Page 347 of 400 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3461
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Sekar Parasuram. From Fb

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3462
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Rajan Ponnusamy. From Fb

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3463
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Trichy Srinivasan

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3464
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    From Fb

    Last edited by vasudevan31355; 21st February 2017 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3465
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    From Fb

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3466
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3467
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    புதிய பதிவு

    Nivuru Gappina Nippu (1982) (தெலுங்கு)

    'மிஸ்டர் மகேந்திரா'



    தெலுங்கில் பராசக்தி, மனோகரா, பக்த ராமதாஸ், பக்த துக்காராம், பொம்மல பெல்லி (பொம்மைக் கல்யாணம்) பரதேசி (பூங்கோதை) பெம்புடு கொடுகு, பெஜவாடா பொப்பிலி (சட்டம் ஒரு சக்கரம்....இப்படத்திற்கு 'மிஸ்டர் ரவீந்திரா' என்றொரு டிவிடி பெயரும் உண்டு. 'சட்டம் ஒரு சக்கரம்' என்ற பெயர் தெரியாமல் வீடியோ தகட்டில் இப்பெயரை சூட்டி இருப்பார்கள்), ஜீவன தீராலு (வாழ்க்கை அலைகள்), சாணக்யா சந்த்ரகுப்தா, பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (குழந்தைகள் கண்ட குடியரசு), அக்னி புத்ருடு என்று நடிகர் திலகம் நடித்த நேரடி சுந்தர தெலுங்குப் படங்கள் உண்டு.

    1982 ல் தெலுங்கில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் 'நிவுரு கப்பின நிப்பு'

    தமிழில் 'மிஸ்டர் மகேந்திரா' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த இந்தப் படம் நிஜமாகவே 'ஜம்'மென்றுதான் இருக்கிறது.

    நடிகர் திலகத்தின்பால் மிக்க அபிமானம் கொண்ட தெலுங்குத் திரைவானின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா பெயருக்கு ஹீரோவாக இருந்தாலும் படத்தை ஆளும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி வழக்கம் போல நடிகர் திலகமே. பாப்பையா இயக்கத்தில் சக்கரவர்த்தி இசையமைத்த இந்தப்படத்தில் தலைவரின் ஜோடியாக 'சௌகார்' நடித்திருந்தார். கிருஷ்ணா ஜோடியாக சாமுத்ரிகா லட்சண நாயகி ஜெயப்பிரதா நடிக்க, உடன் நாகேஷ், பிரபாகர் ரெட்டி, கிரிபாபு, 'படாபட்'ஜெயலஷ்மி, சங்கீதா, காந்தாராவ் என்று பிரபல நட்சத்திரக் கூட்டம்.

    கே.ஏ.வி.கோவிந்தன் வசனம் எழுத, நடிகர் திலகம் போர்ஷனுக்கு நம் வியட்நாம் வீடு சுந்தரம் 'பளிச்' வசனங்கள் தந்திருப்பார். கதை பி.எச். ராதாகிருஷ்ணா. ஒளிப்பதிவு வெங்கட், தயாரிப்பு லஷ்மி சர்மா.

    கதை:

    மிகப் பெரிய எஸ்டேட்டின் ஜமீனான மகேந்திரன் (நடிகர் திலகம்) ஏழைகளுக்கு வள்ளல். அந்தக் காட்டுப் பகுதியின் மக்கள் அவரைக் கடவுளாக நினைக்கின்றனர். மகேந்திரன் தனக்கிருக்கும் செல்வத்தை அந்த மக்களின் முன்னேற்றத்திற்காக வாரி வாரி வழங்குகிறார். அவர் மனைவி லஷ்மி. ('சௌகார்') இவர்களுக்கு ரவி (கிரிபாபு) என்றொரு மகன். ஆனால் தந்தைக்கேற்ற மகனல்ல. தந்தையின் முன் அடக்கமான தமையனாக நடித்து ஏமாற்றும் கலையில் கைதேர்ந்தவர். காமுகன். கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவன்.

    மகேந்திரா தன் பிறந்த நாளில் கோபி(கிருஷ்ணா), ரேகா (ஜெயப்பிரதா) இருவரையும் கவுரவிக்கிறார். இருவரையும் காட்டைச் சுற்றிக் காட்டக் கூட்டிச் செல்லும் ரவி ஒரு தனியான சந்தர்ப்பத்தில் தன் காமாந்தக வேலையை ரேகாவிடம் காட்டி கற்பழிக்க முயல, தக்க சமயத்தில் கோபி அங்கு வந்து ரேகாவை அவளிடமிருந்து காப்பாற்றுகிறான். 'ஊரார் போற்றும் மகேந்திராவுக்கு இப்படி ஒரு தறுதலை பிள்ளையா?' என்று கோபியும், ரேகாவும் மனம் வருந்துகிறார்கள். இதுபற்றி மகேந்திராவிடம் தெரிவிக்க வேண்டும் என்ற ரேகாவின் கோபத்தை 'தன் மகன் மீது மகேந்திரா வைத்த்திருக்கும் நம்பிக்கை நம்மால் குலைந்துவிட வேண்டாம்' என்று கோபி தடுத்து விடுகிறான். ரேகாவும், கோபியும் காதலர்கள் என்று நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. கோபிக்கு ஒரு தங்கை.

    கோபியுடனான தன் காதலை தந்தையிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறாள் ரேகா. ஆனால் ரேகாவின் தந்தை (காந்தாராவ்) தீர்மானமாக அதை மறுத்து விடுகிறார். காரணம்?.....

    இவர்கள் காதல் பற்றி அறியாமல் ரேகாவை தன் மகனுக்கு மணமுடித்து வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார் மகேந்திரா.

    கோபியின் தங்கை உஷா ('படாபட்'ஜெயலஷ்மி) வாயிலாக கோபியும், ரேகாவும் காதலர்கள் என்று கேள்விப்பட்ட மகேந்திரா தன் மகன் ரவிக்கு ரேகாவை மணமுடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுவதோடு கோபி, ரேகா காதல் பற்றி அறிந்து சந்தோஷமும் அடைகிறார். ரேகாவின் தந்தை இவர்கள் காதலுக்குத் தடையாய் இருப்பதை அறிந்து ரேகாவின் பணக்கரைத் தந்தையை சந்திக்கிறார் மகேந்திரா. காதல் மறுப்புக்கு காரணமும் கேட்கிறார்.

    கோபியின் பிறப்பு பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவன் அநாதை என்ற நிலையில், அவன் தாய், தந்தை யாரென்று தெரியாத நிலையில் எப்படி தன் மகளை அவனுக்கு மணமுடித்து என்று ரேகாவின் தந்தை கேட்க மகேந்திரனுக்கு கோபம் வருகிறது.

    இப்போது மகேந்திரன் ரேகாவின் தந்தையிடம் யாருக்கும் இதுவரை சொல்லாத உண்மையை சொல்கிறார். இதுதான் அந்த பிளாஷ் பேக்.

    மகேந்திரன் இப்போது மணமான புதிதில். மகன் ரவி கைக்குழந்தை. மகேந்திரனுக்கு சாந்தி (சங்கீதா) என்றொரு தங்கை. அவள் ஏழை ராஜூவைக் (பிரபாகர் ரெட்டி) காதலிக்கிறாள். அந்தஸ்து காரணமாக, பரம்பரை கெளரவம் காரணமாக மகேந்திரன் சாந்திக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து ராஜுவிடம் அவள் கொண்டிருக்கும் காதலைக் கண்டிக்கிறார். அண்ணன் மாற மாட்டார் என்று புரிந்த சாந்தி மகேந்திரனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டைவிட்டு ராஜுவுடன் ஓடிப் போகிறாள். கடிதத்தைப் பார்த்து கோபமுறும் மகேந்திரன் வேகமுற குதிரை வண்டியில் பறந்து செல்லும் காதலர்களை தன் குதிரையில் துரத்த, வண்டி விபத்து ஏற்பட்டு ராஜு மலையிலிருந்து கீழே விழ, தங்கை சாந்தியை மட்டும் காப்பாற்றி வீட்டுக்கு கூப்பிட்டு வருகிறார் மகேந்திரா. இப்போது அவருக்கு இன்னொரு அதிர்ச்சி. தங்கை சாந்தி கர்ப்பமாயிருக்கிறாள்.

    மகேந்திரா காதலர்களை பிரித்ததற்காக இப்போது வருந்துகிறார். குற்ற உணர்வு அவரைப் பிடுங்கித் தின்கிறது. ஆனால் சாந்திக்கு அண்ணன் மீதான கோபம் மாறவில்லை. மகேந்திராவின் மனைவி சாந்தியை தன் தந்தை வீட்டில் வைத்து குழந்தை பெற வைக்கிறாள். குழந்தையை லஷ்மியிடம் ஒப்படைத்துவிட்டு சாந்தி காலமாகிறாள். இந்த விஷயம் ஊருக்குத் தெரிந்தால் தன் கவுரவம் பாழாகிவிடும் என்று பயப்படும் மகேந்திரா குழந்தையை ஒரு ஆசிரியரிடம் ஒப்படைத்தது வளர்க்க சொல்கிறார். அந்தக் குழந்தைதான் கோபி. அந்த ஆசிரியருக்குப் பிறந்த மகள்தான் கோபியின் உடன்பிறவாத தங்கை உஷா.

    இதுதான் அந்த பிளாஷ்பேக். இப்போது புரிகிறதா கோபி மகேந்திராவின் தங்கை மகன் என்று?

    மகேந்திராவின் மகனின் வெளியே தெரியாத அட்டுழியங்கள் ஓய்ந்தபாடில்லை. ரேகா, கோபி காதலைப் பற்றி மகேந்திரன் ரவியிடம் சொல்ல ரொம்ப நல்லபிள்ளை போல ரவி வீட்டுக் கொடுப்பதாக தந்தையிடம் நடித்து அவரிடம் மேலும் நன்மதிப்பை பெறுகிறான். மகன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஏமாளி ஆகிறார் மகேந்திரா.

    இப்போது அந்த காட்டு இலாகா அதிகாரியாக கோபி பதவியேற்கிறான். அவனைப் பாராட்ட வரும் மகேந்திரா அங்கிருக்கும் ஒரு நபரைப் பார்த்து பேரதிர்ச்சி அடைகிறார். விதியின் விளையாடல். எந்தத் தங்கையை ராஜுவிடமிருந்து பிரித்தாரோ இறந்து விட்டதாக நினைத்த அதே ராஜு விபத்திலிருந்து தப்பி இப்போது ஒரு கண்ணிழந்த நிலையில், கையிழந்த நிலையில் நொண்டியாக, குதிரை வண்டி ஓட்டுபவனாய் தன் மகன் கோபியிடமே வேலை பார்க்கும் கொடுமை. இறந்த தன் மனைவிக்காக ஒரு சிறிய நினைவு மண்டபம் கட்டி அதை பூஜித்து வருகிறான் ராஜு. மகேந்திரன் ஒடிந்து போகிறார். இதை மனைவி லஷ்மியிடமும் சொல்லி வருத்தப்படுகிறார்.

    கடத்தல் சம்பந்தமாக ரவிக்கும், கோபிக்குமான மோதல்கள் தொடர்கின்றன.

    ராஜு சாந்திக்காக கட்டியுள்ள நினைவுச் சின்னத்தைப் பார்வையிட மகேந்திரனும், லஷ்மியும் வருகையில் அங்கு ரவி ஒரு காட்டுவாசிப் பெண்ணின் கற்பை வழக்கம் போல சூறையாட, எதிர்பாராமல் அங்கு வந்து அதை பார்த்து விடும் லஷ்மி அதிர்ச்சியில் உறைந்து, நிலைகுலைந்து போகிறாள். தங்கையின் நினைவு மண்டபத்தில் கண்ணீர் சிந்தி நிற்கும் மகேந்திராவை கூப்பாடு போட்டு அழைக்கிறாள் லஷ்மி. பதற்றத்தில் கால் தடுமாறி மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்து கணவனிடம் உண்மையை சொல்ல எத்தனித்து முடியாமல் பரிதாபமாக உயிர் துறக்கிறாள். மகேந்திராவுக்கு அடிமேல் அடி சம்மட்டியாக விழுகிறது. மனைவியை இழந்து தவிக்கும் மகேந்திராவுக்கு ஆறுதல் சொல்கிறாள் கோபியின் தங்கை உஷா.

    ராஜு மகேந்திராவை சந்தித்து தன் மகன் பற்றி கேட்க அதை பற்றி அவனுக்கு எல்லாவற்றையும் தெரிவித்து கோபிதான் அவன் மகன் என்று தெரியப்படுத்துகிறார். சமயம் வரும்போது இது பற்றி கோபியிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கோபி மகேந்திராவையும் கள்ளக்கடத்தலில் ஈடுபடுவதாக சந்தேகப்படுகிறான். தந்தை என்ற உண்மை தெரியாமல் ராஜுவும் அதற்கு உடந்தை என்று குற்றம் சுமத்துகிறான். எல்லாம் மகேந்திராவின் மகன் ரவியின் லீலை.

    ஒரு கட்டத்தில் ரவியின் அக்கிரமம் உச்சத்தை அடைகிறது. கோபியின் தங்கை உஷாவையும் அவன் கற்பழித்து சாகடித்து விடுகிறான். தன் கற்பை பறிகொடுக்கும் அந்த சூழலிலும் உஷா அவனுடைய லாக்கெட்டைப் பிடுங்கி கையோடு இறுக்கிக் கொண்டு இறந்து போகிறாள் அவனுக்குத் தெரியாமலேயே ஆதாரத்துக்காக.

    தங்கையைத் தேடி வரும் கோபி கற்பிழந்த நிலையில் கையில் ரவியின் லாக்கெட்டுடன் இருக்கும் தங்கை பிணத்துடன் மகேந்திரா வீட்டுக்கு கோபத்துடன் செல்கிறான். மகேந்திராவிடம் லாக்கெட்டைக் காட்டி 'அவளைக் கற்பழித்தது உங்கள் மகன்' என்று மகேந்திராவிடம் குற்றம் சுமத்துகிறான். மகேந்திரன் பதறி மகன் மேல் உள்ள கண்மூடித்தனமான பாசத்தில் அதை மறுக்கிறார். சொந்தப் பகை காரணமாக தன் மகனை குற்றவாளி ஆக்குவதாக கோபியிடம் கொந்தளிக்கிறார். அதற்கேற்றாற் போன்று ரவியும் அந்த டாலர் எப்போதோ தொலைந்து விட்டதாக தந்தையிடம் நாடகமாடி அவரிடம் நற்பெயரோடவே இருக்கிறான்.

    கோபி கள்ளக்கடத்தல்காரர்களுடன் ரவியை ராஜுவின் துணை கொண்டு கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறான். மகேந்திரன் குமுறும் எரிமலை ஆகிறார். அவருடைய கோபமெல்லாம் கோபியின் மீது திரும்புகிறது. தக்க ஆதாரங்கள் கிடைப்பதால் ரவிக்கு மரண தண்டனை வேறு விதிக்கப்பட்டு விடுகிறது. சிறைக்கம்பிகளுக்கு இடையிலும் மகன் தந்தையிடம் இன்னும் நல்லவனாக நடித்து தன்னை நம்ப வைக்கிறான் ரவி. மகனின் விடுதலைக்காக மகேந்திரன் முழுதாக போராடுகிறார். ஜனாதிபதிக்கு அளித்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ரவி தூக்கிலிடப்பட, ஆத்திரம் கண்ணை மறைக்க கோபியை சுட்டுத்தள்ள மகேந்திரா ஆவேசத்துடன் கிளம்புகிறார். கோபி எவ்வளவு நியாயம் சொல்லியும் அவர் கேட்டபாடில்லை. இறுதியில் போலீஸ் அதிகாரி ரவி சாகும் தருவாயில் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றை கொண்டு வந்து காட்ட, அதில் ரவி தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக் கொண்டு 'கோபி நல்லவன்' என்றும் எழுதி வைத்து இருந்திருக்கிறான்.

    உண்மைகளை உணர்ந்து கொண்ட மகேந்திரா தன் மகனின் தவறுகளை எண்ணி வருந்துகிறார். 'கட்டிக் காத்த குடும்ப கெளரவம் மகனால் தவிடுபொடியானதே' என்று அழுது அப்போதே தீர்மானமாக மானம் காக்க ஒரு முடிவெடுக்கிறார்

    ஆமாம்! பரம்பரை கெளரவம், அந்தஸ்துடன் வாழ்ந்த அந்த மகேந்திரா சிங்கம் தங்கையை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து, சொந்தங்களை இழந்து இப்போது தன கையில் வைத்திருக்கும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு பரிதாபமாக சாகிறது.

    தொடரும்.....
    Last edited by vasudevan31355; 22nd February 2017 at 09:18 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3468
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "இருப்பா..! அத்தை தண்ணி குடிச்சிட்டு ஓடி வந்துடறேன்.."

    - ஓடி வருவதாகச் சொல்லிப் போன அத்தை சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் குடித்தாளா.. தெரியாது. சாயங்காலம் வரை வரவேயில்லை.

    என்னைப் பள்ளியில் சேர்த்து விட்ட தினத்தன்று
    நானடைந்த ஏமாற்றமும், அந்த ஏமாற்றம் தந்த கண்ணீரும் மிகச் சில தினங்களிலேயே மாறி விட்டன.

    பள்ளியும், பள்ளிக்குப் போவதென்பதும் மிகவும் பிடித்துப் போனது.

    அந்த தினங்களில் துவங்கிய பாடங்கள், அரைக்கால் சட்டை முழுக்கால் சட்டையாக மாறும்
    வரைக்கும் தொடர்ந்து விரட்டி முடிந்தன.

    "முடிந்தன" என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மெலிதாய் சிவப்பு பரவிய "சிபியா கலர்"
    என்று குறிக்கப்பட்ட ஒரு பழுப்பு வண்ண பிரிண்டில், மதுரை சென்ட்ரலில் ஞாயிறன்று
    "ஆண்டவன் கட்டளை" பார்த்த போது என்னை
    மாணவனாக மீண்டும் உணர்ந்தேன். நாடு மெச்சும் நடிகர்திலகமெனும் நல்லாசிரியர், என்னைப் போன்ற கோடிக்கணக்கான மாணவர்களுக்குக் கலையால் போதிக்கும் பாடங்கள் முடியவில்லை என்பதையும் உணர்ந்தேன்.
    *****

    நடு வகிடெடுத்து தலை வாரிக் கொண்டு, கையில்
    பிடித்திருக்கும் குடையைப் போலவே ஒழுக்கத்தையும் "கிச்" எனப் பிடித்துக் கொண்டு,
    அய்யன் "கடமையே வெற்றிக்கு வழி" என மெலிதாகவும் அதே சமயம் உறுதிபடவும் சொல்லும் போது...

    ஜூலியட் சீஸருக்குரிய " வந்தான்.. பார்த்தான்..
    வென்றான்" வார்த்தைகளை ஆன்டனியோடு தவறாகப் பொருத்தி வியாசம் எழுதியிருக்கும் மாணவியை நிறுத்தி நிதானமாய், அழகாய்க் கண்டிக்கும் போது...

    கூத்தும், கும்மாளமுமாய் வகுப்பறையில் வீணாகும் மாணவனைச் சலித்து, அவர்களின் எதிர்காலம் பாழாகும் என்று அறிவுறுத்தும் போது...

    பூக்கள் சூழ்ந்த பேரழகாய் காதலி சின்ன நீர்நிலையில் இருக்க, தானும் அதனுள் விழுந்து
    காதல் பேசும் போது...

    "தாயின் பாதங்களில் சொர்க்கம் இருக்கிறது" என்கிற நபிகள் நாயகத்தின் பொன்மொழி நிஜத்தை கனிவோடு சொல்லும் போது...

    அய்யனுடமிருந்து கற்றுக் கொள்கிறோம் " தமிழ்ப் பாடம்".
    *****

    "கடமையே வெற்றிக்கு வழி" என்று தான் கொண்டிருக்கிற தமிழ் நம்பிக்கைக்குப் பக்க பலமாக, "The Path of Duty is the way to Glory " என்று அழகு உச்சரிப்பைத் துணைக்கழைத்துக்
    கொள்கிற போது...

    சக மாணவியரின் அழகுக்கு மதிப்பெண்கள் போட்டுக் கிண்டலடிக்கும் மாணவர்களைத் திருத்த, புத்தக ஓவியங்களுக்கு அவர்கள் போலவே மதிப்பெண் போடும் போது...

    வறுமை நிலையிலும் கல்வி கற்க ஆவலாயிருக்கும் ஒரு இளைஞனின் அறிவு தாகத்தை "Splendid" என வியக்கும் போது...

    "காதலைப் புகழ்றது தப்பா சார்?" என்று கேட்கும் மாணவிக்கு, உச்சரிக்கும் விதத்திலேயே "நிச்சயமாக" என்பதைக் குறிக்கிறதாய் "Definitely"
    என்று கூறும் போது...

    ஆடிக் கொண்டே வந்து தன் மேல் மோதுகிற மாணவியை பேச்சாக இல்லை.. இரைச்சலாகவே
    கண்டிக்கிற போது...

    ஒரு நிறைவோடு வகுப்பைப் பூர்த்தி செய்கையில்
    "That's all for the day" சொல்லும் போது...

    "என்னைத் திட்டலாம் சார். காதலத் திட்டியிருக்கக்
    கூடாது" என்று கடிந்து கொள்ளும் மாணவனை
    எரிச்சலுடன், சலிப்புடன் "..You.." என்று பாதியாய்த்
    திட்டும் போது...

    அய்யனிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் "ஆங்கிலப் பாடம்".
    *****

    எழுத்துப் போடும் போது துவங்கி, கடமையிலிருந்து காதலுக்கு மாறுகிற நிமிஷம்
    வரைக்கும் முதுகின் பின் கைகோர்த்துக் கொண்டு, கோர்த்த கைகளில் ஒன்றை " கிடுகிடு"வென ஆட்டிக் கொண்டு அய்யன் ஒரு நடை நடப்பார்.

    காதலில் விழுந்த பின் வகிடெடுத்த சிகை மாறும்.
    அந்தப் பழைய நடை மாறும். ஒயிலாய், அழகாய்
    ஒரு நடை சேரும்.

    கடமையா..? காதலா..? என்கிற குழப்ப மிகையில்
    வீட்டுக்குள் நுழைகையில் ஒரு புறம் தோள் தொங்க தளர்வாய் வேறொரு நடை நடப்பார்.

    "ஆறு மனமே ஆறு" பாடலில் பற்றறுத்த யோகியாய், கற்றறிந்த ஞானியாய் பல்வேறு நடை நடப்பார்.

    நினைவுகள் மீண்ட பழைய காதலியிடமிருந்து
    கண்ணியமாய் விலகி கம்பீரமாய் ஒரு வேக நடை
    பின்னர் நடப்பார்.

    எந்த நடையை எப்போது நடந்தால் ரசிகன் ஆனந்தக் கூத்தாடுவான் என்கிற கணக்குத் தெரிந்த அய்யனிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.. "கணக்குப் பாடம்."
    *****

    சற்றே கவனம் பிசகி, வழக்கமான பாதை விடுத்து
    வேறொரு பாதையில் போய் விட்டாலே பதை பதைத்துப் போகிறோமே..?

    கடமைப் பாதை விட்டு விலகி, காதல் பாதை தேர்ந்து, அசிங்கமுற்று, அவமானப்பட்டு, அன்னையைக் காவு கொடுத்து, அலைந்து, அல்லலுற்று, ஆண்டவனைத் தேடி, எந்நிலையிலும் ஒழுக்கம் விலகாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து, காதலையும், காதலியையும் மீட்டு, மீண்டும் கண்ணியத்துக்குரிய பழைய பாதைக்குத்
    திரும்பும் நாயகன் எத்தனை அனுபவித்திருப்பான்?

    சின்னச் சின்ன உடல் மொழிகள் மாற்றம், கூடும்,குறையும் அதிர்வுகளோடு கூடிய குரல், தொழில் பக்தியில் ஊறித் திளைத்த அபார திறமை...இவற்றைத் துணைக்கு வைத்துக் கொண்டு கடினமான நடிப்புப் பாதையில் ராஜநடை போட்டு அய்யன் வெற்றிக் கோட்டையை
    எட்டித் தொடும் அழகே அழகு.

    தனது மிகக் கண்ணியமான பிரம்மச்சரியம் தனது
    அழகான மாணவியின் பொருட்டு சோதனைக்கு
    உள்ளாக்கப்படும் போதெல்லாம் தவிக்கிற தவிப்பு...

    தனக்கு வெகு அருகில் மணக்கும் மல்லிகை மணம், தனது கோட்டுப் பையிலிருந்துதான்
    வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க அழகான
    முகர்தலோடு அந்த இடம் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் தாழ்த்தும் பாவனைகள்...

    நேற்று வரை ஆசானாயிருந்து பார்த்த மாணவியை, இன்று காதலியாய்ப் பார்க்க நேர்ந்த
    தர்மசங்கடத்தில் வார்த்தைகளுக்குத் தவிக்கும்
    அழகு...

    தன் மனக் குழப்பத்தைப் போக்கிடலாகாதாவென
    விவேகானந்தரிடத்தும், வள்ளலாரிடத்தும் படம், படமாய் ஓடிப் புலம்பும் புலம்பல்...

    "ஆசையை ஒழி" என்ற அந்த மகான்கள் தத்துவம்
    மனசோடு எதிரொலிக்க.. அந்த அழகு முகம் காட்டும் புரிதல் மிக்க விடுதலை உணர்வுகள்...

    மீண்டும் மனத் திரையில் அழகுப் பெண்ணின் உருவம் ஓட.. அதே நிம்மதி முகம் சுமக்கும் குழப்ப பாவனைகள்...

    எந்தப் பிடிப்புமற்று விரக்தியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கையில் சோகம் கவ்விய முகத்தின்
    உச்சியில் மிளிரும் கண்களில் மனிதர்களைச்
    சந்திக்கக் கூசும் கூசல்...

    சிறைக்கு வந்து தன்னை வார்த்தைகளால் தண்டிக்கும் அன்னையிடம் மறுத்துச் சொல்ல ஒரு
    வார்த்தையின்றிக் காட்டும் முக வேதனைகள்...

    தன் அக்காள் மகளையும், தன் பிரியமான மாணவனையும் ஒன்றிணைத்த நிறைவு...

    நேசித்தவளே பித்து நிலையில் 'நீ பைத்தியமா?"
    என்று கேட்டதும் வெடித்தெழுப்பும் சிரிப்பழுகை...

    இவையெல்லாம் வெறும் நடிப்பம்சங்களல்ல..
    சிந்தனையின் தெளிவோடு கலையை ஆராய்ந்து
    பொருத்தும் அய்யனின் அறிவியல்.

    அந்த வகையில் அய்யனிடம் கற்கிறோம்... "அறிவியல் பாடம்".
    *****

    ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு
    திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து ரசிக்க வைத்ததோடு தன் கடமை முடிந்து விட்டதென்று
    கருதாமல்.. இன்னும் ஒரு நூறு தலைமுறைகள்
    போற்றிக் கொண்டாடத் தக்க பெருமைக்குரிய கலையெல்லாம் தனதென்று தலை நிமிர்ந்து
    நிற்கிறானே.. நடிகர் திலகமெனும் ஒப்பற்ற
    கலைஞன்..? அவன் இந்த "புவி" கூர்ந்து கற்க
    வேண்டிய " வரலாற்றுப் பாடம்".
    *****

    பாடங்கள் முடியவில்லை..!

  10. Likes Harrietlgy liked this post
  11. #3469
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கண்ணனின் கலக்கல் கண்கள். வலது கண்ணில் மட்டும் கண்ணீர் கலங்கி நிற்கும். இடது கண் பெரிதாகவும், வலது கண் இடது கண்ணிலிருந்து மாறுபட்டு புருவங்கள் மேலேறி நிற்கும். முகம் ஆனந்தம், அதிர்ச்சி, மகிழ்ச்சி, திகைப்பு, சோகம் அத்தனையையும் பிரதிபலிக்கும். வாயை வைத்திருக்கும் அழகைப் பாருங்கள். வேறு எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

    இந்த ஒரு போஸ் போதும் காலம் முழுதும் நாங்கள் உனக்கு அடிமைகளாய் இருக்க.

    'தெய்வ மகனி'ன் ரசிகர்கள் நாங்கள் என்ற அந்த ஒரு பெருமை போதும் எங்களுக்கு. அதைவிடப் பெருமை இந்த உலகத்தில் எவருக்கும் இல்லை.

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Harrietlgy liked this post
  13. #3470
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    உடலையும், கழுத்தையும் பின்வாங்கி, ஆதரவற்ற அனாதை மகன் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குற்றவாளியாய் குனிந்து நிற்கும் நிமிர்ந்த நடிப்பு. நடிப்புப் போட்டியில் இந்தக் காட்சியில் வென்றது தந்தையா?... இல்லை மகனா?..

    இதுவரை எந்த நீதிபதியும் தீர்ப்பு சொல்ல முடியாத அவராலேயே அவருக்குண்டான நடிப்புப் போட்டி

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •