-
18th February 2017, 01:10 PM
#11

Originally Posted by
vasudevan31355
காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.
தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்
மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.
படம்: தங்கச் சுரங்கம்.
இந்த இடத்தில டி.எம்.எஸ். குரலில் ஒரு சோலோ சாங் ஒலிக்கவிட்டு காட்சியை கெடுத்து குட்டிசுவராக்காமல் மௌன போராட்டமாக விட்ட இயக்குனர் ராமண்ணா அவர்களுக்கு 10,000 நன்றிகள்.
-
18th February 2017 01:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks