் லயித்திருக்க, நடிகர் திலகமோ அந்த வீர்ர்களின் உடல் மொழியை மிகவும் உன்னிப்பாக உள்வாங்கியிருக்கிறார்.
அதற்கேற்ப அந்த இசையும் அவரை ஈர்த்திருக்க, பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியில் அந்த பின்னணி இசை பல்லவியின் மெட்டாக அமைந்த வுடன் தலைவர் அந்த ஸ்பெயின் மட்டார் வீரனின் உடல் மொழியை அங்கே மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.


பொன் மகள் வந்தாள் பாடலில் பெரும்பாலும் அவர் இந்த ஸ்பெயின் விளையாட்டு வீர்ரின் உடல் மொழியைப் பயன் படுத்தியதற்குக் காரணமும் உள்ளது. ஒரு சாதனையை நிகழ்த்திய பெருமிதமாக அந்த வீர்ர்கள் தங்கள் உடல் மொழியை வெளிப்படுத்துவது போல், இந்தப் பாடல் காட்சியில் தான் செல்வந்தனானதை ஒரு சாதனையாக மனதில் வரித்துக் கொண்டு நாயகனை உருவகப்படுத்தி அதே உடல் மொழியைக் கொண்டு வந்திருக்கிறார் நடிகர் திலகம்.
தன் கண்ணில் படும் எந்த அம்சமானாலும் அதை உள் வாங்கி அதை எங்கே எப்போது எப்படி பிரயோகிப்பது என்கிற உத்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, அதைத் தன் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதையும் கிரகிக்கும் சக்தியும் அவருக்கு உண்டு.
சும்மாவா சொன்னார்கள் அவரை நடிகர் திலகம் என்று.
சும்மாவா சொல்கிறோம் நாங்களெல்லாம் சிவாஜி வெறியர்களென்று..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th November 2016, 07:06 AM
#2480
Senior Member
Diamond Hubber

சும்மாவா சொல்கிறோம் ராகவேந்திரன் சாரை எங்கள் ரசிக வேந்தர் என்று. அமர்க்களம் சார். சொர்க்க சிவந்தமண் ஒப்பீடு அருமை. காளையை அந்த வீரன் அடக்கிச் சாய்க்கையில் நம் மாவீரன் அதில் லயித்து ரசிப்பதை, ஒவ்வொரு அடக்கலுக்கும் அந்த முகத்தில் தோன்றித் தோன்றி மறையும் வியப்பு ஆச்சர்யக் குறிகள், ஆபத்தை உணர்த்தும் பாவங்கள், வெற்றிப்பெருமிதங்கள், அதிர்ச்சி கலந்த ஆனந்தம், தன் நிலை மறந்த ஈடுபாடு, கண்களின் ஆழத்தீவிர பார்வை ஊடுருவல், எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கள்ளமில்லாத அழகு முகம், ஹேர் ஸ்டைல், டிரஸ் சென்ஸ் என்று நம் தெய்வம் பின்னி எடுப்பாரே! ஊன், உறக்கமின்றி அந்த முகத்தை நாள் முச்சூட பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாமே! தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதோ இன்னும் சில ஸ்டில்கள்.




-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks