-
21st May 2017, 10:29 PM
#11
Junior Member
Devoted Hubber
ஆலங்கட்டி மாமழையாம்...
காட்சி அமைப்பை விட்டு தள்ளுங்கள். படம் மொக்கையா இல்லையா என்பதெல்லாம் இங்கு விஷயம் இல்லை. வழக்கம் போல் இந்த பாடலிலும் தொடக்கம் முதல் முடிவு வரை அடுத்த கட்டத்திற்கு நம்மை சுவாரஸ்யம் குறையாமல் அழைத்து செல்கிறார் ராஜா சார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த எழுதாத சட்டங்கள் படம் மறந்து விட்டது, ஆனால் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் மனம் துள்ளுவதை யாரிடம் சொன்னால் அதை நம்புவார்கள்?
எந்த அவசரத்தில் ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கக்கூடும்? பாடலின் பின்புலத்தில் அமைந்த வாத்தியங்களின் வேகத்தை கவனித்தீர்களா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2017 10:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks