எங்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி எண் 19-ஐ துவக்கி வைத்ததற்கு மனங்கனிந்த நன்றி சிவா அவர்களே! இந்த குழுவிற்கு நீங்கள் ஆற்றி வரும் சேவை அளப்பரியது. அது மென் மேலும் தொடரட்டும்.

திரி எண் 18-ற்கு என் பங்களிப்பு மிகவும் குறைவு. நேரிடையாக பார்வையிடும் மற்றும் பதிவிடும் வழிமுறை தடை செய்யப்பட்டது ஒரு காரணமாக இருந்தாலும் நாம் இன்னும் சற்று ஆர்வத்துடன் பங்களிப்பு செய்திருக்கலாம். பங்களிப்பாளர் என்ற முறையிலும் மற்றும் நெறியாளர் என்ற முறையிலும் திரி எண் 18-ஐ துவக்கி முன்னெடுத்து சென்ற ஆதவன் ரவி அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

வரும் நாட்களில் மீண்டும் முன்பிருந்து போல் இந்த திரி சீரும் சிறப்பும் பெற என்னாலான பங்களிப்பை செய்ய ஆண்டவன் அருள் புரியட்டும். நமது நண்பர்கள் அனைவரும் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்