-
10th May 2017, 06:02 AM
#441
Moderator
Diamond Hubber
மேலாளருடன் நடந்தது என்ன? சபீதா ராய் விளக்கம்
பிரபல சின்னத்திரை நடிகை சபீதா ராய். பல ஆண்டுகளாக டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது தாமரை, இளவரசி, வாணி ராணி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீதாராயும், ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளரும் ஒரு அப்பார்ட்மெண்டின் கார்பார்க்கிங்கில் வைத்து ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள். இந்த காட்சியும், இருவருக்கும் தவறான உறவு இருப்பது போன்றும் செய்தி ஒளிபரப்பானது. இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அன்று நடந்தது என்ன? என்பது குறித்து சபீதா ராய் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாணி ராணி நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன். 2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. இப்போது தருகிறேன், பிறகு தருகிறேன் என்று இழுத்தடித்துக் கொண்டே சென்றார்.
சம்பவத்தன்று "மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறோம். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் "நீங்களே தானே வரச் சொன்னீர்கள்" என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.
நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்திருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். கோபம் தாங்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை பிடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.
இதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படம்பிடித்துள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது. அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள். நான் செய்தது தவறு தான், 2 நாட்களில் பணம் கொடுத்துவிடுகிறேன். ஏமாற்றியது தவறு தான். நீ எனது மகள் ஸ்தானத்தில் இருக்கிறாய் என்று சுகுமாரும் மன்னிப்புக் கேட்டார்.
அப்போது ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் "கீழ் வீட்டில் உள்ளவர், வீடியோவாக உங்களுடைய சண்டையை எடுத்துள்ளார். நீங்க சம்பந்தப்பட்டு இருப்பதால் போய் பேசிவிடுங்கள்" என்றார். நான் உடனே அவருடைய வீட்டுக்குச் என்று காலில் விழுந்து "அண்ணா.. அவர் பணம் தர வேண்டும் என்பதால்தான் வந்தேன். அது கைகலப்பாகி விட்டது. எனக்கு இன்னும் திருமணமாக வில்லை. வீடியோ வெளியே வந்தால் பிரச்சினையாகி விடும். தயவு செய்து அழித்துவிடுங்கள் " என்று கெஞ்சினேன். அதற்கு "எனக்கு அவன் மீது தான் ஆத்திரம். உங்கள் மீது எதுவுமில்லை தங்கச்சி" என்றார். "அண்ணா.. நான் சம்பந்தப்பட்ட விவகாரம் ப்ளீஸ்" என்று கேட்டேன். சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிட்டார்.
நானும் வீட்டுக்கு வருவதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. எனக்கு அம்மா மட்டும் தான். உடன்பிறந்தவர்கள் யாருமே கிடையாது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக அப்படியொரு செய்தியை வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். அந்த தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் "நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று பேசியதற்கு "இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்" என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் - பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் "மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே" என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.
யாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை. இப்பிரச்சினையால் என்னை சீரியலிலிருந்து நீக்கி விட்டார்கள்.
இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் மற்றும் கார்த்தியிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சபீதா தெரிவித்துள்ளார்.
நன்றி: தினதந்தி
-
10th May 2017 06:02 AM
# ADS
Circuit advertisement
-
10th May 2017, 06:07 AM
#442
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கல்யாணி!
சினிமா-சின்னத்திரைகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கல்யாணி. ஒருகட்டத்தில் சீரியல் நாயகியாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களும், சூப்பர் மாம், பீச் கேர்ள் என அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் கல்யாணியை பிரபலப்படுத்தின. இந்நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்ட கல்யாணி, ஒரு வரு டத்திற்கு பிறகு மீண்டும் மீடியாவில் என்ட்ரி கொடுக்க சென்னை வந்திருக்கிறார்.
இதுகுறித்து கல்யாணி கூறுகையில், விஜய் டிவியில் வெளியான ஆண்டாள் அழகர் தொடரில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறேன். அதையடுத்து சிலர், சீரியல்களில் நடிக்க கதை சொன்னார்கள். ஆனால் அந்த சீரியல்களில் நடிக்க நான் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம், ரீ-என்ட்ரியில் நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தொடர்ந்து நல்ல கதைகளுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக சிறிய வேடமாக இல்லாமல் லீடு ரோல்களை எதிர்பார்க்கிறேன்.
அதேபோல், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருப்பதால், சில சேனல்களில் தொடர்பு கொண்டு வருகிறேன். அதனால் கூடிய சீக்கிரமே சீரியல் நடிகையாக, தொகுப்பாளினியாக மீண்டும் நான் பிசியாகி விடுவேன் என்கிறார் கல்யாணி.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:08 AM
#443
Moderator
Diamond Hubber
குழந்தைகளுடன் உரையாடுவது பெரிய மகிழ்ச்சி : இமான் அண்ணாச்சி
சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இமான் அண்ணாச்சி. இந்த நிகழ்ச்சி குழந்தைகள் மத்தியில் பிரபலமாகி விட்டதால் சினிமாவில் பிசியானபோதும் சின்னத்திரையை விடாமல் தொடர்ந்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். பின்னர் சினிமாவில் பிசியாகி விட்டேன். என்றாலும் நான் வளர காரணமாக இருந்த சின்னத்திரையை விட மனசில்லை. அதனால்தான் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்களித்து வருகிறேன். அதோடு அந்த நிகழ்ச்சிதான் என்னை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தது. சினிமா நடிகராக மட்டுமே இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு சிறுசுகள் மத்தியில் பிரபலமாகியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.
மேலும், இப்போது நான் நடத்தி வரும் குழந்தைகள் நிகழ்ச்சி 5 ஆண்டுகளாகி விட்டது. அதனால் அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் ஏதேனும் மாற்றம் வந்தாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோகூட நான் வேறு ஏதேனும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டே இருப்பேன். காரணம், மழலைகளுடன் உரையாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறார் இமான் அண்ணாச்சி.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:10 AM
#444
Moderator
Diamond Hubber
வில்லி கேரக்டரிலும் வெளுத்துகட்டும் ஷமிதா..
பாண்டவர் பூமி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்தவர் ஷமிதா. சிவசக்தி அவரது முதல் சீரியல். கடந்த 8 வருடங்களாக சின்னத்தரை தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். உடன் நடித்த ஸ்ரீயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதுவரை பாசிடிவான கேரக்டர்களில் நடித்து வந்த ஷமிதா, தற்போது மவுனராகம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். அதிக மேக்அப் போட்டு கண்களை உருட்டி மிரட்டி பேசும் வழக்கமான வில்லியாக இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக காரியம் சாதிக்கும் வில்லியாக நடித்து வெளுத்துக்கட்டி வருகிறார்.
"நான் வில்லியாக நடிக்க வேண்டும் என்று என் கணவர் வற்புறுத்தி வந்தார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. இயக்குனர் தாய் செல்வம் இது வழக்கமான வில்லி கேரக்டர் இல்லை. கணவன் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி, அதற்கு பங்கம் வரும்போது வில்லியாக மாறுவார். அதுவும் கணவன் மீது கொண்ட அதீத அக்கறையால் தான். அதனால் ஓவர் ஆக்டிங், ஓவர் மேக்கப் எதுவும் தேவையில்லை. இயல்பாக நடித்தால் போதும் என்று சொல்லி நம்பிக்கை தந்தார். நானும் அப்படியே நடித்தேன். அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது" என்கிறார் ஷமிதா.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:12 AM
#445
Moderator
Diamond Hubber
சினிமா இயக்கப்போகிறார் நிவேதிதா.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மியூசிக் சேனல்களின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருக்கிறார் நிவேதிதா. தற்போது செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் சினிமா ஒன்றை இயக்கும் முயற்ச்சியில் இருக்கிறார் நிவேதிதா.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் எனக்கு நடிப்பு வராது என்று மறுத்தவர், இப்போது சினிமா இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தமிழ், இந்தி, ஆங்கிலம், கொரியன் படங்களை பார்த்து வருகிறார். "சின்ன வயசிலிருந்தே எனக்கு கதை கேட்கவும், சொல்லவும் பிடிக்கும். சினிமாவிலும் இயக்குனராகி கதை சொல்ல ஆசை. நடிப்பு எனக்கு வராது என்று எனக்கே தெரியும். அதனால் தான் அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது சீரியசாகவே ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்" என்கிறார் நிவேதிதா.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:15 AM
#446
Moderator
Diamond Hubber
சிஐடி ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை -சீரியல் நடிகை ஸ்ரீதேவி .
தற்போது சின்னத்திரைகளில் கல்யாண பரிசு , ராஜா ராணி, பூவே பூச்சூடவா ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும என்பதுதான் எனது ஆசை. அதனால் எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன் என்கிறார் அவர் மேலும் ஸ்ரீதேவி கூறுகையில், நான் 2008ல் சின்னத்திரையில் நடிக்க வந்தேன். முதலில் தெலுங்கில் இரண்டு சீரியல்களில் நடித்த பிறகு, செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் தமிழுக்கு வந்தேன். பின்னர், தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தேன். பாசிட்டிவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறேன். என்றாலும், நெகடீவ் வேடங்கள்தான் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.
இப்போதுகூட கல்யாண பரிசு, ராஜாராணி தொடர்களில் நெகடீவ் ரோல்களில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த மாதிரி தொடர்களில் எனது நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதால் நெகடீவ் கதாபாத்திரங்கள் மீது எனக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டது.
மேலும், படிப்பில் எனக்கு ஆர்வம் மிகுதி என்பதால் நடித்துக்கொண்டே படித்து வரும் நான், எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன். அதுதவிர, பெட் அனிமல் துறையிலும் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு நல்ல பொழுதுபோக்காகவும் உள்ளது என்று கூறும் ஸ்ரீதேவிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இல்லையாம். சீரியலில் நடிப்பது, படிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:17 AM
#447
Moderator
Diamond Hubber
கதாசிரியர் ஆனார் அப்சரா .
மலையாள சின்னத்திரையிலிருந்து தமிழுக்கு வந்தவர் அப்சரா. பல சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வந்த அப்சரா தற்போது மரகதவீணை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அப்சராவின் புதிய அவதாரம் கதாசிரியர். தற்போது ஒளிபரப்பாகி வரும் விதி தொடரின் கதையை எழுதியவர் அப்சரா. இதுவரை பல சிறு கதைகள் எழுதியுள்ள அப்சரா நிறைய நாவல்களையும் எழுதி வருகிறார். அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலையே விதி சீரியலுக்கான கதையாக மாற்றியிருக்கிறார்.
கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். திருமணமான பிறகு பணம், வேலை, சேமிப்பு, எதிர்காலம் என்று சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஓடுகிறவர்களின் கதை. தற்போது இந்த கதையின் பிளாஷ்பேக் பகுதிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில எபிசோட்களுக்கு பிறகு முக்கிய கதைக்கு வருகிறது சீரியல்.
"மாமியார் கொடுமை, கர்ப்பிணி கொடுமை என்று வழக்கமான கதையாக இல்லாமல் இன்றைய குடும்ப சூழ்நிலைகளை சுட்டிக் காட்டி நாம் எந்த மாதிரியான இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை சுட்டுக்காட்டும் விதமாக விதியின் கதையை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு கதை எழுதுவீர்களா என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை 2 மணிநேரத்துக்குள் சொல்வதற்கு நிறைய பயிற்சி வேண்டும். இப்போதைக்கு அதற்கு நான் தயாராக இல்லை. மலையாளத்தில் எழுதும் கதையை தமிழில் சொல்லி எழுத வைக்கிறேன். விரைவில் தமிழ் எழுத கற்றுக் கொள்வேன்" என்கிறார் அப்சரா.
நன்றி: தினதந்தி
-
24th May 2017, 07:20 AM
#448
Moderator
Diamond Hubber
நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ் .
நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, மனைவி, பெண், திருமதி செல்வம் என பல மெகா சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். திருமதி செல்வம் தொடரில் நடித்து சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றவர். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி.
.* சமீபகாலமாக உங்களை சீரியல்களில் பார்க்க முடியவில்லையே?
நான் சீரியல்களில் அதிகமாக நடித்திருந்தபோதும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதனால் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருந்தேன். கடந்த ஆண்டு நவம்பரில் அந்த படம் தொடங்க இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற ஜூன், ஜூலையில் அந்த படம் தொடங்குகிறது..
* யாரடி நீ மோகினி சீரியல் நேயர்களிடம் எத்தகையை வரவேற்பு பெற்றுள்ளது?
நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்னை பார்த்த நேயர்கள், இத்தனை நாளும் நீங்கள் ஏன் சீரியல்களில் நடிக்கவில்லை. மறுபடியும் உங்களை ஸ்கிரீன்ல பார்த்தது சந்தோசமாக உள்ளது என்று சொல்லி நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள். அதோடு, யாரடி நீ மோகினி சீரியல் சினிமா பார்த்த திருப்தியை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் ஒரு பேமிலி டிராமா. எல்லோருக்குமே இதில் முக்கியத்துவம் உள்ளது. மோகினி என்றொரு திரில்லர் மேட்டரும் உள்ளது. குழந்தைகளுக்கு அதுதானே பிடிக்கும். ரொம்ப விகாரமாக காட்டாமல் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி மோகினி கேரக்டர் இடம்பெற்றுள்ளது
.* சீரியல் கதைகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
நான் எதிர்பார்ப்பது பியூர் எண்டர்டெய்ன்மென்டுதான். அதுக்கு நடுவுல அப்பப்ப ஒரு சின்ன மெசேஜ் வேண்டுமானால் கொடுக்கலாம். மற்றபடி கருத்து சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பதில்லை.
* சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?
முன்பெல்லாம் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்றால் சீரியலோட நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. டிரண்ட் மாறியிருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் சினிமா டைரக்டர்கள் நல்ல வெயிட்டான வேடம் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்
.* பேமிலி டிராமா தவிர என்னென்ன வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண ஆசை?
நான் டோட்டலாக ஒரு டைரக்டர் நடிகன்தான். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர நினைப்பேன். அந்த கேரக்டர் குறித்து டைரக்டர் மைண்டில் என்ன உள்ளதோ அதை வெளிப்படுத்தவே முயற்சி செய்வேன். அப்படித்தான் ஆரம்ப காலம் முதல் இப்போதுவரை நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன்.
இப்போது நடித்து வரும் யாரடி நீ மோகினி சீரியல் பேமிலி டிராமா என்றாலும், இந்த சீரியலே சினிமா போன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதுவே ஒரு பெரிய வித்தியாசம்தான். முக்கியமாக, பாடல், சண்டை காட்சியெல்லாம் உள்ளது. சினிமா மாதிரி பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. சினிமா போன்று ஒரு சீரியலில் நடிப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. இது நேயர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் புதுமையான அனுபவமாக உள்ளது என்கிறார் சஞ்சீவ்.
நன்றி: தினதந்தி
-
14th October 2017, 06:55 AM
#449
Moderator
Diamond Hubber
தயாரிப்பாளர் ஆனார் நீலிமா
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்த அவர் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகையாக இருந்த நீலிமா இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார். தனது கணவர் இசைவாணனுடன் இணைந்து இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சிக்காக "நிறம் மாறாத பூக்கள்" என்ற தொடரை தயாரிக்கிறது. முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
"எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்" என்கிறார் நீலிமா
நன்றி: தினமலர்
-
14th October 2017, 07:05 AM
#450
Moderator
Diamond Hubber
தவறான உறவுகளை சித்தரிக்கும் சீரியல்களை குறைக்க வேண்டும்: ஜெயராம் மோகன்
சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை தவிர்த்து விடுவது சீரியல்களின் தரத்தை அதிகப்படுத்தும் என்கிறார் நடிகர் ஜெயராம் மோகன்.
அவர் மேலும் கூறுகையில், சீரியல் என்பது மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. சீரியல்களை பார்க்கும் நேயர்கள், அதில் வரும் பிரச்சினைகளை தங்களுக்கு ஏற்படுவது போலவே உணருகிறார்கள். இப்படி நேயர்களின் மனநிலை இருப்பதினால் தான் குடும்ப சூழலைக்கொண்ட சீரியல்கள் அதிகமாக வருகிறது .
குடும்ப பிரச்சினைகளில் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைத்து விட்டு, நல்ல ஆரோக்யமான விசயங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பொதுஅறிவு, விழிப்புணர்வு சம்பந்தமான விசயங்களை நிறையவே சேர்க்கலாம். காமெடி காட்சிகள் சீரியல்களில் இடம்பெறுவதே இல்லை. அதனால் ஒவ்வொரு சீரியல்களிலுமே காமெடியை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட நல்ல விசயங்களை சொல்லலாம்.
இப்படி சொல்லும் நடிகர் ஜெயராம் மோகன், இதுவரை நான் நடித்த பல சீரியல்களில் நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடித்திருக்கிறேன். அதில் வாணி ராணியில் நடித்த வில்லன் வேடம் என்னை பேச வைத்தது. அதைப்பார்த்து தாமரை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு விதமான வேடங்களில் நடித்தேன். இப்போது அழகு உள்பட இரண்டு சீரியல்களில் நடிக்கிறேன். இதில் எனது இமேஜ் மாறக்கூடிய அளவுக்கு நல்ல குணசித்ர வேடங்கள். அதனால் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது எனக்கான வரவேற்பு இன்னும் நேயர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.
சமீபகாலமாக சின்னத்திரைகளில் டப்பிங் சீரியல்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம். இப்படி சேனல்கள் மாறியிருப்பதால் தமிழ் சீரியல்களையே நம்பியிருக்கும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதனால் இந்த நிலை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெயராம் மோகன்.
நன்றி: தினமலர்
Bookmarks