Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை வியப்பில் ஆழ்த்திய நடிகர் எம்ஜிஆர் .

    தமிழ் திரை உலகில் எத்தனையோ நடிகர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் மக்களின் ரசனைக்கு ஏற்ப மாறுதல்கள் நிகழ்ந்தது . பெரும்பாலான நடிகர்கள் தங்களின் இளம் வயதில் நடித்தது குறுகிய காலத்தில் நடிப்பு தொழிலில் இறங்கு முகமாகி அடையாளம் இன்றி காணாமல் போனார்கள் .
    1940 களில் மிகவும் பிரபலமான நடிகர்கள் தியாகராஜபாகவதர். பி யு .சின்னப்பா , ரஞ்சன் , எம் கே ராதா போன்றவர்கள் சில படங்களே நடித்து புகழ் அடைந்து மக்களால் மறக்கப்பட்டார்கள் .

    1936ல் தன்னுடைய 19 வது வயதில் நடிக்க துவங்கிய எம்ஜி ராமச்சந்தர் என்ற எம்ஜிஆர் சதிலீலாவதி படத்தில் அறிமுகமானார் .11 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தன்னுடைய 30 வயதில் ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார் .

    1947-1960 வரை எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் சரித்திர படங்களே . .மன்னராக , தளபதியாக , போர் வீரராக , புரட்சி வீரராக , எல்லா சாகசங்களும் வல்லமை பெற்றவராக ,வீராதி வீராக அவர் நடித்த படங்கள் அனைத்தும் காவியங்களே . இன்றைய இளம் வயதினர் நிச்சயம் அன்றைய சரித்திர படங்களை பார்த்தால்தான் எம்ஜிஆரின் நடிப்பு , வீரம் , சாமர்த்தியம் , வித்தியாசமான நடிப்பு , புதுமையான சண்டை காட்சிகள் , தெள்ளு தமிழ் வசனங்கள் , சமுதாய சீர்திருத்த புரட்சி கருத்துக்கள் , புரட்சி பாடல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .

    ராஜகுமாரி
    மந்திரிகுமாரி
    மருத நாட்டு இளவரசி
    மர்மயோகி
    சர்வாதிகாரி
    ஜெனோவா
    குலேபகாவலி
    அலிபாபாவும் 40 திருடர்களும்
    மலைக்கள்ளன்
    மதுரை வீரன்
    சக்கரவர்த்தி திருமகள்
    புது மைப்பித்தன்
    ராஜராஜன்
    மகாதேவி
    நாடோடி மன்னன்
    அரசிளங்குமரி
    பாக்தாத் திருடன்
    மன்னாதி மன்னன்
    ராஜாதேசிங்கு
    ராணி சம்யுக்தா
    விக்கிரமாதித்தன்
    காஞ்சி தலைவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    அரசகட்டளை
    அடிமைப்பெண்
    மதுரையை மீட்டசுந்தர பாண்டியன்

    மேற்கண்ட 26 படங்களை இன்று பார்த்தாலும் மனதிற்கு அளவில்லாத ஆனந்தத்தை தருகிறது . தனியார் தொலைக்காட்சிகளில் இந்த படங்களை அடிக்கடி காணும் வாய்ப்பு கிடைக்கிறது .
    தான் ஏற்று கொண்ட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக புரட்சி நடிகராக எம்ஜிஆர் நடிப்பு தொழிலில் இருந்த நேரத்தில் அவரைப்பற்றி பலவிதமான எதிர்மறையான தாக்குதல்கள் , அவர் நடிப்பை பற்றி கிண்டல்கள் , வயதான நடிகர் என்று தனிப்பட்ட விமர்சனங்கள் என்று எதிரிப்புகள் எல்லாவற்றையும் முறியடித்தது எம்ஜிஆரின் சாதனை.

    எம்ஜிஆரை தாக்கியவர்கள் பிற்காலத்தில் எம்ஜிஆர் தோற்றத்தை இளமை என்று வாரி வரிந்து கொண்டு எழுதினார்கள் . எம்ஜிஆரை எவர் கிரீன் ஹீரோ , கட்டுக்கோப்பான தேகம் கொண்ட பேரழகன் , பொன்னின் நிறம் திரை உலக வசூல் மன்னன் ,இயற்கையான நடிகர் என்றும் எழுதினார்கள் .

    எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி [1977] அரசியலில் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து திரை உலகிலும் , ஆட்சியிலும் , அரசியலிலும் உலக அரங்கில் புகழ் பெற்ற மனித நேய தலைவராக எம்ஜிஆர் அவர்கள் புகழுடன் வாழ்ந்தது இன்னமும் மக்கள் இதயங்களில் நிலையாக இருப்பது கண்டு வியந்து நிற்கிறேன்
    என்ன ஒரு அதிசய மனிதர் எம்ஜிஆர்
    நிச்சயம் அவர் ஒரு தனிப்பிறவி

    courtesy - sange muzhangu .- kalarasigan .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •