Results 3,651 to 3,660 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

    தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.

    தங்களின் கருத்துக்களுக்கும்,விமர்சனங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.

    தமிழ் திரைப்பட உலகில் 1954ம் ஆண்டு முதல் (விவரம் அறிந்த வகையில் )
    1977 வரை (தமிழக முதல்வராகும் வரை) ஒரு சில ஆண்டுகள் தவிர (கால் எலும்பு முறிவு சிகிச்சை காரணமாக ஒய்வு) இடைவிடாமல், தொடர்ந்து , முதல்தர கதாநாயகன், வசூல் சக்கரவர்த்தி என்கிற சாதனைகள்.

    1967ல் குண்டடிபட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல், உட்கார்ந்து கொண்டு, வெற்றி
    பெற்று, சட்ட மன்று உறுப்பினர் ஆனதோடு, தன்னை இதயக்கனி என்று அழைத்த பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, வெறும் முகத்தை மட்டும் காட்டி, தனது கட்சி (அப்போதைய தி.மு.க.) ஆட்சிக்கு வர
    பெரிதும் காரணமாக இருந்தது .


    1972ல் அ. தி.மு.க. கட்சியை துவக்கி, ஆரம்பத்தில் இடை தேர்தல்கள் , பின்னர்
    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ,ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு மேலாக
    முதல்வர் பதவியில் இருந்து மக்களுக்கு தொண்டாற்றி புரிந்த அரும் பெரும் சாதனைகள் .

    1984ல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் , அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
    கொண்டே, தேர்தல் பிரச்சாரம் செய்யாமல், படுத்துக் கொண்டே , மீண்டும் முதல்வர் ஆகிய சாதனை

    1960ல் இந்திய அரசு, பத்மஸ்ரீ பட்டம் வழங்க முற்பட்டபோது, இந்தி மொழியில்
    அல்லாது, தமிழ் மொழியில் வழங்கினால்தான் வாங்கி கொள்வேன் என்று
    மறுத்தது (செய்தி-சன் லைப் -ரிக்ஷாக்க்காரன் திரைப்படம் சமீபத்தில் ஒளிபரப்பியபோது )

    1972ல் பாரத் பட்டம் வழங்கியபோது , விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக
    பட்டத்தை திருப்பி தந்தது

    1988ல் தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர்களில் "பாரத ரத்னா " விருது பெற்ற
    முதல்வர்

    1987ல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பின்னும், 2017ல் (30 ஆண்டுகள் ) அவர் தோற்றுவித்த இயக்கம் மக்களாட்சி தத்துவப்படி தொடர்ந்து
    ஆட்சியில் நீடிப்பு .

    1978ல் தமிழ் திரையுலகை விட்டு விலகி, அரசியல் உலகில் முடிசூடா மன்னனாக , முதல்வராக வலம் வர ஆரம்பித்தது முதல் 2017 (இன்று வரையில் ) மறுவெளியீடுகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள், பல நகரங்கள், துணை நகரங்கள், கிராமங்களில் கூட திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றன .

    சமீபத்திய சாதனை -டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் -மறுவெளியீடு ஆல்பட் அரங்கு -190நாள் , சத்தியம் அரங்கு -160நாள்

    டிஜிட்டல் ரிக்ஷாக்காரன்-மறுவெளியீடு - இணைந்த 12 வது வாரமாக தமிழகத்தில் வெற்றி பவனி

    1987 டிசம்பரில் புரட்சி தலைவர் மறைந்தபோது, சென்னைக்கு அஞ்சலி செலுத்த
    வந்த மக்கள் தொகை ஏறத்தாழ 20 லட்சம் - செய்திகள் -தந்தி டிவி, பாலிமர் டிவி

    மேற்குறிப்பிட்ட சாதனைகள் எல்லாம் சில துளிகள்தான் . எல்லாவற்றையும் பதிவிட திரியில் இடம் போதாது.

    எனவே பொய்யர்கள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகள் பற்றி கவலை வேண்டாம்.

    சந்திரோதயம் திரைப்படத்தில் ஒரு வசனம் - நடிகர் எம்.ஆர். ராதாவிடம் வாதிடும் போது , என் எதிரி கூட எனக்கு சமமாக இல்லைன்னா அலட்சிய படுத்துகிறவன் நான் - என்று சொல்வார் மக்கள் திலகம்.

    மன்னாதி மன்னன் திரைப்படத்தில், குலதெய்வம் ராஜகோபாலிடம், மற்றவரை தாழ்த்தி, நம்மை உயர்த்திக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை என்று, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேசுவார்.

    அது போல , நம்மை பொறுத்தவரையில், புரட்சி தலைவருக்கு சமமாக தமிழ்
    திரையுலகிலோ, அரசியல் உலகிலோ வெற்றி பெற்றவர் எவரும் இலர்.

    ஆகவே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல், புரட்சி தலைவரின் புகழ் பாடும் பணியில் நம்மை ஈடுபடுத்தி கொள்வோமாக . நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •